ஆதரவாளர்கள்

செவ்வாய், 9 ஜூலை, 2013

ஒரே நாளில் டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும். Enhancing Rupee Valuation

இந்த சரிவைத் தடுக்க முடியும்......!!!!!!

ஒரே நாளில் நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்.

நண்பர்களே, உங்களாலும் இந்த சரிவைத் தடுக்க முடியும்.



சுதேசி சிந்தனைகள்.......

டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றைய தினம் அதல பாதாளத்திற்கு வீழ்ந்தது. அதாவது ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ 58.78.

இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி:

1.இன்னும் ஒரே வாரத்தில் டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயரலாம்

2. தினசரி உபயோகிக்கும் அந்நிய நாட்டுப் பொருட்கள் விலை ஏறலாம். (அவ்வாறு ஏறாவிட்டால் அவர்களின் இலாபம் எத்தனை என்பதை எண்ணிப் பார்க்கலாம்)

3. மோட்டார் வாகன உதிரிபாகங்களின் விலை ஏறும்

4. அதே நேரம், ஏற்றுமதியாளர்களுக்கு இது பொன்னான வாய்ப்பு. தங்களுக்கு கிடைக்கும் டாலர் ஆர்டர்கள், சர்க்கார் புண்ணியத்தில் ஆட்டோமேட்டிக்காக 10% அதிக லாபம்.

5. புதிய ஏற்றுமதி ஆர்டகளை விலை குறைத்து எடுக்கலாம். இதனால் வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியக் கம்பெனிகளை விட அதிகமாக பாதிக்கப் படுவார்கள்.

இது ஒன்றும் கட்டுப் படுத்த முடியாத விஷயம் அல்ல. அரசாங்கம் ஒரு மாத காலத்திற்கு இந்த நடவடிக்கை எடுத்தால் சரியாகி விடும்

1. தங்க இறக்குமதியை ஒரு மாத காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும். மிகப் பெரிய அளவில் அந்நிய செலாவணியாக டாலர் வீணாவது இதில் தான்.

2. உள்நாட்டில் மக்களை பெட்ரோல் மற்றும் டீசலை குறைத்து உபயோகிக்கும் முறைகளை அறிமுகப் படுத்தலாம். பூலிங் எனப்படும் கூட்டுப் பிரயாண முறை, ஒற்றைப் படை எண் மற்றும் இரெட்டைப் படை எண் கொண்ட வண்டிகளை சுழற்சி முறையில் ரோடில் ஓட விடலாம்.

3. வாரம் ஒரு முறை அனைவரும் தமது சொந்தப் பிரயாணங்களை பொதுத் துறை வண்டிகளில் பிரயாணிக்க நிர்ப்பந்திக்கலாம்.

4. வாரம் இரண்டு நாள் நகைக் கடைகளுக்கு கட்டாய விடுமுறை அளிக்கலாம்.

5. ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்ட் போன்ற யுனிக் அடையாள அட்டை கொண்டு பெட்ரோல், தங்கம், மற்றும் இறக்குமதி சார்ந்த பொருள்களுக்கு தனி மனித உச்ச வரம்பு கொண்டு வந்து, இறக்குமதியைக் கட்டுப் படுத்தலாம்.

6. ரூபாயின் டாலருக்கு எதிராக மதிப்பை அரசாங்கமே நிர்ணயித்து, அதற்கான கண்ட்ரோல்களை நிலை நிறுத்தலாம்.

7. ரூபாய் டிவேல்யுவேஷன் எனும் பொருளாதார உத்தியை இதுவரை அரசாங்கம் கையாண்டதாகத் தெரியவில்லை. அதையும் முயற்சி செய்யலாம்.

8. FDI க்கான டிவிடெண்டுகள் மற்றும் வெளிநாட்டு பங்கீடுகளின் லாபங்களை ஆறு மாதம் கழித்தே இந்தியாவிலிருந்து வெளியே அனுப்ப தடை போடலாம்.

9. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு டெபொசிட் மீதான வட்டியைக் கூட்டிக் கொடுக்கலாம். சென்ற வருடம் இது போல செய்து நிறைய டாலர் வரத்தை பெற்றது அரசாங்கம்.

இதற்கெல்லாம் காரணம் வெளிப்படையான உலக வர்த்தகம் மற்றும் திறந்து விடப் பட்ட சந்தைதான் காரணம். பின் விளைவுகளை ஆராயாமல் செய்யப் பட்ட முடிவுகளால் ஏற்படுகிறது.

அதே நேரம் வெளிப்படையான மற்றும் சுதந்திரமாக திறந்து விடப்பட்ட சந்தைகளால் உண்டான இலாபம் மற்றும் பொருட்களால் நாள் நிறைய அனுபவிக்கப் பழகி விட்டோம்.

வெளிநாட்டுக் கார்கள், பெப்சி, கோலா, சீனப் பொருட்கள், கம்ப்யூடர், டேப்லெட், சோப்பு, என்று வரிசையாக நிறைய சொல்ல லாம். இவைகள் இல்லாமல் நம்மால் வாழ முடியமா? இதுதான் திறந்த வெளி சந்தையின் சோக முடிவு. பழக்கப் பட்ட பின் இவை இல்லாமல் நம்மால் வாழ முடியாது.

இந்த சந்தைகளால் அழிந்து கெட்ட நாடுகள், லெபனான் மற்றும் பிரேசில் . இதில் இரண்டாவது நாடு தங்களின் தொழில் புரட்சியால் முன்னேறி விட்டது. ஓரு டாலருக்கு நிகரான பிரேசில் ரியல் 2.17. லெபனான் மட்டுமே இன்னமும் அப்படியே இருக்கிறது. ஒரு டாலரின் மதிப்பு அங்கே 1511 லெபனான் லிரா. நாம் எவ்வளவோ பரவாயில்லை.

நம் நாட்டிற்குத் தேவை, நல்ல ஒரு நிதி அமைச்சர். வெறும் ஒரு குடிமகனான எனக்கே இவ்வளவு விஷயம் தெரிகிறது என்றால் ஒரு கஜானாவை நிர்வகிக்கும் அமைச்சருக்கு எவ்வளவு தெரிந்திருக்க வேண்டும்? பங்குச் சந்தையை மட்டும் அளவு கோலாக வைத்து செயல் படும் மத்திய நிதி அமைச்சருடைய அளவு கோலும் பீர்பாலுக்கு முகம் மழிக்கும் நாவிதனின் அளவுகோலும் ஒன்றாகவே இருக்கிறது என்பது சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்பட்ட ஒற்றுமையா?

நண்பர்களே, உங்களாலும் இந்த சரிவைத் தடுக்க முடியும். உள்ளூர் பொருள்களை வாங்குவீர்.

சோப்பு என்றால் சந்திரிகா , சிந்தால், மைசூர் சாண்டல், ஷாம்பு என்றால் டாபர், குளிர் பானம் என்றால் இளநீர், மற்றும் சாத்துக்குடி ஜூஸ். இப்படி பல வழிகளில் நீங்களும் அந்நிய பொருள்களை சிறுக சிறுக நிராகரித்து, நாட்டு நலனில் அமைச்சரை விட அதிகமாக பங்கு கொள்ளலாம்.

இன்றைய நாளில் நீங்கள் உபயோகிக்கும் வெளிநாட்டுப் பொருள்களில் ஒன்றையேனும் தவித்து, ஒரே ஒரு டாலரை மிச்சப் படுத்துங்கள். ஒருவேளை இந்தியர்கள் அனைவரும் ஒரு சேர அப்படியே செய்தால் ஒரே நாளில் நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்.


  • Nimmu Vasanth English Translation of the above / Possible to stop rupee devaluation / We all together can enhance rupee value by Rs.20 against a dollar by saving 120,00,00,000 crores dollars in one single day / Friends, you can stop devaluation of rupee. Buy local goods / Nationalistic thoughts follow.../ Yesterday rupee value against a dollar dropped heavily down ie.,that is Indian rupee value against a dollar was 58.78 / the consequences are...../ 1. In one weeks time diesel, petrol ans cooking gas price can increase / 2. Price of foreign goods might increase ( you can imagine their profits if the price is not increased) / 3. Spare parts of motor vehicles will increase / 4. Same time golden opportunity for exporters. For the orders of dollars worth, with the blessing of the government, automatically they get 10% extra profit / 5. New export orders can be taken with reduced price. Because of this foreign companies will be more affected than the local companie ..This is not a difficult tsk at all for the government to control..In one month the following measures are taken by the government, it will become alright...1. Import of gold should be stopped by the government for a month.Majority dollars in foreign exchange are wasted in gold. 2. Some measures should be taken to lower the usage of petrol (ie) vehicle pooling system for travelling, single or double digit numbered vehicles to ply in rotation can be adopted. 3. Weekly once public can be enforced to take up their private travels in public transport system. 4. Weekly twice, jewellery shops should be granted compulsory holidays. 5. Using unique identity cards like Aadhar, ration card or driving licence maximum slab per person can be fixed for petrol, gold or any imported goods. 6. Government can come forward to control rupee vauation against dollar. 7. Sofar no sign government taking concern for rupee devauation and not taken any measures to control it. 8. Can prevent giving FDI dividends, profits on foreign shares after 6 months from India to abroad. 9. The deposit interest can be hiked for NRIs settled abroad. Last year by doing this, India govt got lot of dollar reserve.../ All these are due to transparent world trade and opening the market. Without analysing the consequences, these decisions were made. At he same time because of freedom of open trading system, we started enjoying the profit and materials. Somany foreign goods like Pepsi, Cola, China goods, computers, laptops, soaps and the list can be told in series. Because of these markets, severely damaged counties are Lebanon and Brazil. The second country came up because of industrial revolution. The Brazillian ryal value against dollar is 2.17 only. Lebanon continues in the same state. There one dollar value is 1511 Lebanon Lira. We are far better. All we need is a good finance minister. When an ordinary citizen like me is aware of somuch information, how much a finance minister who controls the country's economy should know? Is there circumstatial unity in the yardstick adopted by the finace minister in the name of share market and yardstck adopted by barber's shaving knife of his master Peerbal ?......Friends, you can stop this..Buy Indian goods....If soap, Chandrika, Cinthol, Mysore Sandal, if shampoo Dabur, If cool drinks tender coconut and musambi (saathukudi)..etc.If by all these ways if we all eliminate foreign products, we can take better interest in the country than a finance minister....Today by avoiding foreign products at least each one of us can save a single dollar. In case Indians alltogether do this, in one day we can save 120,00,00,000 crores dollars in one day and enhance the rupee value by Rs.20.



    தேர்தலின் போது வாக்குக் கேட்டுவந்த வேட்பாளர் சொன்னார் உங்கள் வீட்டுப்பிள்ளைக்கு ஓட்டுப் போடுங்கள் என்றார் நானும் போட்டேன் 
    வெற்றிபெற்ற அந்த வேட்பாளர் என்னுடைய அனுமதி இல்லாமல் என்னுடைய அரசுப் பணம் கொள்ளை அடித்தார் என்னிடமும் பணம் கேட்டார் . ஏய்யா எங்கள் வீட்டுப் பிள்ளை என்று சொல்லி ஒட்டு வாங்கிபுட்டு இப்ப இப்படி அநியாயம் பன்றியே என்றேன் அதற்க்கு அவர் அய்யா இப்பவும் சொல்றேன் நான் உங்கள் வீட்டுபிள்ளை தான். பணத்தைக் கட்டிவிட்டு பொங்கல் உங்கள் வேலை முடிந்துவிடும் என்றார்

1 கருத்து:

Massy spl France. சொன்னது…

நல்ல கட்டுரை. தெளிவான விளக்கங்கள். அனைவரும் படிக்க வேண்டியது. பகிர்வுக்கு மிக்க நன்றி .