ஆதரவாளர்கள்

Thursday, March 21, 2013

பத்ரி சேஷாத்ரி: பணச்சலவை

பத்ரி சேஷாத்ரி: பணச்சலவை:

Thursday, March 14, 2013

பணச்சலவை

கோப்ராபோஸ்ட் என்ற புலனாய்வு இணைய இதழ் கருப்புப் பணத்தைச் சலவை செய்யும் வேலையை ஐசிஐசிஐ, எச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ் ஆகிய மூன்று வங்கிகளும் செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளது. அதற்குச் சான்றாக, அதன் நிருபர்கள் ரகசியமாகப் பிடித்த ஒளிப்பதிவுகளைக் காட்டியுள்ளது.


இந்த வங்கிகள் மட்டுமல்ல, பெரும்பாலான அல்லது அனைத்துத் தனியார் வங்கிகளுமே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றே நான் நினைக்கிறேன். பொதுத்துறை வங்கிகள் இச்செயலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கலாம். அல்லது குறைவாக இருக்கலாம். அல்லது ஒருசில அரசியல்வாதிகளுக்காக மட்டும் பொதுத்துறை வங்கிகளின் கதவுகள் இதற்கெனத் திறந்திருக்கலாம்.

நம் நாட்டில் எக்கச்சக்கமான கருப்புப் பணம் புழங்கிக்கொண்டிருக்கிறது. (1) ரியல் எஸ்டேட் துறை, (2) அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் பெறும் லஞ்ச, ஊழல் பணம், (3) கடத்தல், திருட்டு, கஞ்சா, கொலை, சூதாட்டம் போன்ற கெட்ட காரியங்கள்மூலம் சம்பாதிக்கப்படும் கருப்புப் பணம், (4) சினிமாத் துறையில் புழங்கும் பெருமளவு பணம், (5) தொழில் நிறுவனங்கள் இரண்டு கணக்குகள் வைத்துச் சம்பாதிக்கும் கருப்புப் பணம் என்று பலதைச் சொல்லலாம்.

ரிசர்வ் வங்கி இந்தக் கருப்புப் பணத்தின்மீது அழுத்தம் தரத் தர, இதனை வெள்ளையாக ஆக்குவதற்கு யாராவது முன்வரத்தான் வேண்டும். அதைத்தான் இந்தத் தனியார் துறை வங்கிகள் செய்கின்றன.

இந்தக் கருப்புப் பணம் நாட்டைவிட்டு வெளியே போய், பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ் என்னும் முறை வழியாக இந்தியாவிலேயே பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது என்று சுப்ரமணியன் சுவாமி கூறுகிறார். இந்த முறையைக் கொண்டுவந்தது பாஜக ஆட்சியின்போது யஷ்வந்த் சின்ஹா நிதியமைச்சராக இருந்த காலத்தில் என்று ஞாபகம்.

இதற்கெல்லாம் முன்னர் சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது கருப்புப் பணத்தை வெளியே கொண்டுவந்து ஒருமுறை அரசுக்கு வரி கட்டிவிட்டு எந்தக் கேள்வியும் கேட்காமல் வெள்ளையாக ஆக்கிக்கொள்ளலாம் என்றார். அதன்படிக் கொஞ்சம் பணம் வெளியே வந்தது. ஆனால் மிகப் பெரும் தொகை வெளியே வரவே இல்லை.

சில அடிப்படை மாற்றங்களைச் செய்யாமல் கருப்புப் பணத்தை ஒழிக்கவே முடியாது. கருப்புப் பணம் இருக்கும்வரையில் கருப்பை வெள்ளையாக்கும் ஆசாமிகள் வந்துகொண்டே இருப்பார்கள்.

என்னென்ன மாற்றங்களைச் செய்யலாம்?

1. ரியல் எஸ்டேட் டிரான்சாக்‌ஷனில் ஸ்டாம்ப் கட்டணத்தையும் லாங் டெர்ம் கேபிடல் கெயின்ஸ் வரியையும் கடுமையாகக் குறைக்கலாம். அதன்பிறகும் பொய்யாகப் பணத்தைக் குறைத்துச் சொல்பவர்களுக்குச் சிறை தண்டனை என்று சட்டத்திருத்தம் செய்யலாம். உதாரணமாக ஸ்டாம்ப் கட்டணத்தை வெறும் 1% என்றோ அல்லது 0.5% என்றோ ஆக்கிவிடலாம். தமிழகத்தில் 12% என்று இருந்தது இப்போது 8% என்று ஆகியுள்ளது. இதுவே மிக அதிகம். அதேபோல வீடு விற்றுக் கிடைக்கும் லாபத்துக்கு 2% வருமான வரி கட்டினால் போதும் என்று சொன்னால் பெருமளவு கருப்புப் பணம் ஒழிந்துவிடும். இன்று கேபிடல் கெயின்ஸ் வரி (இண்டெக்சேஷனுக்குப் பிறகு) 20% என்று உள்ளது. (அல்லது உடனேயே அந்த லாபத்தை இன்னொரு வீட்டின்மீது முதலீடு செய்யவேண்டும், அல்லது குறிப்பிட்ட சில கடன்பத்திரங்களை வாங்கி வரித்தொல்லையிலிருந்து மீளலாம்.) காசோலை, வரைவோலை வாயிலாக மட்டும்தான் ரியல் எஸ்டேட் பணம் கொடுக்கல் வாங்கல் செய்யமுடியும் என்று சட்டத் திருத்தம் கொண்டுவரவேண்டும்.

2. அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஊழலை என்ன செய்வது என்று ஒரு வரியில் சொல்வது மிகக் கடினம். எனக்கு உண்மையில் இதற்கான பதில் தெளிவாகத் தெரியவில்லை.

3. அரசியல் கருப்புப் பணம் போலவே, கெட்ட காரியங்கள்மூலம் சம்பாதிக்கும் பணமும் கருப்பாகவே பெரும்பாலும் இருக்க வாய்ப்புள்ளது. வரி கட்டி, வெள்ளையாகப் பணம் வைத்திருக்கும் கெட்ட காரியர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை அவர்களில் சிலர் லெஜிடிமேட் கம்பெனிகளையும் கூடவே வைத்து பணத்தை உள்ளே வெளியே செய்துகொண்டிருக்கலாம். அனைத்துவித கிரிமினல் தண்டனைகளுடன் அந்தக் கெட்ட காரியங்களைச் செய்பவர்களுடைய சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தால் இங்கு நல்ல பலன் கிடைக்கலாம்.

4. சினிமாத் துறையை நிஜமாகவே ஒழுங்குபடுத்த முடியும். அரசு மனது வைத்தால். இதுதான் உள்ளதிலேயே மிகவும் எளிதான ஒன்று. ஆனால் சினிமாத் துறையினரின் பலம் காரணமாக அவர்களுக்கு எந்தச் சிக்கலும் நேர்வதில்லை. தனிப்பட்ட முறையில் நடிகர்கள் வீடுகளில் வருமான வரிச் சோதனை நடப்பதாக ஒரு செய்தி வரும். அப்புறம் எல்லாம் அடங்கிவிடும். ஒவ்வொரு படக் கம்பெனியும் செய்யும் ஒவ்வொரு துண்டு துணுக்குச் செலவையும் ஒழுங்காக ஆடிட் செய்தாலே போதும். தவறு செய்பவர்களைத் தண்டிக்க என்று தனியான வருமான வரி தீர்ப்பாயங்கள் இருந்தாலே பிரச்னை ஓவர்.

5. கொஞ்சம் கஷ்டமான இடம் இது. ஏனெனில் இந்தியாவில் தொழில் செய்யும் நிறுவனங்கள் - சிறு கடைகள் முதல் அம்பானி வரை - மிகப் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். வருமான வரித் துறையில் பல லட்சம் பேரை வேலைக்கு எடுத்தால்தான் இங்கு உருவாகும் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியும். இதன் சாத்தியக் கூறுகள்மீதும் எனக்கு நம்பிக்கை குறைவாக இருக்கிறது.

வங்கிகளை நெருக்கிப் பிடிப்பதன்மூலம் அவர்கள் பணச்சலவை செய்வதை நிறுத்தலாம். அப்படியானால், அந்தக் கருப்புப் பணம் அதற்கான தனியான பொருளாதாரச் சுற்றில் சுற்றிக்கொண்டேதான் இருக்கும். கருப்புப் பணத்தின் ஊற்றையே ஒழிப்பதுதான் (அல்லது குறைப்பதுதான்) சரியான தீர்வு.
.

5 comments:

Bala subramanian said...

அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஊழலை என்ன செய்வது என்று ஒரு வரியில் சொல்வது மிகக் கடினம். எனக்கு உண்மையில் இதற்கான பதில் தெளிவாகத் தெரியவில்லை.

அரசு அலுவலகங்களில் இடைத் தரகர்களை ஒழிக்க வேண்டும்

இதற்க்கு ஒரே வழி ஒவ்வொரு அரசு அலுவலகங்களின் வாயிலிலும் அறிவிப்புப் பலகை கட்டாயம் வேண்டும்
1 சம்பந்தப்பட்ட அந்த அலுவலகத்தின் என்ன என்ன கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மனுக்கள் அளிக்கலாம் என்று

2 கோரிக்கை பெரும் அலுவலர் பெயர் மற்றும் பதவி, புகார் பெரும் அலுவலர் பேயர் பதவி அலுவலகத்தில் எங்கு உள்ளார் எந்த அரை, தரை தளமா அல்லது முதல் தளமா என்ற விபரம்

3 சம்பத்தப்பட்ட அலுவலர்கள் பெரும் புகார் மற்றும் கோரிக்கை விண்ணப்பங்களை தீர்வு செய்யும் அலுவலர் பெயர் பதவி அவர் அலுவலகத்தில் எங்கு உள்ளார் என்ற விபரம்

4 சம்பந்தப்பட்ட அலுவலரால் தீர்வு கிடைக்க வில்லை எனில் மேல் நடவடிக்கை புகார் யாரிடம் தரவேண்டுமோ அந்த அலுவலக முகவரி மற்றும் அலுவலர் பெயர் தீர்வு செய்யாத அலுவலருக்கு அளிக்கப் படும் தண்டனை விபரம்

ஒன்னும் தெரியாத அப்பாவி மக்கள் அலுவலகம் வந்தால் வெளியில் அந்த மரத்தடியில் இருப்பவரைப் பாருங்கள் நீங்கள் வந்திருப்பது எதற்கென்றே தெரியவில்லை என்று சொல்லி நடிக்கும் லஞ்சப் பேய்களும் ஒழுங்காய் தன வேலையை செய்யும்

இதை ஓரளவு சஸ்ரியாக செயல் படுத்திவிட்டால் அலுவலகங்களில் உள்ள இடைத் தரகர்கள் இருக்க மாட்டார்கள் இடைத் தரகர்களில் பெரும் பாலும் கச்சி காரர்களே இருப்பார்கள்
இது நடைமுறைக்கு வரும்போது கட்சி தொண்டர்களுக்கு கருப்பு பணம் கிடைக்கும் பாதை அடைபடும் அவனும் வேறு வேலை அல்லது தொழிலுக்கு போய்விடுவான் கட்சித் தொன்ன்டன் என்று சொல்லும் இது போன்ற கருப்பு பணத்தை நம்பி இருக்கும் ஆட்கள் காணாமல் போவார்கள் அட கடைசியில கட்சியில பணம் சம்பாதிக்கும் நோக்குடன் ஒரு தொண்டனைப் பார்க்க முடியாது

உண்மையான நேர்மையானவர்கள் மக்களுக்காக உழைப்பவர்கள் கட்சியில் இருப்பார்கள் கட்சிகளும் உருப்படும் நாடும் உருப்படும் இதைச் செய்யா இந்த கருப்பு பண பேய்களால் முடியுமா?
மக்கள் தான் போராடி உரிமையை பெற வேண்டும்
குறிப்பு; மின் வாரிய அலுவலகங்களின் வாயிலில் இந்தியன் குரல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தபோது குண்டர்களால் அமைப்பின் தன்னார்வ தொண்டர்கள் மிரட்டப்பட்டும் சில பகுதியில் கைகலப்பும் நடைபெற்றது தற்காலிகமாக பிரச்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது உரிய பாதுகாப்பு கிடைத்தால் மட்டுமே எங்களது பிரச்சாரம் தொடரும் வாய்ப்பு இருப்பவர்கள் தொடைபு கொண்டால் பெரும்பான்மை மக்களுக்கு நலனை அமையும்.

Bala subramanian said...


வியாபார நிறுவனங்கள்
5. கொஞ்சம் கஷ்டமான இடம் இது. ஏனெனில் இந்தியாவில் தொழில் செய்யும் நிறுவனங்கள் - சிறு கடைகள் முதல் அம்பானி வரை - மிகப் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். வருமான வரித் துறையில் பல லட்சம் பேரை வேலைக்கு எடுத்தால்தான் இங்கு உருவாகும் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியும். இதன் சாத்தியக் கூறுகள்மீதும் எனக்கு நம்பிக்கை குறைவாக இருக்கிறது.

வணிக நிறுவனங்கள் பெரும்பாலும் ஆட்களை நம்பியே இயங்குகின்றன இரட்டைக் கணக்கு முறை வைத்துக் கொள்வது சிரமம் ஆனாலும் சிலர் செய்யக்கூடும் அதற்கு திடீர் சோதனை நடவடிக்கை மூலம், உரிய சட்ட திருத்தங்கள் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

வணிகம் செய்பவர்களுக்கு இப்போதுள்ள அனைத்து சட்டங்களும் வேஸ்ட் நடைமுறையில் எந்த சட்டத்தையும் முழுமையாக பின்பற்ற முடியுமா என்பதே கேள்விக்குறி அதற்கு மாற்று வேண்டும் அந்த மாற்றம் லஞ்சத்தை ஒழிக்கும் வகையில்இருக்க வேண்டும். அலுவலர்கள் தேவையில்லாமல் வணிகர்களை மிரட்டும் படி(பொய்யான குற்றச்சாட்டுக்கு ) இருக்கக் கூடாது

என் நண்பர் சொல்கிறார் நான் வேலை ஆட்கள் பதிவேடு சம்பளப் பதிவேடு உள்ளிட்ட அனைத்தையும் சரியாக பராமரிக்கின்றேன் ஆயினும் ஆறு மாதம் ஒருமுறை தொழிலாளர் கண்காணிப்பு அலுவலருக்கு 500 ரூபாய் தர வேண்டி இருக்கின்றது. நான் மறுத்தால் ஏதாவது ஒரு காரணம் சொல்லி காம்பௌண்டிங் அல்லது வழக்கு போடுவார்கள் அதற்க்கு உண்மை இருக்க வேண்டும் என்று அவசியம்( தீர்ப்பு வரும் வரை ) இல்லை நாம் தான் தினமும் அலைய வேண்டியிருக்கும் . பொய்வழக்கு போட்டால் தண்டனை இல்லை எல்லாம் சரியாக வைத்திருந்தாலும் நினைத்தால்( லஞ்சம் கொடுக்கவில்லை என்பதற்காக ) நடவடிக்கை எடுக்கலாம் என்றால் அது சரியா

சரியான சட்டம் இருந்தால் அல்லது சட்டம் பற்றிய தெளிவு இருந்தால்
இந்த ஊரில் நிறையக் கிடைக்கும் என்று நம்பி லஞ்சம் கொடுத்து மாற்றல் வங்கி வரும் நிலை ஒளியுமே அந்த துறை மேல்மட்டம் வரை ஏன் மந்திரியே கூட லஞ்சம் பெற வழி இல்லாமல் போகுமே பணம் சம்பாதிக்கும் நோக்குடன் ஒருவன் தேர்தலில் நின்றால் அவனால் அந்த பணத்தை சம்பாதிக்க முடியாது என்ற நிலை வர வேண்டும் அதற்கு பொது மக்கள் விழிப்படைய வேண்டும்
அரசுத் துறைகளின் நடைமுறை அறிந்திருக்க வேண்டும் முடிந்தால் பள்ளியில் அரசுத் துறைகள் செயல்பாடு குறித்து ஒரு பாடம் கொண்டுவரலாம்
இது நடக்க வேண்டும் அதுவரை இந்தியன் குரல் அமைப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பயிற்சி என்று செயல்பட்டுக் கொண்டே இருக்கும். எங்களின் தோழர்கள் லஞ்சத்திற்கு எதிராக போராடியமைக்காக உயிரை இழந்திருக்கின்றார்கள். அதையும் தாண்டிய சேவை இந்தியன் குரல் அமைப்பினுடையது.
இந்தியன் குரல் தமிழக முக்கிய நகரங்களில் இலவச உதவி மையங்களை நடத்திவருகிறது அலுவலக நடைமுறை விண்ணப்பங்கள் எழுத பயிற்சி மற்றும் உதவி பெற விரும்புபவர் கலந்து பயன் பெறலாம் இந்தியன் குரல் எந்த உதவிக்கும் கட்டணம் பெறுவதில்லை நன்றி எதிர்பார்ப்பதில்லை மாலை மரியாதை ஏற்பதில்லை எவ்வித நன்கொடையும் பெறுவதில்லை அமைப்பில் உறுப்பினர் சந்தா இல்லை
உதவி மையங்கள் பற்றிய தகவல் அறிய தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை 9444305581 போன் மூலம் கல்விக்கடன் உதவி தொடர்புக்கு தீபக் 9994658672 இந்தியன் குரல் அமைப்பு மூலம் உங்கள் ஊரில் தகவல் உரிமைச் சட்டம் குறித்த முழு விழிப்புணர்வு பயிற்சி அளிக்க 9443489976 மேலும் விபரங்களுக்கு இந்தியன் குரல் உதவி மையங்களில் தொடர்பு கொள்ளவும் சென்னையில் பிரதி மாதம் 1 மற்றும் 15 ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும்
- பாலசுப்ரமணியன்
இந்தியன் குரல்
சென்னை
9444305581--
www.vitrustu.blogspot.com
VOICE OF INDIAN
256 TVK Qts TVK Nagar,
Sembiyam,
Perambur,
Chennai 600019

Anonymous said...

எதற்கு இப்படி ஒரு காபி பேஸ்ட்?

anbu said...

அரசிற்க்கு நேரடியாக வருமான வ்ரி பிடித்தம் செய்துவிடும் அரசு ஊழியர் மற்றும் தொழிலாளர்கள் சம்பளத்தினைத் தவிர பிற இனத்தினர் சுருட்டும் கருப்புப்பணம் மிக மிக அதிகம்.இதனை சரி செய்ய நிச்சயம் முடியும். ஆனால் சரி செய்ய பொறுப்பான அரசு ஊழியர்களோ அரசியல்வாதிகளோ முன் வரமாட்டார்கள். உலகிலேயே அரசியலை முழுநேர தொழிலாக கொண்டவர்கள் இந்தியாவில் தான் அதிகம். இதை முதலில் ஒழித்தால் பிறகு எல்லாமே சரியாகிவிடும்.

Bala subramanian said...

சரியாக சொன்னீர்கள் தோழரே, அரசு ஊழியர்கள் சம்பளத்திற்கு வரி கட்டாமல் தப்பிக்க பி எப் லோன் வீட்டு லோன் இப்படி என்ன என்ன லோன் போடா முடியுமோ அனைத்தையும் போட்டு வரிக் கட்டுவதில் இருந்து தப்பித்து விடுவர்
இதற்க்கு தீர்வு வருமான வரி என்பதை ரத்து செய்ய வேண்டும் அதற்க்கு பதிலாக தொளிலாரர் ஆண்டுக்கு 1000 ரூபாயும் வியாபாரி 10000 ரூபாயும் தொழில் நிறுவன அதிபர்கள் 100000 ரூபாயும் வரி செலுத்த வேண்டும் அவர்கள் எவ்வளவு வருமானம் பெற்றாலும் இந்தந்த முறயில் உண்மையாக நடந்து கருப்பு பணம் என்பது ஒழியும்