ஆதரவாளர்கள்

Monday, July 1, 2013

இரத்தின சாமிகிட்டப்பா அவர்களுக்கு பதிலுரை

நண்பர்களே நான்  பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அடிக்கடி பார்ப்பதில்லை எப்போதாவது பார்த்தால் நிறைய செய்திகள் இருக்கும் அவர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய செய்திகளுக்கு தாமதம் ஆனாலும் பதில் எழுதுவது வழக்கம் அந்த வகையில் இரத்தின சாமிகிட்டப்பா அவர்களுக்கு நாங்கள் மறுமொழி இட்டதை அப்படியே உங்களுக்கும் தரலாம் என்று எண்ணம் அகவே இந்தப் பதிவு


வணக்கம்.எல்லா செய்திகளையும் படித்தோம் USA ,Texas ஸ்டேட்,SanAntonio நகரத்தில் எனது மகன் மருமகள் மற்றும் பலர். ஆச்சரியப்பட்டனர். இப்படிப்பட்ட செய்திகளை கோர்வையாகத் தந்ததற்கு நன்றி. - இரத்தினசாமி கிட்டப்பா
 
உங்களது கருத்திற்கு எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள் ஐயா,

எங்கள் மன நிறைவுக்காக மட்டுமே செய்கின்றோம், ஆகவே தான் நன்கொடை பெறுவதில்லை உறுப்பினர் சந்தா கட்டணம் வசூலிப்பதும் இல்லை, எந்த சேவைக்கும் கட்டணம் பெறுவதில்லை, என்ற உறுதியுடன் எங்களால் முடிந்த மட்டும் உதவி செய்து அமைப்பை நடத்தி வருகின்றோம்.

தகவல் உரிமைச் சட்டம் மூலம் அரசின் பயன்களை மக்கள்  பெறவும் தங்கள் உரிமைகளைப லஞ்சம் கொடுக்காமல் அலைந்து திரியாமல் இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல் அலைந்து திரியாமல் பெற்றுக்கொள்ள வழி கட்டுகின்றோம்.

இதற்காக தமிழக முக்கிய நகரங்களில் உதவி மையங்களை நடத்தி வருகின்றோம். அந்த உதவி மையங்களில் வருவோருக்கு விண்ணப்பங்கள், புகார்கள் உரிய முறையில் எழுதித் தருகின்றோம்.

கல்விக் கடன் பெற சட்டப்பூர்வு வழிமுறைகள் சொல்லித் தந்து கடன் பெற உதவுகின்றோம்

இந்த சேவைக்கு தன்னார்வ தொண்டர்கள் தாமாக முன்வந்து உதவி செய்கின்றார்கள்

இந்த உதவியை பெற அனைத்து மக்களுக்கு தகவல் சென்று சேர்ந்துள்ளதா என்று தெரியவில்லை ஒவ்வொரு மையத்திலும் மக்கள் வருகின்றார்கள்

உதவி மையத்தில் நம் அரசு அலுவலர்களின் கேவலமான செயலால் ஏற்ப்பட்ட அனுபவம் கார்கில் போரில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தினை லஞ்சம் பெற்றுக் கொண்டு வேறு ஒரு நபருக்கு பட்டா போட்டுக் கொடுத்து விட்டார்கள் அந்த விதவைத் தாய் நமது உதவிமையம் மூலம் அந்த நிலத்தினை போராடி மீட்டு விட்டார்கள் இந்த விபரத்தை ஏற்க்கனவே ஆடையில்லா மனிதர்கள் எனும் தலைப்பில் விவரித்து இருக்கின்றேன்

இது போன்ற அயோக்கியத் தனம் வேறு இருக்க முடியுமா?

இது போன்று மக்கள் நலன் சார்ந்த உதவிக்கு பயிற்சி அளிகின்றோம் எந்த ஒரு அமைப்பும் அதன் உறுப்பினர்களுக்கு முதலில் விழிப்புணர்வு பெற வேண்டும். அதன் பின் நாடி வருபவர்களுக்கும் நாடிச்  சென்றும் விழிப்புணர்வு செய்யவேண்டும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை அவர்கள் சார்ந்த அமைப்பின் மூலம் பரப்புரை செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எங்களுக்கு உள்ளது

அமைப்புகள் வெவ்வேறு ஆகினும் நோக்கம் ஒன்றாக இருக்கட்டும்
இதுவே இந்தியன் குரலின் வேண்டுகோள்!

No comments: