காட்சி மற்றும் எழுத்து ஊடகங்களே! ஊடக நண்பர்களே! ஊடக ஆசிரியர்களே! ஊடக எழுத்தாளர்களே!
நாம் இன்று சுகமாக அனைத்து உரிமைகளுடன் வாழ நமக்காக நமது சுதந்திரத்திற்காக இரத்தம் சிந்தியோர் ஆயிரமாயிரம். தன்னுயிர் ஈந்தோர் ஆயிரமாயிரம்.
தன்னுயிர் போனானும் கொடியையும் கோசத்தையும் நிறுத்தமாட்டேன் என்று சாகும்வரையில் கொடிகாத்த குமரன்.
வெள்ளையனைக் கொன்று தன்னைத்தானே தானும் சுட்டுக்கொண்டு மாண்ட வாஞ்சிநாதன்.
- ராஜாஜி, ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார், ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார். தமிழ்த் தென்றல் திரு வி. க, வ.உ.சிதம்பரம் பிள்ளை, திரு வ.வெ.சு. ஐயர், வ.ரா. மார்ஷல் ஏ.நேசமணி, பி.எஸ்.குமாரசாமி ராஜா , பி.கே.மூக்கையா தேவர், டி.எல்.சசிவர்ணத் தேவர், வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி, பி.எஸ்.சிவசாமி ஐயர் போன்ற
- இதுபோன்று இன்னும் ஆயிரமாயிரம்
- இப்படி பலரின் தியாகத்திலும் உழைப்பிலும் தான் இன்று நாம் சுதந்திரமாக வாழ்கின்றோம். இன்று நமக்கு உள்ள பேச்சுரிமை, எழுத்துரிமை, உள்ளிட்ட இன்னும் பிற உரிமைகள் எல்லாம் இவர்களைப் போன்ற நன்மக்களின் தியாகத்தால் விளைந்தது .
இப்படி கிடைத்த சுதந்திரத்தை அனுபவிக்கும் நாம்
காட்சி ஊடகங்களில் சுதந்திரத்தினத்தன்று கூட பணம்பண்ணும் பணியை மட்டுமே செய்கின்றோமே என்று என்றாவது வருத்தம் கொண்டோமா?
காட்சி ஊடகங்களிலும் அச்சு ஊடகங்களிலும் சுதந்திர தின வாழ்த்தைக் கூட ஒரு தொடை அழகி அல்லது திரை அழகியை நடிகர்களை வைத்து தானே சொல்லி வியாபாரம் செய்கின்றோம். பட்டிமன்றம் என்ற பெயரிலும் விவாதம் என்ற பெயரிலும் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசும் பணியை தானே செய்கிறோம் என்று உங்கள் உள்ளம் கேட்டதுன்ன்டா? அதற்கெல்லாம் ஒருபடி மேலாக எங்கள் இல்ல வரவேற்பு அறையில் வந்து அமர்ந்துகொண்டு(டிவி) ரத்தம் சொட்டும் வன்முறைக் காட்சிகளையும் காணக் கூசும் ஆபாசக் காட்சிகளையும் கலையென்று சொல்லி எங்கள் பிள்ளைகள் மனதில் நஞ்சை விதைக்கின்றீரே எங்கள் பிள்ளைகள் எதிர்காலம் இந்திய இளைஞர்கள் எதிர்காலம் பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல் காசுபார்க்கும் விளம்பரதாரர்கள் நிகழ்ச்சியை ஒலிபரப்பு செய்யும் உரிமை உங்களுக்கு இவர்கள் சிந்திய ரத்தம் சுவாசிக்கும் காற்று என்பதை மறந்தது ஏனோ?
இந்த நன்னாளில் சுதந்திரத்தின் பெருமையையும் தியாகிகள் வரலாற்றையும் சுதந்திரத்தின் பாதுகாப்பையும் அதைப் பேணிக்காக்க வேண்டிய அவசியத்தையும் தேசபத்தியையும் விதையுங்கள்,
தியாகிகளின் வரலாறையும் அவர்கள் தம் பிள்ளைகள் குறித்தும் ஒலிபரப்புங்கள் பேட்டிகள் எடுத்து வெளியிடுங்கள் எங்கள் பிள்ளைகள் சுதந்திரத்தின் பெருமையை உணர்ந்த நாட்டுப் பற்று உள்ளவர்களாக மலரட்டும்.
இதோ இதுபோன்ற தியாகிகளை தாங்களாவது அறிவீர்களா ?
சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
ஜி. சுப்பிரமணிய ஐயர்.
நாட்டின் சுதந்திரத்திற்குப் பாடுபட்டதிலும், சமூக சீர்திருத்தங்களிலும், பத்திரிகை துறையில் நுழைந்து பெரிய அளவில் செய்தித் தாள்களை அறிமுகம் செய்ததிலும் ஆகிய மூன்று வெவ்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கியவர் ஜி.சுப்பிரமணிய ஐயர்
திருக்கருகாவூர் பந்துலு ஐயர்.
மிகத் தீவிரமான அடக்குமுறையை 1930இல் கையாண்ட தஞ்சை கலெக்டர் தார்ன் துரைக்குச் சவாலாக விளங்கிய பந்துலு ஐயர் ஏராளமான தொல்லைகளுக்கு ஆளானார்
திருப்பூர் தியாகி பி.எஸ்.சுந்தரம்
லட்சுமி அம்மையாரின் கதர் பணி பற்றியும் தேசபக்தி பற்றியும் கேட்டறிந்த காந்தியடிகள் பெருமகிழ்ச்சியுற்று பேசியதோடு, கதர் இயக்கத்தில் இவ்வளவு ஆர்வம் கொண்ட நீங்கள் நன்கொடை கொடுப்பதில் மட்டும் ஏன் கஞ்சத்தனம் செய்தீர்கள் என்றார். அதற்கு அம்மையார் தன்னிடம் அவ்வளவுதான் பணம் இருக்கிறது என்று சொல்லி சமாளித்தார்.
இந்த சம்பாஷணையின் போது ராஜாஜியும் அங்கு உடனிருந்தார். காந்தியடிகள் சொன்னார், "நான் விரும்பும் நன்கொடை வேறு. நீங்கள் பணத்தைப் பற்றி சொன்னதாக நினைக்கிறீர்கள். இல்லை. உங்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்களல்லவா, அவர்களில் ஒருவரை தேசப் பணிக்காக நீங்கள் ஏன் அர்ப்பணிக்கக்கூடாது” என்று புன்னகைத்தார். அடிகளின் கேள்வியின் பொருள் அப்போதுதான் லட்சுமி அம்மாளுக்குப் புரிந்தது.

"பாபுஜி தங்கள் விருப்பப்படியே என்னுடைய மூன்று குமாரர்களில் ஒருவனைத் தேச சேவைக்காகத் தங்களிடம் ஒப்படைக்கிறேன்" என்றார்.
தியாகி கொடிகாத்த குமரன் அணிவகுத்துச் சென்று போலீசார் தடியடியில் உயிர் இழந்தாரல்லவா அந்த குழுவுக்குத் தலைமை ஏற்று நடத்திச் சென்றவர் இந்த சுந்தரம் தான்.
அன்று, திருப்பூர் குமரன் அடிபட்டு இரத்த வெள்ளத்தில் வீதியில் விழுந்து கிடந்த அன்று; 10-1-1932 அன்று, குமரனை அடித்து வீழ்த்திவிட்டார்களே, என்னை விட்டு வைத்திருக்கிறார்களே ஏன்? என்று அவர் சிந்தித்துக் கொண்டிருந்த அந்த விநாடி, போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் முகமது என்பவர் திடீரென இவர் மீது பாய்ந்து கண்மூடித்தனமாகத் தாக்கினார். பாவம் அந்த இன்ஸ்பெக்டர் அவர் மட்டும் அடிக்கிறாரே, அவரது கரங்கள் வலிக்குமே என்று கூட இருந்த கான்ஸ்டபிள்களும் தங்கள் பங்குக்குத் தாக்கினர். அவர்கள் அடித்த அடியில் சுந்தரத்தின் இரண்டு கால்களிலும் எலும்புகள் முறிந்தன. கீழே விழுந்து கிடந்த அவரை கான்ஸ்டபிள்கள் தூக்கிப் பிடித்து நிறுத்திக்கொள்ள மீண்டும் கைகள் நோகும் வரை அடித்தான் அந்த அரக்கன் முகமது. மயங்கி கீழே விழுந்தார் சுந்தரம். அத்தனை பேரிலும் அதிகமாக அடிவாங்கியவர் இவர்தான். உடலில் மொத்தம் பத்தொன்பது இடங்களில் எலும்புகள் முறிந்தன என்பது பின்னர் தெரிந்தது.

அஞ்சாநெஞ்சன் பி.வேலுசாமி
1942 ஆகஸ்ட் போராட்டத்தின் போது கோவை சூலூர் விமான நிலையம் தீக்கிரையான வரலாறு அனைவருக்கும் தெரிந்த செய்தி. இந்த கலவரத்தின்போது முன்னணியில் இருந்தவர் கோவை பி.வேலுசாமி.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னும் இவரது தொழிலாளர் போராட்டம் நின்றபாடில்லை. 1952ல் கம்போடியா மில்லில் தொழிலாளர்களுக்கிடையே நடந்த மோதலின் காரணமாக இவர் இரண்டு மாதம் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்தார்.
தர்மபுரி மாவட்டம் தியாகி குமாரசாமி
குமாரசாமியும் கலெக்டரைச் சந்தித்து தனக்கு பென்ஷன் வேண்டாம், இந்தத் தாமிரப் பட்டயமும் வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்தார். கலெக்டர் அதிர்ச்சியில் ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு குமாரசாமி சொன்னார்:-
எனக்கு 15 வயது ஆகும்போதே சுதந்திரப் போராட்டத்தில் குதித்து விட்டேன். எனக்கு பி. ராமமூர்த்திதான் தலைவர். அவர் தலைமையில் போராடி பல சிறைகளில் இருந்திருக்கிறேன். எனக்கு தியாகி பென்ஷனும் இந்தப் பட்டயமும் கொடுத்தார்கள். இவற்றால் எனக்குப் பெருமை என்று நினைத்து வாங்கிக் கொண்டேன். ஆனால் நாங்கள் சிறை சென்று தியாகம் செய்து வாங்கிய இவை இப்போது எனக்கு தேவையில்லை. காரணம் வெள்ளைக்காரர்கள் காலத்தில் இருந்ததைக் காட்டிலும் சுதந்திர இந்தியாவில் லஞ்சமும், ஊழலும் கரைகடந்து பெருகிவிட்டன. காவல்துறையின் அராஜகமும் அடக்குமுறையும் வெள்ளையர் காலத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கின்றன. சுதந்திரம் பெற்ற நாட்டில் மக்களும், அதிகாரிகளும் சுதந்திரத்தின் பெருமையை உணர்ந்து நேர்மையாகவும், மக்களுக்கு நாணயமாகவும் பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்த்தேன். நாளுக்கு நாள் இந்த லஞ்சப் பேய் அதிகரிக்கிறதே தவிர குறைவதாகத் தெரியவில்லை. அதிகாரிகள் வெள்ளைக்காரர்களை விட தங்களை மேலானவர்களாகக் கருதிக் கொண்டு சொந்த நாட்டானையே சுரண்டிக் கொழுத்து வருகின்றனர். இதற்காகவா இத்தனைப் பாடுபட்டு சுதந்திரம் வாங்கினோம்? என்றார்.

தருமபுரி தீர்த்தகிரி முதலியார்.இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில், குறிப்பாக 'வெள்ளையனே வெளியேறு' எனும் ஆகஸ்ட் புரட்சியின் போது தர்மபுரி பகுதிகளில் ஆங்கில ஏகாதிபத்திய சர்க்காருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் தீர்த்தகிரி முதலியார். இவர் அன்னசாகரம் எனும் ஊரில் ஒரு சாதாரண நெசவாளர் குடும்பத்தில் 1882இல் பிறந்தார்.
கடலூர் அஞ்சலை அம்மாள்
அஞ்சலை அம்மாள் பிறந்தது 1890ஆம் ஆண்டு. 1921ஆம் ஆண்டில் தனது முப்பத்தியோராவது வயதில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு, தமிழகத்தின் முதல் பெண் சுதந்திரப் போராளி எனும் பெருமையைப் பெற்றார். இவரும் இவரது கணவரும் நம் நாட்டில் நடந்த அத்தனை போராட்டங்களிலும் கலந்து கொண்டார்கள். 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்திலும், 1933இல் சட்டமறுப்பு மறியலிலும், 1940இல் தனிநபர் சத்தியாக்கிரக போராட்டத்திலும் இவர் கலந்து கொண்டார். 1941லும், 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் கலந்து கொண்டு சிறை சென்றார். இவர் வாழ்க்கை பெரும்பாலும் சிறைவாசத்திலேயே கழிந்தது எனலாம். ஊர் சுற்றி பார்க்க இவர் அலைந்திருக்கிறாறோ இல்லையோ, பல ஊர்களில் இவர் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். அப்படிப்பட்ட ஊர்களில் கடலூர், திருச்சி, வேலூர், பெல்லாரி ஆகியவை அடங்கும். இவர் கர்ப்பவதியாக இருந்த காலத்தில் சிறை சென்று, பேறு காலம் வந்தபோது சில நாட்கள் வெளியே விடப்பட்டு, பிரசவம் ஆனதும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
1929ஆம் ஆண்டு நடந்த சென்னை சட்டசபைத் தேர்தலில் இவர் கடலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது கணவர் முருகப்பா, இவரும் பலமுறை சிறை சென்ற தியாகி. கணவன் மனைவி இருவருமே சிறையில் இருந்தபோது, இவர்களது மகள் லீலாவதி என்ன பாடு பட்டிருப்பார். 1952ஆம் ஆண்டு நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலிலும் இவர் கடலூரிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது மகள் லீலாவதி ஒன்பது வயதாக இருக்கும்போதே நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த வயதிலேயே நான்காண்டுகள் சிறைதண்டனை பெற்றார். இவரது தேசப்பணியைக் கண்டு மகிழ்ந்த மகாத்மா காந்தி இவரைத் தன்னுடன் அழைத்துச் சென்று வார்தா ஆசிரமத்தில் சேர்த்துக் கொண்டார்.
இதுபோன்று ஆயிரமாயிரம் தியாகிகள் வரலாறு வலைதளத்திலேயே உள்ளது அவர்களைப் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லுங்கள்
பாலசுப்ரமணியன் 9444305581

பாலியல் வன்முறை, கோலை கொள்ளை, வழிப்பறி, கலாசார சீரழிவு பாதிக்கப்படுவதை தடுக்கவும் வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்கவும்.
மத்திய மாநில அரசே திரைப்படங்களில் ஆபாசம் வன்முறைக் காட்சிகளுக்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் அமைப்பு சரியாக செயல்படுத்து.
வார மாத தின இதழ்கள் கவர்ச்சி படங்களை அச்சிடுவதற்கு கட்டுப்பாடுகளை கண்காணிப்பை தீவிரமாக்கு மீறும் பத்திரிகை யை தடை செய். விளம்பரம் எனும் பெயரில் ஆபாசன்களைக் காட்டுவதை தடை செய்.
காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.
அரைகுறை ஆடையில் நடனங்கள் இறுக்கமான உடையில் கவர்ச்சியான தோற்றத்துடன் இரட்டை அர்த்த வசனங்கள் ஆபாச பாடல் காட்சிகளையும் வன்முறைக் காட்ச்சிகளையும் ஒளிபரப்பிட தடை செய்.
நாடகம் என்ற பெயரால் நம் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத உலகிற்கே கற்பு நெறி என்றால் என்ன என்று போதிக்கும் எம்குலமாம் தமிழ் குலப் பெண்களை அவமதிக்கும் நோக்கில் கள்ளக்காதல் ஒருவருடன் காதல் பல ஆண்களுடன் கள்ளக்காதல் அதிலும் கணவருக்குத் தெரியாமல் கள்ளக்காதல் செய்வது எப்படி என்று சொல்லித்தரும் போக்கினை உடனே தடை செய்.
மாமியாரைக் கொடுமைப் படுத்தும் மருமகள் மருமகளைக் கொடுமைப் படுத்தும் மாமியார் விதம் விதமான ஐடியாக்களில் கொலை செய்வது எப்படி என்று வீட்டுக்குள் வன்முறையை தூண்டுவது மற்றும் ஆபாசம் மற்றும் விரசமான காட்சிகளை வீட்டுக்குள்ளேயே எந்த நேரமும் காட்டும் தொலைக்காட்ச்சி ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதி.
காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் எங்கள் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகள் மனங்களைக் கல்லாக மாற்றும் இரத்தம் சொட்டும் வன்முறை காட்சிகளையும், பெரியோர்களை கேலி கிண்டல் செய்யும், குழந்தைகள் மனங்களைக் காமத்தால் நிரப்பும் கலாச்சார சீரழிவு காட்சிகளை பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைப்பதை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் தொடைகாட்டும் கவர்ச்சி நடிகர் நடிகைகளின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்று சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.
புதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் நேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.
மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டுகளாக (2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல்) இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.
நம் கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.
வரும் ஆகஸ்ட் 15 ஆம் நாள் நம் கோரிக்கையை ஏற்காத நிறைவேற்றாத தொலைக்காட்சிகளை நாம் தடை செய்வோம்.(நாம் பார்க்கமாட்டோம் என்று உறுதி ஏற்ப்போம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக