RBC உங்களுக்கு இருக்க வேண்டிய அளவுகள்
சிவப்பணு எண்ணிக்கை
ஆண் : 4.5 – 6 மில்லியன் / மிமீ3
பெண் : 4.0 – 5.5 மில்லியன்/ மிமீ3


ரெடிகுலோசைட் எண்ணிக்கை
0.5 – 2.5% சிவப்பு அணுக்கள்
ஹீமோகுளோபின்
ஆண் : 13 – 18 g/dl
பெண் : 11.5 – 16.5 g/dl
செல் கன அளவு (packed cell volume (PVC)/ Hematocrit
ஆண் : 40 – 54%
பெண் : 37 – 47
எரித்ரோசைட் படியும் வேகம்
(Erythrocyte sedimentation Rate – ESR)
ஆண் : 0 – 20 mm/hour
பெண் : 0 – 30 mm/hour
ரத்த வெள்ளை அணு (WBC) 4000 – 11000 cells/mm3
மொத்த எண்ணிக்கை
டிஃபரன்ஷியல் கவுன்ட் (Differential Count)
* பாலிமார்ப்ஸ் (Polymorphs) - 40 – 70%
* லிம்ஃபோசைட்ஸ் ( Lymphocytes) - 22 – 44%
* ஈஸ்னோஃபில்ஸ் (Eosinophils) - 0 – 8%
* பேஸோஃபில்ஸ் (Basophils) - 0 – 3%
* மோனோசைட்ஸ் (Monocytes) - 4 – 11%
பிளெட்லெட் எண்ணிக்கை (Platelet count)
1.5 lakh – 3.5 lakh /mm3
ரத்த கசிவு நேரம் (Bleeding Time) - <10 min
ரத்த உறையும் நேரம் (Clotting Time) - 10 - 15 min
ப்ரோத்ராம்பின் நேரம் (Prothrombin Time) - 10-15 sec
Activated partial thromboplastin time - 25 - 35 sec
இ-ரியாக்டிவ் புரோட்டின் (C-Reative protein) - <8 mg/L(S)
ஃபைப்ரினோஜன் (Serum fibrinogen) - 150-400mg/dl
ரத்த யூரியா (Blood Urea) - 15 - 40 mg/dl
கிரியேட்டினைன் (Serum creatinine) - 06 - 1.4 mg/dl
வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை அளவு :
(Fasting glucose)
* வீனஸ் பிளாஸ்மா சர்க்கரை - 65 - 126 mg
(Venous plasma glucose)
வீனஸ் ரத்த சர்க்கரை - 65 - 110 mg
( Venous whole blood glucose)
குளுக்கோஸ் சாப்பிட்டு 2 மணி நேரம் கழிந்து (75 கிராம் குளுக்கோஸ் வாய் வழியாக)
பிளாஸ்மா சர்க்கரை (Plasma glucose) - <140mg
மொத்த ரத்த சர்க்கரை (Whole blood glucose) - <120mg
க்ளைகேடட் ஹீமோகுளோபின் - 5 - 6.5
Glycated hemoglobin HbA1c மொத்த ரத்தத்தில்
அஸ்பர்டேட் அமினோ டிரான்ஸ்பரேஸ்
(SGOT) - 0 - 3.5 IU/L
அலைனைன் அமினோ டிராஸ்பரேஸ்
(SGPT) - 0 - 3.5 IU/L
ஸீரம் அஸிட் பாஸ்படேஸ்
(ALP) - 3 - 13 K.A units /L - 30 - 120 IU/L
ஸீரம் க்ரியேடினைன் கைனேஸ்
(Serum creatinine kinase total (tk)
- ஆண் 30 - 200 IU/L
- பெண் 30 - 150 IU/L
லெவல் - 100 - 300 units/L
அமைலேஸ் - 60 - 180 units/L
* ஆல்ஃபா ஃபீடோ புரோட்டீன் - <15u/L
* பிலிருபின் (Serum Bilirubin)
மொத்தம் -0.3 - 1 mg /.dt
நேரடியானது -0.1 - 0.3 mg /.dt
மறைமுகமானது -0.2 - 0.7 mg /.dt
புரோட்டீன் (Serum Protein)
மொத்தம் (Total) - 5.5 - 8.0 g/dt
ஆல்புமின் (Albumin) - 3.5 - 5.5 g/dt
கிளோபுலின் (Globulin) - 2.5 - 3.5 g/dt
யூரிக் அமிலம் (Serum Uric acid) ஆண் : 2.5 - 8 mg/dt பெண் : 1.5 - 6 mg/dt
ட்ரோபோனின் (ஐ) (Serum trophonin (1) - 0.4 u /L
ட்ரோபோனின் (டி) (Serum trophonin (T) - 0.1 u /L
கால்சியம் (முழு ரத்தத்தில்)
* மொத்தம் - 9 - 11
* அயனியாக்கப்பட்டது - 4.5 - 5.5
ஆன்டி - நியூக்ளியர் ஆன்டிபாடி - Negative in 1 in 40
(Anti Nuclear antibody)
ஆன்டி ஸ்ட்ரெப்டோலைசின் (சமீபத்திய் ஸ்டெப் டோகாகல் தொற்றை அடையாளம் காட்டக் கூடியது)
(Anti - Stretolysis O (ASO) titer (suggestive of recent Streptcoccal infection)
பெரியவர் - > 200
சிறுவர் - > 320
கொழுப்பு (Cholesterol)
மொத்தம் Total விரும்பத்தகுந்த அளவு - < 200 mg
desirable
LDL விரும்பத் தகுந்த அளவு - < 100 mg
கிட்டத்தட்ட சரியான அளவு - 100 - 129 mg
பரவாயில்லை
இருந்தாலும் கவனம் தேவை - < 130 - 159 mg
அதிகம் - 160 - 189 mg
மிக அதிகம் - > 190 mg
HDL குறைவு - < 40 mg
அதிகம் - > 60 mg
டிரைகிளிஸரைட்ஸ்
Triglycerides - 50 – 150 mg/dl
ஹோமோசிஸ்டைன்
Homocystine - 5 – 15 umol/L
தமனி ரத்த ஆய்வு Arterial blood Analysis
* PaCo2 - 35 – 45 mm Hg
* (7.5mm of Hg-1 Kilo pascal pressure)- 80 – 105 mm Hg
* ஹைட்ரஜன் அயனி (pH 7.36 – 7.44)- 36 – 44 nmol/L
*பைகார்பனேட்ஸ் - 21 – 30 mEq/L
* ஆக்ஸிஜன் பூரித நிலை – > 97%
(Oxyen saturation – normally)
ஸெரிப்ரோஸ்பைனல் திரவம் (மூளை தண்டுவட நீர்) Cerebrospinal fluid :
* கன அளவு Volume - 150 about 150ml (clear fluid)
* அழுத்தம் Pressure - 50 – 180 mm H20
* குளுக்கோஸ் Glucose - 40 – 70 mg/dL (2/3rd of plasma sugar level)
* மொத்த புரோட்டீன் Total protein – 15 – 50 mg/dL
* குளோரைடு Chloride – 120 – 170 mmol/L
சிறுநீர் பரிசோதனை Urine Test
* சாதாரண சிறுநீர் அளவு - 1 – லிட்டர்
* சிறுநீரில் வெளியேற்றப்படும் புரத அளவு - 0 – 150 mg/dl
* இயல்பான அல்புமின் வெளியேற்றம் - <30 mg/day
* மைக்ரோ அல்புமினூரியா - 30 – 300 mg/day
* நீருடனான சிறுநீரின் ஒப்பிட்டு எடை
- 1.002 – 1.028
அதிகமான அளவில் ரத்தத்தில் குளுக்கோஸ் இருப்பதையே நீரிழிவு நோய் என்கிறோம். நாம் உண்ணும் உணவில் உள்ள மாவுச்சத்து செரிக்கப்பட்டு குளுக்கோஸாக ரத்தத்தில் கலக்கிறது. ரத்தத்தில் இதன் அளவு சுமார் 80 மில்லி கிராம் (மிகி) முதல் 120 மி.கி வரைதான் இருக்க வேண்டும்.
* ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு 60 மி.கி.க்குக் கீழே குறைந்தால் உடலின் முக்கிய பாகமான மூளை செயலிழந்து மரணம் அடைய நேரிடும்.
* அதிகமான அளவில் குளுக்கோஸ் ரத்தத்தில் இருந்தால் நாளடைவில் ரத்தக்குழாய்கள் பாதிக்கப் பட்டு பக்கவாதம், கண்பார்வை இழப்பு, மாரடைப்பு, சிறுநீரக நோய், நரம்புகள் செயலிழத்தல், கால் இழப்பு போன்ற கடுமையான பின் விளைவுகளும் ஏற்படலாம்.
* ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை சீராக வைக்கும் இந்த முக்கிமான வேலையை இன்சுலின் (Insulin) என்னும் ஹார்மோன்தான் செய்கிறது.
இன்சுலினின் அவசியம் :-
* உடல் பாகங்களில் உள்ள திசுக்களுக்கு ரத்தத்திலிருந்து குளுக்கோஸை எடுத்துக் கொடுப்பது இன்சுலினின் முக்கிய வேலை. இன்சுலின் குறைவு ஏற்படும்போது திசுக்களுக்கு சக்தி ஏதும் கிடைக்காது. ஆதலால் உடல் சோர்வு ஏற்படுகிறது.
* நாம் உண்ணும் மாவுச்சத்தில் உள்ள குளுக்கோஸில் தேவைக்கு அதிகமாக உள்ளதை கல்லீரலில் க்ளைக்கோஜனாக மாற்றி அவசரத் தேவைக்காக சேமித்து வைப்பதும் இன்சுலின்தான்.
* நாம் உண்ணும் உணவில் உள்ள புரதச்சத்தை, தசைகளின் வளர்ச்சிக்காக உபயோகப்படுத்துவதும் இன்சுலின். இன்சுலின் குறைவு ஏற்படும் போது உடல் மெலிந்துவிடும்.
* உடலிலுள்ள கொழுப்புப் படலம் உற்பத்தியாவதிலும் இன்சுலின் முக்கியப் பங்கு வகிக்கிறது.
* இன்சுலின் குறைவினால் ரத்தத்திலுள்ள குளுக்கோஸ் எதற்கும் உபயோகப்படாததால் அதன் அளவு ரத்தத்தில் அதிகரித்துக் கொண்டே செல்லும். ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு 180 மி.கி-க்கு மேல் சென்றால் சிறுநீரில் அது கலந்து வெளியேற்றப்படும்.
* சிறுநீரில் வெளியேற்றப்படும் அதிக சர்க்கரையுடன் தண்ணீர் மற்றும் பல்வேறு உப்புப் பொருட்களும் சேர்த்து வெளியேற்றப்படுவதால் அடிக்கடி சிறுநீர் கழித்தலும் உடல் அசதியும் அதிகப் பசி எடுத்தலும் தண்ணீர் தாகமும் மயக்கமும் உண்டாகும். அந்தச் சமயத்தில் உடலுக்குத் தேவைப் படும் சக்தியானது மாற்று வழிகளில் உடலிலிருக்கும் கொழுப்புச் சத்திலிருந்து பெறப்படும்போது, டயாபடிக் கீட்டோ அசிடோசிஸ் என்னும் உயிருக்கு ஆபத்தான நினைவிழப்பு நோய் ஏற்படலாம். இதை உடனடியாகக் கவனிக்காமல் விட்டுவிட்டால் மரணம் ஏற்படும்.
* மன அழுத்தம் ஏற்படும் போது அட்ரீனலின் மற்றும் கார்டிசோன் அதிகமாக சுரக்கின்றன. இவை ரத்தத்திலுள்ள குளுக்கோஸை அதிகப்படுத்தும் தன்மை கொண்டவை. அவ்வாறு அதிகப்படும் குளுக்கோஸின் அளவைக் குறைக்க கணையத்தில் போதுமான அளவு இன்சுலின் சுரக்காவிட்டாலும் நீரிழிவு நோய் (Stress Induced Diabetes) தற்காலிகமாக ஏற்படும்.
