தொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என்று யோசனை செய்து அதன் பின் பணத்தினைத் தேடுவதில்லை பலர்.
   தொழில் தொடங்க அரசு வங்கிகள் தாராளமாக கடனுதவி செய்கின்றன. அதனைப் பொறுவது எப்படி? வெறும் கையினை வைத்து முழம் போட முடியுமா என சிலர் கேட்பதுண்டு.
     
   தொழில் தொடங்கி அம்பானி போல ஆகிவிடலாம் என்கிற கனவோடு களமிறங்குகிற பலர் எடுத்த எடுப்பிலேயே தடைபட்டு நின்றுவிடுகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ‘பணம் இல்லை; கடன் கேட்டேன்; கிடைக்கவில்லைஎன்பதாகவே இருக்கிறது. டாடாவோ, அம்பானியோ பெரிய முதலோடு தங்கள் தொழிலை ஆரம்பிக்கவில்லை. கடன் வாங்கித்தான் ஆரம்பித்தார்கள். நிறுவனத்துக்கான கடனை வாங்க அந்தக் காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களோடு ஒப்பிட்டால் தொழில்கடன் வாங்க இன்றைக்கு உள்ள சிரமங்கள், பிரச்னைகள் குறைவே. சில முன் தயாரிப்புகளோடு அணுகினால் அந்தப் பிரச்னைகளையும் பிஸினஸ்மேன்கள் தவிர்த்து நிச்சயம் வெற்றி பெறலாம்.

தேவை தெளிவான பார்வை
வேலை செய்யப் பிடிக்கவில்லை; அதனால் பிஸினஸ் செய்யப் போகிறேன்என்று சொல்லி தொழிலில் இறங்குகிறவர்கள், வெற்றி பெறுவது கடினம்தான். அதே போல செய்ய நினைக்கும் தொழில் பற்றிய முழுமையான அறிவு, தெளிவான நம்பிக்கை இல்லாமல் தொழிலில் இறங்குகிறவர்களுக்கும் தோல்வி நிச்சயம்தான். தொழில்கடன் கேட்டு வங்கியை அணுகுகிறவர்களை வங்கி மேலாளர் முதலில் சோதிப்பது அவர்களின் நம்பிக்கையைத்தான். தொழில் முனைவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வங்கி தரப்பில் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். சிலசமயம் வங்கி மேலாளர் தொழில்முனைவரின் உறுதியைக் குலைக்கும் வகையில் சில கேள்விகளைக் கேட்கவும் செய்யலாம்.

நீங்கள் சொல்கிற பிஸினஸை எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் செய்தார். அதில் அவருக்கு பலத்த நஷ்டம். வேறு ஏதாவது பிஸினஸுக்கான ஐடியா உங்களிடம் இருக்கிறதா?’ என வங்கி மேனேஜர் கேட்பதாக வைத்துக் கொள்வோம். இதற்கு தொழில் முனைவரின் பதில் என்னவாக இருக்கும்..? உடனே பதற்றமடையும் பலர், ‘சார், என்கிட்ட இன்னொரு பிஸினஸுக்கான ஐடியாவும் இருக்கிறதுஎன்றுதான் சொல்வார்கள். இந்த ஒரு வரி பதில் போதும், உங்கள் தொழில் மீது உங்களுக்கு ஆழமான நம்பிக்கை இல்லை என்று சொல்ல. ஆனால், இத்தகைய பதில்களால் மட்டுமேகடன் கிடைக்காதுஎன்று சொல்லிவிட முடியாது. ஆனால், இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் நீங்கள் செய்யப் போகிற தொழில் மீது உங்களுக்கு இருக்கும் உறுதியைக் காட்டிவிடும். எனவே தெளிவான பார்வை, உறுதியான திட்டம் தேவை.

பிஸினஸ் பிளானில் என்ன இருக்க வேண்டும்?
நீங்கள் செய்யப் போகிற பிஸினஸ் இதுதான் என்று முடிவு செய்துவிட்டால் அதற்கான பிளானை தயார் செய்ய வேண்டும். முதலில் உங்களைப் பற்றிய தகவல்கள், நீங்கள் யார், என்ன செய்து கொண்டிருந்தீர்கள், இனி என்ன செய்யப் போகிறீர்கள் என்ற விவரங்கள் இருக்க வேண்டும். தொடங்கப் போகிற தொழிலைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும், எப்படித் தெரியும், அந்தத் தொழிலில் என்ன புதுமைகள் செய்யப் போகிறீர்கள்; உங்களுக்கான மூலப்பொருட்கள் எங்கு கிடைக்கும்; உங்களின் வாடிக்கையாளர்கள் யார் என்பது பற்றி தெளிவாகக் கூற வேண்டும். இந்தத் தொழில் மூலம் மாதத்துக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்கிற தோராயமான கணக்கு வேண்டும்.

இதற்கு டி.எஸ்.சி.ஆர். என்கிற விகிதத்தை நிச்சயம் பார்ப்பார்கள்.   Debt Service Coverage Ratio  என்பதன் சுருக்கமே டி.எஸ்.சி.ஆர். அதாவது, ஒரு மாதத்துக்கு நீங்கள் 15 ஆயிரம் சம்பாதிக்கிறீர்கள் எனில், அசலுக்கும் வட்டிக்குமாகச் சேர்த்து ரூபாய் 10 ஆயிரம் போக, குறைந்தது ரூபாய் 5 ஆயிரம் உங்களிடம் இருந்தால்தான் தொடர்ந்து பிஸினஸ் நடத்த முடியும். அதாவது, இந்த விகிதம் 1.5க்கு மேல் இருந்தால் மட்டுமே உங்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கும். நீங்கள் செய்யும் பிஸினஸில் இந்த வருமானம் உங்களுக்கு இருக்கிறதா என்பதை நீங்களே உறுதி செய்து கொண்டு, வங்கியை அணுகினால் தெம்பாகப் பேசலாம்.

கடன் வகைகள்
அடமானமில்லாத கடன் ( unsecured loan ) ரூபாய் 10 லட்சம் வரைக்குமான தொழில் கடனுக்கு எந்த விதமான அடமானமும் கேட்கக்கூடாது என்பது ஆர்.பி.ஐ. விதி. இந்த விதி காரணமாக, 10 லட்சம் வரை எந்தவித அடமானமில்லாமல் கடன் கிடைக்கும். ஒரு வேளை வங்கிகள் அடமானம் கேட்டால் அது விதியை மீறிய செயலாகவே கருத வேண்டும். தவிர, சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவிக்க மத்திய அரசும் சிட்பியும்  சேர்ந்து ஒரு கோடி ரூபாய் வரைக்கும் எந்த விதமான அடமானமும் இல்லாமல் கிரெடிட் கேரண்டி ஸ்கீமில் (  Credit Guarantee Scheme CGS ) கடன் தருகிறார்கள். ஆனால், இந்தத் திட்டத்தில் கடன் பெற பதிவு செய்ய வேண்டும். இது பற்றி வங்கிகளிடம் கேட்டால் அவர்கள் இது சம்பந்தமான மற்ற முழு விவரங்களைத் தருவார்கள்.

எவ்வளவு சொந்தப் பணம் வேண்டும்?
பிஸினஸ் திட்டத்திலே நமக்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்று தெரிந்துவிடும். அந்தத் தொகையில் குறைந்தபட்சம் 1: 4.5 என்ற விகிதத்தில் ( Debt Equity Ratio  ) நம்மிடம் சொந்தப் பணம் இருக்க வேண்டும். அதாவது, ஒரு லட்சம் ரூபாயை நீங்கள் மூலதனமாக கொண்டு வந்தால் வங்கிகள் 4.5 லட்சம் வரைக்கும் கடன் கொடுக்கும். இந்த விதிதான் நிரந்தரம் என்று சொல்ல முடியாது. மிகச் சில சமயங்களில் மட்டும் இந்த விகிதத்துக்கு கீழே சென்றால் வங்கிகள் கடன் கொடுக்கும். அது நீங்கள் செய்யும் தொழில், உங்கள் பிஸினஸ் நடக்கும் இடம் போன்ற பல காரணிகளை வைத்து வங்கிகள் முடிவு செய்யும். இருந்தாலும் முதல்முறை தொழில் தொடங்குவோர் இந்த விகிதத்துக்கும் குறைவாக மூலதனம் வைத்திருந்தால் கடன் கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம். உங்கள் தொழிலில் உங்கள் முதலீடு கணிசமாக இருக்க வேண்டும் என வங்கிகள் எதிர்பார்ப்பதுதான் இதற்குக் காரணம்.

வங்கிகளை எப்படி அணுகுவது?
ஒவ்வொரு வங்கியும் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை கடனாகக் கொடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்படுகின்றன. அந்த இலக்குக்காக போட்டி போட்டுக் கொண்டு வங்கிகள் கடன் தருகின்றன. ஆனாலும் தொழில் முனைவோருக்கு கடன் கிடைக்கவில்லை எனில் அதற்குக் காரணம், சரியான திட்டமிடல் இல்லாததுதான். உங்கள் தேவை ரூபாய் 25 லட்சம் எனில் அருகிலிருக்கும் வங்கிகளையே அணுகலாம். அவர்களே கடன் தருவார்கள். 25 லட்சத்துக்கு மேல் போகும் போது, ஒவ்வொரு வங்கியும் தொழில்கடன்களை ஊக்குவிக்கவே தனியாக சிறுதொழில் கிளையை ( SME Branch ) வைத்திருக்கிறார்கள். அங்கிருக்கும் அதிகாரிகளை அணுகினால் அவர்கள் உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள்.

தேவையான ஆவணங்கள்
அடையாளச் சான்றிதழ், முகவரிச் சான்றிதழ், பிஸினஸ் நடைபெறும் இடத்துக்கான முகவரிச் சான்றிதழ், திட்ட அறிக்கை, வருமான எதிர்ப்பார்ப்பு (கடனை திருப்பிச் செலுத்தும் காலம் வரைக்கும்), உள்ளாட்சி மற்றும் இதர அரசு அலுவலகங்களில் இருந்து தடையில்லாச் சான்றிதழ் (தேவைப்பட்டால்), பிஸினஸ் நடைபெறும் இடம் உங்களுடையது என்றால் அதற்கான சான்றிதழ் (அ) வாடகை இடம் என்றால் ஒப்பந்தச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும். இவை தவிர, வேறு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது கடன் விண்ணப்பத்திலேயே  இருக்கும். அவற்றையும் கொடுத்தால் நிச்சயம் உங்கள் கடன் மனுவை வங்கி அதிகாரிகள் ஒதுக்கித் தள்ள மாட்டார்கள்!
அரசு சில தொழில்களுக்கு மானியமும் வழங்குகிறது.
மானியம் வழங்கப்படும் தொழில்கள்:
மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி
தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு
வாகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பு
மருந்துப் பொருட்கள் உற்பத்தி
சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி
ஏற்றுமதி ஆபரணங்கள்
மாசுகட்டுப்பாடு உபகரணங்கள்
விளையாட்டுப் பொருட்கள்
சிக்கன கட்டுமானப் பொருட்கள்
ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவைகள்

அரசு வழங்கும் சலுகைகள்:
15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
36
மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது.

சிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில் தெலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு((வாட்) ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது.

உற்பத்தித் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைந்த பட்ச 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்தவும் நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து சதவீதம் அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை வேலை வாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.
உங்கள் மனுவில் நீங்கள் செய்யப்போகம் தொழில், மொத்த முதலீடு எவ்வளவு, யார்-யார் பங்குதாரர், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முதலீடு, செய்யப்போகும் தொழிலின் மார்க்கெட் நிலவரம், வருமானம் எப்படி, வங்கிக்கடனை எந்த வழியில் திருப்பிச் செலுத்துவது, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய உத்திரவாதம் (சூரிட்டி) போன்ற விபரங்களை மனுவுடன் இணைக்க வேணடும். அதனை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அதன் பின்பு வங்கிக்கடன் மூன்று வருடத்திலிருந்து பத்து வருடத்திற்குள் செலுத்தினால் 13 சதவீதத்திலிருந்து 16 சதவீதம் வட்டியுடன் அசல் தொகையும் வசூலிக்கப்படும். கடன் தொகையினை ஒழுங்காக செலுத்தினால் கூடுதலாக கடன் பெறலாம். தொழில் தொடங்கி உற்பத்தி செய்யம் போது அந்த உற்பத்திப் பொருட்களை ஈடாக வைத்து கடன் பெறலாம். தொழிற்சாலை, கட்டிடம், எந்திரம், கச்சாப்பொருட்கள் என்று தனித்தனியாக கடன் பெறலாம். சிலர் கடன் வாங்கினால் வட்டி கட்டவேண்டும் அது இஸ்லாத்திற்கு எதிரானது என்று சொல்லலாம். அரசு வங்கிகளால் வழங்கப்படும் பணம் மக்களாகிய உங்களுடையது. அந்தப்பணத்தினை பணமதிப்பீடுக்கிணங்க கடனை கூடுதலாக செலுத்துகிறீர்கள். (உதாரணத்திற்கு சென்னை மண்ணடியில் ஒரு கிரவுண்ட் நிலத்தினை இந்த ஆண்டு  ஒருவர் ரூபாய் 80 லட்சத்திற்கு வாங்குகிறார் அந்த இடம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அப்போதைய மதிப்பீடுக்கிணங்க ரூபாய் ஒருகோடியே இருபது லட்சத்திற்கு விற்பதில்லையா? அது லாப நோக்கத்திற்காக விற்பதுதானே! ஆகவே நீங்கள் குற்ற உணர்வுடன் அரசு வங்கிளிடமோ அரசு நிறுவனங்களிடமோ கடனைப் பெறுவதினை நோக்க வேண்டாம். அது உங்கள் பணம் என்று உரிமையுடன் நினைக்க வேண்டும்.
சுயதொழில் எப்படி தொடங்குவது?
ஒரு கிராமத்தில் வசிக்கும் 12 முதல் 20 ஏழை பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மையுடன் உருவாக்கப்பட்டதே சுயவேலைக் குழு.  வருமானம், கல்வியறிவு, வேலையின்மை, சொத்து அடிப்படையில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள 21 வயது முதல் 60 வயது வரை பெண்கள் சுய உதவிக்குழு தொடங்கலாம். அப்படி தொடங்கப்பட்ட குழு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தில்(என்.ஜி.ஓ) மூலம் மாவட்ட மகளிர் திட்டத்தில் இணையலாம். அந்தக் குழுவில் கல்வியறிவு பெற்ற ஒருவர் செயல் இயக்குனராகவும், விபரம் தெரிந்தவர் இயக்குனராகவும், மற்றும் இரண்டு பிரதிநிதிகள் கொண்ட செயற்குழுவினை ஏற்படுத்திக் கொள்ளலாம். அந்தக் குழு ஆரம்பித்து இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சங்க சேமிப்பில் உறுப்பினர்களுக்கு அவசர மருந்துச் செலவு, கல்விச் செலவு, தொழில் தொடங்க மூலதனம் குறைந்த காலத்தில் திருப்பிச் செலுத்தும் வகையில் ரூ500 லிருந்து கடன் வழங்கலாம். சிறப்பாக செயல்படும் குழுக்கழுக்கு வங்கிகளில் ரூபாய் ஐந்து லட்சம் வரை 12 சதவீத வட்டியில் கடன் பெறலாம். அரசுக் கடனில் ரூபாய் ஐந்து லட்சத்திற்கு ரூபாய் 1,75,00 மானியமாகப் பெறலாம். ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணிக்கு முஸ்லிம் பெண்களை அழைத்துச் செல்லும் சமுதாய இயக்கங்கள் ஏழைப் பெண்கள் கவுரவமாக வாழ மேற்கூறிய சுயவேலை தொழில் மையங்களை அவர்களுக்கு ஏற்படுத்தலாமே!
ஒருங்கிணைப்பு:
      முன்பெல்லாம் தொழில் தொடங்க ஒவ்வொரு அலுவலமாக அலைந்து அனுமதி வாங்க வேண்டியதிருந்தது. அதனை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வழங்கச் செய்து எளிதாக்கியுள்ளார்கள். கீழ்கண்ட மையத்தில் மனு செய்தாலே உங்களுக்குத் தேவையான அனுமதி கிடைக்கும்:
செயல் துறைத் தலைவர் (வழிகாட்டுதல் குழு),
தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு,
19, ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர்,
சென்னை-600001
தொலைபேசி: 044 - 28553118,   285553866    ஃபேக்ஸ்: 28588364
தொழில் நுணுக்கங்கள்:
தொழில் தொடங்கிய உடனே வெற்றியடைய முடியாது. திட்டமிட்டு சரியான இயக்கத்தில் தொடங்கினால் வெற்றி பெற முடியும். நமது வாடிக்கையாளர்களை நம்முடைய அனுகுமுறை வைத்தே தக்க வைக்க முடியும்.
உங்கள் தொழில் நிறுவன உற்பத்திப் பொருள்கள் போட்டி நிறுவனங்களை விட தரமானது என்று மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். தொழிலில் சுமுகமான  அணுகு முறையே வெற்றிக்கு வழிவகுக்கும.

 

100 வகை சுயதொழில் பயிற்சிகள்-

ரூட்செட் நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவு மேம்பாட்டு பயிற்சிகளை வெவ்வேறு இடங்களில் வழங்கி வருகிறது.
ஒவ்வொரு பயிற்சிக்கும் குறைந்தபட்சம் ஒன்று அல்லது ஆறு வார கால அளவு ஆகும். இந்த பயிற்சி சுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு டெய்லரிங் தொடங்கி உணவு பதப்படுத்துதல் வரை நூற்றுக்கணக்கான சுயதொழில் பயிற்சிகள் நடத்தப்படுகிறது. இந்நிறுவனத்தில் வழங்கப்படும் பயிற்சிகள் முற்றிலும் இலவசம். பயிற்சி பெறுபவர்களுக்கு தங்கும் வசதியும் உள்ளது.
இந்நிறுவனத்தில் கற்பிக்கப்படாத பயிற்சிகளே இல்லை எனலாம். செயற்கை வைரம் பட்டை தீட்டுதல் முதல் ஆடை வடிவமைப்பு, மோட்டர் ரீவைண்டிங், தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகள் வரை 100 வகைப் பயிற்சிகள் இலவசமாக நடத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு:    http://www.rudsetitraining.org/pages/training.html
இயக்குனர், ரூட்செட் பயிற்சி நிலையம்,   விமான நிலைய சாலை,
காவல்நிலையம் அருகே,    பெருங்குடி,   மதுரை 22
மேலும், விவரங்களுக்கு :- 735 855 6656,  948 636 9825,  0452-2690609,
Thanks to THAGAVAL KALNGNIYAM 

other links

 http://www.rudsetitraining.org/pages/eligibility.html

தொழில் கடன் உதவி
தொழில் தொடங்கி அம்பானி போல ஆகிவிடலாம் என்கிற கனவோடு களமிறங்குகிற பலர் எடுத்த எடுப்பிலேயே தடைபட்டு நின்றுவிடுகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ‘பணம் இல்லை; கடன் கேட்டேன்; கிடைக்கவில்லை’ என்பதாகவே இருக்கிறது. டாடாவோ, அம்பானியோ பெரிய முதலோடு தங்கள் தொழிலை ஆரம்பிக்கவில்லை. கடன் வாங்கித்தான் ஆரம்பித்தார்கள். நிறுவனத்துக்கான கடனை வாங்க அந்தக் காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களோடு ஒப்பிட்டால் தொழில்கடன் வாங்க இன்றைக்கு உள்ள சிரமங்கள், பிரச்னைகள் குறைவே. சில முன் தயாரிப்புகளோடு அணுகினால் அந்தப் பிரச்னைகளையும் பிஸினஸ்மேன்கள் தவிர்த்து நிச்சயம் வெற்றி பெறலாம்.

தேவை தெளிவான பார்வை

‘வேலை செய்யப் பிடிக்கவில்லை; அதனால் பிஸினஸ் செய்யப் போகிறேன்’ என்று சொல்லி தொழிலில் இறங்குகிறவர்கள், வெற்றி பெறுவது கடினம்தான். அதே போல செய்ய நினைக்கும் தொழில் பற்றிய முழுமையான அறிவு, தெளிவான நம்பிக்கை இல்லாமல் தொழிலில் இறங்குகிறவர்களுக்கும் தோல்வி நிச்சயம்தான். தொழில்கடன் கேட்டு வங்கியை அணுகுகிறவர்களை வங்கி மேலாளர் முதலில் சோதிப்பது அவர்களின் நம்பிக்கையைத்தான். தொழில் முனைவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வங்கி தரப்பில் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். சிலசமயம் வங்கி மேலாளர் தொழில்முனைவரின் உறுதியைக் குலைக்கும் வகையில் சில கேள்விகளைக் கேட்கவும் செய்யலாம்.

‘நீங்கள் சொல்கிற பிஸினஸை எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் செய்தார். அதில் அவருக்கு பலத்த நஷ்டம். வேறு ஏதாவது பிஸினஸுக்கான ஐடியா உங்களிடம் இருக்கிறதா?’ என வங்கி மேனேஜர் கேட்பதாக வைத்துக் கொள்வோம். இதற்கு தொழில் முனைவரின் பதில் என்னவாக இருக்கும்..? உடனே பதற்றமடையும் பலர், ‘சார், என்கிட்ட இன்னொரு பிஸினஸுக்கான ஐடியாவும் இருக்கிறது’ என்றுதான் சொல்வார்கள். இந்த ஒரு வரி பதில் போதும், உங்கள் தொழில் மீது உங்களுக்கு ஆழமான நம்பிக்கை இல்லை என்று சொல்ல. ஆனால், இத்தகைய பதில்களால் மட்டுமே ‘கடன் கிடைக்காது’ என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் நீங்கள் செய்யப் போகிற தொழில் மீது உங்களுக்கு இருக்கும் உறுதியைக் காட்டிவிடும். எனவே தெளிவான பார்வை, உறுதியான திட்டம் தேவை.


பிஸினஸ் பிளானில் என்ன இருக்க வேண்டும்?

நீங்கள் செய்யப் போகிற பிஸினஸ் இதுதான் என்று முடிவு செய்துவிட்டால் அதற்கான பிளானை தயார் செய்ய வேண்டும். முதலில் உங்களைப் பற்றிய தகவல்கள், நீங்கள் யார், என்ன செய்து கொண்டிருந்தீர்கள், இனி என்ன செய்யப் போகிறீர்கள் என்ற விவரங்கள் இருக்க வேண்டும். தொடங்கப் போகிற தொழிலைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும், எப்படித் தெரியும், அந்தத் தொழிலில் என்ன புதுமைகள் செய்யப் போகிறீர்கள்; உங்களுக்கான மூலப்
பொருட்கள் எங்கு கிடைக்கும்; உங்களின் வாடிக்கையாளர்கள் யார் என்பது பற்றி தெளிவாகக் கூற வேண்டும். இந்தத் தொழில் மூலம் மாதத்துக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்கிற தோராயமான கணக்கு வேண்டும்.

இதற்கு டி.எஸ்.சி.ஆர். என்கிற விகிதத்தை நிச்சயம் பார்ப்பார்கள்.   Debt Service Coverage Ratio என்பதன் சுருக்கமே டி.எஸ்.சி.ஆர். அதாவது, ஒரு மாதத்துக்கு நீங்கள் 15 ஆயிரம் சம்பாதிக்கிறீர்கள் எனில், அசலுக்கும் வட்டிக்குமாகச் சேர்த்து ரூபாய் 10 ஆயிரம் போக, குறைந்தது ரூபாய் 5 ஆயிரம் உங்களிடம் இருந்தால்தான் தொடர்ந்து பிஸினஸ் நடத்த முடியும். அதாவது, இந்த விகிதம் 1.5க்கு மேல் இருந்தால் மட்டுமே உங்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கும். நீங்கள் செய்யும் பிஸினஸில் இந்த வருமானம் உங்களுக்கு இருக்கிறதா என்பதை நீங்களே உறுதி செய்து கொண்டு, வங்கியை அணுகினால் தெம்பாகப் பேசலாம்.

கடன் வகைகள்

அடமானமில்லாத கடன் ( unsecured loan ) ரூபாய் 10 லட்சம் வரைக்குமான தொழில் கடனுக்கு எந்த விதமான அடமானமும் கேட்கக்கூடாது என்பது ஆர்.பி.ஐ. விதி. இந்த விதி காரணமாக, 10 லட்சம் வரை எந்தவித அடமானமில்லாமல் கடன் கிடைக்கும். ஒரு வேளை வங்கிகள் அடமானம் கேட்டால் அது விதியை மீறிய செயலாகவே கருத வேண்டும். தவிர, சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவிக்க மத்திய அரசும் சிட்பியும் (ஷிமிஞிஙிமி ) சேர்ந்து ஒரு கோடி ரூபாய் வரைக்கும் எந்த விதமான அடமானமும் இல்லாமல் கிரெடிட் கேரண்டி ஸ்கீமில் (  Credit Guarantee Scheme CGS ) கடன் தருகிறார்கள். ஆனால், இந்தத் திட்டத்தில் கடன் பெற பதிவு செய்ய வேண்டும். இது பற்றி வங்கிகளிடம் கேட்டால் அவர்கள் இது சம்பந்தமான மற்ற முழு விவரங்களைத் தருவார்கள்.

அடமானக் கடன்

(secured loan) ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உங்களுக்கு பணம் தேவை எனில், அடமானம் இல்லாமல் கடன் கிடைக்காது. அந்த சமயத்தில் உங்களிடம் இருக்கும் சொத்துக்களை அடமானம் வைத்துத்தான் கடன் பெற முடியும். ஒருவேளை இரண்டு கோடி ரூபாய் தேவைப்பட்டால் ஒரு கோடி ரூபாய் வரை கிரெடிட் கேரண்டி திட்டத்தின் மூலம் அடமானம் இல்லாமலும், மீதமுள்ள ஒரு கோடிக்கு சொத்துக்களை அடமானம் வைத்தும் கடன் பெறலாம்.


எவ்வளவு சொந்தப் பணம் வேண்டும்?

பிஸினஸ் திட்டத்திலே நமக்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்று தெரிந்துவிடும். அந்தத் தொகையில் குறைந்தபட்சம் 1:4.5 என்ற விகிதத்தில் ( Debt Equity Ratio  ) நம்மிடம் சொந்தப் பணம் இருக்க வேண்டும். அதாவது, ஒரு லட்சம் ரூபாயை நீங்கள் மூலதனமாக கொண்டு வந்தால் வங்கிகள் 4.5 லட்சம் வரைக்கும் கடன் கொடுக்கும். இந்த விதிதான் நிரந்தரம் என்று சொல்ல முடியாது. மிகச் சில சமயங்களில் மட்டும் இந்த விகிதத்துக்கு கீழே சென்றால் வங்கிகள் கடன் கொடுக்கும். அது நீங்கள் செய்யும் தொழில், உங்கள் பிஸினஸ் நடக்கும் இடம் போன்ற பல காரணிகளை வைத்து வங்கிகள் முடிவு செய்யும். இருந்தாலும் முதல்முறை தொழில் தொடங்குவோர் இந்த விகிதத்துக்கும் குறைவாக மூலதனம் வைத்திருந்தால் கடன் கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம். உங்கள் தொழிலில் உங்கள் முதலீடு கணிசமாக இருக்க வேண்டும் என வங்கிகள் எதிர்பார்ப்பதுதான் இதற்குக் காரணம்.

வங்கிகளை எப்படி அணுகுவது?

ஒவ்வொரு வங்கியும் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை கடனாகக் கொடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்படுகின்றன. அந்த இலக்குக்காக போட்டி போட்டுக் கொண்டு வங்கிகள் கடன் தருகின்றன. ஆனாலும் தொழில் முனைவோருக்கு கடன் கிடைக்கவில்லை எனில் அதற்குக் காரணம், சரியான திட்டமிடல் இல்லாததுதான். உங்கள் தேவை ரூபாய் 25 லட்சம் எனில் அருகிலிருக்கும் வங்கிகளையே அணுகலாம். அவர்களே கடன் தருவார்கள். 25 லட்சத்துக்கு மேல் போகும் போது, ஒவ்வொரு வங்கியும் தொழில்கடன்களை ஊக்குவிக்கவே தனியாக சிறுதொழில் கிளையை ( SME Branch ) வைத்திருக்கிறார்கள். அங்கிருக்கும் அதிகாரிகளை அணுகினால் அவர்கள் உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள்.

தேவையான ஆவணங்கள்

அடையாளச் சான்றிதழ், முகவரிச் சான்றிதழ், பிஸினஸ் நடைபெறும் இடத்துக்கான முகவரிச் சான்றிதழ், திட்ட அறிக்கை, வருமான எதிர்ப்பார்ப்பு (கடனை திருப்பிச் செலுத்தும் காலம் வரைக்கும்), உள்ளாட்சி மற்றும் இதர அரசு அலுவலகங்களில் இருந்து தடையில்லாச் சான்றிதழ் (தேவைப்பட்டால்), பிஸினஸ் நடைபெறும் இடம் உங்களுடையது என்றால் அதற்கான சான்றிதழ் (அ) வாடகை இடம் என்றால் ஒப்பந்தச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும். இவை தவிர, வேறு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது கடன் விண்ணப்பத்திலேயே இருக்கும். அவற்றையும் கொடுத்தால் நிச்சயம் உங்கள் கடன் மனுவை வங்கி அதிகாரிகள் ஒதுக்கித் தள்ள மாட்டார்கள்!

தனிநபர் கடன்

பர்சனல் லோனின் மிகப் பெரிய சிறப்பே, எதற்காக அதை வாங்குகிறோம் என்கிற காரணம்கூடச் சொல்ல வேண்டாம். பொதுவாக, கார் அல்லது வீடு வாங்க சில லட்சம் ரூபாய் குறையும் போது மீதிப் பணத்துக்காக கடன் கேட்டு வங்கியை அணுகினால் கார் அல்லது வீட்டை அடமானமாகக் காட்ட வேண்டி வரும்.
கடனைச் சரியாக கட்டவில்லை என்றால் அடமானம் வைக்கப்பட்டிருப்பதை வங்கி தன் வசம் எடுத்துக் கொள்ளும். இதைத் தவிர்க்க விரும்புபவர்கள் பர்சனல் லோனைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். காரணம் சொல்லத் தேவையில்லை என்பதால் எடுத்ததெற்கெல் லாம் பர்சனல் லோன் வாங்குவது சரியல்ல. காரணம் மற்ற கடனைவிட இதற்கு வட்டி மிக அதிகம். எனவே பர்சனல் லோன் வாங்குவதை கடைசி முயற்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வங்கிகள் தயார்

வங்கிகள் இப்போது தாராளமாக பர்சனல் லோன் தரக் காத்திருக்கின்றன. பொதுவாக, இந்தக் கடனுக்கு 14 - 22% வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்தியன் வங்கி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி போன்றவை 1 லட்சம் வரைக்கும்தான் பர்சனல் லோன் தருகின்றன. ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்.பி.ஐ. போன்றவை 10 லட்சம் வரைதான் கடன் தரும். அதற்கு மேல் தேவைப்பட்டால் சிட்டி பேங்க், ஹெச்.டி. எஃப்.சி., ஆர்.பி.எஸ். போன்றவற்றைத் தொடர்பு கொள்ளலாம். பர்சனல் லோன் வாங்கக் குறைவான ஆவணங்கள் கொடுத்தால் போதும். இருப்பிடம், அடையாளம், வருமானம் போன்றவற்றுக்கு ஆதாரம் கொடுக்க வேண்டும். மூன்று நாட்களில் கடன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 1248 மாதங்களில் கடனை திரும்பக் கட்டலாம்.

பேரம் பேசலாம்

உங்களின் சம்பளம் மற்றும் திரும்பக் கட்டும் தகுதி அதிகமாக இருக்கும் பட்சத்தில் வட்டியில் பேரம் பேசிக் குறைக்கலாம். பரிசீலனைக் கட்டணத்திலும் பேரம் பேசலாம். பர்சனல் கடன் வாங்கும் வங்கியிலேயே உங்கள் சம்பளக் கணக்கோ, கிரெடிட் கார்டோ இருந்தால் இந்தப் பேரம் நிச்சயம் கை கொடுக்கும். வட்டியைப் பொறுத்தவரையில் கடன் தொகை, திரும்பச் செலுத்தும் ஆண்டுகள், வேலையின் தன்மை, சம்பளத் தொகை, சம்பளம் வாங்குபவரா/தொழில் செய்பவரா, வாங்கும் நபரின் கடன் வரலாறு போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும். வங்கி கொடுக்கும் சலுகை அல்லது வாக்குறுதியை எழுத்து மூலம் பெற்றுக் கொள்வது அவசியம். 2 நபர்கள் கேரண்டி கையெழுத்துப் போட வேண்டி இருக்கும்.

வட்டியைக் கவனிங்க

பர்சனல் லோனில் வட்டி எந்த முறையில் கணக்கிடப்படுகிறது என்பது மிக மிக முக்கியம். ஃபிளாட் வட்டியா? ( Flat Rate ) அல்லது குறையும் வட்டியா? என்பதைக் கவனிக்க வேண்டும். ஃபிளாட் முறையில் மொத்தக் கடனுக்கும் மொத்த ஆண்டுக்கும் வட்டி கணக்கிடப்படும். உதாரணத்துக்கு ஒருவர் 15% வட்டியில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கி அதனை மூன்றாண்டுகளில் திரும்பச் செலுத்துவதாக வைத்துக் கொள்வோம். ஃபிளாட் வட்டி என்றால் மாதத் தவணை ரூ. 4,028ஆக இருக்கும். அந்த வகையில் மூன்றாண்டுகளில் வட்டி மட்டும் ரூ. 45,000 கட்டி இருப்பீர்கள். இதுவே குறையும் வட்டி முறை என்றால் கடன் தொகை குறையக் குறைய அசலில் அந்தத் தொகையைக் கழித்துக் கொண்டு மீதிக்கு மட்டும் வட்டியைக் கணக்கிடுவார்கள். மாதத் தவணை ரூ. 3,476 ஆக இருக்கும். இம்முறையில் மொத்த வட்டி ரூ. 24,795. அதாவது, குறையும் வட்டி முறையில், ஃபிளாட் வட்டியைவிட ரூ. 20,205 குறைவாகக் கட்டினால் போதுமானது.

முன்கூட்டி அடைக்கலாமா?

பர்சனல் கடனை முன்கூட்டியே அடைக்க பெரும்பாலான வங்கிகள் அவ்வளவு எளிதில் ஒப்புக் கொள்வதில்லை. இடையில் கடனை அடைப்பதாக இருந்தால் அபராதம் கட்ட வேண்டி வரும். இது பாக்கியுள்ள கடன் தொ
 thank to

SRI RAGHAVENDRA

 

 பிளாஸ்டிக் குடம் தயாரிப்பு

குடம் இல்லாத வீட்டைக் காட்டுங்கள் என்று யாராவது நம்மிடம் சவால் விட்டால் நிச்சயமாக நாம் தோற்றுத்தான் போவோம்... கால மாற்றங்கள் எவ்வளவோ வந்தாலும், இன்றைக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது குடம். ஒ.......மேலும்கேன் வாட்டர் தொழில் ஒரு பார்வை

கேன் வாட்டர்... [newline] பானுமதி அருணாசலம், ரா.அண்ணாமலை படங்கள் : ச.லெக்ஷ்மிகாந்த் [newline] சூப்பர் தொழில் ஏதாவது சொல்லுங்கள் என்று யாரிடம் கேட்டாலும் அவர்கள் சொல்லும் பட்டியலில் நிச்சயம் க.......மேலும்செல்லோ டேப் தயாரிப்பு!

பரிசுப் பொருட்களை அழகாக பேக்கிங் செய்யணுமா? கடித உறைகளை ஒட்டணுமா? படங்களை சுவரில் ஒட்டணுமா? இல்லை, குழந்தைகளின் கிழிந்துபோன நோட்டுப் புத்தகத்தை ஒட்டணுமா? எல்லாவற்றுக்கும் நாம் தேடும் ஒரே ஒரு பொருள் ச.......மேலும்பருப்பு மில்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது உணவிலும் முக்கிய அங்கம் வகிப்பது பருப்பு வகைகள். நம் உடலுக்குத் தேவையான புரதச்சத்து பல வகையான பருப்புகளில் இருந்துதான் கிடைக்கிறது. நான்-வெஜ் பிரியர்களுக்கு .......மேலும்நோட்டுப் புத்தகம் தயாரிப்பு!

நோட்டுப் புத்தகத்தின் தேவை என்ன என்பதைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பள்ளி, கல்லூரிகள் அலுவலகங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும் இதற்கான தேவை இருந்துகொண்டே இருக்கிறது. சாகாவரம் பெற்ற இந்தத் த.......மேலும்அட்டைப் பெட்டிகள் தொழில்!

டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மருந்துப் பொருட்கள், ஜவுளிகள், கண்ணாடிப் பொருட்கள், பிஸ்கெட், சோப் என பல வகையான பொருட்களை பேக்கிங் செய்து பத்திரமாக எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படுபவை அட்டைப் பெட்டிக.......மேலும்தென்னை, கோகோ, கீரை... முத்தான வருமானம் தரும் மூன்றடுக்கு சாகுபடி..!

[b]விருது வாங்கித் தந்த இயற்கை விவசாயம் [/b] [newline] நிலம் முழுவதும் பயிர்கள். ஆண்டு முழுவதும் வருமானம். குறைவானப் பராமரிப்பு. [newline] குறைவானச் செலவில், நிறைவான மகசூல் பெற இயற்கை வ.......மேலும்ஆயில் மில்!

[b]வறுவல், பொரியல் என எண்ணெய்யில் செய்யும் உணவு அயிட்டங்கள் அனைத்திற்கும் நம்மவர்கள் அடிமை. நம்முடைய தினசரி சமையலில் எண்ணெய் கலக்காத உணவு என்று எதுவுமில்லை. தோசையில் ஆரம்பித்து பூரி, சப்பாத்தி வரை அன.......மேலும்ஒரு தொழிலாளி முதலாளியான கதை !

[b]எட்டே ஆண்டுகளில்... எட்டாத உயரத்தில்...[/b] [newline] கோவிந்த் பழனிச்சாமி [newline] தனியார் திசு வளர்ப்பு மையம் ஒன்றில், 1,150 மாத சம்பளத்தில், சாதாரண பணியாளராக வேலை பார்த்த கோயம்புத்தூர் பூங.......மேலும்பிஸ்கட் தயாரிப்பு!

நொறுக்குத் தீனி வகைகளில் பிஸ்கெட்டுக்கு உள்ள இடத்தை வேறு எதனாலும் பூர்த்தி செய்ய முடியாது. டீ, காபியோடு ஒன்றிரண்டு பிஸ்கெட்களை சாப்பிடுவது என்பது அன்றாட உணவு விஷயங்களில் பழகிப்போன ஒன்று. எளிதில் ஜீரண.......மேலும்டூட்டி ஃபுரூட்டி

மதியமோ அல்லது இரவோ சாப்பிட்டு முடிந்தவுடன் வெற்றிலை போட்டு மெல்லும் பழக்கம் நம்மவர்களிடம் பாரம்பரியமாகவே இருந்து வருகிறது. சமீபகாலமாக இந்த வெற்றிலைபோடும் பழக்கம் மெள்ள மெள்ள மறைந்து, அந்த இடத்தைப் பி.......மேலும்ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ்

செங்கல்லுக்கு மாற்றாக புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த தொடங்கியதன் முதல்படி ஹாலோ பிளாக் என்றால், அதன் அடுத்த கட்டமாக வந்த தொழில்நுட்பம்தான் ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ். [newline] புதிய தொழில்நுட்பத்தில் .......மேலும்பெட் பாட்டில் தயாரிப்பு

இது பிளாஸ்டிக் யுகம். சாப்பிடுகிற தட்டுகளில் ஆரம்பித்து உட்காருகிற சேர்கள் வரை எல்லாமே பிளாஸ்டிக் மயம்தான். அதிலும், தண்ணீரோ அல்லது ஜூஸோ குடிக்கப் பயன்படும் பெட் பாட்டில்களுக்கு இப்போது ஏகப்பட்ட வரவே.......மேலும்ஹாலோ பிளாக்

வீட்டை கட்டிப்பார்; கல்யாணத்தை பண்ணிப்பார் என்பார்கள்... அப்போதுதான் வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்துகொள்ள முடியும் என்பதற்காக! ஆனால், இப்போதெல்லாம் ஒரு கல்யாணத்தைகூட எளிதாக நடத்தி விடலாம், ஆன.......மேலும்ஜப்பானியக் காடை வளர்ப்பு

[b]ஜப்பானியக் காடை வளர்ப்பு:[/b] ஜப்பானியக் காடை வளர்ப்பு தமிழகத்தில் பிரபலமாகிவரும் முக்கிய தொழில்களில் ஒன்றாகும். காடைகள் பொதுவாக முட்டைக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப் படுகின்றன. இருப்பினும் க.......மேலும்பேரீச்சை விவசாயியின் வெற்றிக்கதை!!!

திருப்பூர் மாவட்டம், முருகம் பாளையத்தில் வசிக்கும் விவசாயி முருகவேல். தமிழகத்தில் பேரீச்சையை திசுவளர்ப்பு முறையில் வெற்றிகரமாக இரண்டாவது விவசாயியாக உரு வெடுத்துள்ளார். அவர் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்.......மேலும்வெள்ளாடு வளர்ப்பு

வெள்ளாடு ""ஏழைகளின் பசு என்று அழைக்கப் படுகிறது. இது மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத் தொகுப்பின் முக்கிய அங்கம் ஆகும். மேட்டுப்பாங்கான நிலங்களில் பசுக்களையும், எருமைகளையும் வளர்க்க இயலாது. எனவே இத்தகை.......மேலும்குறைந்த தீவனம் ,அதிக பால் சாஹிவால் ரக மாடுகள்

காட்டு வாழ்க்கையிலிருந்து, நாகரிகப் பாதையில் நடைபோடத் தொடங்கிய மனிதன், பாலுக்காக மட்டுமில்லாமல்.. உழவு, பாரம் இழுத்தல், போக்குவரத்து என பல வகையிலும் உதவும் என்பதற்காக தன்னுடன் சேர்த்துக் கொண்ட விலங்க.......மேலும்காளான் உற்பத்தி!!

காளான் உற்பத்தி செய்வது என்பது ஒரு கடினமான வேலையில்லை. காளான் உற்பத்தி செய்ய ஓரளவுக்கு படித்திருந்தாலே போதும். வருடம் முழுவதும் உற்பத்தி செய்யலாம். ஆனால் கோடை காலத்தில் 30 -40% மகசூல் குறைவாக கிடைக்க.......மேலும்உயர்தர நாட்டு பசுக்கள்

[b]தார்பார்க்கர் பசு:[/b] இப்பசுவின் பூர்வீகம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தார் பாலைவனம் ஆகும். பாகிஸ்தானை ஒட்டிய எல்லையோர கிராமங்களில் இவை பரவலாக காணப்படும். வெள்ளை மற்றும் கருப்பு கலந்த வண்ணத்தில் இ.......மேலும்பணம் கொட்டும் ஜமுனாபாரி ஆடு வளர்ப்பு;ஆட்டின் விலை ரூ.50 ஆயிரம்

பணம் கொட்டும் ஜமுனாபாரி ஆடு வளர்ப்பில் மதுரை விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர். 80 கிலோ எடையுள்ள ஆட்டின் அதிகபட்ச விலை 50 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட ஜமுனாபாரி ஆட்டின் காத.......மேலும்நாட்டு கோழி வளர்ப்பும் விற்பனையும்!!!

எங்கள் ஊருக்கு பக்கத்துக்கு கிராமத்தில் நாட்டு கோழி பண்ணை அமைத்து வெற்றிகரமாக நடத்தி வரும் திருவேங்கடம் என்ற நண்பரிடம் சேகரித்த தவல்களை இங்கே உங்களிடம் பகிந்துகொள்கிறேன்.நாட்டுகோழி பண்ணை அமைக்கும் நண.......மேலும்அதிக லாபம் தரும் திசு வாழை சாகுபடி

விழுப்புரம்: திசு வாழை பயிரிட்டால் நிகரலாபம் அதிகம் பெறலாம் என்று இவ்வாழை ரகத்தை பயிரிட்டு பலன்பெற்ற விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.[newline]தோட்டக்கலைத் துறையில் சாகுபடிக்கு பரிந்துரை செய்யும் பல பயிர்.......மேலும்ஈமு கோழிப்பண்ணை அமைக்க விருப்பமா?

ஈமு கோழிகள் ரேட்டைட் இனத்தைச் சேர்ந்தவை. இப்பறவைகள் அவற்றின் விலைமதிப்புமிக்க இறைச்சி, முட்டைகள், தோல், தோலிலிருந்து பெறப்படும் எண்ணெய் மற்றும் இறகுகள் போன்றவற்றுக்காக வளர்க்கப்படுகின்றன. இப்பறவைகள் .......மேலும்பயோ டீசல்(Bio diesel) - தரிசு நிலம் இனி தங்க நிலம்

தரிசு நில மேம்பாட்டிற்காண மற்றும் ஒரு நல்ல லாபாகரமான விவசாய பயிராக கருதபடுவது காட்டாமணக்கு ( கொட்டை முத்து) ,இனி வரும் காலங்களில் மாற்று எரிபொருளுக்கான முக்கிய மூல பொருளாக கருதபடுவதும் இதுவே ஆகும். ச.......மேலும்மேலும் படிக்க 


Export and Import Training in Tamil

How to start Export and Import Business?

You wants to sell your products or services to the world? You have visiting the right place. You can set up an import/export business as desired. You can start your business easily after reading this lesson. From this site:-
  • How to start business?
  • How to start export/import business?
  • How to prepare business plan?
  • How to select right products/services for your business?
  • How to find out importers and buyers from around the world?

Export and Import Training in Tamil

1. தொழிலின் ரகசியம்
2. எந்த நேரத்தில் என்ன தொழில்
3. தொழில் மற்றும் அதன் அமைப்புகளும்
4. தொழில் அமைப்புகளின் வகைகள்
5. ஏற்றுமதி / இறக்குமதி
6. ஏற்றுமதி / இறக்குமதி வகைகள்
7. ஏற்றுமதியாளர்களின் வகைகள்
8. ஏற்றுமதியாளர் மற்றும் இறக்குமதியாளரை கண்டறிதல்
9. எந்த நாட்டிற்கு என்ன பொருள்
10. ஏற்றுமதி / இறக்குமதி ஒப்பந்தம்
11. ஏற்றுமதியும் முகவர்களும்
12. ஏற்றுமதிக்கு முன் தயார் ஆகுதல்
13. ஏற்றுமதிக்கான பதிவுகளும் ( REGISTRATION ) மற்றும் அதன் விண்ணப்பங்களும் ( APPLICATION )
14. ஏற்றுமதிக்கான ஆவணங்கள் (Export Documents)
15. பணப்பட்டுவாடா முறைகளும் METHOD OF PAYMENT மற்றும் சர்வதேச விலைக் குறியீடுகளும்
 
 http://www.gthours.com/business/export-and-import-training-in-tamil.html

 http://www.dinamani.com/edition_madurai/2013/05/04/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A/article1574291.ece

 http://www.gthours.com/business/type-of-business/108.html