ஆதரவாளர்கள்

செவ்வாய், 19 மார்ச், 2013

போராட்டம் போராட்டம்


இங்கே லஞ்சத்தை ஒழிக்க முடியவில்லை
இடைத் தரகரில்லா அலுவலகமில்லை
சட்டத்தை செயல் படுத்து வதும் இல்லை
சட்டப்படி கேட்டவருக்கு இப்ப உயிரில்லை
எதிர்ப்பவரைக் கொன்றால் கொலையில்லை 
மாணவர்களுக்கு உரிய கல்வி இல்லை
கல்லூரிக்கட்டணம் கொள்ளை இல்லை
இங்கு இறப்பவரைக் கேட்பாரில்லை
லஞ்சத்திர்க்காக போராடியவர்கள் உயிரில்லை
ஏன் என்று கேட்க யாரும் இல்லை
இங்கே இருக்கும் பிரச்சனை பேச வெக்கமில்லை
உன் சகோதரன் உன்னுடைய நலனுக்காக உயிர் விட்டான்
யாரோ பயன் பெற நீயோ உன் படிப்பை விட்டாயடா 
பெற்றவர்கள் இருப்பது உன்னை நம்பிதானடா
உன் சகோதர சகோதரி இருப்பதும் உன்னை நம்பிதானடா

உன் படிப்புக்கான  அரசு  உதவியை அடிக்கின்றார் கொள்ளை
அதைக் தட்டிக் கேட்க உனக்கு திராணியில்லை
கும்பலிலே கோவிந்தா போட உனக்கும் வெட்கமில்லை



மக்கள் வரிப்பணத்தில் கொள்ளை
தகவல் கேட்க சட்டம் உண்டு
தகவல் தராவிட்டால் தண்டனை உண்டு

பிறப்பு இறப்பு முதல் அனைத்து சான்றும்
தந்து விட கால நிர்ணயம் உண்டு
ஏன் தாமதமானது கேட்க வில்லை

பட்டா சிட்டா முதல் அனைத்தும்
விண்ணப்பித்தால் தரவேண்டும்
அதற்கு தானே சம்பளம்
அப்புறம் எதற்கு கிம்பளம்
வெக்கமில்லை  வெக்கமில்லை
கும்ம்பலிலே கொவிந்தாபோடு

வெளி நாட்டிலே நம் பணம் தூங்குது
இங்கே நம்முடைய நலன் போகுது
மனமில்லா மனிதனாய் வாழ்வது
வீரமாய் கேள்வி எல்லாம் கேட்பதால்
நடக்குமா என்றே தடுப்பது
கும்பலில் கொவிந்தாபோடு

இத எல்லாம் கேட்டால் நீ தமிழனா
என்றே கேட்டு முறைப்பது தானா
உன்  வேட்டி  அவுந்து கிடக்கு
ஆனாலும் நீ தமிழனடா
கும்பலிலே கோவிந்தா போடு

மனதை ஆடு ஒன்று சென்றால்
பின்செல்லும் அனைத்து ஆடும்




அப்போ எங்கே போனீங்க படத்தைப் பாருங்க எதிரியாய் நட்புடன் நடிப்பார் போராடுபவரும் நடிக்கத் தெரிந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வார். போடு கும்பலிலே கோவிந்தா போடு  எதற்கு வம்பு அலைன்மெண்ட் பண்ணிட்டேன் இதைக் கவிதை என்று யாராவது நம்பிவிட்டால் ..............இப்ப என்ன பண்ணுவீங்க 

28 கருத்துகள்:

Unknown சொன்னது…

இந்தியனின் கவிதை இப்படித்தான் இருக்கும்.

பெயரில்லா சொன்னது…

குருநாதன் reply super

Unknown சொன்னது…

சாதிகொடுமைக்கெதிரான போராட்டம்
நிலமீட்பு போராட்டம்
நிருபராதிகள் தூக்கு தண்டனை நீக்க போராட்டம்
முல்லைபெரியாறு உரிமை காக்க போராட்டம்
காவிரிநீர் உரிமை பெற போராட்டம்
நச்சு அணு உலை எதிர்ப்பு போராட்டம்
விவசாய நிலம் காக்க போராட்டம்
அந்நிய முதலீடு எதிர்ப்பு போராட்டம்

இப்படி பல போராட்டங்களை தமிழ்த்தேசிய அமைப்புகள் முன்னெடுக்கின்றன.
இந்தியம் பேசுபவன் களத்திற்கு வரமாட்டான்.
ஐந்து வருசத்துக்கு ஒரு முறை ஒட்டுபோட்டுவிட்டு மல்லாக்க படுத்து தூங்கினால் வேலைக்கு ஆகாது.
போராட்டம் ஒன்றே வழி. அதற்கு இனமாகத்தான் ஒன்று பட முடியும்.
இந்திய ஒன்றியத்தின் கீழ் ஒன்றுபட முடியாது.

VOICE OF INDIAN சொன்னது…



வருகைக்கு நன்றி குருநாதன் அவர்களே
நான் கவிதை எழுதவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன் இதைக் கவிதை என்றால் கவிதையை என்னவென்று சொல்வது

VOICE OF INDIAN சொன்னது…

சுயமாக தெரியவில்லை

VOICE OF INDIAN சொன்னது…



போராட்டங்கள் உண்மை போராட்டங்களை முன்னெடுத்ததும் போராடுவது வரவேற்கின்றேன் ஆனால் சில போராட்டங்கள் எப்படி முற்றுப் பெற்றுள்ளன அதனால் விளைந்த பயன்கள் யாருக்கு கிடைத்துள்ளது என்ன சாதனை என்று அறிய விரும்புகின்றேன். போராட்டங்கள் என்பதே அரசியல் லாபத்துக்கான ஒருசிலரின் பிழைப்புக்காக பலரது நேரத்தை வீணடிப்பதே.

மொழிப் போராட்டத்தைவிட சிறப்பாக ஒரு போராட்டம் நடத்திட முடியாது அவ்வளவு நேர்த்தியாக நடைபெற்றது அதன் உண்மையான பயன் என்ன? இன்று இந்தி இருக்கா சான்ஸ்கிரிட் இருக்கா என்று மொழிப்போராட்ட தியாகிகளின் வாரிசுகளே பள்ளிகளை தேடித் தேடி அலைகிறார்களே ஏன்?

எல்லாப் போராட்டங்களும் எதோ ஒரு சில சுயநல விரும்பிகளால் தூண்டப்பட்டு அப்பாவிகளை பலிகடா ஆக்குவதே நடப்பது தொடைகதையாகிறதே ஏன்?

முல்லைப் பெரியாறு போராட்டம் நடத்தி சாதித்தது என்ன? கேரளா மக்களை எதிரிகாலாக தமிழர்கள் நினைக்கவும், தமிழர்களை எதிரிகளாக கேரளா மக்களை வன்மம் கொள்ளச் செய்ததைத் தவிர வேறென்ன சாதனை. இதனால் பாதிக்கப்பட்ட அப்பாவி கூலியாட்களின் பிழைப்பைக் கெடுத்தது சாதனையா?. ஒற்றுமையோடு இருந்தவர்களை நாயைப் போன்று விரட்டியடிக்க வைத்து அதை செய்தியாக்கி பரபரப்பான வியாபாரம் செய்தது சாதனையா?

வேற்றுமையத் தூண்டுவது சாதனையா சாதிக் கொடுமைக்கான போராட்டம் இட ஒதுக்கீட்டு போராட்டம் நடத்தினார்கள் அதனால் பயன் என்ன கிராமத்திலே அரசு பள்ளியிலே படிக்கும் ஏழை மாணவனுக்கு அவரவர் சாதியிலே இட ஒதுக்கீடு கிடைக்கின்றதா போராட மட்டும் அந்த ஏழை மக்கள் வேண்டும் பலன் பெறுவது அனைத்து சாதியிலும் பணக்காரர்கள் மட்டுமே ஏன் பரம்பரை பரம்பரையாக, அவர்களே இட ஒதுக்கீட்டு பயன் பெற வேண்டும்? போராட்டத்தால் அவர்கள் சாதி ஏழை மக்கள் முன்னேற அவர்கள் செய்தது என்ன . ஏழையாக இருந்து முன்னேறியவன் கூட அவனது சாதிக்காரனையே அடிமைகளாக வைத்து அடியாட்களாக வைத்து குடிக்கக் கற்றுக் கொடுத்து குடிகாரர்களாகவும் முரடர்களாகவும் தம் சாதி மக்களை மாற்றி பொருளாதார ரீதியில் முன்னேற விடாமல் தடுப்பது அனைத்து சாதியிலும் தொடரச் செய்வது சாதனையா?
அடுத்த சாதி மக்களை எதிரிகள் போல சித்தரித்து பிரித்து வைப்பது இவர்களை ஒன்றுபடாமல் வன்மம் வளர்ப்பது சாதனையா? சாதிக்கொடுமை போராட்டத்திற்கு முன் ஒரு சாதி காரன் இன்னொரு சாதிக் காரனை எந்த காரணமும் இர்ன்றி கொலை செய்தான இப்போது கொலைகள் நடப்பதே நீங்கள் கூறும் போராட்டங்களின் சாதனையா?

கிராமத்தில் அரசு பள்ளியில் படிக்கும் ஒரு மாச்னவனால் தனியார் பள்ளியில் தரமான பள்ளியில் பணம் கட்டி படிக்கும் அவன் சார்ந்த சாதி மாணவனுடன் படிப்பில் ஈடுகொடுத்து இட ஒதுக்கீட்ட்டில் பலன் பெற முடியுமா? சாதிக் கொடுமை இது இல்லையா? அடுத்த சாதிக்காரனை சொல்லி சொல்லி தன சாதிக்காரனை வளர விடாமல் செய்வது சாதனையா?

தான் செய்யும் தவறை மறைக்க ஏதாவது ஒரு காரணம் காட்டி திசை திருப்பிட முடியும் என்றால் போராட்டம் தேவை. போராட்டத்தால் பலன் கிடைக்கும் என்பார்கள் ஆனால் அப்பாவிகளுக்கு அதனால் வரும் இழப்புகள் மட்டுமே நிரந்திரமாய் கிடைக்கும் உண்மையான பலன் யாருக்கு கிடைக்கின்றது அறிந்துள்ளோமா?

VOICE OF INDIAN சொன்னது…

கொக்கரக்கோ சௌம்யன்
4:40 pm - பொதுவானவை
https://plus.google.com/u/0/109986101920491320205/posts

சில அரசுப் பள்ளி மாணவர்களையும் (6 ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பிற்குள்) போராட்டக் களத்திற்கு கொண்டு வந்து தட்டிகளை கையில் கொடுத்து கோஷம் போட வைப்பது நெருடலாக இருக்கிறது((

படிக்கின்ற காலத்தில் முழு கவனத்தோடு படித்து இன்று கை நிறைய சம்பளத்துடன் பன்னாட்டு நிறுவனங்களிலும், வெளி நாடுகளிலும் வேலை செய்பவர்கள், கண்டிப்பாக இந்த குழந்தைப் பருவ போராட்டங்களை ஊக்குவிக்க வேண்டாம்.

இந்த மாதிரி பள்ளி மாணவர்களின் போராட்டங்களுக்கு என்னுடைய எதிர்ப்பை இங்கு பதிவு செய்கின்றேன்.

Unknown சொன்னது…

போராடினால்தான் உரிமை கிடைக்கும் என்று இருக்கும்போது போராடத்தான் செய்வார்கள். உணர்ச்சியில்லாதவன் ஜடம்

Unknown சொன்னது…

மொழிபோராட்ட தியாகிகளின் வாரிசுகள் இந்தி கற்க பள்ளி தேடுகிறார்களா?
சும்மா அளந்து விடாதீங்க.

யாரோ ஒரு சிலர் பண்ணுற தப்புக்கு ஒட்டுமொத்த இனத்தையும் சாடாதீங்க.

இந்தியை புகுத்தியதால் மொழி இழந்து, கலாச்சாரம் இழந்து அவதிப்படும் பல வேற்று மாநில நண்பர்களை நாங்களும் சந்தித்துள்ளோம்.

கேரளா, ஆந்திரா, கர்நாடக மக்கள் இன்னும் தமிழகத்தில் அதே அமைதியுடன் வாழ்கிறார்கள். நம்மவர்களும் அமைதியுடன் வேறு மாநிலங்களில் வாழ்கிறார்கள்.

Unknown சொன்னது…

மானுடம், மனிதநேயம் உள்ள எவனும் ஒத்துக்கொள்வான் ஈழத்தில் நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலையென்று.
இந்திய ஆதிக்கம் ஏன் ஒத்துக்கொள்ள மறுக்கிறது?
அதை பற்றி ஒரு கட்டுரை எழுதுங்களேன்.

VOICE OF INDIAN சொன்னது…

போராடி பலன் யாருக்கு உண்மையான மக்கள் நலன் உண்டா. போராட்டத்தில் உண்மை இருக்கா வெளிப்படைத் தன்மை இருக்கா எங்கே சொல்லுங்கள். இவர்களின் பின்பலம் என்ன இவர்களின் நோக்கம் என்ன சொல்ல முடியுமா சும்மா உசுப்பேத்தி உசுப்பேத்தியே பேசுவதும் என்ன செய்யும் சிந்திக்காமல் சுய சிந்தனை இல்லாமல் கேள்வி ஏதும் கேட்காமல் அடிமைத் தனமாக வாழ வேண்டுமா?

முன் வரலாறைப் பாருங்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வழிநடத்தியவர்களின் அப்போதைய நிலை என்ன இப்போதைய நிலை என்ன இடஒதுக்கீடு கேட்டு போராட்டங்களை வழி நடத்தியவர்களின் அன்றைய நிலை என்ன இன்றைய நிலை என்னை சும்மா இது சாம்பிள் தான். இது மாதிரி நிறைய இருக்கு போராட்டத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு பலனடைந்த இவர்கள் இது வரை என்ன செய்தார்கள் உயிரிழந்த அவர்களின் வாரிசுகள் எங்கே என்ன செய்துகொண்டு இருக்கின்றார்கள் யாரவது பார்த்தார்களா

VOICE OF INDIAN சொன்னது…

கேரளத்தில் தமிழ் மக்களை விரட்டி விரட்டி அடித்தார்களே ஏன் கர்நாடகத்திலே தமிழர்கள் அடிபட்டார்களே ஏன் இது பற்றி பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதியதை படிக்கவில்லையோ? இங்கு நடந்ததை அறிந்திருக்கவில்லை ஆனால் அண்டை நாடு பற்றி அறிந்த தமிழ் நாட்டுகாரரா நீங்கள் என்னே இன பற்று!
கைதிராபத்திலே நடக்குற கூட்டம் பற்றி தெரியுது.
உங்களுக்கு தமிழ் மட்டும் தான் தெரியும் என்று சொல்ல முடியுமா வேறு மொழி தெரியாத நல்ல மனிதரா தமிழ் இனத்தவரா.

உணர்வுள்ள ஜடமில்லா மனிதரா ஆம் என்றால் மட்டும் இதற்கு மேல் படியுங்கள் உங்களை சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்

தகவல் உரிமைச் சட்டம் மூலம் தகவல் கேட்டதால் கொலை செய்யப்பட்டார்களே தெரியுமா? ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் சுய மரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் தன உரிமையைப் பெற உதவும் இந்த சட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா? இதன் பயன் எவ்வளவு தெரியுமா இந்த சட்டத்தை கொண்டுவரும்போது என்னவென்றே தெரியாமல் ஆதரித்து விட்டோம் அதன் பலனை அனுபவிக்கின்றோம் என்று லஞ்சப் பேய்கள் புலம்புவது தெரியுமா கல்விக்கடன் கேட்டு விண்ணப்பம் கூட தர மறுத்த வங்கிகள் தேடி வந்து கல்விக் கடனை குடுக்க வைத்தது இந்த சட்டம் பயன்படுத்தியதால் தான் தெரியுமா

இது போன்ற மக்கள் பயன்பெற இந்த சட்டத்தை எந்த அமைப்பாவது எந்த இயக்கமாவது அரசியல் கட்சியாவது பரப்புரை செய்தது உண்டா நீங்கள் சொல்லும் தமிழ் தேசிய இயக்கங்கள் செய்தது உண்டா ஏன்
அலுவலகங்களில் புகார் மற்றும் கோரிக்கை விண்ணப்பங்களை எப்படி கொடுக்க வேண்டும் அதன் மீது நடவடிக்கை எடுக்கும் அலுவலர் யார் அவர் நடவடிக்கை எடுக்க மறுத்தால் யாரிடம் புகார் செய்ய வேண்டும் தண்டனை என்ன யாராவது நம் மக்களுக்கு சொல்லித் தந்து அவர்கள் சுய உரிமையுடன் வாழக் கற்றுக் தருகிறார்களா இந்த போராட்டங்களை முன்னெடுக்கும் கணவான்கள் எங்கே இருக்கின்றார்கள் இவர்களன்றி போராட முடியுமா

மக்கள் விளிப்படைத்து விட்டால் அவர்களின் பின்னால் யாரும் போக மாட்டார்கள் அவர்களது வளர்ச்சி தடைபடும்

VOICE OF INDIAN சொன்னது…

ஆம் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான். இது அனைவருக்கும் தெரியும். அதைப் பற்றி கட்டுரை எழுதினால் எல்லாம் சரியாகி விடும் என்றால் நான் எழுத தயார்?

VOICE OF INDIAN சொன்னது…

பதிவில் ஒரு புகைப்படம் இட்டுருக்கின்றேன் அதுவாவது என்ன என்று தெரிகின்றதா பாருங்கள் தோழரே

Unknown சொன்னது…

இப்படி அனைத்து விசயத்துக்கும் ஒதுங்கிபோனால் ஒன்றும் நடக்காது.

Unknown சொன்னது…

அய்யா வணக்கம்.
எனக்கு தமிழ் தவிர்த்து ஆங்கிலம் ஓரளவு தெரியும். வேறு எந்த மொழியும் தெரியாது.


உலகம் முழுமைக்கும் பேச அது போதும்.
இன்னொரு மொழி எதற்கு?
இந்தியை எதிர்க்கவில்லை. நான் எந்த மொழிக்கும் எதிரானவன் இல்லை.
மொழி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்.

இந்தியின் அவசியம் குறித்து ஒரு நல்ல கருத்து சொல்லுங்கள் பார்ப்போம்.

Unknown சொன்னது…

யாரு உசுப்பேத்தியது?
தன்னெழுச்சி போராட்டங்களை கொச்சைபடுத்த வேண்டாம்.

Unknown சொன்னது…

தகவல் உரிமைச் சட்டம்(RTI) பற்றி ஓரளவு தெரியும்.
அதிலும் சீர்திருத்தம் என்னும் பெயரில் பல கட்டுப்பாடுகளை திணிக்க இந்திய அரசு
முயற்சிக்கிறது என்றும் தெரியும்.

கூடங்குளம் சம்பந்தமான விசயங்களை இச்சட்டம் மூலம் பெற முயன்ற தோழர் ஒருவருக்கு அது மறுக்கப்பட்டது.

சமூகத்துக்கு போராடும் பல நல்லவர்கள், கறைபடியாதவர்கள் பலியாகிறார்கள் என்பதும் தெரியும்.
எல்லாவற்றுக்கும் சேர்த்துதான்யா போராடி வருகிறோம்.

Unknown சொன்னது…

நாளை சந்திப்போம். நன்றி

VOICE OF INDIAN சொன்னது…


தூத்துக்குடியிலிருந்து ஒரு குரல்

வெள்ளி, 15 மார்ச், 2013
அவசரம் - ஹைதராபாத் நண்பர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத் நண்பர்கள் கவனத்திற்கு,

தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு வகையான போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் கல்லூரி வளாகங்கள் போராட்டக் களங்களாக மாறியுள்ளன.

வரும் ஞாயிற்றுக்கிழமை(17/03/2013) தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் (ஹைடெக் சிட்டி பகுதியில்) கண்டனப்போராட்டமும், ஒருநாள் அடையாள உண்ணாவிரதமும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம்.

ஹைதராபாத் நகரில் வசிக்கும் தமிழ் நண்பர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறோம். நமது கோரிக்கைகளை பிற மாநில நண்பர்களுக்குஎடுத்துச் செல்வோம். பிற மாநில நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

தொடர்புக்கு:
வடிவேல் - 9052624014

தயவுசெய்து இந்த பதிவை பகிருங்கள். தங்கள் இணையதளங்களில் பதிவு செய்யுங்கள். மிக அவசரம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
இடுகையிட்டது குருநாதன் நேரம் 2:57 AM 1 கருத்து:
லேபிள்கள்: ஈழம், தமிழீழம், தெலங்கானா, ஹைதராபாத்


அவனவன் பொண்டாட்டி பிள்ளைகளை விட்டுவிட்டு அல்லது அப்பா அம்மாவை விட்டு விட்டு சொந்தங்களை எல்லாம் விட்டு விட்டு வாங்கிய குடும்பக் கடனை அடைக்கவும் தம்பி தங்கைகளை திருமணம் முடுத்து வைக்கவும் பிள்ளைகளின் எதிர்காலம் நல்ல இருக்கவேண்டுமென்று ஊர்விட்டு ஊர் போய் பிழைத்துக் கொண்டு இருப்பவர்களை தன்னெழுச்சியாக அழைப்பதேன் திரு குருநாதன் அவர்களே இதற்க்கு பொருள் தான் உசுப்பேத்தறது

VOICE OF INDIAN சொன்னது…

இதற்கு பெயர் ஒதுங்கிப் போவது என்று இல்லை தோழரே. போராட்டங்கள் அதன் மெய் தன்மை பற்றிய விழிப்புணர்வுடன் போராட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வண்ணம் தெளிவுடன் போராடவேண்டியதும் அவசியம் அல்லவா இன்றைய போராட்டங்கள் அத்தகைய விழிப்புணர்வும் தெளிவும் உண்டா என்பது கேள்விக்குறியே

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

//மனதை ஆடு ஒன்று சென்றால்
பின்செல்லும் அனைத்து ஆடும்//
கலக்கிட்டீங்க!

Unknown சொன்னது…

தான் மட்டும், தான் குடும்பம் மட்டும் நல்லா இருந்தால் போதும் என நினைப்பவன் சுத்த சுயநலவாதி.
"அனைவருக்காகவும் போராட வாருங்கள்" என அழைப்பது உசுப்பேத்துவது என அப்படி எடுத்துக் கொள்ள முடியும்?

போராடியதால்தான் இந்திய அரசு தமிழர்களின் கோரிக்கைக்கு சிறிதேனும் செவி சாய்க்கிறது,.

இன்னொன்று தெரிந்துக் கொள்ளுங்கள். அந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்தது இன்னொரு தோழர். அவர் முகம் கூட எனக்கு தெரியாது.

Unknown சொன்னது…

குடும்பம் குடும்பமாக வருகிறார்கள்.
எது உசுப்பேற்றுவது, எது உணமி என்று மக்களுக்கு தெரியாதா?

களத்திற்கு நேரில் வந்து பாருங்கள்.

Unknown சொன்னது…

இறுதியாக ஒன்று.
தகவல் அறியும் சட்டம் மூலம் தங்கள் சமூகப் பணி செய்பவர் என அறிகிறேன்.
மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

பலரும் பல குழுக்களாகப் பிரிந்து பல சமூக செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வது ஏற்புடையதன்று.
நீ ஏன் அதுக்கு போராடல?
அவன் ஏன் இதுக்கு போராடல? போன்ற கேள்விகள் அர்த்தமற்றவை.

இன்னொரு விஷயம்.இன்றைய நிலையில் யாரும் யாரையும் உசுப்பேற்ற முடியாது. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

தங்கள் பணி தொடரட்டும்.

VOICE OF INDIAN சொன்னது…

பார்த்தேன் பார்த்தேன்
நொந்துபோய் வந்தேன் நீங்களும் பார்க்க இதோ
நான் பார்த்ததை சொல்கிறேன்
கீரோவாக காதலியிடம் காட்டிக் கொள்ள தீவிரமாக போராடி கொண்டு இருந்ததை அந்தப் பெண் அவனையே பார்த்து செய்கையில் எதோ சொல்லியதையும் பதிலுக்கு அவன் ஓடி அருகில் சென்று மீண்டு வந்ததை அருகில் விசாரித்தேன் அவர்கள் யார் என்று அப்பத்தான் எனக்கு காதலர்கள் என்று தெரிந்தது
அப்பா இன்னைக்கி இங்க வந்ததனால தப்பிச்சன்டா மாமு
மாப்ளே இங்க வாட கலர் கலரா இருக்குடா ஊருக்கு நாளைக்கு போலாம் வாடா கம்பெனி குடுடா நீ இல்லாம நான் மட்டு எப்படி மச்சி
இனப்படுகொலையைக் கண்டித்து தீர்மானம்
ராஜபக்ஷே ஒழிக
சோனியாகாந்தி ஒழிக
அடி இருடி போலாம் இன்னும் கொஞ்சம் நேரம் வந்துடறேன்
நாயே செல்போன் ரீசார்ஜ் பண்ணியாடா
ஏ என்கப்பாதிட்டுவாறு
மச்சி இப்படியே இருந்திட்ட நல்ல இருக்கும் ஒரே பொருடா வாழ்க்கையே வெறுப்பா இருக்குடா எப்ப பாரு அதே
கவலைப் படாதடா இதுக்கு போயி
எல்லோரும் போராடுவோம் உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு எல்லாம் இங்கே நடந்ததை சொல்லுங்கள் நாளை அவர்களையும் அழைத்து வாருங்கள் இனத்திற்கான போராட்டம்
இது மாதிரி நிறைய பார்த்தேன் தோழா
இது கொச்சைப் படுத்தும் நோக்கிலே சொல்லலை உண்மை உண்மை சவுண்ட் ரேக்கர்டும் வெச்சிருக்கேன் நான் எங்கே சென்றாலும் ரேக்கடிங் ஆன்லதான் இருக்கும் வேணுமுன்னா உங்களது மெயில் ஐடி அனுப்பினா நான் அனுப்பிவைக்கிறேன் கேளுங்கள் அதை பிளாக்லே போட்டா நல்ல இருக்காதுன்னு போடலை

VOICE OF INDIAN சொன்னது…

வருகைக்கு நன்றி T.N.MURALIDHARAN அவர்களே

VOICE OF INDIAN சொன்னது…

ஒரு குடும்பம் கூட முழுமையா நான் பார்க்கவில்லை இந்த போராட்டத்தில் உங்கள் குடும்பத்தில் அனைவரும் கலந்திருந்தால் தெரியப்படுத்தவும்