குளுக்கோஸ் தாங்குதிறன் குறைவாக உள்ள நோயாளிகள்
சாப்பிடாமல் எடுக்கப்பட்ட ரத்தத்தில் குளுகோஸின் அளவு சரியாக இருந்தாலும் நல்ல ஆரோக்கியம் உள்ளவர்களின் குளுக்கோஸ் தாங்குதிறனை சாப்பிட்ட பின் 2 மணி நேரத்தில் உள்ள ரத்தத்தின் குளுக்கோஸ் அளவு மூலம் அறியலாம்.
சாதாரணமாக 140 மி.கி-க்குக் குறைவாக இருக்க வேண்டும். இதனுடைய அளவு 140 மி.கிக்கு அதிகமாகவும் ஆனால் 200 மி.கி-க்கு மிகைப் படாமலும் இருந்தால் இவர்களை நீரிழிவு நோயாளி களாகக் கருத முடியாது. இவர்கள் குளுகோஸ் தாங்குதிறன் குறைவாக உள்ள நோயாளிகளாக் கருதப் படுவார்கள். இவர்களுக்கு எதிர்காலத்தில் நீரிழிவு நோய் வரும் வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
ஏக்ஷஅ1ஸ்ரீ எனப்படும் ரத்தப் பரிசோதனை அன்றைய நிலையில் இருந்து அதற்கு முந்தைய 3 மாதங்களில் உள்ள சர்க்கரை வியாதியின் தீவிரத்தை அறியப் பயன்படும் பரிசோதனையாகும். சரியான அளவு 5% முதல் 7% ஆகும்.
சர்க்கரை நோயின் வகைகள்:
முதல் பிரிவு Type I :
சிறுவயதில் நீரிழிவு ஏற்படும் நோயாளிகளை முதல் வகை எனலாம். இவர்களின் கணையம் பெரும்பாலும் தேவையான இன்சுலினைச் சுரப்பதில்லை.
இந்த வகையான நோயாளிகளுக்கு மாத்திரைகள் பயன்படாது இவர்கள் நீரிழிவு நோயால் தாக்குண்ட போது மிகவும் மெலிந்தே காணப் படுவார்கள். இவர்களுக்கு இன்சுலின் ஊசி செலுத்தப் படாவிடில் மயக்கமுறும் நிலை திடீரென்று ஏற்படும்.
இரண்டாம் பிரிவு. Type II
நோயாளிகளின் கணையத்தில் தேவையான அளவு இன்சுலின் சுரக்காவிட்டாலும் குறைந்த அளவு இன்சுலின் எப்போதும் சுரந்து கொண்டே இருக்கும்.
இதில் பலவகைகள்
1. முதல் வகையில் உடலுக்குத் தேவையான அளவு இன்சுலின் சுரந்தாலும் நோயாளிகள் அளவுக்கு அதிகமாக உண்பதால் இந்த வியாதி ஏற்படலாம். இவ்வகை நோயாளிகளுக்கு உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மட்டுமே போதுமானது.
2. இரண்டாவது வகையில், இன்சுலின் தேவையான அளவு சுரந்தாலும் உடல் பருமனாக இருப்பவர்களின் கொழுப்புத் திசுக்கள், இன்சுலின் செயல்பாட்டைத் தடுப்பதால் இந்த வியாதி ஏற்படலாம். இவ்வளவு எடையைக் குறைப்பதற்கான குறைந்த அளவு உணவும் உடற்பயிற்சியும் மேற்கொண்டாலே இதனைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
3. மூன்றாவது வகையான நோயாளிகளில் கருவுற்றகாலத்தில் மட்டும் தாய்மார்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கலாம். கருவுற்றகாலத்தில் இன்சுலின் தேவை அதிகப்படுகிறது. கணையம் இன்சுலினை சுரக்காதபோது இவ்வியாதி ஏற்படலாம். இதனால் குழந்தை அதிக எடையுடனும் உடல் குறைபாடு களுடனும் பிறக்க வாய்ப்புள்ளது.
4. நான்காவது வகை நோயாளிகளில் அவர்கள் கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாகும்போதும் பல்வேறு கொடிய நோய்களால் தாக்கப்படும்போதும் அவர்களின் உடலில் கார்டிசோன், அட்ரினலின் போன்ற ஹார்மோன்கள் தற்காலிகமாக அதிகமாகச் சுரக்கின்றன.
தற்காலிகமாக அந்த நேரம் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்த கணையத்தில் இருந்து அதிக அளவு இன்சுலின் சுரக்காததால் நீரிழிவு நோய் ஏற்படலாம்.
இவ்வகையான நோயாளிகளில் மேற்கூறிய அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்து அவற்றை குணப்படுத்தினாலே நீரிழிவு நோயைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். சில காலங்களுக்கு மட்டுமே இவர்களுக்கு தற்காலிகமாக இன்சுலின் அல்லது மாத்திரைகள் தேவைப்படலாம்.
5. ஐந்தாவது வகையைச் சேர்ந்த சில நோயாளிகளில் கணையத்தில் இன்சுலின் தேவையான அளவு சுரந்தாலும் ரத்தத்தில் இன்சுலினின் ஆன்டிபாடிகள் இருப்பதால் உள்ளே சுரக்கப்படும் இன்சுலின் வேலை செய்யாமல் போய்விடுகிறது.
6. ஆறாவது வகையைச் சார்ந்த நோயாளிகளில் சரியான உடல் எடை, அளவான உணவு, உடற்பயிற்சி ஆகியவை இருந்தும் கணையத்தில் இன்சுலின் குறைவாக சுரப்பதால் இந்த நோய் ஏற்படுகிறது. கணையத்தை மாத்திரைகள் மூலம் ஊக்குவித்து தேவைப்படும் இன்சுலினைச் சுரக்கச் செய்து, இந்த வியாதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.
7. ஏழாவது வகையைச் சார்ந்த சில நோயாளிகளில், உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி ஆகியவை இருந்து இன்சுலினின் மிகக் குறைவாக சுரப்பதால் இவர்கள் குறைந்த எடையுடனே காணப்படுவர்.
ஊசி மூலம் செலுத்தப்படும் இன்சுலின் இந்த வியாதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தேவைப்படலாம்.
* சர்க்கரை நோயாளிகளில் 50% பேருக்கு உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவை மட்டும் இந்த நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உதவும். மேலும் 20-ல் இருந்து 30 சதவித நோயாளிகளுக்கு மட்டும்தான் உணவுமுறைமாற்றம் உடற்பயிற்சி ஆகியவற்றுடன் மாத்திரைகளும் தேவைப்படலாம்.
* நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைக்கா விட்டால் சுமார் 5 முதல் 10 ஆண்டுகளில் ரத்தக் குழாய்கள் நிரந்தரமாக பாதிக்கப்படும். அதனால் மூளை, கண், இதயம், சிறுநீரகம், நரம்புகள், கால் ஆகிய உறுப்புகள் செயலிழக்கும்.
* பலர் தனக்கு நிச்சயமாக இந்த நோய் வராது என்று வாதிடுவார்கள்.
* இந்நோய் கட்டுப்பாட்டிற்கு வந்தவுடன் பெரும்பாலானவர்கள் உணவுமுறை, உடற்பயிற்சி, மருந்துகள், மருத்துவ பரிசோதனை மற்றும் முறையான பரிசோதனை ஆகிய எதையும் கடைப் படிப்பதில்லை.
* மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் கெடுதல் என்ற தவறாக நினைத்துக் கொண்டு சர்க்கரை நோயிற்கு பலியாவோர் பலர்.
இவர்களில் பெரும்பாலோர் கண்பார்வை இழப்பு, மாரடைப்பு நோய், சிறுநீரக செயலிழப்பு ஆகிய கொடிய பின்விளைவுகளுடன் மருத்துவர்களை அணுகுவார்கள்.
செய்ய வேண்டிய பரிசோதனைகள்:
* ரத்தத்தில் குளுகோஸின் அளவு கட்டுப் பாட்டில் இருந்தாலும் மாதம் ஒரு முறையாவது ரத்தத்தில் அதன் அளவு கண்காணிக்கப்பட வேண்டும். உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை உணவு மற்றும் உடற்பயிற்சி முறைகளால் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* உயரத்திற்கு ஏற்ற உடல் எடை
வளர்ந்த பருவத்தினரின் உயரத்தை சென்டிமீட்டரில் அளந்து அதில் 100ஐக் கழித்தால் வரும் எண்ணிக்கையுள்ள கிலோகிராமாகத்தான் அவர்களது எடை இருக்க வேண்டும்.
உதாரணத்துக்கு 165 செ.மீ. உயரம் இருப்பவர் (165 – 100 ‘ 65) 65 கிலோ எடைக்கு மேற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பி.எம்.ஐ (B.M.I – Body Mass Index)
இதன் மூலம் ஒருவர் எவ்வளவு உடல் பருமன் அளவு இருக்க வேண்டும் என்பதைக் கணக்கிட முடியும்.
பி.எம்.ஐ உடல் எடை (கி.கி)
உயரம் (மீட்டரில்)
உதாரணத்துக்கு ஒருவரின் எடை 70 கிலோவும் உயரம் 1.6 மீட்டரும் என்றால் அவருடைய உடல் பருமன் அளவை இவ்வாறு கணக்கிடலாம்.
* ஒருவருடைய உடல்பருமன் அளவு ((B.M.I ) நம் நாட்டில் 18.5 க்கு குறையாமலும் 25க்கு அதிகமாகாமலும் இருக்கும்படி உடல் எடையை வைத்துக் கொள்ள வேண்டும். இது நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்கு பெரும் உதவியாக இருக்கும்.
* இடுப்பின் அளவு பொதுவாக பெண்களுக்கு 80 செ.மீக்கும் ஆண்களுக்கு 90 செ.மீக்கும் அதிகமாகாமல் இருத்தல் வேண்டும்.
இடுப்பின் அளவை, சாதாரணமாக விலா எலும்புக்கும் இடுப்பெலும்புக்கும் நடுவில் உள்ள பகுதியில் அளக்கும் நாடா (Inch Tape) மூலமாக அளந்து தெரிந்து கொள்ளலாம்.
மூச்சை இழுத்து வெளியே விட்ட நிலையில் இடுப்பின் அளவை அளக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
* நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு சுருங்கு நிலை ரத்த அழுத்தம் 120 மி.மீக்கு கீழேயும் விரிநிலை ரத்த அழுத்தம் 80 மி.மீக்கு கீழேயும் இருத்தல் நல்லது.
* ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தில்
கஈக என்னும் கொழுப்புச் சத்து 100 மி.கி-க்குக் குறைவாகவும்
ஏஈக என்னும் கொழுப்புச் சத்து 40 மி.கிக்கு அதிகமாகவும்
பஎக என்னும் கொழுப்புச் சத்து 150மி.கி -க்கு அதிகமாகாமலும்
மொத்த கொலஸ்ட்ரால் 200 மி.கிக்கு மேற்படாமலும் இருப்பது நல்லது.
* HDL என்னும் கொழுப்புச் சத்து அதிகமாக இருந்தால் இதயத்திற்கும் ரத்தக் குழாய்க்கும் நல்லது.
* மாதம் ஒருமுறை சிறுநீரில் புரதச்சத்து (Albumin) இருக்கிறதா என்பதையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு புரதச்சத்து சிறுநீரில் வெளியானால் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து மருத்துவ ஆலோசனையைப் பெற்றால் சிறுநீரக செயலிழப்பைத் தடுக்க முடியும்.
* ரத்தத்தில் யூரியா (Urea) 40 மி.கிக்கு மேற்படாமலும் கிரியேடினின் (Creatinine) 1.4 மி.கிக்கு மிகாமலும் இருப்பது அவசியம்.
* கண்களை வருடத்துக்கு ஒருமுறையாவது கண் மருத்துவரிடன் முறையாகப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
தேவைப்படும்போது இதய பரிசோதனை முறைகளான ECG, TMT, Echo போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கொள்ள வேண்டும்.
* நீண்ட நாள் நீரிழிவு நோயினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வலியில்லாத மாரடைப்பு நோய் (Silent Myocardial Infarction)) ஏற்படும்.
* அந்த வகையான மாரடைப்பு வியாதியை திடீரென்று மூச்சு வாங்குதல் போன்றஅறிகுறிகளால் தெரிந்து கொள்ளலாம்.
* நீண்ட நாள் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நரம்புகளின் செயலிழப்பால் பாதங்களில் உணர்ச்சி யற்ற நிலைமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் காலில் ஏற்படும் புண்கள் வலியை ஏற்படுத்தாது, நோயாளிகள் அதனைக் கவனிக்காமல் விட்டு விடுவார்கள் .
அந்தப் புண்கள் சீக்கிரமாகவே கிருமிகளால் பெரிதாவதால் கால்களை திடீரென்று இழக்கும் அபாயம் உள்ளது.
HbA1c என்ற ரத்தப் பரிசோதனையை வருடம் இருமுறைசெய்து கொள்வதன் மூலம் நம் உடலில் உள்ள சர்க்கரை நோய் கடந்த மூன்று மாதங்களில் கட்டுப்பாட்டில் உள்ளதா என தெரிந்து கொள்ளலாம்.
*நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்கு நான்கு முறைகள்.
1. அளவான சரிவிகித உணவும் , உணவு முறை மாற்றங்களும்
2. உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறைமாற்றங்கள்.
3. மாத்திரைகள் மற்றும் இன்சுலின் ஊசி மருந்து
4. நீரிழிவு நோயைப் பற்றி முக்கிய விளக்கங்களை நோயாளிகள் தெரிந்து கொள்ளுதல்.
* நீரிழிவு நோயாளிகளின் உடலில் குறைந்த அளவே இன்சுலின் சுரக்கும் தன்மை இருப்பதால் அதற்கேற்ப உணவுக் கட்டுப்பாடும் உணவுமுறை மாற்றங்களும் தேவைப்படலாம்.
உண்ணும் உணவில் உள்ள கலோரிகள் விவரம்.
ஒரு கிராம் புரதச்சத்தில் 4 கலோரிகள்
ஒரு கிராம் கொழுப்புச் சத்தில்..9 கலோரிகள்
ஒரு கிராம் மாவுச்சத்தில்…….4 கலோரிகள்
மதுவில் உள்ள ஒரு கிராம் ஆல்கஹாலில் 7 கலோரிகள்.
சராசரியாக தேவையான
மொத்த கலோரி உணவு 1500-2500 கலோரிகள்
மாவுச்சத்தின் மூலம் 60 – 65% கலோரிகள்
கொழுப்புச்சத்தின் மூலம் 25 – 30% கலோரிகள்
புரதச்சத்தின் மூலம் 10 – 15% கலோரிகள்
* மாவுச் சத்து
சமைக்கப்படாத அரிசி, கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு ஆகிய தானியங்களில் நூறு கிராம் எடையில் சுமார் 350 கலோரிகள் அளவு சக்தி உள்ளது.
சர்க்கரை, வெல்லம் போன்றவற்றில் நேர்நிலை சர்க்கரைச் சத்து மட்டுமே உள்ளதால், இவை ஜீரணிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் சாப்பிட்டவுடன் குடலில் இருந்து விரைவாக ரத்தத்தில் கலக்கும். எனவே இவற்றைநேரடியாக உண்பதைத் தவிர்ப்பதுடன் நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை, வெல்லம் கலந்த இனிப்புப் பண்டங்களை உட்கொள்ளவும் கூடாது.
அரிசியைவிட, கோதுமை, கம்பு , கேழ்வரகு ஆகிய தானியங்களில் நார்சத்து, புரதச்சத்து மற்றும் தாதுப் பொருட்கள் மிகுந்துள்ளன எனவே அரிசியுடன், மேற்கூறிய தானிய வகைகளில் ஏதாவது ஒன்றை சம அளவில் சேர்த்துக் கொள்வது உடல் நலத்திற்கு நல்லது. கிழங்கு வகைகளில் மாவுச்சத்து அதிகம் உள்ளதால் அவற்றைத் தவிர்க்கவும்.
புரதச்சத்து
பயிறு வகைகளில் புரதச்சத்து மிகுதியாக உள்ளது, இவற்றில் 100 கிராம் எடை அளவில் 300 முதல் 350 கலோரிகள் வரை உள்ளது.
இறைச்சி, மீன், பால், முட்டை போன்றவற்றிலும் சோயாவில் உள்ளது.
தோல் நீக்கப்படாத கறுப்புக்கடலை, பச்சைப் பயறு, காராமணி, கொள்ளு, பச்சைப் பட்டாணி ஆகியவற்றில் நார்ச்சத்தும், இரும்புச்சத்தும் மிகுதியாக உள்ளன.
கொழுப்புச்சத்து
கொழுப்புச்சத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன. அவை
1. நிறைவு நிலை கொழுப்புச்சத்து (Saturated fat)
2.நிறைவு நிலை இல்லா ஒரு சீர் கொழுப்புச் சத்து (Mono unsaturated Fat)
3.நிறைவு நிலை இல்லா பல சீர் கொழுப்புச்சத்து (Poly unsaturated Fat)
* தேங்காய் எண்ணெய் , நெய், வெண்ணெய், வனஸ்பதி ஆகியவற்றில் நிறைவுநிலை கொழுப்புச் சத்து அதிகம் உள்ளது.
* கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றில் நிறைவுநிலையில்லா ஒரு சீர் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளது.
* சூரியகாந்தி எண்ணெயில் நிறைவுநிலை இல்லா பல சீர் கொழுப்புச்சத்து அதிகம் உள்ளது.
* நிலக்கடலை எண்ணெயில் 50% நிறைவுநிலை இல்லா ஒரு சீர் கொழுப்புச்சத்தும், சுமார் 30% நிறைவு நிலை இல்லா பல சீர் கொழுப்புச்சத்தும் 20% நிறைவு நிலை கொழுப்புச்சத்தும் உள்ளது.
* நல்லெண்ணெயில் ((Gingelly Oil)) நிறைவு நிலை இல்லா ஒரு சீர் மற்றும் பல சீர் கொழுப்புச் சத்தும் சம அளவில் மிகுந்துள்ளது.
பனை எண்ணெயில் (palm oil) நிறைவு நிலை கொழுப்புச் சத்தும், நிறைவு நிலை இல்லா ஒரு சீர் கொழுப்புச்சத்தும் சம அளவில் உள்ளது.
* தேங்காய் எண்ணெய், நெய், வெண்ணெய், வனஸ்பதி, இறைச்சி கொழுப்பு ஆகியவற்றைஉணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
* தானிய வகைகளிலும் பருப்பு, நிலக்கடலை, முந்திரி, பாதாம் போன்றஉணவு வகைகளிலும் உள்ள கொழுப்புச்சத்தை கண்ணில் தெரியாத கொழுப்புச் சத்து என்கிறோம். இவற்றையும் நாம் உண்ணும் உணவில் கணக்கெடுத்துக் கொள்ள வேண்டும்.
உடலுக்குத் தேவைப்படும் மொத்த கலோரிகளில் பல கொழுப்புச்சத்திலிருந்து கிடைக்கும் கலோரிகள் 25 – 30 க்கு மேற்படாமல் இருக்க வேண்டும்.
காய்கறி மற்றும் கீரை வகைகள்:
* பூமிக்கு மேலே விளையும் காய்கறிகளை, முடிந்த அளவு தோல் நீக்காமல் பச்சையாகவோ, வேகவைத்தோ, வயிறு நிறையும் வரை மற்றஉணவுகளுடன் உண்ணலாம்.
* பூமிக்கு கீழே விளையும் காய்கறிகளில் கிழங்கு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
* காய்கறி மற்றும் கீரை வகைகளில் 100 கிராம் அளவில் சுமார் 10 முதல் 50 கலோரி அளவே உள்ளது.
மேலும் அவற்றில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுத் பொருட்கள் மிகுந்தும், கலோரிகள் குறைந்தும் காணப்படுவதால், காய்கறி, கீரைகளை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றிலுள்ள நார்ச்சத்து, குடலில் உள்ள மாவுச்சத்து விரைவாக ரத்தத்தில் கலப்பதைத் தடுக்கிறது.
பழவகைகள்
* பழங்களில் வாழைப் பழம், சப்போட்டா ஆகிய வற்றில் 100 கிராமில் 100 கலோரிகள் அளவு உள்ளது. எனவே இவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
* ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, வெள்ளரிக்காய் ஆகியவற்றில் குறைவான சர்க்கரை உள்ளது.
* பழங்கள் மற்றும் காய்கறி, கீரைகளில் ரத்தக் குழாய்களைப் பாதுகாக்கக்கூடிய வைட்டமின்களும் தாதுப் பெருட்களும் உள்ளன.
பால் வகைகள்:
* உடல் எடைக்கு ஏற்ப, 400 முதல் 600 மில்லி லிட்டர் வரை கொழுப்பு நீக்கிய பால் அருந்த வேண்டும்.
மிக சில உணவு வகைகளையே தவிர்க்க வேண்டியிருக்கும், பெரும்பாலும், உண்ணும் அளவுதான் முக்கியமானதாகும். குடும்பத்தில் உள்ள அனைவரும் நீரிழிவு நோயாளிகளின் உணவுமுறை மாற்றங்களை அறிந்திருக்க வேண்டும்.
மனத்தில் சோர்வும் வாழ்க்கையில் வெறுப்பும் இல்லாமல், இனிமையாகவும், இயல்பாகவும் வாழலாம்.
நார்ச்சத்துள்ள மற்றும் கலோரி குறைவாக உள்ள உணவுகளை அதிக அளவு உட்கொள்ள வேண்டும். அதனால் வயிறு நிறையும் உணர்வு ஏற்பட்டு பசி அடங்கும்.
நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய சில அன்றாட உணவுகள்
சர்க்கரை, ஐஸ்கிரீம், வெல்லம், ஜாம், கல்கண்டு, இனிப்புப் பலகாரங்கள். தேன், மா, பலா, வாழைப்பழங்கள், குளுக்கோஸ், சப்போட்டா, உலர்ந்த திராட்சை, பேரிச்சம் பழம், சாக்லேட், வெண்ணெய், நெய், வனஸ்பதி, தேங்காய் எண்ணெய், கேக், முட்டையின் மஞ்சள் கரு, கொழுப்பு அதிகம் உள்ள துரித உணவுகள் – முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகள், கிழங்கு வகைகள், நிலக்கடலை முதலியன.
* நீரிழிவு நோயாளிகள் தடையின்றி உண்ணக் கூடிய சில அன்றட உணவுகள்
* பூமிக்கு மேலே விளையும் காய்கறிகள், பச்சை உணவு களான வெள்ளரி, தக்காளி, வெங்காயம், பச்சைப் பயறு போன்றவை.
* கீரை வகைகள்
* பழ வகைகளில் ஆப்பிள், சாத்துக்குடி, பப்பாளி போன்றவை.
இரண்டு அல்லது மூன்று வேளைகளில் உணவை உண்பதற்குப் பதிலாக, தினமும் அந்த உணவையே ஆறு அல்லது ஏழு வேளைகளில் பகிர்ந்து உட்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரின் உடல் எடை மற்றும் உடல் உழைப்பைப் பொறுத்து, உடலுக்குத் தேவைப் படும் கலோரிகள் மாறுபடலாம். இதனால் ஒவ்வொரு வேளையும் அவர்கள் உண்ணும் உணவின் அளவும் வேறுபடலாம்.
அசைவ உணவு உண்பவர்கள், அதற்கான கலோரி அளவைக் கணக்கிட்டு உணவு மாற்றம் செய்து கொள்ளலாம். உணவு மாற்றங் களையும் உணவின் அளவையும், சர்க்கரை வியாதி கட்டுக்குள் வந்த பிறகும், வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியிருக்கும்.
மாத்திரை மருந்து உட்கொள்ளும் சர்க்கரை நோயாளிகளுக்கு விரதங்கள்கூடாது..
இனிப்புச் சுவைக்காக, டீ, காபி போன்ற பானங்களில் சேர்த்துக் கொள்ள, கலோரி மதிப்பில்லாத Sweetex, Sugar Free போன்ற மாத்திரைகள் கடைகளில் கிடைக்கின்றன, இதை கருவுற்ற பெண்கள் உட்கொள்ளக் கூடாது, மற்றவர்களும் மருத்துவ ஆலோசனைக்குப் பிறகே இனிப்பு மாத்திரைகள் உபயோகிக்க வேண்டும்.
உடற்பயிற்சி:
உடற்பயிற்சியினால் நீரிழிவு நோயாளிகளுக்கு கீழ்க்காணும் நன்மைகள் உண்டாகும்.
* சர்க்கரை அளவு ரத்தத்தில் குறையும். இன்சுலின் உடலில் சிறப்பாகப் பணி செய்யும், இதனால் நோயாளிக்கு சர்க்கரை கட்டுப் பாட்டுக்குத் தேவைப்படும் இன்சுலின் மற்றும் மாத்திரைகளின் அளவு குறையும்.
* ரத்தக் குழாய்களுக்கு நன்மை பயக்கும் HDL என்னும் கொழுப்புச்சத்து அதிகமாவதுடன். தீமை பயக்கும் LDL மற்றும் TGL என்னும் கொழுப்புகள் குறையும்.
* கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகமாவதால் கால்கள் பாதுகாக்கப்படும்.
* மனத்தில் தெம்பும் தெளிவும் ஏற்பட்டு, உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்பட்டு, தன்னம்பிக்கை பிறக்கும்.
* வேகமாக வளர்ந்து வரும் நகரச் சூழ்நிலை களாலும் அதிகமான தானியங்கி வாகனங்களின் உபயோகத்தாலும், மனிதனின் உடல் உழைப்பு மிகவும் குறைந்துவிட்டது.
* நீரிழிவு நோயாளிகளுக்கு உடற்பயிற்சி அவசியமானது. ஆனால், உடற்பயிற்சியின் போது, நாடித்துடிப்பின் அளவு, வயதுக்கு தகுந்தது போல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நிமிடத்தில் நாடித்துடிப்பின் எண்ணிக்கை, 200 – லிருந்து நோயாளியின் வயதைக் கழித்த பிறகு வரும் எண்ணில் 70% மேற்படாமல் இருக்குமாறு அளவோடு உடற்பயிற்சி செய்ய வேண்டும். உதாரணத்திற்கு 50 வயது நீரிழிவு நோயாளிக்கு, உடற்பயிற்சி செய்யும்போது மிகைப்படாமல் இருக்க வேண்டிய நாடித்துடிப்பைக் கீழ்க்காணும் வகையில் கணக்கிடலாம்.
220-50 ‘ 170 170-ல் 70% அளவு ‘ 119
எனவே , அவர் நாடித்துடிப்பு நிமிடத்துக்கு உடற்பயிற்சியின் போது சுமார் 120-க்கு மேல் போகக் கூடாது.
* ஓடுதல், விளையாடுதல், நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல், நடத்தல் போன்ற உடற்பயிற்சிகள் செய்யலாம்.
* தினமும் அனைவரும் மூன்று முதல் ஐந்து கிலோமீட்டர் வரை மிதமான வேகத்தில் நடத்தலே சிறந்த பாது காப்பான உடற்பயிற்சி.
* புகைப்பிடித்தலை அறவே விட்டொழிக்க வேண்டும். ஏனெனில், நீரிழிவு நோய் உள்ளவர் களுக்கு இந்தப் பழக்கம் மாரடைப்பு நோயை விரைவில் ஏற்படுத்தும்.
* மது அருந்துதல் நோயாளிகளுக்கு நல்லதல்ல.
* உணவில் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும்.
* ஓய்வு நேரங்களிலும், தொலைக்காட்சி பார்க்கும்போதும், நொறுக்குத் தீனி உண்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
* துரித உணவுகள் சர்க்கரை நோயை அதிகமாக்கும்.
* செயற்கை பானங்கள் அருந்தாமல், இயற்கை பானங்களான மோர், தக்காளி, எலுமிச்சை போன்ற பழச்சாறுகள் அருந்தலாம்.
* மன அழுத்தத்தைக் குறைக்க, தினமும் யோகா மற்றும் தியானப் பயிற்சிகளை அரை மணி நேரம் செய்யலாம்.
இன்சுலின் ஊசி யாருக்குத் தேவை?
சிறு வயதில் நீரிழிவு நோய் கண்டறியப்பட்ட (சுமார் இருபது வயதிற்குள்) அனைவருக்கும் இன்சுலின் ஊசி கட்டாயம் தேவைப்படும். வளர்ந்த பருவத்தில், புதிதாகக் கண்டறியப் பட்ட நோயாளிகளில் 50% பேருக்கு, உணவுமுறை, உடற்பயிற்சி, வாழ்க்கை மாற்றங்கள் ஆகியவை மூலமாகவே நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும்.
சர்க்கரை குறைப்பு மாத்திரைகள் :
கணையத்தை ஊக்குவித்து, இன்சுலின் அளவை அதிகப்படுத்துதல்…
திசுக்களில் இன்சுலின் செயல்பாட்டுத் திறனை ஊக்குவித்தல்.
குடலிலிருந்து ரத்தத்தில் கலக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துதல்.
கல்லீரலில் உற்பத்தியாகும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துதல் போன்ற வழிகளில் மாத்திரைகள் வேலை செய்கின்றன.
இன்சுலின் ஊசியின் அவசியம்..
* மாத்திரைகளால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியாமல்போகும் போது…
* துரிதமாக சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலைகளில்…
* அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும்..
* கருவுற்ற காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய்க்கு…
* சிறு வயதில் (Type1) ஏற்படும் நீரிழிவு நோய்க்கு…
* தொற்று நோய் மற்றும் வேறு வியாதிகளால் கடுமையாக பாதிக்கப்படும்போது…
* ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாகி மயக்க நிலை அடைபவர்களுக்கு..
இன்சுலின் ஊசி நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தேவைப்படலாம்.
தனக்குத்தானே இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் முறையை மருத்துவரிடம் கேட்டுப் பழகிக் கொள்ள வேண்டும். தற்சமயம் வலி இல்லாமல் பேனா மூலம், மிகச் சிறிய ஊசியால் இன்சுலினை உடலில் செலுத்தும் முறைஉள்ளது.
இதை பயணம் செய்யும் போது கூட மிக எளிதாக உபயோகிக்கலாம்.
தாழ் சர்க்கரை நிலை
சர்க்கரை குறைப்பு மருந்து எடுத்துக் கொண்ட பின் வழக்கம்போல் சாப்பிடாவிட்டால்…
வழக்கத்துக்கு அதிகமான உழைப்பு, உடற் பயிற்சி மற்றும் விளையாட்டினால்…
தவறுதலாக அதிகமான மருந்து எடுத்துக் கொண்டால்….
தாழ் சர்க்கரை நிலை ஏற்படும்.
தாழ் சர்க்கரை நிலை என்பது பெரும்பாலும் சர்க்கரை குறைப்பு மாத்திரை மற்றும் இன்சுலின் ஊசி எடுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்குத்தான் ஏற்படும்.
தாழ் சர்க்கரை நிலையின் அறிகுறிகள் எவை?
அதிக பசி, அதிக வியர்வை, கை கால் நடுக்கம், உடல் சோர்வு, மார்பு படபடப்பு. தலை வலி, குழப்பமான நிலை போல் நடத்தல், மயக்கம் மற்றும் வலிப்பு.
சர்க்கரை, கல்கண்டு, மிட்டாய் சாக்லெட் போன்றவற்றை உடனே உட்கொண்டால் மேற்கூறிய அறிகுறிகள் மறைந்துவிடும்.
தாழ் சர்க்கரை நிலையால் மயக்க அடைந்த நிலையில், உடனே குளுக்கோஸ் நீரை ரத்த நாளங்களின் வழியாகச் செலுத்த வேண்டும், அவ்வாறு செய்யாவிடில் மரணம் கூட ஏற்படலாம்.
தாழ் சர்க்கரை நிலையைத் தவிர்ப்பது எப்படி?
தாழ் சர்க்கரை நிலையின் ஆரம்ப அறிகுறிகள் நோயாளிக்கு நன்கு அறிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும்.
சிறிதளவு சர்க்கரையையோ மிட்டாயையோ நோயாளிகள் எப்போதும் பையில் வைத்திருக்க வேண்டும்.
அடையாள அட்டையில், பெயர், வயது, முகவரி, தொலைபேசி எண், மருந்துகளின் விவரம், மருத்துவரின் தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் இருக்க வேண்டும்.
அவர் பணிபுரியும் இடத்தில் சர்க்கரை வியாதி உள்ளவர் என்று மற்றவர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும்.
சர்க்கரை குறைப்பு மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் தூங்கும்போது படுக்கை அறையின் கதவை உள்பக்கம் தாளிடக் கூடாது. இதனால், தாழ் சர்க்கரை நிலையினால் ஆபத்து ஏற்படும்போது மற்றவர்கள் விரைந்து உதவ முடியும்.
சர்க்கரை குறைப்பு மாத்திரை மற்றும் இன்சுலின் ஊசி ஆகியவற்றை சாதாரணமாக சாப்பாட்டிற்கு அரை மணி நேரம் முன் எடுக்க வேண்டும். மருந்து உண்ட பின் உணவைத் தள்ளிப்போடக் கூடாது.
இன்சுலின் அனலாக் (Insulin Analog) என்னும் புதுவகை இன்சுலின் உபயோகப்படுத்துவதால், தாழ் சர்க்கரை நிலை பெரும்பாலும் ஏற்படுவதில்லை.
இன்றுமுதல் நான் ஒன்றுபோல் செயல்படுவேன்
வாழ்க்கையை அற்புதமாக வாழ்வதற்காக பல ரகசியங்களில் மிகப்பெரிய ஒரு ரகசியம்தான், ஒன்று போல செயல்படுவது. ஒத்திருந்து செயல்படுவது என்றால், மனதும், உடலும் ஒரே திசையில் செல்வது உங்கள் மனதில் என்ன இருக்கிறதோ அதே போல செயல்படுவது.
கையில் உள்ள வேலையில்தான் நமது மனம் கவனம் செலுத்த வேண்டும். அந்த வேளையில் உங்கள் முழு கவனத்தையும் செலுத்துங்கள், மற்ற உலக விஷயங்களிலிருந்து ஒதுங்கி விடுங்கள். எந்த ஒரு தடையும், கவனச் சிதறலும் வேண்டாம். இது படிப்பிற்கு மட்டுமல்ல. பல விஷயங்களுக்கு உதாரணமாக உணவு உண்பதற்கும் பொருந்தும், பலர் டிவி பார்த்துக் கொண்டே சாப்பிடுவதை பார்த்திருக்கிறோம். அவர்களால் சாப்பிடவும் முடியாது. முழு மனதுடன் டி.வியையும் பார்க்க முடியாது. தினமும் பலமுறைகளில் உள்ள வேலையில் கவனமாக இருக்கிறீர்களா என உங்களையே கேட்டுக் கொள்ளவும். அப்படி இருந்தால் தொடரவும். அப்படி இல்லையென்றால் கவனத்தைத் திருப்பி வேலையைத் தொடரவும். கவனம் செலுத்த முடியாது என தோன்றினால், தடைப்பட்டால் முதலில் உங்களுக்கு மாற்றம் வேண்டும். நீங்கள் ரசிக்கும் ஏதாவது ஒன்றை செய்துவிட்டு பின் அந்த வேலையை தொடரவும்.
இதை வாழ்க்கையின் பல நிலைகளில் பின்பற்றி முடிவைப் பாருங்கள்.