ஆதரவாளர்கள்

வெள்ளி, 15 மார்ச், 2013

இந்தியன் குரல் அமைப்பின் பயிற்சி பெற்ற தகவல் உரிமைச் சட்ட உபயோகிப்பாளர்கள் மட்டும் படிக்க


தமிழகம் முழுவதும் உள்ள இந்தியன் குரலின் பயிற்சி பெற்ற தகவல் பெரும் உரிமைச் சட்ட உபயோகிப்பாலர்களே வணக்கம்.
இந்தியன் குரல் அமைப்பின் வழிகாட்டுதலுடன் எண்ணற்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு பெரும் பான்மை மக்களுக்கு உதவி வருவது மகிழ்ச்சியே, ஆனாலும் அதிகப்படியான மனுக்கள் ஆணையம் முன் விசாரணைக்கு காத்து கிடக்கின்றது சட்டம் தெரியாத ஆணையர்கள் தவறான ஆணைகளை இடுகிறார்கள் சட்டத்தை மீறி ஆணை இடுகிறார்கள் 18(1) இன் கீழ் புகார் செய்தும் பயனில்லை இதற்கு தீர்வு என்ன?

 போராடும் நம் தோழர்கள் செயல்பாடுகள் அருமை நல்ல முயற்சி ஆனாலும் தன்  சாதிக்காரனை (அரசு அலுவலர் -பனி ஓய்வு பெரும் வரை ) மாட்டிவிடும் எண்ணம் அலுவலர்களுக்கு இருப்பதில்லை அவர்களைக் காப்பாற்றிக் கொள்ளவே முயல்வார்கள் ஆகவே நாம் புதிதாக சிந்திக்க வேண்டிய தேவை ஏற்ப்படுகிறது. (ஓய்வு பெற்ற அரசு அலுவலர் நம்முடன் முன் வரிசைக்கு போராட வந்து விடுவார் அப்ப தான கஷ்டம் தெரியுது செய்த தவறு தெரியுது)

 ஒன்று ;மனுக்களுக்கு பொதுத் தகவல் அலுவலரே பதில் தந்துவிடும் வகையில் வடிவமைப்பது கொஞ்சம் கஷ்டம் தான் வார்த்தைகளை தேடுங்கள் 
முயன்றால் முடியும்.
 இரண்டு ; அரசு ஊழியர்கள் பனி ஓய்வு பெற்ற பின்பும்  அவர்கள் தம் வாரிசுகள் எப்படி பாதிப்படைவார்கள் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துதல். பெரும்பான்மை ஊழியர்களுக்கு அரியர்ஸ் வருவதில்லை ஓய்வூதிய பிரச்சனை அவர்களது வாரிசுகளின் கல்வி வேலைவாய்ப்பு, எந்த ஒரு அரசு ஊழியரும் பணியில் இருக்கும் வரைதான் அவரது தேவைகளை எளிதில் பெற முடியும் பனி ஓய்வுக்கு பிறகு அவரும் நம்முடன் வரிசையில் (ஓய்வு பெற்ற அரசு அலுவலர் நம்முடன் முன் வரிசைக்கு போராட வந்து விடுவார் அப்ப தான கஷ்டம் தெரியுது செய்த தவறு தெரியுது) வந்து ஒவ்வொரு தேவைக்கும் அலுவலகங்களில் மரியாதையை இழந்து காத்திடல் வேண்டும் என்று புரிய வைத்தல் 


மூன்று :மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளைக் பொது பிரச்சனைகளை நாம் முன்னெடுத்து செயல்படுவது. செயல் படுபவர்களை ஊக்குவித்து துனையாக நிர்ப்பதன்  மூலம் பெரும்பான்மை மக்களின் ஆதரவு பெறுவது. இதற்கான வழிகளை ஆராய்ந்து சாதகமான விசயங்களை செயல்படுத்துதல்

நான்கு ;அரசு அலுவலகல்களின் முன் உள்ள இடைத் தரகர்களை ஒழிக்க நடவடிக்கை எடுத்தல் மக்களுக்கு அலுவலக நடைமுறை விதிமுறைகளை பயிற்சி அழிப்பது. கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை எப்படி எழுதுவது எந்த அலுவலகத்தில் யாரிடம் கொடுக்க வேண்டும் தீர்வு செய்யும் அலுவலர் யார் எத்தனை நாளில் தீர்வு செய்யப்பட வேண்டும் இது தேர்ந்தால் மக்கள் இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல் இருப்பார்கள் இடைத் தரகர்கள் அல்லாமல் மக்களே நேரடியாக சென்றால் அலுவலர்கள் லஞ்சம் கேட்பது பெரும்பாலும் இல்லை

 தகவல் பெரும் விண்ணப்பத்திற்கு பொது தகவல் அலுவலர் பதில் அளித்து விட வேண்டும் அதைத் தாண்டி மேல்நடவடிக்கை என்பது தவிர்க்க முடியாத நிலை என்றால் மட்டுமே நாம் செல்லவேண்டும்
பொது தகவல் அலுவலர்கள் ஆணையத்திற்கு வந்து பதில் சொல்லட்டும் அவமானப் படட்டும் என்ற நோக்கமில்லாத ( அப்படி வேண்டுமென்றே யாரும் செய்வதில்லை அவ்வாறு கருதும் வண்ணம் இல்லாமல் ) தயாரிப்பு வேண்டும். இது போன்ற வழிகளை புதிதாய் சிந்திப்பது மட்டுமே தீர்வாக அமையும். நாம் ஒவ்வொரு முறையும் ஆணையம் வரை சென்று போராடி பெறுவது தொடர் நடவடிக்கையை பாதிப்படையச் செய்யும் நம்முடைய நோக்கத்திற்கு மாறான செயல்களே நம்மை  விழுங்கிவிடும். நாம் எங்கு சென்றாலும் அங்கு அரசு அலுவலரைத் தான் சந்திக்க வேண்டிய தேவை இருக்கின்றது. ஒரே நாளில்  அனைவரையும் திருத்துதல் இயலாது மீண்டும் மீண்டும் முயற்சி செய்திடல் வேண்டும்  
இது குறித்தும் இது போன்று தாங்கள் எண்ண மேலான கருத்துக்களை நம் கூடுகையிபோது தெரியப்படுத்திட கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன்          
இந்தியன் குரல் 

கருத்துகள் இல்லை: