ஆதரவாளர்கள்

Monday, June 30, 2014

வரலாறு கூறும் உண்மைகள்

பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வரலாறு கூறும் உண்மைகள் பல உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று ; அதிலும் தமிழினத்தைப் பொறுத்த வரையில், இந்த சூதாட்டம் நினைவிற்கப்பாற்பட்ட காலந் தொட்டு நிலவி வரத்தான் செய்கிறது ; எனினும் நீண்ட காலம் புதை குழிக்குள் இருக்கக் கூடியதல்ல சத்தியம் ; அது உலகுக்கு வெளிப்படும் போதெல்லாம்,  விஸ்வரூபத்திலேயே மக்கள் அதைத் தரிசிக்கின்றனர்!