ஆதரவாளர்கள்

Wednesday, July 17, 2013

14 வது திருமண நாளில் என் காதலிக்கு நான் எழுத நினைக்கும் காதல் கடிதம் (திடங்கொண்டு போராடு பரிசுப்போட்டி )

என்னருமை காதலியே! காதலுடன் நான் வரையும் அன்புக்கு ஓர் மடல்


 மேடு பள்ளங்களில் வளைந்து நெளிந்தோடும் அழகே அதன் வழியே கெண்டையும் கெலுத்தையும் துள்ளி விளையாடும். கையால் அள்ளித் தெளித்தபோதும் காலால் உழுது விளையாடியும் மறுப்பேதும் சொல்லவதில்லை  நதியே!

அழகு மடிப்பு எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகே. என்வீட்டு கன்னுக்குட்டி உன்னருகே வந்தால் உன்மீது தாவி விளையாடும் போதும் அமைதியாக இருந்தவளே!. கடலை செடி காய் வைத்ததும் காகம் தின்னாதிருக்க கல் வைக்காத கவுனால் சுற்றிக்கொண்டே மெதுவாய் நகரும்போது குறுகுறுவென்று காலினை சீண்டுவாயே! மாலைச் சூரியன் உன்மீது பட்டு சிதறும்போது எத்தனை மகிழ்ச்சியாய் புசுபுசு என்றிருக்கும் மேனி அழகைக் காட்டிடுவாய்! அருகம்புல் வரப்பே!

  மிதிவண்டியில் பள்ளிக்கூடம் போகையிலே உன் அழகை ரசிக்காமல் சென்ற நாள்தான் உண்டா? எனது கால்கள் பெடலில் இருக்க பெரிய கரடை தாண்டிச் செல்லும் வழியில் என் கண்கள் உன்மீதே படர்ந்திருக்க பள்ளிக்கு செல்லும் சாலயோரம் இருக்கும் பட்டாம் பூச்சிகள் சுற்றிவரும் உன்னழகைக் காண கண்கோடி வேண்டுமே! தும்பை பூவே!

கார்த்திகை மாதமானால் தூங்கி எழுந்ததும் திண்ணையில் அமர்ந்து உன்னையும் ஐயா மலையையும் பார்ப்பேனே அந்த ஐயா மலையையே சிலநேரம் உன் அழகால் மறைத்திடுவாயே. தென்றலுடன் தவழ்ந்து வந்து என் மேனியில் மெதுவாய் தீண்டிட சிலிர்த்தேனே மூடுபனியே!

ஆடிமாதம் களத்தில் நான் போர்த்தி படுத்துறங்க சங்கீதமாய் தவழ்ந்து மடமடவென என் போர்வையை  விலக்கிடுவாயே! காக்கைகளும் குருவிகளும் ராகம் பாடி எழுப்பிடும் முன் நீயே அமைதியாய் இருந்தாயே ஆடிக்காற்றே!

திண்ணையில் அமர்ந்து ஊர்க்கதைகள் பேசியபடி இட்ட அன்னத்தை உன்னைப் பார்த்தபடி உன் அழகை ரசித்தபடியே அம்மா உருட்டித்தந்த உருண்டைச் சோறு நிதம் தின்பேனே நிலவே!

வழியில் போகையிலே சுறுசுறு வென்று சந்தம் தருவதுடன் கால் கூசுமளவு மோதி முட்டிக்கால் கொஞ்சம் மேலே முத்தமிட்ட மூக்குத்தி பூவே!

பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் தோட்டத்தில் இருக்கும் பசுமாட்டை பிடித்து மேய்க்கும் போது உன்னழகைக் கட்டியே மயக்கிடுவாய் நானும் உன்னை துரத்திப் பிடிக்க முயலும்போதெல்லாம் என் கைக்கு கிட்டாமலேயே போக்குகாட்டி பின்னென் கைக்குள் அடங்கிடுவாயே வண்ணத்து பூச்சியே!

தைமாதம் இரண்டாம் நாளில் மாட்டுக்கு பொங்கல் வைக்கையிலே தடவிய மஞ்சள் காயாத சரத்தின் எச்சத்தை மறைத்துக் கொண்டே ஓரக்கண்ணால் பார்த்தவளே

கவியான குரலாலே மாமா எனும்போது எனை மறந்தேனே என்னவளே இனி எல்லா அழகும் அழகல்ல என்று பதினான்கு ஆண்டுகள் கழிந்த போதும் உனையே ரசித்தேனே என்றென்றும்  உனையே ரசித்திடவே  நிதம் வேண்டுகின்றேன். எனக்கு எல்லா அழகும் அழகல்ல என் மணையாளே  அழகியே உன்னைவிடவே!.


15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் தளம் திறந்தவுடன் கீழ் உள்ளவற்றிக்கு செல்கிறது... பாய்ந்து பிடித்து இதை தெரிவிக்கிறேன்...!

