ஆதரவாளர்கள்

வெள்ளி, 22 மார்ச், 2013

இலவச மருத்துவ சேவை தினமும் திருவொற்றியூரில்

நன்மக்களே!
 சென்னை திருவொற்றியூரில் ஏழை மக்கள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் ஆரோக்கியம் ட்ரஸ்ட் மூலம் மருத்துவ மனை (clinic) தொடங்கிட ஏற்பாடு செய்து வருகின்றோம்.

இடம் வாடகை கட்டிடம எங்கள் சக நண்பர் ஏற்பாடு செய்து விட்டார்.

சேவை நோக்கத்தில் தினமும் மாலை அல்லது காலை குறைந்தது 2 மணி நேரம் பணிபுரிய நல்ல மருத்துவரை பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்.
மருத்துவர் இசைந்ததும் துவங்கப்படும். போக்குவரத்து வசதி தேவைப் பட்டால் செய்து தர எங்களது சக நண்பர் முன்வந்துள்ளார்.

தேவையான சம்பளம் வாடகை போக்குவரத்து உள்ளிட்ட பிற செலவுகளை  நாங்களே பொறுப்பேற்றுக் கொண்டு செயல் பட முடிவு செய்துள்ளோம். 

ஆரோக்கியம் டிரஸ்ட் யாரிடமும் நன்கொடை பெறுவதில்லை உறுப்பினர் சந்தா பெறுவதில்லை என்ற லட்சியத்தோடு அமைப்பின் செயல்பாடுகளை செய்ய இருக்கின்றோம் 

இது குறித்த பயனுள்ள  ஆலோசனைகள்  பெரும்பான்மை மக்களுக்கு  பெரும் பயன் அளிக்கும். 
தங்களின் ஆலோசனைகளை அன்புடன் வரவேற்கின்றோம்.


"இறைவனிடம் பிரார்த்திக்கும் உதடுகளை விட மனிதர்களுக்கு உதவி செய்யும் கைகள் மேலானவை" - இங்கர்சால் மேல்நாட்டு அறிஞர் 

முழு நேரம் பகுதி நேரம் வாரம் ஒரு நாள் மாதம் இருமுறை என்று தன்னார்வத் தொண்டு  செய்ய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள பாலசுப்ரமணியன் 9444305581   குரு பிரசாத் டெக்ஸ்டைல்ஸ் 256 T,H,Road Thiruvottiyur Chennai 600019  E mail vitrustu@yahoo.in, ssdabookbank @yahoo.in

கருத்துகள் இல்லை: