ஆதரவாளர்கள்

Sunday, June 30, 2013

மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் திங்கள் கிழமை தோறும்

மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் 17-6-2013 அன்று முதல் மக்கள் கூடும் இடங்களில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை தோறும் இந்தியன் குரல் அமைப்பு சார்பில் தமிழகம் முழுவது நடத்திட ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றோம்.

Saturday, June 29, 2013

ஆனாலும் ஊழல் நன்றாக நடந்தது.

மாவட்ட தலைநகரம், மாநில தலைநகரம் கட்சி அலுவலகம் இலவச இடம் கட்டிடம் வரிவிலக்கு மின் கட்டண சலுகை, தேர்தல் நேரங்களில் தொலைகாட்சி மற்றும் பாது காப்பு இலவச தொலைபேசி இணையதள வசதியுடன் உள்ளிட்ட அரசின் பல சலுகைகள் அரசியல் கட்சிகளுக்கு உண்டு.

தகவல் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் அரசியல் கட்சிகள் தகவல் அளிக்க வேண்டும் -மத்திய தகவல் ஆணையம் உத்தரவு.

 அரசியல் கட்சிகள் RTI சட்டத்தில் இருந்து விலக்களிக்க பாராளுமன்றத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் - பிரதமர் மன்மோகன் சிங்

எந்த ஒரு அரசியல் கட்சியும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை அந்த நிறுவனங்களிடம் ஒப்படைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி தரவில்லை ஆனால் ஒப்படைக்கப்பட்டது
2 ஜி அலைக் கற்றை , காமல் வெல்த் , கார்கில் அடுக்குமாடி, நிலக்கரி சுரங்கம் ஊழல் போன்று அனைத்து ஊழலும் செய்வோம் அளவுக்கு அதிகமான வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்து வைப்போம் அடுத்து வரும் தேர்தலில் மக்களுக்கு இலவசம் கொடுக்க வேண்ண்டும் என்பதற்காக மக்களே உங்களுக்காக கொள்ளையடிப்போம் ஊழல் செய்வோம் என்று வாக்குறுதி தரவில்லை.
 ஆனாலும் ஊழல் நன்றாக நடந்தது. ஆனால் எல்லா ஊழலும் தகவல் உரிமைச் சட்டத்தால் வெளிவந்து விட்டது.
விலைவாசிகளை உயர்த்துவோம் மின் கட்டணங்களை உயர்த்துவோம் பேருந்து மற்றும் ரயில் கட்டணங்களை உயர்த்துவோம் என்று எந்த ஒரு அரசியல் கட்சியும் தேர்தல் வாக்குறுதி அளிக்கவில்லை.
 ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக நடந்த காரணத்தால் என்ன வாக்குறுதி அளித்தீர்கள் அதில் எத்தனை நிறைவேற்றினீர்கள் நிறைவேற்றாத வாக்குறுதிகள் என்ன அதற்காக என்ன தீர்மானங்கள் உங்கள் கட்சியில் நிறைவேற்றியுள்ளீர்கள் அத தீர்மானங்களின் நகளினைக் கொடுங்கள் என்றுதான் கேட்டார்கள்.
 உங்களது கட்சி மினிட்ஸ் புத்தகத்தில் அந்த தீர்மானங்கள் உள்ள பக்கங்களின் நகல் கொடுங்கள் என்றுதான் கேட்டார்கள். கொடுக்கவில்லையே  மூன்று ஆண்டுகள் போராடியும் தர மறுத்ததால் ஆணையம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்ட 13 முன்னாள் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி உத்தரவு வழங்கியுள்ளது. அப்படியும் தரவில்லையே


ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் முடிந்த பிறகும் ஒவ்வொரு கட்சியும் அவர்கள் வெளிநாட்டின் கைக் கூலிகள் அவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது, உல்பா தீவிரவாதி நெருக்கமானவர்கள் அந்தக் கட்சிக்கு பணம் தருகின்றார்கள் என்ற தகவல்களை கேட்டு பொது மக்களாகிய நாங்கள் கவலை கொள்கின்றோம். ஓட்டுப் போட மக்களுக்கு பணம் செலவு செய்கின்றோம் அதனால் நாங்கள் என்ன செய்வது என்று நீங்கள் கேட்பதும் எங்களுக்கு பயமாக உள்ளது ஆகவே உங்கள் கட்சியி யோக்கியதையை தெரிந்து கொள்வது அவசியம் ஆகின்றது .

மக்கள் ஆட்சி ஜனநாயக ஆட்சி நடத்தி மக்களுக்கு சேவைசெய்யும் கட்சி என்று சொல்லும் நீங்கள் உங்கள் கட்சியை அப்படித்தான் நடத்துகின்றீர்களா உங்களது கட்சி வேட்பாளர் தேர்வு நியாயமாக நேர்மையாக நடத்தப் படுகின்றதா அதற்கு மேலாக உங்கள் கட்சி அல்லாத யாரேனும் பணம் கொடுத்து வேட்பாளர் தேர்வில் வெற்றி பெருகின்றாரா என்ற விபரம் தானே கேட்கின்றோம் தரவே இல்லையே

மக்கள் ஓட்டுப் போட ஓட்டுக்கு பணம் கேட்கின்றார்கள் என்று மக்கள் மேல் பலி போடுகின்றீர்களே. உங்கள் தவறுக்கு மக்களையும் கூட்டாளியாக்க முயன்று அதில் வெற்றி போன்ற மாயத்தை செய்யும் தந்திரத்தால் எமாற்றுகின்றீர்களே. அவர்கள் கேட்டார்களா ஓட்டுக்கு பணம் கொடுங்கள் என்று அவர்கள் கேட்டார்களா இலவசம் கொடுங்கள் என்று நீங்கள் கொடுத்தால் வாங்கத்தானே செய்வார்கள் அவர்களுக்கு என்ன தெரியும் உங்களுக்கு அந்தப் பணம் எப்படி வந்தது என்று தெரியுமா அல்லது ஏன் கொடுக்கின்றீர்கள் என்று சிந்திக்க நேரம் இருக்கின்றதா? விவரமான பொது மக்கள் நீங்கள் கொடுக்கும் பணம் இலவசம் எல்லாம் எப்படி வந்தது யார் கொடுத்தது கொடுத்தவர் யார் என்ற விபரம் கேட்டல் தர மறுக்கின்றீர்களே

நீங்கள் செலவு செய்யும் பணம் நல்லவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டதா அல்லது ஏமாற்றுக்காரர்களால் கொள்ளைக் காரர்களால் தீவிரவாதிகளால் நன்கொடையாகப் பெறப்பட்டதா என்று அறியும் உரிமை ஒட்டுப்ப்போட்ட மக்களுக்கு இல்லையா கேட்டால் தர முடியாது என்று சொல்கின்றீர்களே.

அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு கொண்டு வரும் சட்டங்கள் எல்லாம் அனைத்துக் குடிமக்களுக்கும் பொது இல்லையா? எல்லா சட்டங்களையும் மக்கள் மதிக்க வேண்டும் எங்களை எந்தச் சட்டமும் கட்டுப்படுத்தக் கூடாது என்பதன் நோக்கம் என்ன ?

ஓட்டுப் போடா மக்கள் வேண்டும் ஆனால் அந்த மக்கள் கேட்கும் தகவல் இல்லை

ஒட்டு மட்டும் போடுங்கள் மற்றதைக் கேட்கக் கூடாது என்றால்


எதிர்க் கட்சிகள் பழிவாங்கப் பயன்படுத்தும் என்ற வாதம் செய்யும் கட்சிகளே தகவல் கேட்டால் கொடுத்துவிட்டால் எப்படி பலி வாங்க முடியும் தகவல் தானே கேட்கின்றார்கள் கேட்டால் கொடுக்க வேண்டியது தானே!. யோக்கியமானவர்களாக உண்மையானவர்களாக நேர்மையானவர்களாக உள்ள உங்களை எப்படி பழிவாங்க முடியும் உங்கள் உள்கட்சி விவகாரம் வெளி வந்துவிடும்  என்றல் நீங்கள் நாட்டுக்காக உழைப்பவர்களா அல்லது உங்கள் கட்சிக்காக உளைப்பபவரா

கட்சியி ரகசியம் வெளிவந்துவிடும் என்று கூக்குரல் இடும் கட்சிகளே கட்சியில் ரகசியம் அவசியமா அப்படி என்ன ரகசியம் இருக்கும் வந்த நன்கொடைகள் அல்லது தவறுகள் தானே இருக்க முடியும்.

உங்கள் கட்சிக்கு எந்த பதிப்பும் வராது என்று நாங்கள் சொல்கின்றோம் அப்படி பாதிப்பு வரும் என்று சொல்லும் நீங்கள் அந்த பாதிப்புகளைப் பட்டியல் இடுங்கள் பார்ப்போம்.

இதை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் இனி வரும் தேர்தலில் ஒட்டு அளிக்கும் மக்கள் தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்ட தகவல் தரும் கட்சிக்கு மட்டுமே என்பதில் தீர்மானமாக இருக்கின்றார்கள் என்பதையும் மனதில் கொண்டு வாதம் செய்யுங்கள்

தகவல் சட்டத்தில் தகவல் கேட்டால் தகவல் தரும் கட்சிக்கு மட்டுமே எங்கள் ஒட்டு

தகவல் சட்டத்திற்குள் வரமாட்டேன் எங்கே ஒடுகின்றீர்கள் ஏன் ஒடுகின்றீர்கள் எதற்க்காக ஒடுகின்றீர்கள் அரசியல் கட்சிகளே எல்லாம் மக்களுக்கு தெரியும்

இலவசமாக இனி நீங்கள் எது கொடுத்தாலும் எதற்கு இலவசம் தருகின்றீர்கள் என்பது முதல் அதற்கு பணம் எப்படி கிடைத்தது என்பதுவரை  மக்கள் RTI மூலம் கேட்பார்கள். 

ஒரு பேருந்தை பாதுகாப்புடன் ஓட்டிச் செல்ல ஒரு ஓட்டுனரை நியமித்து இருக்கின்றோம். அவர் நல்ல ஓட்டுனர் என்று நம்பித்தான் 60 பயணிகளும் பேருந்து பயணம் செய்கின்றார்கள். அந்த ஓட்டுநர் வண்டியில் உட்கார்ந்தவுடன் அவர் இஷ்டத்திற்கு வண்டியை ஓட்டி செல்வது மட்டும் இல்லாமல் நான் அப்படித்தான் ஓட்டுவேன் உங்கள் வேலை வண்டியில் ஏறி உட்காருவது என்னுடைய வேலை வண்டியை ஓட்டுவது இப்படித்தான் ஓட்டுவேன் என்று தாறுமாறாக ஓட்டிச் சென்றால் அந்த ஓட்டுனரை நீக்குவதா வேண்டாமா நீங்களே முடிவு எடுங்கள்.

அவர் இஷ்டத்திற்கு வண்டியை ஓட்டி செல்வது மட்டும் இல்லாமல் நான் அப்படித்தான் ஓட்டுவேன் உங்கள் வேலை வண்டியில் ஏறி உட்காருவது என்னுடைய வேலை வண்டியை ஓட்டுவது இப்படித்தான் ஓட்டுவேன்நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை அந்த நிறுவனங்களிடம் ஒப்படைப்போம் என்று வாக்குறுதி தரவில்லை ஆனால் ஒப்படைக்கப்பட்டது

Friday, June 28, 2013

இந்தியன் குரல் பயிற்சி கூட்டங்கள்

சென்னை 29-6-23013கும்பத் காம்ப்ளெக்ஸ் சென்னை 3 9444305581

சென்னை கல்விக்கடன்  1-7-2013 கும்பத் காம்ப்ளெக்ஸ்

திருப்பூர் 6-7-2013
பு வே கோபால்

தகவல் உரிமைச் சட்ட உதவி மையம்

பிரதி மாதம் 1,15 சென்னை கும்பத் காம்ப்ளெக்ஸ்
பிரதி வாரம்  ஞாயிறு கிழமைகளில் திரு வி க நகர் சென்னை 11
பிரதி வாரம்  திங்கள் கிழமை திருவொற்றியூர் சென்னை 19
பிரதி வாரம் வியாழக் கிழமைகள் ராஜ தியேட்டர் பின்புறம் வேலூர்
பிரதி வாரம் சனிக்கிழமை பீளமேடு கோவை
பிரதி மாதம் முதல் ஞாயிறு மதுரை
பிரதி மதம் இரண்டாம் ஞாயிறு தேனீ
அனைத்து வேலை நாட்கள் காஞ்சிபுரம்
அனைத்து வேலை நாட்கள் திருப்பத்தூர்
அனைத்து வேலை நாட்கள் திருச்சி
அனைத்து  வேலை நாட்கள் குருவலூர் செஞ்சி தாலுகா விழுப்புரம் துறை  9486237264

Wednesday, June 26, 2013

சாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்

உண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக்க முடியாது என்று நான் சவால் விடுகின்றேன். உறுதியாய் சொல்கின்றேன் முடியாது.

உங்கள் நெஞ்சில் கைவைத்து உண்மையை சொல்லுங்கள்.
 உங்கள் பிள்ளைகள் படிப்பதை சந்தோசமாக ஏற்று மகிழ்ச்சியுடன் தான் படிக்கின்றார்களா? வீட்டுப் படம் சந்தோசமாக செய்கின்றார்களா? 
 பல மாணவர்கள் மன அழுத்தத்துடன் மன நல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டிய நிலை இருக்கின்றதா இல்லையா?
இதற்கு கரணம் என்ன? என்றாவது நம் சிந்தனை செய்தோமா ?

Monday, June 24, 2013

கல்விக் கடன் திட்டம். கல்விக் கடன் யாருக்காக கொண்டுவரப்பட்டதோ , யாரை மனதில் வைத்து கொண்டு வரப்பட்டதோ அவர்களுக்கு எந்த வங்கியும் கடன் தர தயாராக இல்லை.

உயர்கல்வி பயில விரும்பும் மாணவனுக்கு கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்கு பணம் இல்லை என்ற நிலை இல்லாமல் ஆக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட உன்னத திட்டம் கல்விக் கடன் திட்டம். 

நாமளும் அரசியல் கட்சி நடத்தலாம்!? அரசியல் இயக்கம் அரசின் சலுகைகள்

அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் மாநிலக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் தகவல் உரிமைச் சட்டம் மூலம் தகவல் கேட்டால் ஏன் தரவேண்டும் என்பதற்கு மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பில் விளக்கம

Saturday, June 22, 2013

மின் கட்டண உயர்வு அறிவிப்பு

இந்தியன் குரல் கூறியது போன்றே மின் கட்டண உயர்வு அறிவிப்பு வந்துவிட்டது தினமலரில் செய்தி அதை அப்படிடியே கீழே கொடுத்துள்ளோம். என்ன சூட்சுமம் இருக்கின்றதோ அதை வெளியிடாமல் நல்லதுபோன்ற தோற்றமளிக்கும் செய்தியை மட்டும் வெளியிட்டுள்ளது அனால் அடுத்து வரும் ஆபத்த்தான மின்கட்டண உயர்வு பற்றிய ஆணையத்தின் முடிவை எந்த ஊடகமும் வெளியிடவே இல்லை.அவர்களுக்கு தெரியவில்லையா அல்லது கொடுக்கும் செய்தியை மட்டும் போடும் திறமையா? இப்படிப்பட்ட  ஊடகங்களின், அரசின் செயல்களை மக்கள் நம்பிக்கொண்டு தான் இருக்கின்றார்களா? தெரியாமல் அல்லது தெரிந்தே மௌன சாமியார்களாக இருக்கின்றார்களா?

Thursday, June 20, 2013

ஒரு குழந்தை தாயானது! திடங்கொண்டு போராடு "காதல் கடிதம்"

வழக்கம் போல் இரவு 10 மணிக்கு கணினி முன் அமர்ந்தான் ரவி. சூடாக பாலை கொண்டு வந்து கொடுத்தாள் அவன் அம்மா. திருமணமே வேண்டாம் என்று ஒற்றைக்காலில் நிற்கும் மகனைப்பார்த்து ஒரு பெருமூச்சு விட்டு நகர்ந்த போது, அம்மா இங்கே வாயேன் என்று கையைப் பிடித்து இழுத்தான் ரவி.

Tuesday, June 18, 2013

கல்விக்கடன் பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு இந்தியன் குரல் இலவச உதவி மையத்தில் தீர்வு

கல்விக்கடன் பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு இந்தியன் குரல் இலவச உதவி மையத்தில் தீர்வு 

வங்கிகள் விண்ணப்பம் தர மறுத்தால்? 
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வாங்க மறுத்தால்? 
இந்த மதிப்பெண்ணுக்கு கடன் வழங்க இயலாது என்றால்? 
நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்து படிப்பவர்களுக்கு கடன் இல்லை என்றால்? 

அம்மா அம்மா நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி நாடே இருக்குது தம்பி என்ற பாடல் வரிகள் கூறும் அர்த்தம் என்ன. நல்ல பிள்ளை என்பதற்கு என்ன அளவுகோல் என்றெல்லாம் சிந்திக்க தோன்றினாலும் இன்றைய இளம் சமுதாயம் வளர அவர்களுக்கு ஏற்ற சுற்றுப்புறம் அமைந்திட்ட உலகம் இருப்பதாக தெரியவில்லை. முன்னோர்கள் வகுத்தளித்த நல்ல ஒழுக்க நெறிகள் பற்றிய விழிப்பு இல்லாத நிலைதான் உள்ளது எனலாம். பண்பில்லா நிலை, சுயநலம், மனிதாபிமானம் அற்ற நிலை, யார் எப்படி ஆனாலும் எனக்கு கவலையில்லை என்ற நிலை, கொலை கொள்ளை பெருக்கம், பணம் மட்டுமே வாழ்க்கை என்ற நிலை என்ற காரணிகளையும் அதன் போக்கையும் ஆராய்ந்து அறிவது நம் கடமை. 

Monday, June 17, 2013

அம்மாக்களே எச்சரிக்கை ! நீதி கேட்ட தாயின் அறைகூவல்:

அம்மாக்களே!
இந்தியாவில் உங்களுக்கும் உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் யாருக்கும் பாதுகாப்பில்லை என்பதன் அப்பட்டமான வெளிப்பாடுதான், தினசரி பெண்கள் பாலியல் தொல்லைக்கு பலியாவது.  உங்களின் உங்கள் பிள்ளைகளின் எச்சரிக்கையும் அறிவும் ஆற்றலுமே பாதுகாப்பு , எச்சரிக்கையுடன் இருப்பீர்!.

Saturday, June 15, 2013

பள்ளியில் இருந்த பெஞ்சை திருடி விற்று டாஸ்மாக் கடையில் மாணவர்கள் மது அருந்திய சம்பவம்

மதுரையில் பள்ளியில் இருந்த பெஞ்சை திருடி விற்று டாஸ்மாக் கடையில் மாணவர்கள் மது அருந்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு குடிப்பழக்கம் உள்ளது.

Friday, June 14, 2013

2014 அம ஆண்டு மக்களவைத் தேர்தலில் எங்கள் வாக்கு யாருக்கு !!!!


தவறு செய்யும் அரசியல் வாதிகளை திருந்தச் செய்வோம் திருந்தாதவர்களை  வருந்தச் செய்வோம் .


2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கின்றது. அரசியல் கட்சிகள் எல்லாம் தங்களது கொள்கைகளை சுருக்கி தங்கள் கட்சியின் கொள்கைக் கூட்டணிக்கு பதிலாக கொள்ளைக் கூட்டணிக்கு தயராகி வருகின்றன. கூட்டணி வைக்க தீர்மானித்து அதற்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு கட்சியும் கட்சியரசியல் கைகளை நீட்டி வருகின்றது. 

Thursday, June 13, 2013

குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் அதிகரிக்கும் சாலை விபத்துகள்

தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் அரசு மதுக் கடைகளை நடத்தக் கூடாது என்ற போராட்டங்கள் நடந்து வருவது மக்கள் விழிப்புணர்வைக் காட்டுகின்றது. மதுவே நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் காரணமாய் அமைந்துவிடுகின்றது. குற்றம் செய்தவன் குடிபோதையில் செய்துவிட்டான் என்று சாதாரணமாக எடுத்துக்கொண்டு போகவேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருப்பது வெட்கக் கேடானது. காவல் துறையினரே குடிகாரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் என்னவென்று சொல்வது?


கடந்த  சில தினங்களுக்கு முன் திருவொற்றியூரில் நடந்த உண்மைச் சம்பவம் ;

Tuesday, June 11, 2013

மும்பை சிவப்பு விளக்கு பகுதி பெண் ஸ்வேதா!!! கைகொடுக்கும் அமேரிக்கா உதவாத இந்தியா

  அமேரிக்கா முன்னேரியதர்க்கும் இந்தியா வளர்ச்சி அடையாமல் பின்தங்கி இருப்பதற்கும் காரணம்.
 நல்லது செய்யும் நேர்மையாய் இருக்கும் உண்மையை பேசும் உதவும் மனிதர்களை இந்திய மக்கள் மதிப்பதில்லை!. அமேரிக்க அதிபராக இருந்தாலும் பொய் பேசினால், தவறு செய்தால், உதவிசெய்ய மறுத்தால் அமெரிக்கர்கள் மதிப்பதில்லை!.
அவமானப் படவேண்டிய இந்தியர்கள் ஆனந்தத்தில்.

‘திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி’

எழுத மறந்த காதல் கடிதம்


நேர்மை நிறைந்த நடுவர்களே அருமைப்  பெரியோர்களே! அருமைத் தாய்மார்களே! அன்புக் குழந்தைகளே! அனைவருக்கும் என் பணிவான வணக்கம்   காதல் கடிதம் எழுதும் போட்டியில் நானும் பங்குபெறுவது பரிசுக்காக அல்ல அதன் ரகசியம் அப்புறமா  சொல்வேன் 

Monday, June 10, 2013

அரசியல் கட்சிகள் ஓட்டம் ஏன்? நாமறிவோம் நாடறியச் சொல்வோம்!!

"தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள் மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்"  _ தகவல் ஆணையம் தீர்ப்பு.

அரசியல் கட்சிகள் ஓட்டம் ஏன்? நாமறிவோம் நாடறியச் சொல்வோம்!!

அன்பார்ந்த அரசியல் கட்சிகளே! நீங்கள் மக்கள் காவலரா?

Sunday, June 9, 2013

அ தி மு க தலைமை அலுவலகம் முன் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட பாதிக்கப்பட்ட இந்தியக் குடிமகன்கள்சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகம் முன் உண்ணாவிரதம் மேற்கொண்ட பாதிக்கப்பட்ட இந்தியக் குடிமகன்கள் 

அன்பைத்தெரியாத அன்புகாட்டும் பருவம்

நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ சம்பவங்கள் தினமும் நடக்கின்றது ஆனாலும் ஒரு சில சம்பவங்கள் எப்போதாவது நினைவுக்கு வரும் போது மனதுக்கு மகிழ்ச்சி தருகின்றது என்பதற்காகவே நினைக்கத் தோன்றுகின்றது.
ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் பதிம வயது என்பது எது எந்த வயதில் காதல் என்பதெல்லாம் தெரியாத புரியாத வயதிலும் சிலரிடம் அன்பு காட்டுகின்றோம்.

Saturday, June 8, 2013

சிபிஎஸ்சி வழங்கும் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

Thursday, June 6, 2013

பிள்ளைகளைக் கடத்தும் தனியார் பள்ளிகள் : நடுங்கவைக்கும் நாமக்கல்சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசினர் உயர்நிலைப் பள்ளி பற்றி நாளிதழ்கள் செய்தி வெளியிட்டனவோ இல்லையோ ஆனால் இந்தியன் குரல் வலைப் பதிவில் சாதனை படைத்த அரசுப் பள்ளிகள் எனும் தலைப்பில் அப்பள்ளி ஆசிரியர்களையும் மாணவர்களையும்  பாராட்டி செய்தி வெளியிட்டோம் என்பதை அறிவீர்கள்!

பொறியியல் மற்றும் கலை அறிவியல் மாணவர்களுக்கு புத்தக வங்கி

பொறியியல் மற்றும் கலை அறிவியல் மாணவர்களுக்கு புத்தக வங்கி

பொறியியல் மற்றும் கலை அறிவியல் மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்களை ஒரு பருவம் முழுதும் படித்துவிட்டு திரும்பத் தரும் வகையில் சமூக அமைப்புகள் மூலம் புத்தக வங்கிகள் செயல்படுகின்றது.

Monday, June 3, 2013

ஆபாச நடிகைகளுக்கு செருப்பு மாலை ; வள்ளுவர் கோட்டம் அருகில்

நேற்று 2-6-13 காலை பத்து மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆபாச சினிமா நடிகைகளுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது.