ஆதரவாளர்கள்

சனி, 9 மார்ச், 2013

தகவல் பெரும் உரிமை சட்டம் மூலம் தகவல் கேட்டதால் கொலை



          Anti Corruption RTI Activist Sai Loganathan murder at Tamil nadu Truppure District Avinaasi Taluk office opp on 8-3-13 date 4pm message given by; Voice of Indian Kovai Dhendapani 9442015060

ஊழலுக்கு எதிரான போராளி தமிழகத்தில் கொலை 08-03-2013 வெள்ளிக்கிழமைக் காலை சுமார் 11 மணி அளவில் திரு சாய் லோகநாதன் அவர்கள்  திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா அலுவலகத்தில்  தகவல் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் தகவல் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். இது தொடர்பாக அலுவலகத்திற்கு அழைக்கப் பட்டுள்ளார். அலுவலகம் சென்ற இவரிடம் சமரசம் செய்ய முயன்றதாக சொல்லப்படுகின்றது. சமரசத்திற்கு உடன் பட மறுத்ததால் சம்பந்தப் பட்டவர்களால்  மிரட்டல் விடுக்கப் பட்டதாக சொல்லப்படுகிறது. ஆயினும் சமரசம் செய்துகொள்ள மறுத்து கேட்ட தகவலை தபாலில் அனுப்பிடக் கேட்டுக்கொண்டு வெளியேறிவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அவினாசி தாலுகா அலுவலகம் முன்பு மாலை 4 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர்களால்  கொலை செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  பிரேதத்தை கைப்பற்றி கோயம்புத்தூர் அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளார்கள் என தெரிய வருகிறது. காவல் துறை விசாரணை நடைபெற்று வருகிறது. சென்ற ஆண்டு கொளத்தூர் புவனேஸ்வரன் கொலைசெய்யப்பட்டார். தமிழகத்தில் சாய் லோகநாதனுடன் சேர்த்து இதுவரை 6 படுகொலை ஊழலுக்கு எதிரானவர்கள் மீது நடத்தப்பட்டுள்ளது.
மேலும் தகவலுக்காக இந்தியன் குரல் கோவை தண்டபாணி 9442015060 அவர்களை தொடர்புகொண்டு கருத்துக்களை தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம்
Anti Corruption RTI Activist Sai Loganathan murder at Tamil nadu Truppure District Avinaasi Taluk office opp on 8-3-13 4pm 
-
 Voice of Indian Mr M. Sivaraj 9443489976

2 கருத்துகள்:

வே.நடனசபாபதி சொன்னது…

கொலையுண்ட திரு சாய் லோகநாதனின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். அவரது குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அரசு தலையிட்டு உடனே கொலைக்கு காரணமானவர்களை கைது செய்து நீதிமன்றம் முன் நிறுத்தவேண்டும்.இதுபோல் இனி நடக்காதிருக்க அரசு ஊழலுக்கு எதிரான போராளிகளுக்கு பாதுகாப்பு தரவேண்டும்.

VOICE OF INDIAN சொன்னது…

உங்களது கருத்தை வரவேற்கின்றோம் திரு வே.நடனசபாபதி ஐயா அவர்களே
அரசு செய்யும் என நம்புகிறோம்