ஆதரவாளர்கள்

திங்கள், 11 மார்ச், 2013

மதிய அரசும் மாநில அரசும் கலக்கி கொடுத்த புது அல்வா

மதிய அரசும் மாநில அரசும் கலக்கி கொடுத்த புது அல்வா எப்படி இருக்குனு சொல்லுங்க இன்னும் போனியாகள நீங்க தான் முதல் போனி வேண்டாமுன்னு சொல்லிட  வேண்டாங்க

இன்று காலை நடிகர் K .ராஜன் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு பேசும் வரை இன்னைக்கு எழுதனுமுன்னு ஏதும் தோணலை ஏன்னா எதோ டெசோ சார்பில இலங்கையில போராட்டமாம் ம் .. ச்ச...  இல்ல நம் தமிழ் நாட்டுலதான்
நானே ரோம்பகொளம்பிப் போயி டிவி பார்த்திகிட்டு இருந்தேன் அப்ப என் மனசுல ஒரு எண்ணம் இந்த அரசியல் வாதிகள் ஏதாவது போராட்டம் அறிவித்தால் கடையடைப்பு என்கிறார்களே என்றைக்காவது எதற்காக வாவது இந்த அரசியல் வாதிகளை வணிகர்கள் அரசியல் இன்று செய்யாதீர்கள் என்று கேட்டதுண்டா இதுல பொதுமக்களுக்கு இடையூறின்றி பண்ணனுமாம் அதெப்படி தலைவா பொதுமக்கள் வாங்க வர்ற கடை இருக்கக் கூடாதுன்றிங்க பஸ் ஓடாதுன்றிங்க ஆட்டோ ஓடாதுன்றிங்க லாரி ஒடதூன்றிங்க ஆனா பொதுமக்களுக்கு இடையூரில்லாமல் பண்றோம் என்றீங்க இப்ப நான் கடையை மூடவா தேரக்கவானு தெரியாம கொளம்பிப் போயி இருக்கேன் .........
இந்த நேரம் பார்த்து இவரு பொன் செஞ்சாரா தம்பி இன்னிக்கி சாயந்தரம் 6 மக்னிக்கு ராயபுரம் ரயில் முனையமாக்கிட வேண்டுமுனு தண்ணித் தொட்டி முனையில் ஆர்ப்பாட்டம் வச்சிருக்கே நீ வழக்கம் போல வேலையக் காட்டி கூட்டத்த வர ஏற்ப்பாடு பண்ணிடுப்பனாறு (ஏற்பாடுன்ன ஏமாந்தவங்க அத்தனைபேருக்கும் நான் பொன் பண்ணியோ அல்லது எஸ் எம் எஸ் பண்ணியோ வரவைக்கனும் அத தான் நான் செய்துகிட்டு இருக்கேன் ) கேட்டுக்கிட்டாரு  அட நம்ப நாட்டுல நம்ம தேவைக்கு போராட்டமே இன்னும் முடியல் இதுல இவனுக வேற நம்பள கொலப்புரங்கலேன்னு யோசிச்சி தலைய சொறிஞ்சா அப்ப தோணுச்சி  உங்க சரி தலவிதிய யாரால மாத்த முடியும் மேல படியுங்க

தமிழ் நாடு ரயில் பயணிகள் உரிமைத் தீர்வகம் கடந்த பல ஆண்டுகளாக மத்திய மாநில அரசாங்கத்திடம் ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக்கி மக்கள் பயன் பாட்டிர்க்கான பயணிகள் ரயில் முனையமாக்கிட கேட்டு வருகிறது.

அதற்கு அவசியம் ஏன் ?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இட நெருக்கடி.
அதன்  காரணமாக கடந்த சில ஆண்டுகளாக புதிதாக அறிவிக்கப்பட்டு அங்கிருந்து புறப்படும் வாடா மாநில ரயில் அனைத்தும் எக்மோர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது.

இதனால் எக்மோர் நிலையத்தில் இடநெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது. இந்த முனையங்களை விரிவாக்கம் செய்ய இனி இடம் இல்லை ஆகவே தாம்பரம் ரயில் நிலையத்தை முனையமாகி தென் தமிழக ரயில்கள் அனைத்தும் தாம்பரத்தில் இருந்து இயக்க முயற்சியாக சென்னையின் மூன்றாவது முனையம்னாக தாம்பரம் அறிவிக்கப் பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

தாம்பரம் முனையமாக்கப்பட்டால் சென்னையிலிருந்து தமிழகம் செல்லும் மக்கள் தாம்பரம் சென்றுதான் ரயில் ஏற வேண்டியதிருக்கும்

தாம்பரம் இறங்கி சென்னை வந்து பணிகளை முடித்து ஒரேநாளில் ஊர் திரும்பும் பயணிகளுக்கு நேரம் பற்றாக்குறை ஏற்ப்படும்

தாம்பரத்தில் இறங்கி சென்னையின் பிற பகுதிகளுக்கு செல்ல மூட்டை முடிச்சுக்கள் குழந்தைகளுடன் மின்சார ரயிலில் ஏறி பயணம் செய்ய  பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள்

ஆட்டோ டாக்ஸி கட்டணம் ரயில் கட்டணத்தைவிட அதிகமாக செலவு செய்ய வேண்டும்.

இதற்க்கு ஒரே தீர்வு
ராயபுரம் ரயில் நிலையம் பயணிகள் முனையம் அக வேண்டும்

72 ஏக்கர் நிலம் உண்டு

சென்ட்ரல் எக்மோர் நிலையங்களைவிட பரப்பளவு அதிகம்

1250மீட்டர் நீளம் 460மீட்டர் அகலம் மூன்றுபுரம் வழிகள் மேலும் கப்பல் பயணிகள் துறைமுகத்திலிருந்தே நேரடியாக நிலையத்திற்குள் வரும் வசதி
உலகத் தரம் வாய்ந்த ரயில் முனையமாக மாற்றும் வாய்ப்பு

ஏன் இதை செய்ய அதிகாரிகள் மறுக்கின்றார்கள்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தை தனியார் குடன் அமைத்துக்கொள்ள ஒரு சதுர மீட்டர் ஆண்டுக்கு ஒரு ரூபாய் என்று 99 ஆண்டு குத்தகைக்கு விட முயற்சி செய்தார்கள் அதை முயற்சி முறியடிக்கப்பட்டது அதற்க்கு பலியாக இந்த இடம் இஞ்சின் பராமரிப்பு முனையமாக்கப்பட்டது.

தாம்பரம் சுற்றியுள்ள பகுதிகளில் அரசியல்வாதிகளுக்கு நிறைய காலி மனைகள் உள்ளது இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி தாம்பரம் முனையமாக்க முயற்சி செய்கிறார்கள்

சென்ற மத்திய ரயில்வே நிதி நிலை அறிக்கைக்கு முன் தமிழகத்தை சார்ந்த 37 பாராளுமன்ற உறுப்பினர்களை கூட்டி கோரிக்கை வைத்ததினால் நிதிநிலை அறிக்கையில் பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதார்ஸ் ரயில் நிலையமாக நிலை உயர்த்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.

இந்த நிதி நிலை அறிக்கையில் அதற்க்கான நிதி ஒதுக்கவில்லை அறிவிப்பு பற்றிய தகவலே இல்லை
இது தான் மக்கள் போராட்டங்களுக்கு கிடைத்த அல்வா 

கருத்துகள் இல்லை: