ஆதரவாளர்கள்

வியாழன், 7 மார்ச், 2013

ஆகா ஓகோ பேஷ் பேஷ் அப்படின்னு எல்லாம் நடந்திட்ட மாதிரி கற்பனையிலேயே வந்து குத்துவாம் பாரு

அரசு அலுவலருக்கு 50000 ரூபாய் அபராதம் 


பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை குறித்த நேரத்தில் வழங்க வகை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது.
ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓய்வூதியம், பிறப்பு, இறப்பு, ஜாதி சான்றிதழ்கள் உள்பட பொதுமக்கள் மத்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் சேவைகளை குறித்த நேரத்தில் வழங்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த மசோதா அமைக்கப்படுள்ளது.
பொதுமக்களுக்கு சேவை வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டாலோ, அவர்களைத் தேவையில்லாமல் அலைக்கழித்தாலோ சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கு ரூ.50,000 வரை அபராதம் விதிக்கவும் மசோதா வழிவகை செய்கிறது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதா மூலம் அரசிடமிருந்து பொதுமக்கள் பெறும் அனைத்து சேவைகளும் உரிய நேரத்தில் கிடைக்க வழி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவைகள் மற்றும் அவை தொடர்பான செயல்பாடுகள் அனைத்தும் மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் சட்ட அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் நிர்வாகச் சீரமைப்பு இலாகா மூலம் இவை கண்காணிக்கப்படும். இதற்காக பொதுமக்கள் பங்களிப்போடு தகவல் மையம், உதவி மையம், சேவை மையம் போன்றவை அமைக்கப்பட்டு சேவைகளை குறித்த நேரத்தில் வழங்குவது உறுதி செய்யப்படும். சேவைகள் கால தாமதம் செய்யப்பட்டால் அதற்கு காரணமானவர்களுக்கு அபராதம் விதிக்கவும், லஞ்சம் மற்றும் ஊழல் நடைபெறுவதற்காக சேவை கால தாமதம் செய்யப்பட்டது என ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் மாநில அல்லது மத்திய குறை தீர்ப்பு ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் கிரிமினல் விசாரணை அல்லது லோக்பால் விசாரணைக்கும் மசோதா வழிசெய்கிறது.
இந்த மசோதாவை 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மக்களவையில் தாக்கல் செய்ய ஆலோசனை நடத்திய மத்திய அமைச்சரவை, 2012 ஜூன் மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது. இருப்பினும் மசோதாவில் ஏராளமான திருத்தங்கள் கொண்டு வர வேண்டியிருந்ததால் இப்போதுதான் இந்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சட்டங்கள் போடுவதில் நம்பலை மிஞ்ச ஆள் இல்லையென்பது மீண்டும் நிரூபணம் 

  நாம தான் சட்டத்தை மதிப்பதே இல்லையே ஏமாந்த சோணகிரி கிட்ட ஒட்டு கேட்டு போவனும்  இப்படி எதாச்சும் சொன்னாத்தான் ஆகா ஓகோ பேஷ் பேஷ் அப்படின்னு எல்லாம் நடந்திட்ட மாதிரி கற்பனையிலேயே வந்து குத்துவாம் பாரு ஓட்ட.......................... ,.........................நானும் கர்ப்பனையிலதான் ....................................... .................மக்களெல்லாம் திருந்தீட்டாவ இனி ஒரு பய நம்பால  இலவசம் குடுத்து ஏமாத்த வுடமாட்டாக ஆகா ஓகோ பேஷ்பேஷ் ................. ............ அரசு அலுவலருங்ககிட்ட உரிமைய கேட்கிறாங்க பார்ரா ............. அரசியல் வாதிங்க வாக்குருதி கொடுத்தா மாட்டேன்கிறாங்களே .................... தன்மானத்தோட வாழுறாங்க ஆகா ஓகோ பேஷ் பேஷ் ........................... யார்ரா அவன் எம் மூஞ்சியில தண்ணிய வூத்தறது தூங்கிகிட்டு இருக்கிறது தெரியல ராஷ்கேல்ஸ் .................. அட ஈடுபட்ட பயலே தண்ணி இலவசமா தர்ராங்கலேன்னு மூணு நாலா வரிசையில நின்னு வாங்கிட்டு வந்தா இப்படி வழியில கிடந்தது தட்டிவிட்டுட்டியடா பாவி நீ நல்லா இருப்பியா அடுத்து எப்ப கிடைக்குமோ .....................அய்யய்யோ இதுவரை நான் ................. ......... ..................... .........அ ட .............சீ..................... இந்த மானகெட்ட மனுசனா வாழ பிடிக்கல பேசாம என்னைய ஒரு கல்லாக படைத்திடு ஆண்ண்டவா முடியல ...................................... ........

கருத்துகள் இல்லை: