சே.தமிழ்ச்செல்வன். 08056201875
சென்னை எண்ணூர் அசோக் லேலட் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர் திரு சே
தமிழ்ச்செல்வன் அவர்கள் . அந்நிறுவன தொழிலாளர்கள் சங்கத்தின் துணை
செயலாளராக பணியாற்றியவர் 1989 ஆம் ஆண்டு பனி ஓய்வு பெற்றார்
ஓய்வு பெற்றதும் மக்கள் விழிப்புணர்வுக்காக அம்பேத்கர் சமூக நீதி இயக்கம் எனும் அமைப்பினை நிறுவி சமூக நல்லிணத்துக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் கடந்த 26 ஆண்டுகளாக தொய்வின்றி செய்து வருகின்றார்
தனக்கு கிடைக்கும் மாத ஓய்வு ஊதியம் அவரது தேவைக்கு போக மீதி உள்ள முழுவதையும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக செலவிடுகின்றார்
வடசென்னை முதல் மீஞ்சூர் வரை இவரது மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுகின்றது.
இவர் குடியிருந்த தெருக்கள் மேடு பள்ளமாக புதர் மண்டி பாம்புகளும் பூச்சிகளும் வாழும் இடமாக இருந்தது . தகவல் சட்டம் மூலம் அந்த சாலை பராமரிப்பு குறித்தும் புதிய தார் சாலை அமைப்பது குறித்தும் மாநகராட்சியிடம் பல முறை மனு கொடுத்தார் நிவாரணம் இல்லை . தகவல் உரிமைச் சட்டம் மூலம் தான் அளித்த மனுக்கள் மீது நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய தகவலை மாநகராட்சியிடம் கேட்டார் . உடனே மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அவர் வீட்டுக்கு அருகில் இருந்த மூன்று தெருக்களும் தார்சாலை போடப்பட்டுவிட்டது
அப்படிப்பட்ட தகவல் சட்டத்தை செல்லாமல் செய்ய அரசியல் கட்சிகள் முயல்வதைக் கேள்விப்பட்ட தமிழ்ச்செல்வன் அவர்கள் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி முதல் இந்தியன் குரலுடன் இணைந்து மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்
எழுபத்து ஐந்து வயது இளைஞர் சாதனை ; 26 ஆண்டாக மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்
வடசென்னை திருவொற்றியூர் மார்கெட்டில் பிரச்சாரம் |
செ தமிழ்ச்செல்வன் அவர்கள் 12 மணி கொளுத்தும் வெயிலும் |
மார்கெட்டில் வரும் அனைஇவருக்கும் விழிப்புணர்வு |
ஓய்வு பெற்றதும் மக்கள் விழிப்புணர்வுக்காக அம்பேத்கர் சமூக நீதி இயக்கம் எனும் அமைப்பினை நிறுவி சமூக நல்லிணத்துக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் கடந்த 26 ஆண்டுகளாக தொய்வின்றி செய்து வருகின்றார்
தனக்கு கிடைக்கும் மாத ஓய்வு ஊதியம் அவரது தேவைக்கு போக மீதி உள்ள முழுவதையும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக செலவிடுகின்றார்
வடசென்னை முதல் மீஞ்சூர் வரை இவரது மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுகின்றது.
இவர் குடியிருந்த தெருக்கள் மேடு பள்ளமாக புதர் மண்டி பாம்புகளும் பூச்சிகளும் வாழும் இடமாக இருந்தது . தகவல் சட்டம் மூலம் அந்த சாலை பராமரிப்பு குறித்தும் புதிய தார் சாலை அமைப்பது குறித்தும் மாநகராட்சியிடம் பல முறை மனு கொடுத்தார் நிவாரணம் இல்லை . தகவல் உரிமைச் சட்டம் மூலம் தான் அளித்த மனுக்கள் மீது நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய தகவலை மாநகராட்சியிடம் கேட்டார் . உடனே மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அவர் வீட்டுக்கு அருகில் இருந்த மூன்று தெருக்களும் தார்சாலை போடப்பட்டுவிட்டது
அப்படிப்பட்ட தகவல் சட்டத்தை செல்லாமல் செய்ய அரசியல் கட்சிகள் முயல்வதைக் கேள்விப்பட்ட தமிழ்ச்செல்வன் அவர்கள் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி முதல் இந்தியன் குரலுடன் இணைந்து மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்
யார் எப்படி இருந்தால் நமக்கு என்ன என்று இல்லாமல் சமுதாயத்தில் வாழும்
காலத்தில் நன்றிக்கடனாக இந்த சமுதாய மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று
உயரிய சேவை செய்துவரும் ஐயா தமிழ்ச்செல்வன் அவர்களின் 26 ஆண்டு சேவையைப்
பாராட்டி மகிழ்கின்றது இந்தியன் குரல். நீங்களும் அலை பேசியில் வாழ்த்தலாம் அல்லது ஒரு வாழ்த்து எஸ் எம் எஸ் அனுப்பலாமே
3 கருத்துகள்:
நல்லதொரு விஷயம்....
இதுபோன்ற மனிதர்கள் பார்ப்பது மிகவும் அரியதாகிவருகிறது...
என்னுடைய வாழ்த்துக்களை பதிவுசெய்கிறேன்...
அறிமுகம் செய்தமைக்கு தங்களுக்கு நன்றி...
சமுதாய மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும்//நாமும் வாழ்த்துவோம்
அன்னாருக்கு என்னோட சிரம் தாழ்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும்.
என் நண்பர்களுக்கும் அவரது தொண்டை பகிர உள்ளேன். தூரத்தில் இருக்கும் அண்ணா ஹாசரெ விற்கு ஆதர்வு குடுக்கிறோம் பக்கத்தில இருப்பவர்க்கு ஒரு குருஞ்செய்தி அனுப்பமாட்டமா...
கருத்துரையிடுக