ஆதரவாளர்கள்

வெள்ளி, 15 மார்ச், 2013

ஆடையில்லா மனிதர்கள் (இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும் )

  இந்தியன் குரல் உதவி மையத்தில் இன்று 

நண்பர்களே இன்றைய இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஆவடியிலிருந்து ஒரு பெண்மணி உதவிகேட்டு வந்திருந்தார் 

அந்தப் பெண்மணியின் கணவர் ஒரு ராணுவ வீரர் அவர்களுக்கு திருவாலங்காட்டிற்கு (அரக்கோணம் அருகில்) அருகில் இராணுவ வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் அரசு மனை கொடுக்கப்பட்டுள்ளது அந்த மனையை சில
ஆடையணியா (நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராது எல்லைகாக்கும் நம் வீரர் நிலத்தை விற்ற ..........ம் கெட்ட .......ய்களை வேறு எப்படி சொல்வது) மனிதர்கள் இவர்களுக்கே தெரியாமல் வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார்கள் இதற்கு அங்கிருந்த அரசியல்  வாதிகள் நிலத் தரகர்கள் குண்டர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடந்தை அவர்களது நிலம் மீட்கப்பட வேண்டும் என்ற நோக்கில் உதவி கேட்டு வந்திருந்தார்கள் .
நான் கேட்கிறேன் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான மனை என்று தெரிந்தே விற்ற வாங்கிய நபர்களை என்ன சொல்வது அதற்கு துணையாக இருந்த மனிதத் தன்மையே இல்லாத அரசு அலுவலர்களை என்ன சொல்வது           த்தூ தூ தூ .......

மற்றொரு பிரச்சனை 

சைதாப் பேட்டையில் இருந்து வயதான தம்பதிகள் அவர்கள்  2400  சதுர அடி மனையை 1985 ஆம் ஆண்டு கிரையம் பெற்றுள்ளார்கள் அதற்க்கு கிரையமாக 5400 ருபாய் கொடுத்துள்ளார்கள். 1988 ஆம் ஆண்டு அவர்களுக்கு பணத் தேவை ஏற்ப்பட பத்திரத்தைக் கொடுத்து பதிவு செய்யாமல் கடன் பெற்றுள்ளார்கள் . அந்த ஆண்டே அவர்களுக்கே தெரியாமல் இவர்களது கையெழுத்தைப் போலியாக போட்டு விற்றுவிட்டார்கள் அந்த கடன் கொடுத்தவர்கள்.
இவர்கள் பெற்ற கடனை அடைத்து பத்திரம் கேட்டால் கொடுக்கவே இல்லை சதகம் அடைந்து வில்லங்கம் போட்டு பார்த்தால் இவர்களது நிலம் விர்க்காப்பட்டுள்ளது. இவர்களோ வயதானவர்கள் வாரிசும் இல்லை கூலிவேலை செய்து பிழைக்கும் இவர்கள் நிலம் மீட்க்க உதவி கேட்டு வந்தார்கள்.

பணத்தின் மீது கொண்ட மோகத்தால் மனிதன் என்னவெல்லாம் செய்கிறான் என்று பாருங்களேன். வளரும் சமுதாய மக்களாவது.....................


பெரம்பூரில் ஒருவர் இருப்பிடச் சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார் லஞ்சம் கொடுக்காத காரணத்தால் வருவாய்ச் சான்று கொண்டு வந்து கொடுத்தால் இருப்பிடச் சான்று தருகிறேன் என்று அந்த அலுவலர் சொல்கிறாராம் அடப் பாவிகளா வருவாய் சான்றும் அந்த அலுவலர் கொடுத்தால் தான் உண்டு லஞ்சம் வேண்டும் என்பதற்காக எப்படி அபத்தம் பாருங்கள் இருப்பிடச் சான்று கேட்டால் அதற்கு வருவாய் சான்று பெற்றுத் தான் கொடுக்கவேண்டும் என்று யார் எப்போது சட்டம் போட்டார்கள் எந்த அதிகாரி அவருக்கு உத்தரவு போட்டார் அப்படிக் கேட்ட்கக் கூடாதே ஐயகோ ஆண்டவனுக்கே வெளிச்சம் மன்னிக்கணும் ஆண்டவனுக்கே லஞ்சம் கொடுக்கும் காலமிது..........

கடலூர் மாவட்ட நண்பரது பிள்ளைக்கு கல்விக் கடன்  விண்ணப்பம் கேட்டிருக்கின்றார் கொடுக்கவில்லை தகவல் பெரும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டதும் விண்ணப்பம் கிடைத்தது  விண்ணப்பத்தை திரும்ப பதிவுத் தபாலில் அனுப்பியுள்ளார் ஒப்புகை திரும்ப வரவில்லை சரி பரவாயில்லை கல்விக் கடன் உண்டா இல்லையா என்று எந்த பதிலும் இல்லை.  என் விண்ணப்பம் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்ற தகவலைத் தாருங்கள் என்று தகவல் பெரும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் கேட்கிறார். உங்களது கடன் தொகை 3,57,460 ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்விக்கடன் பிரிவு அல்லாத கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது உரிய உத்திரவாதம் கொடுத்து கடன் பெற்றுச் செல்லுங்கள் என்று ஓலை வருகிறது அந்த கடித நகலுடன் வந்து மேல் என்ன செய்வது என்று அடப் பாவிகளா கல்விக் கடன் கேட்டால் கல்விக்கடன் அல்லாத பிரிவில் கடன் தருகிறேன் என்று சொல்வதா  அதற்க்கு மாதா மாதம் வட்டி கட்டவேண்டும் என்ன கொடுமை 

அரசு அலுவலர்கள் அனைவரும் மக்கள் வரிப்பணத்தில் தானே சம்பளம் வாங்குகிறார்கள் பொது மக்களின் ஊழியர்கள் என்று அவர்கள் சொல்லிகொள்வது  .........................நீங்களே சொல்லுங்கள் ..

4 கருத்துகள்:

அருணா செல்வம் சொன்னது…

என்னத்தைச் சொல்வது...
தட்டிக் கேட்க தைரியம் இல்லாதவரையில்
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் தான்...!!

Manithan சொன்னது…

What else? Parasites

VOICE OF INDIAN சொன்னது…

தங்களது வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி திரு அருணா செல்வம் அவர்களே

VOICE OF INDIAN சொன்னது…

தங்களது வருகைக்கும் கருத்திட்டமைக்கும்(வேறு என்ன? ஒட்டுண்ணிகள்) நன்றி திரு Manithan அவர்களே