ஆதரவாளர்கள்

Monday, June 3, 2013

ஆபாச நடிகைகளுக்கு செருப்பு மாலை ; வள்ளுவர் கோட்டம் அருகில்

நேற்று 2-6-13 காலை பத்து மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆபாச சினிமா நடிகைகளுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது.

நீண்ட நாட்களாக பெரும்பான்மை மக்கள் கவர்ச்சியாக காட்டும் நடிகைகள் பற்றிய விமர்சனம் செய்து வருவது நாம் அறிந்ததே. கவர்ச்சி போஸ்டரைக் கண்டால் ஓரக்கண்ணால் பார்த்து ஜொள் விடுவது விடலைகள் முதல் பெரியவர்கள் வரை அனிச்சை செயலாக மாறிவிட்டது. கவர்ச்சியால் தூண்டப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாகி பலியாகும் பெண்களின் நிலையம் அக்குற்றம் செய்த ஆணின் நிலையம் மிகவும் வருந்தும் அளவில் நடந்தேறி வருகின்றது அதற்கு காரணம் காட்சி ஊடகங்களின் பாலியல் உணர்வைத் தூண்டும் போக்கே. காட்சி ஊடகங்கள் பணம் பண்ணுவதற்காக தனி மனித ஒழுக்கச் சிதைவை ஏற்ப்படுத்துவது நியாயமா அவர்களுக்கு துணைபோகும் நடிகை தெரிந்தேதான் ஆடிக் குறைப்பு மற்றும் கவர்ச்சி உடையில் வந்து இளைஞர்கள் மனதில் நஞ்சைக் கலக்கின்றார்கள். பணத்திற்காக இப்படி தொழில் செய்யும் நடிகைகளைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தில் தான் கவர்ச்சி நடிகை படங்களின் மேல் செருப்பு மாலை அணிவிக்கப் பட்டது. இனிமேலாகிலும் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் கவர்ச்சியால் காசுபார்ப்பதை நிறுத்தவேண்டும் இளைஞர்களை பாழ்படுத்துவதை நிறுத்தவேண்டும் இதற்காக மத்திய மாநில அரசுகள் ஆபாச வன்முறைக் காட்சிகளை திரைப்படங்களில் மட்டுமல்லாது  காட்சி ஊடகங்களில் ஒளிபரப்புவதற்கும் தடை செய்யும் வகையில் ஆபாச வன்முறைக் காட்சிகளுக்கான தடைச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

மத்திய மாநில அரசுகள் ஆபாச வன்முறைக் காட்சிகளை திரைப்படங்களில் மட்டுமல்லாது காட்சி ஊடகங்களில் ஒளிபரப்புவதற்கும் தடை செய்யும் வகையில் ஆபாச வன்முறைக் காட்சிகளுக்கான தடைச் சட்டம் கொண்டுவர வேண்டும்
அவசியமான சட்டம்அய்யா அவசியம் வேண்டும்