ஆதரவாளர்கள்

Friday, April 5, 2013

இங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் "என்னமோ நடக்குது!!!!! மர்மமாய் இருக்குது!!!!"

"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்"
கடலூர் மாவட்டத்தில்  அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழுதடைகின்றது. அங்கே மின் உற்பத்தி சரியாக நடைபெறவில்லை.
அதன் பாகங்கள் அதிகமாக ஓடியதால பழுதாகவில்லை. நாட்கள் அதிகமாகி பழுதாகவில்லை. அங்கு ஒரு டர்பன் புதிதாக வாங்கப்பட்டு பல நாட்களாக சும்மாவே பயன்படுத்தாமல்  வைக்கப்பட்டு பல மாதங்களுக்கு பிறகு மேட்டுருமின் நிலைய டர்பன் பழுதடைந்ததால் மேட்டுருக்கு மாற்றப்பட்டது. அதுவரை இங்கே சும்மா இருந்ததன் மர்மம் என்ன?


அரசு மின் உற்பத்தி நிலையத்துல லஞ்சம் கிடைக்குமா. அரசு மின் உற்பத்தி நிலையம்  மின் உற்பத்தி செய்யாமல்  இருந்தால் லஞ்சம் கிடைக்கும். அரசு மின் உற்பத்தி நிலையம் செயல்படாமல் இருந்தால் தான் அருகில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையம் செயல்பட  தடையின்றி எரிவாயு மற்றும் நிலக்கரி கிடைக்கும் உற்பத்தி மிசாரத்தை  அரசுக்கு அதிக விலைக்கு விற்கலாம் அரசே உற்பத்தி செய்தால் எப்படி தனியார்கள் வியாபாரம் செய்வது எப்படி?. இதெல்லாம் செய்தால் தான்   கொள்ளை லாபம் (பங்கு? போக மீதி !!!!! )கிடைக்கும்.

 சென்ற ஆண்டு மின்  வாரியத்திற்கு இழப்பு 17000 கோடி ரூபாய்.தமிழ் நாடு மின்சார வாரியம் 16 தனியார் மின்வாரியங்களுக்கு மட்டும் நியாயமான சந்தை  விலையை விட கூடுதலாக சுமார் 14600 கோடி ரூபாயை  வழங்கியுள்ளது. தமிழ் நாட்டிலுள்ள 16 தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு ஆணையம் நிர்ணயம் செய்த தொகை யை விட சந்தை விலையை  (3.00/unit) விட மின்வாரியம் ஒப்பந்தம் செய்த விலை 5.50 ரூபாய்.. ஜூன் 2012  இல் தனியார் ஒப்பந்தங்கள் முடிகின்றது மின்வாரியம் ஒருமாததிருக்கு விலை நிர்ணயம் சேது அனுமதி கேட்கிறது. அதன் பிறகு ஜூலை ஆகஸ்ட் மே மாதம் வரை ஆணையத்தின் அனுமதி பெறாமலேய தனியாரிடம் ஒப்பந்தம் போட்டு  மிசாரத்தை வாங்குகிறது அதுவும் தேசிய அளவில் சராசரி விலை 3.00 ரூபாய் அளவை விட ஆணையம் வழிகாட்டிய விலையை விட அதிகமாக ஒப்பந்தம்   ஒரு யூனிட்டிற்கு 5.50 ரூபாய்கள். இந்த துணிச்சல் அதிகாரிகளுக்கு வந்தது எப்படி தனியார் மின் உற்பத்தி  உற்பத்தி 450 மெகாவாட் .  நமது மொத்த மின் தேவை சுமார்  12000 மெகாவாட் மேல் ஆகும். 450 மெகாவாட் கரண்டுக்கு ஒரு யூனிட்டிற்கு அதிகபடியாக் 2.50 ரூபாய்  கூடுதல் விலைக்கு வாங்கியுள்ளது.
அதனால் இழப்பு சுமார் 14600 கோடி ரூபாய். அதனால் தமிழ் நாடு மின்சார வாரியம் சுமார் 14600 கோடி ரூபாயை தெரிந்தே மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்ப்படுத்தியிருக்கின்றது என்பது தெளிவாகிறது. 16 தனியார் மின்வாரியங்களுக்கு மட்டும் நியாயமான சந்தை  விலையை விட கூடுதலாக சுமார் 14600 கோடி ரூபாயை வாரி வழங்கியுள்ளது . இதனால் பலன் அடைந்தவர்கள் சிலர். ஆனால் பாதிக்கப்படுவது பொதுமக்களாகிய நாம் அல்லவா

1.7.2012 அன்றைய விசாரணை முதல் இது குறித்து மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் முறையீடு செய்ய முயற்ச்சித்தோம். மேலும்   ரூபாய் 10000 கட்டித்தான் பொதுமக்கள் ஆணையத்தில் விண்ணப்பிக்க முடியும் என்றார்கள். நண்பர் பத்தாயிரம் பணத்தையும் கட்டி முறையீடு செய்துள்ளார். மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது ஆனால் மூன்று மாதமாகியும் இன்னும் விசாரணைக்கு நாள் குறிக்க வில்லை. இதைப் படித்த யாராவது பஞ்சாங்கம் பார்த்து நல்ல நாள் சொன்னால் ஒரு வேலை விசாரணை ஆணை வருமோ என்னவோ.
மிவாரியம் தாக்கல் செய்த அறிக்கை 
 http://tnerc.tn.nic.in/download/Tariff%20Petition/2013/Tariff%20Petition%2013-14.pdf

 இது ஜனநாயக நாடு அரசு அலுவலர்கள் எல்லாம் மக்களின் சேவகர்கள் ஒட்டுப்போட்ட மக்களுக்கு எல்லா உரிமையும் இங்கே இருக்கின்றது அரசு அலுவலகங்களில் கோரிக்கை பிச்சையெடுக்கவும் கூட. கிராமங்களில் சொல்வதுண்டு ஏமாந்தால் டவுசர் அவுத்துடுவாண்டா என்று இன்று இங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் கேட்பது யாரு?

விழித்திடு தோழா வீர வசனமெல்லாம் பேசி
 வெட்டியாய் பொழுதைப் போக்கி காலத்தை
வீண் செய்யாமல் நம் மானம் காக்க விழித்திடு தோழா
 இந்த வெயிலில கூட மனிதாபி மானம் இல்லாமல்
 தலையில்  மிளகாய் அரைக்கின்றார்களே  நேத்து போட்ட
 டாஸ்மாக் தெளியாமல் கிடக்கின்றாயே விழித்திடு தோழா
வாயில ஈ போறது தெரியாமல் அரை குறை ஆடையில்
நடனங்களையும் கணவனுக்கு தெரியாமல் மனைவியும்
 மனைவிக்கு தெரியாமல் கணவனும் கள்ளக்காதல் செய்வது
 எப்படி என்று தொலைக் காட்சி சொல்லிக் குடுத்த சிற்றின்பக்
 கனவில்  மிதந்தது போதும் விழித்திடு தோழா
 நீ விழித்தால் நாளை உனது விழித்திடு தோழா  நாடும் உனது.

3 comments:

விவேகானந்தன் said...

இதற்கு உண்டான ஆதாரத்தையும் சமர்பித்தால் நன்றாக இருக்கும்......

Bala subramanian said...

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு விவேகானந்தன் அவர்களே இந்தியன் குரல் உங்களது கோரிக்கையை ஏற்று இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது நன்றி
http://tnerc.tn.nic.in/download/Tariff%20Petition/2013/Tariff%20Petition%2013-14.pdf

அன்பு said...

அட கடவுளே..!! எவ்வளவு அயோக்கியத்தனம்..!!!