ஆதரவாளர்கள்

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

இந்தியன் குரல் அளிக்கும் சிறப்பு பயிற்சிமுகாமில் நான் கலந்து கொள்ள காரணங்கள்.

இந்தியன் குரல் அளிக்கும் சிறப்பு பயிற்சிமுகாமில் நான் கலந்து கொள்ள காரணங்கள்.

நன்மக்களே!..

மத்திய மாநில அரசுகளால் எனக்கும், எனது குடும்பத்திற்கும், எனது உருக்கும், என்பது நாட்டுக்கும் என்ன என்ன திட்டங்கள் செயப்படுத்தப்படுகின்றன? என்ன என்ன சேவைகள் அளிக்கப்படுகின்றன? அதனால் எனக்கும் எனத்துக்குடும்பத்திற்கும் எனது உருக்கும் நாட்டுக்கும் என்ன பயன்? என்பதை அறிந்துகொள்ளலாம்.


மேற்படியான திட்டங்களையும் பயன்களையும் பெற நான் யாருக்கு, எவ்வாறு, எப்படி, விண்ணப்பம் செய்ய வேண்டும்? என்று அறிந்துகொள்ளலாம். உதாரணமாக குடும்ப அட்டை எங்கு எவ்வாறு எப்படி விண்ணப்பம் செய்து பெறுவது? அதேபோன்று மின் இணைப்பு, பிறப்பு சான்று உள்ளிட்ட அனைத்து சான்றுகள், முதியோர் ஓய்வூதியம், திருவம உதவி பயன்கள், கலப்பு திருமண உதவி திட்டம், இரண்டு பெகுழந்தைகள் திட்டம் உள்பட அரசின் திட்டங்கள் அனைத்தையும் இலஞ்சமின்றி அலைந்து திரியாமல் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் முறைகளை அறியலாம்.

எனது கோரிக்கைகள் விண்ணப்பம் செய்தும் இலஞ்சம் கேட்டு தர மறுத்தால், உதாரணமாக எனது நிலம் வேறு ஒருவர் பெயருக்கு தவறாக பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, எனது நிலத்திற்கு பட்டா வேண்டும், மின் இணைப்பு வேண்டும், குடும்ப அட்டை உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் விண்ணப்பம் செய்து குறித்த நாட்களுக்குள் தர மறுத்தால் அலைந்து திரியாமல் இருந்த இடத்தில் இருந்தபடியே உரிமையை பெறவும் காலதாமதம் செய்த அலுவலர்களுக்கு தண்டனை அளிக்கவும் தகவல் சட்டம் இருக்கு எப்படி யாருக்கு எவ்வாறு எழுத வேண்டும்? என்று கற்றுக்கொள்ளலாம்.

இதற்க்கெல்லாம் பயிற்சி வேண்டுமா? ஆம் ஏனென்றால்..
மனு எழுதத் தெரிந்தால் மட்டும் போதாது. ஒவ்வொருஅலுவலகத்திலும் உங்களுக்கு உள்ள பிரச்சனைகளின் தன்மை மற்றும்அந்த பிரச்சனைகள் தீர சட்டத்தை பயன்படுத்தி மனுக்கள் தயாரிக்க குறைந்தபட்ச அனுபவமும் திறமையும் வேண்டும். இல்லையேல் உங்களுக்கு தீர்வுகிடைக்காது.
எதைக் கேட்டால் எது வரும், என்ன தகவல் கேட்டால் நமது பிரச்சனைதீரும், என்பதை சரியாக அறிந்து மனு தயாரிக்க வேண்டும்.

கோரிக்கை அல்லது புகார் மனுக்கள் அனுப்பாமல் தகவல் சட்டத்தை எடுத்த எடுப்பிலேயே பயன்படுத்த வேண்டாம்.

உங்கள் மனுவை எழுதி முடித்தபிறகு திரும்பவும் படித்து பாருங்கள்அம்மனுவில், உங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வண்ணம்கேட்கப்பட்டுள்ளது. உங்கள் பிரச்சனைக்கு உரிய ஆவணம்இணைக்கபட்டு உள்ளது.கேள்வியாக கேட்கவில்லை. புகார்சொல்லப்படவில்லை. யூகமான கேள்வி கேட்கவில்லை. ஆலோசனைசொல்லப்படவில்லை. கோரிக்கையாக கேட்கவில்லை என்பதைஉறுதிசெய்யுங்கள்.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005
தகவல் சட்டம் மேம்போக்கான சட்டம் அல்ல. மற்ற சட்டங்களைப்போல தப்பிக்க வழியும் இல்லாத தெளிவாக வடிவமைக்கபட்ட சட்டம்.சட்டங்களுக்கெல்லாம் மேலான சிறப்பு வாய்ந்த சட்டம். வேறு எந்த அலுவலக சட்டத்தையும் நடைமுறையையும் குறிப்பிட்டுதகவல் மறுக்க இயலாத அற்புதமான சட்டம்.

தகவல் சட்டம் பயன்படுத்தும் நண்பர்கள் அறியாமையால் செய்யும் தவறால் தகவல் மறுப்பு என்பது வழக்கமாகி வருகிறது. தனக்குதெரிந்தது மட்டுமே சரி என்று ஒரே மாதிரி பாணியில் தொடர்ந்து எழுதுவது. உடனடியாக பிரச்சனை தீரவேண்டும் என்ற அவசரம்காரணமாக அதிக தகவல் கோருவது, எப்பொழுதோ படித்த கேட்ட அனுபவத்தை கொண்டு அதே பாணியில் மனுக்களை எழுதுவது. இதனால் தகவல் கிடைப்பது தள்ளிப்போகும்அல்லது மறுக்கப்படுகிறது.

உதாரணமாக
நமது வீட்டில் கொசு ஒழிப்பான் பயன்படுத்துகின்றோம் ஆரம்பகாலத்தில் கொசுக்கள் சாதாரண மேட்டுக்கே இறந்தன அல்லதுமயங்கின. தொடர்ந்து அதே மேட் பயன்படுத்திய போது பலனில்லைஆகவே கையில் லிக்வுட் அதிலும் எக்ஸ்ட்ரா பவர் என்றுமாற்றிக் கொண்டே இருக்கின்றோம் ஏன்?. கொசுக்கள் நாம் பயன்படுத்தும் விசத்தை ஏற்று தன்னை மாற்றிக் கொண்டு உயிர்வாழ பழகிக் கொண்டன.

சாதாரண கொசுக்களுக்கே இப்படி தன்னை மாற்றிக் கொள்ள தப்பித்துக் கொள்ள வழி கண்டறியும் ஆற்றல் உள்ளது எனும்பொழுது....
படித்து பட்டம் வாங்கி, டிஎன்பிசி, யுபிஎஸ்சி, போன்றபோட்டித்தேர்வுகளில் இலட்சக் கணக்கானவர்களை வென்று, பதவிபெற்று, தனக்கு மேலே, கீழே, பக்கத்தில் உள்ள அதிகாரிகளின் தன்மைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு திறமையாக இலஞ்சம்,ஊழல் செய்து வரும் அனுபவமிக்க அரசு அலுவலர்கள், தகவல்சட்டத்தின் மூலம் வரும் மனுக்களுக்கு எப்படி திறமையாக பதில்அளித்து அல்லது அளிக்காமல் இருப்பது என்ற திறனை வளர்த்துக் கொள்ள இயலாதவர்களா?
சட்டம் வந்த புதிதில் பயத்தால் தகவல் அளித்தவர்கள் இன்று அதன்ஓட்டைகளை எப்படி உருவாக்கி சட்டப்படி தப்பித்துக் கொள்வது என்று படிக்காமல் பயிற்ச்சி பெறாமல் இருப்பார்களா?

அப்படி பயிற்ச்சி பெற்றாலும் அவர்கள் தகவல் அளித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்கிட நமது பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றிட நமது ஆரம்பகால மனு எழுதிப் பழகிய நடைமுறை பயன்தருமா?

ஆகவே தற்போதைய நடைமுறைக்கு ஏற்றவாறு மனுக்களை எழுதிதகவல் பெற, நம்மை திறமையானவர்களாக வளர்த்துக் கொள்ளவும் நமக்கு மீண்டும் மீண்டும் பயிற்ச்சியும் தகவல் சட்டத்தை திரும்பத்திரும்ப படிப்பதும் அவசியம்.

நடைமுறைக்கு ஏற்றவாறு மனுக்களை எழுதிதகவல் பெற அறியாமல் இருந்தால்......... நமக்கு,

1. தகவல் கிடைக்கும் பிரச்சனை தீராது.
2. தகவல் கிடைக்காமலே போகும்.
3. தகவல் சட்டம் மீதே வெறுப்பு வரும்.
4. தகவல் சட்டத்தால் ஒன்றும் பயனில்லை என்ற எண்ணம் வளரும்.
5. தகவல் சட்டத்தால் முடியாது என்று சொல்லி வேறு வேறுசட்டத்தால் பணம் செலவு செய்து சாதிக்கலாம் என்ற வழக்கறிஞர்ளின்வருவாயைப் பெருக்கவும் முயல்வீர்கள்.
6. நீதிமன்றம் மூலம் பிரச்சனை திர்க முயன்று கால விரையம்செய்வீர்கள்.
7. வேறு வழியே இல்லை இலஞ்சம் கொடுத்தே ஆக வேண்டும்,இலஞ்சம் இல்லாமல் ஒரு பிரச்சனையையும் தீர்க்க இயலாது என்றதிட்டவட்டமான முடிவுக்கு வந்து விடுவீர்கள்.
8. இலஞ்சம் ஊழல் கட்டுப்படுத்த, அரசு அலுவலர்களின்போருப்புடமையை கட்டிக்காக்க, அரசு அலுவலகங்களின்வெளிப்படைத் தன்மை, நேர்மையான நிர்வாக நடைமுறை வேண்டும்என்பதற்காக கொண்டு வரபட்ட
உன்னதமான மிக உன்னதமான, வராத வந்த மாமணியான தகவல்உரிமைச் சட்டம் அதன் நோக்கத்தை இழந்து, தன் பொலிவிழந்துபயனற்றுப் போகும்.

ஆகவே எனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வத்தை ஒழித்து, நாம்அனைவரும் திறமையை வளர்த்துக்கொள்ள பயிற்ச்சி பெறுவோம்.
நிலம் வீடு மனை தவறான பட்டா மாற்றம், தவறான பத்திரப் பதிவுரத்து செய்ய, நிலை அபகரிப்பு, மத்திய மாநில அரசின் திட்டங்கள்பயன்கள், இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் தீர்வு செய்யப்படாதகோரிக்கைகள் புகார்கள் போன்ற அனைத்து பிரச்சனைகள்தீர்வுக்கும்.....

தகவல் உரிமைச சட்டம் மூலம், இந்திய சட்டத்தின் படி நியாயமானஉங்கள் உரிமைகளையும் மத்திய மாநில அரசின் திட்டங்களையும்பயன்களையும் பெறவும் பிரச்சனைகளுக்கு தீர்வுக்கு ஆலோசனைபெறவும் அனைத்து பிரசனைகளுக்கும் தீர்வு பெறவும், "இந்தியன் குரல்" அமைப்பு பயிற்சி அளிக்கிறது

உறுப்பினர் கட்டணம் இல்லை, நன்கொடை பெறுவதில்லை,உதவிக்கும் பயிற்சிக்கும் கட்டணம் பெறுவதில்லை - இது இந்தியன்குரல் அமைப்பின் கொள்கை
பயிற்சிக்கு கட்டணம் இல்லை

தகவல் சட்டத்தைப் பரப்புரை செய்வதும் தகவல் சட்டம் மூலம் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு பெற இலவச உதவி மையம் நடத்தி வழிகாட்டுவதும் நோக்கம்.

உங்களால் இலவச பயிற்சியில் கலந்துகொள்ள இயலவில்லையா? கவலை வேண்டாம் 60 கும் மேற்பட்ட மாதிரி விண்ணப்பங்களுடன் இந்தியன் குரல் அமைப்பின் வெளியீடான "இதுதான் தகவல் பெறும் உரிமைச் சட்டம்" புத்தகம் வாங்கி இருந்த இடத்திலிருந்தே பயிற்சி பெறலாம்.

ஒரு இந்து என்றால் கீதை, ஒரு முஸ்லீம் என்றால் குரான், கிறிஸ்து என்றால் பைபிள் என்று ஒவ்வொரு மதத்தின் வழிகாட்டி கோட்பாடு ஒவ்வொரு மதத்தை சார்ந்த மனிதர்களுக்கும் இருக்கும் ஆனால் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் படித்து பயன்பெற வேண்டிய புத்தகம் "இதுதான் தகவல் பெறும் உரிமை சட்டம்" புத்தகம் என்றால் மிகையல்ல.
இதுதான் தகவல் பெறும் உரிமை சட்டம் புத்தகம் வாங்கிவிட்டிர்களா? அந்த புத்தகத்தில் அனைத்தும் உள்ளது நன்கு படியுங்கள் நன்றாக உங்களது சந்தேகங்கள் தீரும் வரை படியுங்கள். குறைந்தது நான்கு முறையாவது திரும்ப திரும்ப படியுங்கள் விண்ணப்பங்களின் மாதிரிகளை நன்றாக படியுங்கள் நீங்களும் பயிற்சி அளிக்கலாம் உதவி மையம் நடத்தலாம்.

- பாலசுப்ரமணியன்
சென்னை
9444305581
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகின்றது கட்டணம் இல்லை.
உங்கள் ஊரில் 100 பேர்களுக்கு குறையாமல் அழைத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய முடிந்தால் தொடர்புகொள்ளுங்கள் பயிற்சி அளிக்க வருகின்றோம்.

இந்தமாத பயிற்சி ; 26-2-17 சென்னையில் பகல் 2 மணிக்கு துவங்கும்
முகவரி இந்தியன் குரல் இலவச உதவி மையம்
கும்பட் காம்ப்ளக்ஸ்
முதல் மாடி, ரத்தன் பஜார் சென்னை 3 (பூக்கடை காவல் நிலையம் எதிரில் பிராடவே பேருந்து நிறுத்தம் அருகில்)

கருத்துகள் இல்லை: