ஆதரவாளர்கள்

வெள்ளி, 6 ஜனவரி, 2017

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" உண்மையான விளக்கம்

நீரின்றி பயிர்கள் கருகினால் நாம் பட்டினி கிடைக்க நேரிடும் ஆகவே பயிர்களுக்கு எப்பொழுதும் நீர் குறைவின்றி கிடைக்கவும் விவசாயம் தடையின்றி நடைபெறவும் மழைநீரை சேமிப்பதும் அதை பாதுகாப்பதும் ஆறு ஏரி குளங்களின் அவசியத்தையும் மக்கள் உணரவேண்டும்
அவற்றை பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கில் வள்ளலார் அவர்கள்

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்"  என்று அருளினார். 

ஆனால் நாம் வாடிய பயிர் கண்ட வள்ளலாரின் கருணை என்னே கருணை என்று சிலாகித்து வள்ளலாரைப் போற்றி புகழ்ந்து வணங்கும் நாம் அவர் சொன்ன நீர் மேலாண்மையை கடமையை செய்யவில்லை. இதனால் இன்று வள்ளலார் பிறந்த பகுதியும் வளமின்றி வண்டல்களாக விவசாயிகள் தற்கொலை செய்யும் அவலத்தை உருவாக்கிட கடமையை மறந்த வெறும் புகழ்ச்சி செய்து வள்ளலாரை வணங்கும் ஒவ்வொருவரும் இருந்திருப்பது எவ்வள்வு கருணை.

ஆறு ஏறி குளம் கால்வாய்களை பாதுகாப்பதும் பராமரிப்பதும் களவு போகாமல் காக்கவும் ஒவ்வொரு சீடரின் கடமையாக இருக்க வேண்டும் என்றும் நீர்மேலாண்மை செய்து பயிர்களைக் காப்பாற்றி உணவுப் பஞ்சம் இல்லாமல் மக்களைக் காக்கவேண்டும் என்றும் வள்ளலார் அருளியதை அப்படியே நமக்கு வசதியாக கடமையை மறைத்து கருணை என்று சொல்லி நாம் நம்மையும் நம்மை சார்ந்த ஒவ்வொருவரையும் ஏமாற்றியதோடு அருட்பெரும் ஜோதியான வள்ளலாரையும் ஏமாற்றியுள்ளோம் ஏமாற்றி வருகின்றோம் ஏமாற்றுவோம். என்று நாம் உண்மை உணர்ந்து  செயலையும் வள்ளலாரின் பிள்ளைகளுக்கு சொல்லித் தந்து செயலாற்றுவோம்?

கருணை என்று சொன்னால் கன்னத்தில் போட்டுக்கொண்டு வணங்கும் மக்களுக்கு கடமையை சொன்னால் புரியுமா? என்று தயக்கமின்றி ஒவ்வொரு வள்ளலாரின் வழித்தோன்றலும்  மாதம் ஒருநாளாவது ஒரு கிராமத்திற்கு சென்று ஆறு ஏறி குளம் கால்வாய்கள் பராமரிப்பு மற்றும் நீர்மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி உடன் உழைப்பைக் கொடுத்து விவசாயிகளின் கவலைகளை போக்க மருந்தாக இருக்க வேண்டும். செய்வார்களா?
பாலசுப்ரமணியன் (9042905783)

கருத்துகள் இல்லை: