ஆதரவாளர்கள்

சனி, 24 ஜனவரி, 2015

விரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா?,

 நண்பர்களே! 
 படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க


விரைவில் ரேசன் கடைகள் மூடப்படும்?, தெரியுமா?, பன்னாட்டு நிறுவனங்களின் உலக வர்த்தக அமைப்பின் வெற்றியும், செத்துப்போன ஒப்பந்தத்திற்கு உயிர் கொடுத்த மோடி அரசும், அவசர சட்டமும்.
இந்த ரேசன் கார்டு எதுக்கு?

முன்னாள் மத்திய உணவுத் துறை அமைச்சர், சாந்தகுமார் தலைமையில், கமிட்டி, கடந்த 21ம் தேதி, பிரதமர் மோடியிடம் அறிக்கை அளித்தது. அதில், பல முக்கிய பரிந்துரைகள் செய்யப்பட்டு உள்ளன.

அவையாவன:
*விவசாயிகளின் விளைப்பொருட்களை வாங்கி, அவர்களுக்கு விலை ஆதரவு அளிக்கவும், ஏழைகளுக்கு மானிய விலையில், உணவு தானியங்கள் வழங்கவும், மாநிலங்களில், உணவு தானிய இருப்பை உறுதி செய்யவும், 50 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட, எப்.சி.ஐ., எனப்படும் இந்திய உணவுக் கழகம், முழுமையாக தோல்வி அடைந்துள்ளதால், அதை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும்.
*காங்., தலைமையிலான, முந்தைய ஐ.மு., கூட்டணி அரசின் கனவு திட்டமாக விளங்கிய, உணவு பாதுகாப்பு சட்டத்தின் இலக்காக இருக்கும், 67 சதவீத மக்கள் தொகையை, 40 சதவீதமாக குறைக்க வேண்டும். இதனால், மத்திய அரசின் மானியச் சுமை வெகுவாகக் குறையும்.
*பொதுமக்களுக்கு, ரேஷனில் குறைந்த விலையில் உணவு தானியங்கள் வழங்கப்படுவது, சரியான முறையில் சென்றடையவில்லை. அதற்குப் பதிலாக, ரேஷன் பயனாளிகளின் வங்கிக் கணக்கில், உணவு மானியத்தை செலுத்திவிடலாம். உணவு மானியத்தை, பயனாளிகளின் வங்கிக் கணக்கு மாற்றினால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும்.
*உணவு தானியங்களை இருப்பு வைக்கும் பொறுப்பை, மத்திய அரசு கைவிட்டு, தனியார் மற்றும் மாநில அரசுகளிடம் வழங்கிவிட வேண்டும்.இவ்வாறு, பல பரிந்துரைகளை, சாந்தகுமார் கமிட்டிபரிந்துரைத்து உள்ளது.

இதற்கு என்ன அவசியம் ஏற்ப்பட்டது என்று தெரியவேண்டுமா தொடர்ந்து படியுங்கள்
இந்தியா இயற்றிய அவசர சட்டங்களை பன்னாட்டு நிறுவனங்கள் வரவேற்றுள்ளன என்று பெருமையாக நமது அமைச்சர் பெருமக்கள் பேசுகின்றார்கள்.
நமது மக்கள் பாராட்ட பட்ஜெட்டும் இல்லை சட்டமும் இல்லை என்றால் ...........இந்த தேசத்தோடு சேர்ந்து நாம் எங்கே போய்கொண்டு இருக்கின்றோம்.?


உலக வர்த்தக அமைப்பும் மோடியில் அரசியலும் அமெரிக்காவின் வெற்றியும்

எதோ சொல்வாங்களே பூனைக்குட்டி வெளியில் வந்துடுச்சு என்றும் குட்டு வெளிப்பட்டுடுச்சினும்
உலக வர்த்தக அமைப்பு ;
உலகம் முழுவதும் உள்ள உற்பத்தி கேந்திரங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள 1993 ஆம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்தியா  உள்ளிட்ட  அனைத்து உலக  பயன்பெறும் வண்ணம் அந்த அமைப்பு உருவாக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும் அது இந்தியாவின் தொழில் வளத்தை சுரண்டுவதற்காக பன்னாட்டு நிறுவனங்களால் ஏற்ப்படுத்தப்பட்ட அமைப்பு(?) என்று அறியாமல் இந்தியா  இந்த உலக வர்த்தக அமைப்பினை ஏற்று கையொப்பம் இட்டு தன்னையும் இணைத்துக் கொண்டது.
விவசாய ஒப்பந்தம் திருத்தம்

அந்த ஒப்பந்தத்தில் அடுத்த ஆண்டுகளில் இந்தியாவைக் குறிவைத்து சில ஒப்பந்த திருத்தங்கள் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவால் முன்மொழியப்பட்டு இந்தியாவும் ஏற்றுள்ளது.
அந்த வகையில் 1995 ஆம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பில் அமேரிக்கா விவசாய ஒப்பந்த்தத்தில் திருத்தம் கேட்டது. இந்த திருத்தம் இந்தியா உள்ளிட்ட ஆஸ்திரேலியா கனடா இந்தோனேசியா உள்ளிட்ட சுமார் 56 நாடுகள் தன குடிமக்களை விவசாயத்தில் இருந்து அடியோடு கைவிட்டு நகர்ப்புற குடியேற்றத்திற்கு வழிவகை செய்வதால் இந்நாடுகள் அனைத்தும் இந்தியாவின் தலைமையில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தன.
இருப்பினும் நாட்டாமை அமேரிக்கா தனது பொருளாதார உதவி மூலம் பல நாடுகளை தன வழிக்கு அடங்கிப் போக செய்தது. ஆனால் இந்தியாவும் அதன் கீழ் 27 நாடுகள் 1013 ஆம் ஆண்டுவரை ஒப்பந்தம் நிறைவேற விடாமல் கடுமையாக எதிர்த்தன.
இந்நிலையில் இலங்கை பிரச்சனையில் அமேரிக்கா 1013 ஆம் ஆண்டு தலையிட்டு உலக மனித உரிமை ஆணைய விசாரணைக்கும் இலங்கைக்கு எதிரான  விசாரணைக்கும்  ஐ நா  துணையுடன் நாடகமாடியது.

ஒவ்வொரு நகர்வின் பின்னால் பன்னாட்டு நிறுவனங்களின் அரசியல்;

இது முற்றிலும் உலக வர்த்தக அமைப்பின் 2013 ஆம் ஆண்டு மாநாட்டில் இந்தியாவை அடிபணிய வைக்க  விவசாய  ஒப்பந்தம் எவ்வித திருத்தமும் இல்லாமல் இந்தியாவை கையொப்பம் இட செய்ய,

அமெரிக்காவின் தந்திரம் என்று அறியாத இந்திய  ஈழத்தமிழ்  புரட்சியாளர்களும் போர்குற்ற விசாரணைக்கு மனித உரிமை மீறலுக்காக அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தின.


ஈழம் கைகொடுத்தது இந்தியா அடிபணிந்தது
விளைவு அமெரிக்காவின் விசாரணை நடைபெற்றால் இந்தியா இலங்கைக்கு செய்த உதவி வெளிப்பட்டுவிடுவதொடு போற்குற்றத்திலும் இந்திய ஈடுபட்டது என்று அமேரிக்கா நிரூபணம் செய்துவிடும் என்ற நிலை இந்தியாவுக்கு உருவானது.

காரணம் ஐநா குழு இலங்கையில் விசாரணையை மேற்கொண்டு இலங்கையில் மனித உரிமை மீறல் நடைபெற்றது என்று நவநீதம் பிள்ளை அறிக்கை அளித்தார் ஊடகங்களிலும் அது முக்கிய இடம் பிடித்தது.
இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ம் தேதி முதல் 6 ஆம் தேதிவரை இந்தோனேசியா பாலிதீவில் அமெரிக்காவின் விவசாய ஒப்பந்த திருத்தத்தை ஏற்று கொள்வதாக கையொப்பம் இட்டது.
இந்தியாவை நம்பி இருந்த நாடுகளின் நிலை;இந்தியாவின் பின்வாங்கள் காரணமாக
வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டு கையொப்பம் இடவேண்டிய சூழல் உருவானதால் அவர்களும் கையொப்பம் இட்டுவிட்டனர். காரணம் அவர்கள் இந்தியாவை பெரிது நம்பி இருந்தனர்.இறுதிவரை போராடிய கனடாவும் மண்ணைக் கவ்வியது. இந்நாடுகள் இனி இந்தியாவை நம்புமா நம்பிக்கை பொய்த்துப்போனது.
2013 ஆம் ஆண்டு  இந்திய மன்மோகன் சிங் அரசு இந்த ஒப்பந்தம் நிறைவேற்ற நான்கு ஆண்டு கால அவகாசம் வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டது.

அமெரிக்காவின் தீர்மான நாடகம் முடிந்தது

அதன்பிறகு அமேரிக்கா தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவைக் விசுவாசத்தைக் காட்டி அமெரிக்கா இந்தியாவுக்கும் இலங்கைக்கும் அரசுக்கு ஆதரவான நிலை எடுத்து இந்தியாவைக் காப்பாற்றியது.

அமேரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரிக்க சொன்ன அனைத்து ஈழ அமைப்புகளும் அடுத்து கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் அதே அமேரிக்கா துரோகம் செய்துவிட்டது என்று எதிர்ப்பை தெரிவித்ததும் போராடியதும் ஊடகங்களின் வாயிலாக நாம் அனைவரும் அறிவோம் .

மோடியின் வெற்றியும் உலக அரசியலும்
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் வந்து 2014 ஆம் ஆண்டு மோடி அரசு பதவி ஏற்றது முதல் உலக வர்த்தக அமைப்பு மோடி அரசை பாலியில் ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத்தை அமல்படுத்த துவங்குமாறு கேட்டுகொண்டது.
2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் தேதிக்குள் அமல்படுத்தவில்லை என்றால் ஒப்பந்தம்  ஆகிவிடும் என்று உலக வர்த்தக அமைப்பும் அனைத்து வளர்ந்த நாடுகளும் அச்சம் தெரிவித்தன. ஏனென்றால் இந்த ஒப்பந்தம்  இந்திய விவசாயத்தை பன்னாட்டு நிறுவனங்கள் கைப்பற்றவே கொண்டுவரப்பட்டது இந்நிலையில் இந்தியா ஏற்றுக்கொள்ள மறுத்தால் ஒப்பந்தமே வீண்தானே. ஆகவே அவர்களும் கவலை கொண்டனர். பலவழியில் அறிக்கை விட்டு இந்தியாவை அசைக்க முயற்சி செய்தார்கள்.
ஆனால் மோடியோ இந்த விசயத்தில் தனது பெயர் நிலைக்கவேண்டி அரசியல் நாடகத்தை துவக்கினார்.

எங்கள் தேச விவசாயிகள் பாதிக்கும் ஒப்பந்தத்தை அமல்படுத்த இயலாது என்று மோடி அறிக்கை விட்டார். இதன் மூலம் உலக நாடுகளின் கவனத்தை தன்மீது திருப்பினார். அதுமட்டுமல்ல இந்திய மக்களையும் ஆச்சரியம் கொள்ள செய்து தனது செல்வாக்கு உயர வலிகண்டார்.

உலக அளவில் மோடி புகழ் பெறவும் தன்னை உலகத் தலைவராக உலக நாடுகள் மரியாதை செய்ய வைத்தால் இந்திய அரசியலில் தனது செல்வாக்கு உயரும் என்று கணக்கு போட்டார் கணக்கு பலித்தது
2014 ஆம் ஆண்டு சூழ மாதம் 30 ஆம் தேதிவரை இந்தியா ஒப்பந்தத்தை அமல்படுத்தவில்லை அன்று அமெரிக்காவில் இருந்து தூதுவராக அந்நாட்டு அமைச்சர் 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவசர பயணமாக இந்தியா வருகின்றார்
நம்மைப் போன்ற விவரம் அறிந்தவர்கள் ஒப்பந்தம் அமல் படுத்திவிடக்  கூடாது என்று மோடி பிரதமர் ஆனது முதல் கடிதம் மூலமும் மின்னஞ்சல் மூலமும் தொடர்ந்து கோரிக்கை வைத்தவண்ணம் இருக்க அடுத்து என்ன நடக்குமோ என்ற பதைபதைப்புடன் காத்திருந்தோம்.
2014 ஜூலை மாதம் நள்ளிரவு 12 கடந்ததும் நமது மனங்களில் மகிழ்ச்சி காரணம் ஒப்பந்தத்தை அமல்படுத்தும் அறிவிப்பு மோடி அரசு வெளியிடவே இல்லை . ஆனால்

உலக அரங்கில் இந்தியாவின் மீது குற்றச்சாட்டுகள் பலமாக இறுகியது . ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதற்கு இந்தியாவே காரணம் அதற்க்கான விலையை இந்தியா கொடுக்க வேண்டும் என்று அறிக்கைப் போர் செய்தன.
இருப்பினும் அந்த ஒப்பந்தம் 2014 ஆம் ஆண்டு மீண்டும் கையெழுத்தானால் செல்லத்தக்கதாக மாறிவிடும்.

பலியாகும் ஆட்டுக்கு அமெரிக்காவின் மோளம்

அமேரிக்கா மட்டும் மவுனமாக மோடியின் விருப்பத்தை நிறைவு செய்யும் செயலில் இறங்கியது.
இந்துக்களின் கோவில்களில் ஆடு பலியிடுவார்கள். அதுபோல இந்த இந்துத்துவா மோடியை பலியாடாக மற்ற அமேரிக்கா முடிவு செய்தது.
அதாவது கோவில்களில் ஆடுகளை பலியிடும் முன்னராக அந்த ஆட்டைக் குளுப்பாட்டி மாலையிட்டு தாரை  ஊர்வலமாக அழைத்து வருவார்கள். அதுபோல மோடியை மரியாதை செய்ய உலகம் முழுவதும் உள்ள நாடுகளை அழைக்க செய்து முதலில் அமெரிக்காவில் மிகப்பெரிய வரவேற்ப்பு அளிக்கப்பட்டு மிகப்பெரிய மக்கள் கூட்டம் முன்பாக அவரை பேச வைத்து மகிழ்வித்தது. அதுபோல உலக நாடுகளில் அடுத்து அடுத்து சென்ற இடமெல்லாம் அவருக்கு மிகுந்த மரியாதையும் முக்கியத்துவமும் கொடுத்தது.
2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்று முதல் மூன்றாம் தேதி வரை பாளி தீவில் நடைபெறும் உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் இந்தியாவின் கையெழுத்தை ஒப்பந்தத்தில் எவ்வித திருத்தமும் இல்லாமல் பெறவேண்டும் என்ற திட்டத்தோடு அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் மோடிக்கு உலக அளாவிய கவுருவமும் மரியாதையும் கொடுத்தது.
செத்துப்பொன ஒப்பந்தம் மீண்டும் உயிர் பெற்றது

பன்னாட்டு நிறுவனங்களின் கோரிக்கை வென்றது தீர்மானத்தை ஏற்று இந்தியா ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டு செத்துப்போன ஒப்பந்தத்திற்கு உயிர் கொடுத்து இந்திய விவசாயிகளுக்கு மாபெரும் துரோகத்தை செய்து விட்டது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்பாக நமது இந்திய அமைச்சர் அந்த மாநாட்டில் ஒரு கோரிக்கை வாசித்தார்.

"விவசாய விளைபொருட்களை 10 சதம் மட்டுமே அரசு கொள்முதல் செய்யலாம் என்ற கட்டுப்பாட்டில் கொஞ்சம்   தளர்த்த வேண்டும்"  என்று கெஞ்சினார்.

எமது விவசாயிகளைப் பாதிக்கும் எந்த ஒப்பந்த்தத்தையும் ஏற்க மாட்டேன் என்று ஜூலை 31 ஆம் தேதி வீர வசனம் பேசிய மோடி மஸ்தான் தன்னுடையை வீரத்தை 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடிபணிய செய்தார். தான் மேடையில் மட்டுமே சவால் விடுவேன் என்று மீண்டும் நிரூபித்தார்.
அமைச்சரின் கெஞ்சலுக்கு செவிமடுக்க தயாரில்லாத பன்னாட்டு உலக வர்த்தக அமைப்பு முதலில் ஒப்பந்தத்தை ஏற்று உடனடியாக அமல்படுத்துங்கள் 2015 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் இதுகுறித்து பேசி முடிவுக்கு வருவோம் என்றது.
அமல்படுத்திய பிறகு எதைப் பேசி முடிவு செய்வது என்று கேள்வி கேட்க திராணியற்ற மோடியின் அமைச்சர் அமைதியாக கையொப்பம் இட்டு இறந்துகிடந்த ஒப்பந்தத்திற்கு உயிர்கொடுத்தார்.

அவசர சட்டத்தின் அவசியம்

இதற்க்கு முந்தைய காங்கிரஸ் அரசாவது 4 ஆண்டு கால அவகாசத்துடன் விவசாய ஒப்பந்த திருத்தத்தில் கையொப்பம் இட்டது. ஆனால் மோடியின் அரசோ விவசாய ஒப்பந்தம் உள்பட அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களையும் உடனடியாக அமல்படுத்துவதாக  இந்தியாவை வெளிநாட்டு பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்களுக்கு இந்திய தொழில் நிறுவனங்கள் கனிமங்கள், மனித வளம் உள்ளிட்ட அனைத்து வளங்களையும் அடிமையாக்கிவிட்டது.
இந்த விவசாய ஒப்பந்தம் நடைமுறைப் படுத்த சில சட்டங்களை இயற்றவேண்டிய அவசரம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது என்பது கவனிக்க வேண்டிய அம்சம் என்பதை மறுக்க முடியாது.
பன்னாட்டு நிறுவனங்கள் நிலம் கையகப்படுத்த, கார்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை, மானியம் ரத்து, இறக்குமதி வரிவிலக்கு, ஏற்றுமதி கட்டுப்பாடு, அரசின் உணவுக் கொள்முதல் மாற்றம், இலவசங்களை ஒழிக்க என்று நம்மக்களுக்கு? அத்தியாவசியமான? பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை அடிக்க வாசலை அகலத் திறக்க என்று பல சட்டங்கள் அவசியமாகிறது

அதன் விளைவாகவே பாராளுமன்றத்தில் கொண்டுவராமல் சில அவசர சட்டங்களை நிறைவேற்றி உலக வர்த்தக ஒப்பந்தத்தை அமல்படுத்தும் நடவடிக்கையில் மோடி அரசு செயல்பட்டு வருகின்றது
அதன் ஒரு பகுதியே இந்த பொது துறையான இந்திய உணவு கழகத்திற்கு மூடுவிழா காணும் அறிக்கை.
எந்த ஒரு போராட்டத்தாலோ இல்லை எந்த ஆட்சியாலும் இனி இந்த ஒப்பந்தத்தை மீறவோ மாற்றவோ இயலாது ஒப்பந்தம் கடைபிடிக்க தவறினால் ஒருலட்சம் டாலருக்கும் மேலான தொகையை இந்தியா இழப்பீடாக அளிக்க வேண்டும் என்ற ஒப்பந்தமும் அதற்குள் இருக்கு.
விவசாய ஒப்பந்தத்தின் சில பிரிவுகளை மட்டும் இங்கே
(முழுசும் தெரிஞ்சா செத்துருவீங்க )
1)  விவசாய விலை பொருட்களை கார்பரேட் நிறுவங்கள் மட்டுமே ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் செய்யலாம்.( இனி எந்த ஒரு தனி நபரும் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் நடத்திடக் கூடாது)
2) உள்நாட்டு விவசாய விளைபோருகளின் மொத்த உற்பத்தியில் 10 சதம் மட்டுமே அரசு கொள்முதல் செய்யலாம்  வைக்கலாம்.(வெளிசந்தையில் மட்டுமே விவசாய விளைபொருட்கள் விற்பனை செய்யப்படும். உணவு பாதுகாப்பு சட்டம் செல்லாமல் போகும் . பொது விநியோகம் முற்றிலும் பாதிக்கப்படும் )
3) விவசாயிகளுக்கு பயிற்காப்பீடு , அரசின் மாநியங்கலான உரம் பூச்சிமருந்து மின்சாரம் வறட்சி மற்றும் வெள்ளம் நிவாரணம் உள்ளிட்ட அனைத்தும் ரத்து.
4) வளர்ந்த நாடுகளில் விவசாய விலை பொருட்கள் விற்கும் விலையை விட வளரும் நாடுகளில் விவசாய விளைபொருட்கள் விலை மலிவாக இருக்க கூடாது (அதாவது அமெரிக்காவில் தக்காளி 10 ரூபானா இந்திய தக்காளி 10 ரூபாய் அல்லது அதற்க்கு மேல விலை வைத்து விற்கலாம் குறைவாக விர்க்கக் கூடாது. இது விவசாயிகளுக்கு லாபம் போல தோன்றலாம் அனால் அவர்களுது பொருளை விட அதிகமாக கொடுத்து நமது பொருளை யாரும் வாங்கமாட்டார்கள் ஆகா அவர்கள் பொருட்கள் முழுதும் விற்ற பிறகு நமது பொருட்களை விற்பனை ஆகவேண்டும் இல்லையேல் நமது பொருட்களை விலைபோகாமல் நஷ்டமாகலாம். அப்ப அமெரிக்க நிறுவனம் இங்க விவசாயம் செய்தால் அவர்களுக்கு இந்த கட்டுப்பாடு இல்லை.
5) விலை நிலங்களை பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்கள் வாங்கத் தடை இருக்கக் கூடாது (இதுக்குதாங்க இப்போ ஒரு சட்ட திருத்தம் கொண்டுவந்தாங்க)

இதுபோல இன்னும் பல சரத்துக்கள் இந்திய விவசாயிகளை விவசாயத்தை விட்டே வெளியேற்றும் வகையில் அமைந்துள்ளன . இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் அமுலுக்கு வந்து முழுமையாக கார்பரேட் நிறுவனங்கள் விவசாயத்தில் ஈடுபடும் அதன்பிறகு இந்திய கிராமங்கள் அனைத்தும் அழிந்துவிடும் அம்மக்கள் அனைவரும் நகரத்தில் குடியேறி கிடைக்கும் கூலிக்கு வேலை செய்யும் அவலம் வரும்.
இந்நிலையில் இருந்து கிராமங்களைக் காக்கவும் கிராம மக்கள் விவசாயத்தில் இருந்து வெளியேறாமல் இந்திய விவசாயத்தைக் காக்கவும் ஒரே வழிதான் உள்ளது.

"விவசாயிகள் ஒன்றுசேர்ந்து கார்பரேட் நிறுவனங்களை துவக்கி அதன் மூலம் விவசாயம் செய்வது"
விவசாய மைப்புகளும் சமூக பொதுநல அமைப்புகளும்   நிறுவனங்களும் இனியாவது பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலிகளாக இருந்து நாட்டைக் கெடுக்காமல் நமது மக்களுக்கு உண்மையை சொல்லி விவசாயம் மலர விவசாயிகள் வாழ உருப்படியான விழிப்புணர்வு செய்யட்டும் செய்வார்களா?

இக்கட்டுரையை முழுமையாக படித்த நன்மைக்களே உங்கள் பகுதி மக்களுக்கும் இந்தியக் குடிமக்களுக்கு உரிய முறையில் விழிப்புணர்வு பெற எடுத்துச் சொல்லுங்கள் நமது சந்ததிகளை காக்க நமது கடமையாக இதை செய்யுங்கள் இல்லையேல்

இப்பொழுது நாம் எவ்வளவு வசதியாக செல்வச் செழிப்புடன் இருந்தாலும் வரியோர்களின் வறுமை காரணமாக நமது சந்ததிகளின் சொத்துக்கள் யாவும் கொள்ளை போகும் நமது சந்ததிகள் உணவுக்காக பிச்சை அல்லது கத்தி எடுக்க வேண்டி இருக்கும். அதற்கு முன்னோட்டம் தான் இப்பொழுது ஆங்காங்கே நடைபெறும் மிரட்டி கையெழுத்து வாங்கும் ரவுடியிசம் மூலமாக நில அபகரிப்புகள் என்பதை மறவாதீர்கள்

நீங்கள் பல  கோடி உங்கள் சந்ததிகள் நலனுக்காக சேர்த்து வைத்திருந்தாலும் அரசியல் கொள்ளை அல்லது வறியோர் கொள்ளை மூலம் உங்களது சொத்துக்கள் பறிபோகும் என்பதை உணர்வீராக. ஆகவே உங்கள் சந்ததிகள் நலமுடன் வாழ ஒற்றுமையையும் நேர்மையையும்  இந்திய அரசியல் சட்டத்தின் படியும் வாழக் கற்றுக் கொடுங்கள்.
அரசின், கார்பரேட் நிறுவனங்களின் விளம்பர வருவாய் வேண்டி  வாய் மூடி மன சாட்சிக்கு விரோதமாக தெரிந்தே செயல்படும் ஊடகங்களே உங்களுக்கு உங்களது தொழிலில் இருந்து விரட்டியடிக்கும் பன்னாட்டு கார்பரேட் ஒப்பந்தம் முடிந்துவிட்டது.

தீர்வு

உங்களது ஊடகத்தில் இலாபம் என்பதை விடுத்து மக்கள் நலன் என்று இனியாவது செயல்படுங்கள் அம்மகளோடு உங்களது ஊடக தொழிலும் காக்கப்படும்
இந்தியா உலக அரங்கில் இன்று அடிமையானதர்க்கு முக்கிய காரணம் இலங்கைப் பிரச்சனையே என்பதை இங்குள்ள ஈழ இன உணர்வாளர்கள் உணர்வார்களா ? எரியற கொல்லிய எடுத்து உட்ட கதையாகிப்போனது நமது தேசம் இன்று.



இந்தியன் குரல்

கருத்துகள் இல்லை: