ஆதரவாளர்கள்

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

மேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்


 திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக்கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்போது திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் தம்பிதோட்டம் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன்.
சின்னாளபட்டிக்கு ஜெயராம் தியேட்டருக்கு அருகில் உள்ள பேக்கரியில் தேங்காய் பண்ணும் சூப்பரா இருக்கும். மேட்டுத் தெரு முனையில் ஆம்லெட்டு சூப்பர இருக்கும். வாரம் தோறும் ஒரு நாள் இந்த கடைகளில் நண்பர்களோடு ஆஜராகிவிடுவோம்.  மாஞ்சோலையோ பூன்ஜோலையோ அங்கு தள்ளுவண்டியில் மாலை வேளையில் மட்டும் விற்கும் பருத்திப்பாலும் சூப்பரா இருக்கும் அதே பூஞ்சோலையில் ஒரு கடையில் டீ சூப்பராயிருக்கும் அந்தக் கடை தான் நான் முன்னர் குறிப்பிட்ட அந்த லாட்ஜுக்கு முன் உள்ள கடை. அந்த டீக்கடையில் நானும் என்னுடன் படித்த சக மாணவர்கள் எல்லோரும் சென்று டீ சாப்பிடுவோம். அப்போது என்னுடன் படிக்கும் மாணவன் கடைக்குள் சென்று அவனே டீ போட்டுத் தர நாங்கள் எல்லோரும் சாப்பிடுவோம். அவன் ஒவ்வொரு முறையும் டீ போடும்போது எல்லாம் எனக்கும் டீ போட்டு பார்க்கணும் என்று ஆசை வரும் அந்த நாளும் வந்தது. ஒருநாள் நானே டீ போட தயாரானேன் ஆனால் எப்படி போடுவது என்று சொல்லித் தரணுமே அதற்காக என் நண்பனை அருகில் வைத்துக் கொண்டேன். முதலில் டி கிளாசை  தண்ணியில கழுவினேன் பிறகு பாய்லர் தண்ணி(சுடுதன்னிங்க) கழுவினேன் மூன்று கிளாசையும் வரிசையாய் வைத்து முதலில் ஒரு ஸ்பூன் சக்கரை இட்டேன் அதன் பின் இச்டவ்வில் காஈந்து கொண்டு இருந்த பாத்திரத்தில் உள்ள பால் எடுக்கப் போனேன். கடைக்காரர் சொன்னார் ஆடையை விலக்கி பால் எடுடான்னார். ஆடையை நான் ஏன் விளக்க வேண்டும் என்னுடைய ஆடை பாத்திரத்தில் படாது என்றேன். என் நண்பன் பால் ஆடையை விளக்குடா என்றான் ஐயோ நான் என் ஆடை என்று நினைத்து விட்டேன். தலயிலே லேசாத் தட்டிக்கொண்டே அருமையான அலுமினியக் கரண்டி அதை அப்படியே எடுத்து  பால் பாத்திரத்தில் பாலின் மேல் படர்ந்து இருந்த ஆடையை விளக்கி பாலை மட்டும் எடுக்க நான் மோற்சிக்கின்றேன். ஆடையைக் கொஞ்சம் தள்ளிவிட்டு பால் எடுக்கும் முன்பாக ஆடை கரண்டிக்கே வந்திவிடும் எப்படியோ பால் எடுத்து கிளாசில் ஊற்றி அதன் பின் டிக்காசனை ஊற்றி ரெண்டு ஆத்து ஆதிவிட்டு பின் ஆடையை கொஞ்சம் எடுத்து கிளாசுல மேலாப்புல போட்டு எடுத்து இரண்டு  டி கிளாசை ஆளுக்கு ஒன்றாய் குடுத்துவிட்டு நானும் வாயில் வைத்தால்  ஆகா என்ன சுவை அன்று முதல் நான் அங்கு செல்லும் போதெல்லாம் நானேதான் டீ போட்டு சாப்பிடுவேன். அப்படியே அங்கு இருக்கும் பேப்பரை எடுத்து படிப்பது வழக்கம். படித்துவிட்டு சும்மா இல்லாமல் விவாதமும் நடக்கும் அப்படி என் அறிவை பெருக்கிவிட காரணமாக இருந்த டீக் கடை என் முதல் அனுபவம்.


சட்டமும் அரசியலும் 

அரசுத் துறைகளில் குறித்தகாலத்தில் பொருள் மற்றும் சேவை பெறும் உரிமை மற்றும் குறைதீர் சட்ட முன்வடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதைச் சுருக்கமாக "சேவை பெறும் உரிமைச் சட்ட முன்வரைவு' எனலாம். இந்தச் சட்ட முன்வரைவின் உள்ளார்ந்த நோக்கம் ஒருவகையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு இணையானது.
மத்திய, மாநில அரசுத் துறைகள், அரசு நிதியுதவி பெறும் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் ஆகியன அனைத்தும் இந்தச் சட்ட வரம்புக்குள் வருகின்றன. சேவைக் குறைபாடு உண்மை என்று கண்டறியப்பட்டால், ரூ.250 முதல் ரூ.50,000 வரை அபராதம், துறை நடவடிக்கை எல்லாவற்றையும் இந்தச் சட்டம் உறுதி செய்கிறது.
இப்போதும்கூட, பல அரசுத் துறைகளில் ஒவ்வொரு சேவைக்கும் ஒரு கால அளவு வைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு மாதத்தில் கடவுச்சிட்டை (பாஸ்போர்ட்) அளிக்க வேண்டும் என்பதை பாஸ்போர்ட் அலுவலகம் லட்சியமாகக் கொண்டுள்ளது. ஆனால், இது சட்டம் அல்ல. இதில் குறை ஏற்பட்டால் நாம் கேள்வி கேட்க முடியாது. இந்த மசோதா சட்டமானால், பொதுமக்கள் கேள்வி கேட்க முடியும்.
வேறுபல மத்திய, மாநில அரசுத்துறை நிறுவனங்களும்கூட தங்களது ஒவ்வொரு சேவைக்கும் ஒரு காலஅளவை நிர்ணயித்துள்ளன. ஆனாலும்கூட இதை நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கக் காரணம், அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் ஊழியர்கள் இல்லை என்பதும், அத்தகைய ஊழியர்களைத் தண்டிக்க முடியாத அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகள்தான்.
வருங்கால வைப்புநிதி அலுவலகமும், வருமான வரி அலுவலகமும் தங்களது இணைய முகவரியில் இத்தகைய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன. விண்ணப்பித்தவர்கள் 30 நாள்களுக்குள் தங்களுக்குப் பதில் கிடைக்காவிட்டால், அந்த இணைய முகவரியில் குறிப்பிட்டுள்ள அதிகாரிக்கு இணையத்தின் மூலமே தெரிவிக்கலாம். அவர்களும், "புகார் கவனத்துக்கு வந்தது, பார்க்கிறோம்' என்று பதில் அளித்து உறுதிசெய்கிறார்கள்.
அடுத்த சில நாள்களில், அத்துறையிலிருந்து வரும் பதில், நம் மீது குறை சொல்வதாகத்தான் இருக்கிறதே தவிர, ஊழியர்களின் தவறை ஏற்றுக்கொள்வதாக இருப்பதில்லை. ஒரு இன்றியமையாச் சான்று இணைக்கப்படாவிட்டால், அதை விண்ணப்பித்த சில நாள்களிலேயே தெரிவித்திருக்கலாமே? புகார் கொடுத்த பிறகு தெரிவிக்கும்போது, அந்தச் சான்றை அந்த ஊழியரே கிழித்துப்போட்டுவிட்டு பதில் தருகிறார் என்று நாம் சொன்னால் அதை யார் நம்புவார்கள்?
ஒவ்வொரு விண்ணப்பம் பெறும்போதும், இன்னின்ன சான்றுகளுடன், முழுமையாக அளிக்கப்பட்டது என்று ஒவ்வொரு துறையும் ரசீது வழங்க வேண்டும் என்பதை இந்தச் சட்ட முன்வரைவு கட்டாயப்படுத்தவில்லை எனும்போதே, எந்த அளவுக்கு இந்தச் சட்டம் பயனளிக்கப் போகிறது என்பது தெரிகிறது.
மத்திய அரசு கொண்டு வரும் பல சட்டத்திருத்தங்களின் நோக்கம் நல்லவையாக இருந்தாலும், சட்டத்தில் நிறைய நெளிவுசுளிவுகள் வைத்து, குற்றம் செய்யும் அரசு ஊழியர்களைப் பாதுகாப்பதாகவே அமைந்துவிடுவதால், அந்தச் சட்டங்களுக்கு எல்லாம் உள்நோக்கம் இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
சேவை பெறும் உரிமைச் சட்ட முன்வடிவு இரண்டு விஷயங்களைக் கட்டாயமாக்குகிறது. அதாவது, ஒவ்வொரு அரசு ஊழியர் அல்லது துறை செய்ய வேண்டிய கடமை என்ன, அந்தக் கடமையைச் செய்துமுடிக்கக் குறைந்தபட்சம் எத்தனை அலுவலக வேலைநாள்கள் தேவையாக இருக்கும் என்பதை மக்கள் சாசனமாக அறிவிக்க வேண்டும்; அத்துடன், ஒவ்வொரு மாநில அரசும், மத்திய அரசும் தனித்தனியாக பொதுமக்கள் குறைதீர் ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்பவைதான் அவை.
ஒரு அலுவலர் 30 வேலைநாள்களில் பணியை முடிக்கவில்லை என்று புகார் சொன்னாலும், அவர் அந்த வேலைநாள்களில் மாற்றுப்பணியில் இருந்தார், அவரது பொறுப்பில் யாரும் நியமிக்கப்படவில்லை என்று துறைத் தலைவர் கூறினால் அதை இந்தச் சேவை உரிமை மற்றும் குறைதீர் ஆணையம் ஏற்பதைத் தவிர வேறுவழியில்லை. வேறு ஒருவரைப் பணியில் அமர்த்தி விரைந்து முடித்துக் கொடுக்க முடியாதா என்று ஆணையம் கண்டனம் செய்யலாம், அவ்வளவே!
ஒவ்வொரு சேவையை எத்தனை நாளைக்குள் அளிக்க வேண்டும் என்பதை மக்கள் சாசனமாக அளிப்பது மட்டுமே போதாது. ஒவ்வொரு அரசு ஊழியரும் அன்றைய தினம் என்ன பணி செய்தார், எத்தனை கோப்புகளைப் பார்த்தார், எத்தனை விண்ணப்பங்களைப் பரிசீலித்தார் என்பதைப் பணிநிரல் பதிவேட்டில் பதிவது கட்டாயம் என்றாக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் நாற்காலிகள் காலியாகவும், கேன்டீன் மரத்தடியில் எப்போதும் கூட்டமும் இருக்கும் நிலை அப்போதுதான் மாறும்.
தகவல் பெறும் உரிமைச் சட்டம், கல்வி பெறும் உரிமைச் சட்டம், தொழிற்போட்டி நெறிப்படுத்தும் ஆணையம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், நிலம் கையகப்படுத்தும் சட்டம் என்பன போன்ற பல நல்ல சட்டங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒன்பதாண்டு ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது உண்மை. ஆனால், இந்தச் சட்டங்கள் அனைத்தும் முனைமழுங்கிய கத்திகளாக வலம் வருகின்ற அவல நிலை காணப்படுவதும் உண்மை. சற்று ஏதேனும் உயிர்ப்பு இருக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தையும்கூட நீர்த்துப் போக வைக்க அரசு வழிமுறைகளைத் தேடிக் கொண்டிருக்கிறது.
அடுத்த பொதுத் தேர்தலில் வாக்காளர்களைச் சந்திக்கும்போது நாங்கள் இன்னின்ன சட்டங்களைக் கொண்டு வந்து இந்திய ஜனநாயகத்திற்கு வலு சேர்த்திருக்கிறோம் என்று சொல்லி மக்களை ஏமாற்றத்தான் இந்தச் சட்டங்கள் உதவுகின்றனவே அன்றி, குறிக்கோளை நிறைவேற்றுகின்றனவா என்றால் இல்லை. ஆனால்தான் என்ன? அடுத்து ஒரு நேர்மையான அரசு பதவிக்கு வருமேயானால், சட்டத்தின் ஓட்டைகளை அடைத்து, முறையாகச் செயல்பட வழிகோலக் கூடாதா? அந்த வகையில் இந்தச் சட்டத்தை வரவேற்கலாம்!

