1617 ஆம் ஆண்டில் முகலாய பேரரசர் ஜெஹாங்கிரின் அனுமதிப் பெற்ற பிறகு கிழக்கிந்தியக் கம்பெனி வணிகம் செய்ய ஆரம்பித்தது. 1717 ல் அவர்களது ஆதிக்கத்தினால் சட்டப்படி இருந்த முகலாய பேரரசர் பருக் சியார் கிழக்கிந்திய கம்பெனிக்கு வரியில்லாமல் வங்காளத்தில் வாணிகம் செய்ய அனுமதி வழங்கினார். அதாவது இப்போது நம் நாட்டில் பட்ஜெட் போடும் முன் பெரிய பணக்கார நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்து கருத்து கேட்பதும்
(அவங்கதான் ஏற்க்கனவே இவனுகளை விலைக்கு வாங்கிவிட்டனரே எஜமான விசுவாசம் காட்ட வேண்டாமா ) அதன் பின் மக்கள் நலனுக்கான பட்ஜெட்டை பாராளுமன்ற சட்டமன்றத்தில் வைத்து சட்டமாக்குகிரார்களே அதே மாதிரி அந்த காலத்தில் தவறான சட்டங்களைப் இயற்றவைக்க கிழக்கிந்திய கம்பெனி(வியாபார நிறுவனத்தால் அவர்களுக்கு சாதகமாக) ஆட்களால் முடிந்திருக்கின்றது (அது இன்று வரை தொடர்கின்றது). இதைப் பற்றி விரிவாக பிறகு அலசுவோம்.
(அவங்கதான் ஏற்க்கனவே இவனுகளை விலைக்கு வாங்கிவிட்டனரே எஜமான விசுவாசம் காட்ட வேண்டாமா ) அதன் பின் மக்கள் நலனுக்கான பட்ஜெட்டை பாராளுமன்ற சட்டமன்றத்தில் வைத்து சட்டமாக்குகிரார்களே அதே மாதிரி அந்த காலத்தில் தவறான சட்டங்களைப் இயற்றவைக்க கிழக்கிந்திய கம்பெனி(வியாபார நிறுவனத்தால் அவர்களுக்கு சாதகமாக) ஆட்களால் முடிந்திருக்கின்றது (அது இன்று வரை தொடர்கின்றது). இதைப் பற்றி விரிவாக பிறகு அலசுவோம்.
1717 ஆம் ஆண்டு வரியில்லாத வாணிகம் செய்ய அனுமதி கொடுத்தது வங்காள சிராஜ்உட்துலாட் நவாப் அவர்களுக்கு பிடிக்கவில்லை.கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிர்ப்பு வலுக்கின்றது அது 1757 ஆம் ஆண்டு பெரும் போருக்கு வழிவகை செய்கிறது. அதில் கிழக்கிந்தியக் கம்பனி படை வெற்றிபெற்று முதன் முதலாக மண்ணாலும் சக்திபெறுகிறது தனது முதல் ஆட்சியை அரசியல் ரீதில் அமைக்கின்றது அதன் பிறகு பிரித்தாளும் சூழ்ச்சியாலும் நயவஞ்சகம் மூலம் பல அரசர்களை அடிமையாக்கி வரி விதிக்கின்றார்கள். ஆனால் மக்கள் அதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆங்கிலேயர்கள் பெரும்பான்மை பகுதிகளை தங்கள் ஆட்சின் கீழ் கொண்டு வந்து விட்டார்கள் ஆயினும் மக்கள் கிளர்ச்சி ரானுவகிளர்ச்சி ஏற்ப்படுகிறது. இது மிகப்பெரும் சவாலாக ஆட்சியாளர்களுக்கு இருக்கின்றது. அவர்கள் நியாமான முறையில் நடந்து கொண்டார்கள் அதனால் அவர்களுக்கு கடினமாக இருந்தது இன்றைய இலங்கை ஆட்சியாளர்கள் போன்று அவர்கள் நினைத்து இருந்தால் இங்கிலாந்து மக்கள் மட்டுமே இப்போது நம் பூமியில் வாழ்ந்துகொண்டு இருப்பார்கள் நம் முன்னோர்கள் மண்ணோடு மண்ணாகி இருப்பார்கள் இந்த அளவில் அவர்களிடம் ஒரு மனிதாபிமானம் நேர்மை இருந்துள்ளது. ஆகவே இங்கிலாந்து ஆட்சியாளர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.
இந்தி யாவில் இப்போது பிரதிநிதித் துவ
அமைப்பு இல்லை. எனவே அவர்களுக்கு ஒரு நல்ல அரசியலமைப்பை உருவாக்கித் தர
வேண்டும். இந்தியாவில் ஒரே விதமான குற்றத்திற்கு
இரண்டு விதமான தண்டனைச் சட்டம் அமலில் உள்ளது. பிராமணர்களுக்கு சாதாரண
தண்டனையும், சூத்திரர் களுக்கு மிகக் கடுமையான தண்டனையும் வழங்கப் படுகின்றன. இந்தியர்கள் ஜாதி அடிப்படையில் இன்னல்கள் பல அனுபவித்து வருகின்றனர். இத்தகைய தீங்கினைத் தடுத்து நிறுத்த நாம் தலைமை அரசுக்கு சட்டம்
இயற்றும் அதிகாரத்தினை அளித்துள்ளோம். இனி சட்டம் இயற்றும் அதிகாரம் தலைமை
அரசுக்கு மட்டுமே கொடுக்கப்படும். சென்னை பம்பாய் ஆகிய மாகாணங்களுக்கு
இருந்த அதிகாரம் பறிக்கப்படும். மேலும் நாம் அனுப்பும் தூதுவர் அங்கு
சென்று சட்ட திட்டங்களை இயற்றுவார்.
அதன்படி மெக்காலே தலைமையில் தூதுக்குழு 1834ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் நாள் சென்னை வந்து இறங்கியது.
மெக்காலே குழு இந்திய சுற்றுப்பயணம் செய்கின்றது. மக்களை தன வயப்படுத்தாமல் ஆட்சி புரிவதால் ஆங்காங்கே கலவரம் ஏற்ப்படுகிறது அதற்கு சரியான தீர்வு காண வேண்டுமே. பல பகுதிகளுக்கு சென்றபோது பாரத மக்களின் செல்வச் செழிப்பைக் கண்டது( பகுதி 1-ல் விவரிக்கப்பட்டு உள்ளது) செயல்பாடுகளை பழக்க வழக்கங்களை பார்வையிட்டு வந்தனர். அப்படி வரும்பொழுது நம் கல்விமுறையைக் கண்டனர்.
பண்டைய குருகுலக் கல்வி முறையில் தொழில், வீரம், பண்புகள் மிக அருமையாக பயிற்றுவிக்கப் பட்டு வந்தது. அதன் மூலம் இந்தியர்கள் ஒழுக்கத்திலும் வீரத்திலும் அறிவிலும் சிறந்து விளங்கினார்கள். வானயியல் கணிதம் போன்றவற்றில் சிறந்து விளங்கினர். இவர்களுக்கு ஆங்கிலம் சார்ந்த கல்வி கொடுத்தால் மட்டுமே நிர்வாகத்தில் ஆங்கிலேயர்களுக்கு உதவியாக இருக்கும். ஆங்கிலேயக் கல்வி முறையே சிறந்தது என்று இவர்கள் எண்ண வேண்டும் என்று சிந்திக்கலானார். இப்பொழுது கல்வி என்றால் என்ன கற்றல் என்பது என்ன என்று சரியான விளக்கம் கிடைக்கப்பெற்றால் மட்டுமே நாம் கல்வி முறைகளை மேலும் ஆராய முடியும்.
நாம் நமக்கு கிடைத்த அனுபவங்களை அடுத்த தலைமுறைக்கு சரியாக சொல்லித் தருவதே கல்வி. அனுபவம் என்பதை அறிவு என்றும் சொல்லிக்கொள்ளலாம். அதே போன்று மற்றொரு சமுதாயத்தின் அனுபவங்களை நமக்கு ஏற்றாற்போல் சொல்லித்தருவது போன்று அவர்களது தேவைக்கு போதிப்பதும் (சில நிறுவனங்களில் வேலைக்கு சேர வேண்டுமெனில் அவர்கள் கேட்கும் சுய சித்திக்கும் திறனில்லாத அவர்கள் தேவைக்கு மட்டுமே சிந்திக்கும் பயிற்சி பெற்று இருக்க வேண்டும் என்கிறார்களே அதுபோன்று) அரசுக்கு ஆதரவான எண்ணங்களைக் கற்றுத் தருவதும் கல்வி தான். நமக்கு ஏற்றாற்போல் மக்களை உருவாக்க வேண்டுமென்றால் கல்வி முறையில் மாற்றம் தேவை என்று உணர்ந்தார். மேலும் பல பகுதிகளுக்கு சென்று பெண்களின் வாழ்க்கை முறையை பார்த்தார் ஆகா வழி கிடைத்து விட்டது ஆகா ஆங்கிலேயர்கள் எண்ணம் நிறைவேற இது தான் சரியான வழி என்று செயலில் இறங்கினார் திட்டமிட்டார் அது என்ன .........................இந்தியா அடிமையானது எப்படி -பகுதி 3இல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக