ஆதரவாளர்கள்

Saturday, August 8, 2015

மாற்று திறனாளிகளுக்கான அரசு வழங்கும் சலுகைகள் என்ன..? பெறுவது எப்படி..?

பேருந்தில்...
பேருந்தில் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் ஓர் உதவியாளருடன் பயணம் செய்யலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகலை நடத்துநரிடம் அளித்து, நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் மாற்றுத்திறனாளிகள் தனியாகவும் பயணம் செய்யலாம். உதவியாளருக்கான சான்றிதழை வைத்திருப்பவர்கள் அதன் நகலையும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகலையும் அளித்து, இருவரும் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் பயணம் செய்யலாம்.
உதவியாளருக்கும் சலுகை விலையில் பயணச் சீட்டைப் பெற, ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றும் மருத்துவர்களே சான்றிதழ் வழங்கலாம். உதவியாளருக்கான பேருந்து சலுகைப் படிவம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் கிடைக்கும். இதனைப் பெற்று முறையாக மருத்துவரிடம் கையொப்பம் வாங்கி, அதன் நகலையும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகலையும் பயன்படுத்தலாம். புதுப்பிக்கத் தேவையில்லை.நிரந்தரமானது.

Tuesday, August 4, 2015

"சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்"

காட்சி மற்றும் எழுத்து ஊடகங்களே! ஊடக நண்பர்களே! ஊடக ஆசிரியர்களே! ஊடக எழுத்தாளர்களே! 


அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்கள்!

"சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்"