ஆதரவாளர்கள்

Saturday, March 23, 2013

அவசரம் உடனே உங்க கருத்த சொல்லுங்க பாராட்டு வேண்டாம்

தேவையான சம்பளம் வாடகை போக்குவரத்து உள்ளிட்ட பிற செலவுகளை யாரிடமும் நன்கொடை பெறுவதில்லை நாங்களே பொறுப்பேற்றுக் கொண்டு செயல் பட முடிவு செய்துள்ளோம்.

நன்மக்களே!
 சென்னை திருவொற்றியூரில் ஏழை மக்கள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் ஆரோக்கியம் ட்ரஸ்ட் மூலம் மருத்துவ மனை (clinic) தொடங்கிட ஏற்பாடு செய்து வருகின்றோம்.

இடம் வாடகை கட்டிடம எங்கள் சக நண்பர் ஏற்பாடு செய்து விட்டார்.

சேவை நோக்கத்தில் தினமும் மாலை அல்லது காலை குறைந்தது 2 மணி நேரம் பணிபுரிய நல்ல மருத்துவரை பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்.
மருத்துவர் இசைந்ததும் துவங்கப்படும். போக்குவரத்து வசதி தேவைப் பட்டால் செய்து தர எங்களது சக நண்பர் முன்வந்துள்ளார்.
தேவையான சம்பளம் வாடகை போக்குவரத்து உள்ளிட்ட பிற செலவுகளை  நாங்களே பொறுப்பேற்றுக் கொண்டு செயல் பட முடிவு செய்துள்ளோம்.

ஆரோக்கியம் டிரஸ்ட் யாரிடமும் நன்கொடை பெறுவதில்லை உறுப்பினர் சந்தா பெறுவதில்லை என்ற லட்சியத்தோடு அமைப்பின் செயல்பாடுகளை செய்ய இருக்கின்றோம் 

இது குறித்த பயனுள்ள  ஆலோசனைகள்  பெரும்பான்மை மக்களுக்கு  பெரும் பயன் அளிக்கும். 
தங்களின் ஆலோசனைகளை அன்புடன் வரவேற்கின்றோம்.
"இறைவனிடம் பிரார்த்திக்கும் உதடுகளை விட மனிதர்களுக்கு உதவி செய்யும் கைகள் மேலானவை" - இங்கர்சால் மேல்நாட்டு அறிஞர் 

முழு நேரம் பகுதி நேரம் வாரம் ஒரு நாள் மாதம் இருமுறை என்று தன்னார்வத் தொண்டு  செய்ய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள பாலசுப்ரமணியன் 9444305581   குரு பிரசாத் டெக்ஸ்டைல்ஸ் 256 T,H,Road Thiruvottiyur Chennai 600019  E mail vitrustu@yahoo.in, ssdabookbank @yahoo.in

6 comments:

குருநாதன் said...

good effort

மதுரை சரவணன் said...

நல்ல முயற்சி ... உங்களை போல பலரும் இம்மாதிரி சேவையை தொடரலாமே..! வாழ்த்துக்கள்

Bala subramanian said...

வருகைக்கு நன்றி உங்களது ஆலோசனையை எதிர் பார்க்கின்றோம்

Bala subramanian said...

தங்கள் வருகைக்கு நன்றி சரவணன் அவர்களே
அடுத்தவனுக்கு ஐடியா கொடுப்பதில் நம்பள அடிச்சுக்க ஆளே இல்லை தலைவா ஏதாவது உருப்படியான ஆலோசனை இருந்தா தெரிவியுங்கோ ஏன்னா இதுல நிறைய பிரச்சனை வரும் என்று சொல்கிறார்கள் மருத்துவர்களின் எதிர்ப்பை சமாளிக்க வேண்டும் வீண் அவதூறு வதந்திகளை எதிர்கொள்வது எப்படி

மாலதி said...

உண்மையில் பாராட்ட வேண்டிய செய்தி இந்த சமூகம் இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களுக்கு காத்திருக்கிறது பாராட்டுகள் தொடருங்கள்.

Bala subramanian said...

தங்கள் வருகைக்கு நன்றி மாலதி அவர்களே