கருத்துகள்(12)

அலைச்சலைத் தவிர்க்க,செலவைக் குறைக்க,வேலையை முடிக்க...லஞ்சம் தந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம்.அதற்கும் தரகர்களை நாடியே ஆக வேண்டிய அவசியம்.தரகர் மட்டுமே அணுக முடிகிறது;அவர்க்கு மட்டுமே தொடர்புடைய அலுவலர் கண்களை ஏறேடுக்கிறார்.எந்த அலுவலகத்திலும் இன்று நேரில் சென்று ஒன்றையும் முடிக்க முடியாது.சில சமயங்களில் சம்பந்தப்பட்ட நாற்காலிகளுக்கு முன் நிற்கும் அவஸ்தை சொல்லிப் புரிய வைக்க முடியாது;பட்டால்தான் தெரியும்.ப்ரோக்கர்கள் பெறும் லஞ்சம் பல்வேறு விசித்திர வழிகளில் சம்பந்தப்பட்டவருக்கு போய்ச் சேருகிறது.பாவம்,அவர்கள்.அவர்களுக்கும் வயிறு இருக்கிறதே!தர்மம் நின்று கொல்லும்...நரகம்,சொர்க்கம் இருக்கிறது,அதுவும் இங்கேயே இருக்கிறது என்ற எண்ணம் வளர்ந்தால் குறையலாம்.சட்டங்கள் அதிகரிக்கின்றன,ஏழைகளை ஏமாற்ற,ஓட்டு வாங்க!வழக்கம் போல உள்ள ஓட்டைகளில் அரசியல் அதிகாரங்கள் தப்பி விடுகின்றன....!
இது நல்ல திட்டம் தான். இரண்டு குறைகளை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். ஒன்று - தகுந்த ஆவணங்கள் இல்லை என்றால் ரசீது வழங்காமல் நிறுபிக்க முடியாது. இதற்கு ரசீது தேவை இல்லை. எல்லா ஆவணங்கள் இருந்தால் மட்டுமே விண்ணப்பத்தை பெற வேண்டும். இல்லையேல் திருப்பி அனுப்ப வேண்டும். இரண்டாவது - அலுவலர் வேறு பணியில் இருந்ததால் குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க முடியவில்லை என்பது. இதற்க்கு விண்ணப்பதாரர் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது. இது அரசின் பிரச்சனை. 30 நாட்கள் என்றால் 30 நாட்களுக்குள் முடித்தாக வேண்டும். இல்லையேல் 45 நாட்கள் என்று முன்கூட்டியே சொல்லவேண்டும். இந்த ஓட்டைகளை எளிதாக சரி செய்ய முடியும். எனினும் இது ஒரு நல்ல ஆரம்பம் தான்.
இதில் வங்கிகளின் சேவைகள்(குறிப்பாக பென்ஷன், நிலுவை தொகை மற்றும் கடன்கள் வழங்குதலில் தாமதம்) ரயில்வே துறையின் சேவைகள் (குறிப்பாக பயணம் செய்யாமல் இருந்து வாங்கிய டிக்கெட்டுக்கு ரிபண்ட் கிடைக்க ஏற்படும் தாமதம், தவறாக வசூலித்த பணத்தை திரும்ப பெற தாமதம்) ஆகியவற்றையும் இணைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
வெறும் சட்டமியற்றினால் மட்டும் போதாது. அதை அனைத்து மாநில அரசுகளும் சரிவர நடைமுறை படுத்துகிறதா என்றும் அதிகாரிகள் ஒழுங்காக நடை முறை படுத்துகிறார்களா என்றும், அரசியல் வாதிகள் மற்றும் யூனியன்கள் தலையீடு இல்லாமல் இருக்கிறதா என்றும் அரசு கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் எல்லாம் ஓரளவாவது ஒழுங்காக நடைபெறும்.
சேவைகள் குறித்த காலக்கெடு சட்டம் நன்மை பயக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை . ஆயின் இவற்றின் படிவங்கள் எளிதாக இருக்க வேண்டும் அல்லது குறைந்த படிப்பறிவு உளோரும் பயனுறும் விதம் தகுந்த உதவிகள் இருக்குமாறு அமைப்புகள் வேண்டும் .
சட்டங்கள் போடுவதில் நம்பலை மிஞ்ச ஆள் இல்லையென்பது மீண்டும் நிரூபணம் நாம தான் சட்டத்தை மதிப்பதே இல்லையே ஏமாந்த சோணகிரி கிட்ட ஒட்டு கேட்டு போவனும் இப்படி எதாச்சும் சொன்னாத்தான் ஆகா ஓகோ பேஷ் பேஷ் அப்படின்னு எல்லாம் நடந்திட்ட மாதிரி கற்பனையிலேயே வந்து குத்துவாம் பாரு ஓட்ட.......................... ,.........................நானும் கர்ப்பனையிலதான் ....................................... .................மக்களெல்லாம் திருந்தீட்டாவ இனி ஒரு பய நம்பால இலவசம் குடுத்து ஏமாத்த வுடமாட்டாக ஆகா ஓகோ பேஷ்பேஷ் ................. ............ அரசு அலுவலருங்ககிட்ட உரிமைய கேட்கிறாங்க பார்ரா ............. அரசியல் வாதிங்க வாக்குருதி கொடுத்தா மாட்டேன்கிறாங்களே .................... தன்மானத்தோட வாழுறாங்க ஆகா ஓகோ பேஷ் பேஷ் ........................... யார்ரா அவன் எம் மூஞ்சியில தண்ணிய வூத்தறது தூங்கிகிட்டு இருக்கிறது தெரியல ராஷ்கேல்ஸ் .................. அட ஈடுபட்ட பயலே தண்ணி இலவசமா தர்ராங்கலேன்னு மூணு நாலா வரிசையில நின்னு வாங்கிட்டு வந்தா இப்படி வழியில கிடந்தது தட்டிவிட்டுட்டியடா பாவி நீ நல்லா இருப்பியா அடுத்து

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எவ்வளவு பெரிய..........
......
......

தலைப்பு...

என்னே அனுபவம்.... ஹிஹி....

சேவை பெறும் உரிமைச் சட்ட முன்வரைவு விளக்கத்திற்கு நன்றி...

தொடர வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

தலைப்ப பார்க்கவும் நான் என்னவோ நெனச்சுட்டேன் பாஸ் ஹைஹா

VOICE OF INDIAN சொன்னது…

ஊழல் எதிர்ப்புப் போராளி சாய் லோகநாதன் கொலைசெய்யப்பட்டு இன்றுடன் ஒருமாதம் நிறைவடைகின்றது. தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் பல ஊழல்களை வெளிக்கொணர்ந்தார். ரியல் எஸ்டேட் கொள்ளையில் 2500 கோடி ஊழல் முறைகேடுகளை வெளிக்கொணரும் முயற்சி முடிவடையும் முன் கொலைசெய்யப்பட்டார். குடிமக்கள் நலனுக்காக உயிரைக் கொடுத்து இன்னும் போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது, மாத்திரை கசப்பாகத் தான் இருக்கு அதை விழுங்கிட சிறிதேனும் இனிப்பு தேவை தானே. மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் என்ற போராட்டமே இப்போது பிரதானமாய் இருக்கின்றது தோழரே
நட்புடன் பாலசுப்ரமணியன்

VOICE OF INDIAN சொன்னது…

ஊழல் எதிர்ப்புப் போராளி சாய் லோகநாதன் கொலைசெய்யப்பட்டு இன்றுடன் ஒருமாதம் நிறைவடைகின்றது. தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் பல ஊழல்களை வெளிக்கொணர்ந்தார். ரியல் எஸ்டேட் கொள்ளையில் 2500 கோடி ஊழல் முறைகேடுகளை வெளிக்கொணரும் முயற்சி முடிவடையும் முன் கொலைசெய்யப்பட்டார். குடிமக்கள் நலனுக்காக உயிரைக் கொடுத்து இன்னும் போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது, மாத்திரை கசப்பாகத் தான் இருக்கு அதை விழுங்கிட சிறிதேனும் இனிப்பு தேவை தானே. மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் என்ற போராட்டமே இப்போது பிரதானமாய் இருக்கின்றது தோழரே
நட்புடன் பாலசுப்ரமணியன்