கவனிக்கவும்...! நன்றி...

http://domains.googlesyndication.com/apps/domainpark/domainpark.cgi?hl=en&client=ca-dp-rookmedia20_3ph_js&domain_name=ww2.tamiln.org&output=html&channel=19603

back சொடுக்கினால் இங்கே செல்கிறது...

http://ww2.tamiln.org/?folio=7POYGN0G2

திண்டுக்கல் தனபாலன் said...

தும்பை பூவே.. மூக்குத்தி பூவே... உட்பட வண்ணத்து பூச்சியாய் மனதில் சிறக்கடிக்கும் கடிதம் அருமை...

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்...

Bala subramanian said...

தங்களது வருகைக்கும் தவறை சரி செய்ய உதவியமைக்கும் நன்றி திரு தனபாலன் அவர்களே

கரந்தை ஜெயக்குமார் said...

பல முறை முயன்றும் தங்கள் தளத்திற்கு வர இயலவில்லை. திண்டுக்கல் தனபாலன்அய்யா அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவமே எனக்கும்,
போட்டியில் வெற்றி பெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். வெல்க

Bala subramanian said...

தடங்கலுக்கு வருந்துகின்றேன் ஐயா இணைப்பு இப்பொழுது சரிசெய்துவிட்டேன் தகவலுக்கும் தங்களது பாராட்டிற்கும் நன்றி

Tamizhmuhil Prakasam said...

வர்ணனைகளனைத்தும் அருமை.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் நண்பரே !!!

அரசன் சே said...

கிராமியக் காதல் இந்த கடிதத்தில் ... வாழ்த்துக்கள் சார்

ஸ்ரீராம். said...

கிராமத்து, இல்லை, இல்லை இயற்கை அழகையெல்லாம் மறைக்கச் செய்து விட்டது காதல் மனைவியின் அன்பு, காதல். நல்ல கான்செப்ட். பழைய பாடல் ஒன்று உண்டு. 'மதுரையில் பறந்த மீன்கொடியை உந்தன் கண்களில் கண்டேனே' என்று.... அதுபோல 'இவை யாவும் ஒன்றாய்த் தோன்றும் உன்னை....' என்று முடிப்பீர்களோ என்று பார்த்தேன்!

அருணா செல்வம் said...

கடிதம் கிராமத்து மணத்துடன் அருமையாக உள்ளது.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Bala subramanian said...

தங்களது வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி , நீங்கள் குறிப்பிட்டது போல் முடித்திருக்கலாம் ஆனால் இது கதையை இருந்திருந்தால் காதல் அல்லவா காதலில் உண்மையாய் இருப்பதாலேயே இத்தனை ஆண்டுகளும் சந்தோசமாக இருக்கின்றோம். காதலில் மட்டும் அடியேனுக்கு கற்பனையும் வருவதில்லை பொய் சொல்லவும் தெரியவில்லை ஆகவே உண்மையை மட்டும் உண்மையாய் எழுதியுள்ளேன் இதெல்லாம் நான் உண்மையாய் ரசித்த அனுபவங்களில் சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டேன் எங்கள் ஊரில் ரசிப்பதற்கு இன்னும் நிறைய இருக்கின்றது .முன்பெல்லாம் காலை எழுந்து சுமார் ஒருமணி நேரம் இயற்கையை ரசிப்பதற்காக மட்டுமே செலவிடுவேன் அம்மா எண்டா சும்மா உட்காந்து இருக்கிற என்று திட்டுவார்கள் ஆனாலும் அமைதியாக வீட்டுத் திண்ணையை விட்டும் மாமரத்தையும் அத்தனை அழகு எங்கள் ஊர்

Bala subramanian said...

தங்களது வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி Mr அருணா செல்வம்

Bala subramanian said...

தங்களது வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி Mr அரசன் .

Bala subramanian said...

உங்களது வாழ்த்துக்கும் பாராட்டிற்கும் நன்றி .
அச்சச்சோ இதையே வர்ணனை என்று சொல்லி விட்டீரே சொல்லப்போனால் நான் உண்மையை உண்மையாய் ரெம்ப சிம்பிளாக சொல்லியுள்ளேன்.
காதலை காதலால் சொல்லியுள்ளேன் அவ்வளவே

Ranjani Narayanan said...

14 வருடங்கள் கழிந்த பின்னும் முதல் நாள் உணர்ந்த காதலை மாற்றுக் குறையாமல் எழுதியிருக்கிறீர்கள்.

இயற்கையுடன் காதல் மனைவியை சேர்த்து ரசனையுடன் எழுதிய காதல் கடிதம் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

அப்பாதுரை said...

இனம் புரியாத மணம் உங்கள் கடிதத்தில். காதலைக் கட்டி பாக்கெட் பைக்குள் வைத்துக் கொண்ட எளிமையை ரசித்தேன். வாழ்த்துக்கள்.