ஆதரவாளர்கள்

Wednesday, March 13, 2013

சுயமரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல்....................ஒவ்வொரு இந்தியக் குடிமகனும்
தன்னுடைய சுயமரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல் இலஞ்சம் கொடுக்காமல் தன குடும்பத்தேவை தான் வாழும் ஊரின் தேவை அரசுப் பயன்களைப் பெற இந்தியன் குரல் நடத்தும் தகவல் பெரும் உரிமைச் சட்டம் 2005 இலவச உதவி மற்றும் பயிற்சி முகாம் நடைபெரும்.

இந்த மாத பயிற்சி  நடைபெறும் இடம்;

கும்பத் காம்ப்ளெக்ஸ்  முதல் மாடி
எண் 29 ரத்தன் பஜார் சென்னை 600 003
 பூக்கடைக் காவல் நிலையம் எதிரில்

 நாள் 15-03-13 காலை பத்துமணி முதல் நண்பகல் ஒரு மணி வரை 

முன்பதிவு தொடர்புக்கு 9444305581 


 இந்தியன் குரல் அமைப்பு நன்கொடை வாங்குவது இல்லை. உறுப்பினர் சந்தா இல்லை பயிற்சிக்கு கட்டணம் இல்லை. உதவிமையங்களில் உதவிக்கு கட்டணம் வாங்குவது இல்லை. இது எங்கள்  கொள்கை. தகவல் பெரும் உரிமைச் சட்டம் அனைவரும் அறிந்திடல் வேண்டும் இது எங்கள் திட்டம். இதை மற்றவர்களுக்கு பகிர்வதன் மூலம் இந்த சமுதாயத்திற்கு நல்லது செய்த திருப்தி உங்களுக்கும் ஏற்ப்படும்.

 நாட்டுல எவ்வளவோ பேர் சும்மா இருக்க உங்களுக்கு மட்டும் ஏன் ................................... என்று கேட்போருக்காக 
இந்த அமைப்பின் நிறுவனர்கள் படித்தது மக்கள் வரிப்பணத்தில்தான், அரசுப்பணி வாய்ப்பு இந்த மக்களால் தான். சம்பளம் இந்த மக்கள் கொடுத்தது தான். இப்பழுது ஒரு வேலையும் செய்யாமலேயே மாதா மாதம் ஓய்வூதியம் வாங்குவதும் மக்கள் பணம் தான். சும்மா இருந்துகொண்டு சம்பளம்(ஓய்வூதியம்) மாதா மாதம் வாங்குகிறோமே! பெற்ற பயனை (கடனை)  திரும்ப தன வாழ்நாளில் அடைத்து விட வேண்டுமே! நம் மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமே இந்த மக்கள் எனக்களித்த நற்பயனை நான் திருபத் தரவேண்டுமே  என் கடனை திரும்ப அளிக்க வேண்டுமே! என்ற முயற்சி தான் இந்த அமைப்பு துவங்கவும் செயல்படவும் காரணம். 
நாங்கள் மக்களிடம் பெற்றதை திரும்பக் கொடுக்க துவங்கிவிட்டோம் நீங்கள்?

No comments: