ஆதரவாளர்கள்

திங்கள், 2 ஏப்ரல், 2012

MADAV WIN RTI SUN NEWS டி.என்.பி.எஸ்.சி., மூலம் அரசுப் பணிக்கு ஆட்கள் தேர்வு முறையாக நடக்கிறதா?


http://www.tamiltwist.com/2011/07/sun-news-12-07-11-sun-tv-sun-news.htmlhttp://www.tamiltwist.com/2011/07/sun-news-12-07-11-sun-tv-sun-news.html

சென்னை: முறைகேடுகளுக்கும், ஊழல்களுக்கும் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கும் வகையில், டி.என்.பி.எஸ்.சி.,யால் நடத்தப்படும் தேர்வு நடைமுறைகள் மாறிவருகின்றன. ஒளிவுமறைவின்றி போட்டித்தேர்வுகளை நடத்தி, தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டிய இந்த அமைப்பில், பல ஆண்டுகளாக பல்வேறு தில்லுமுல்லுகள் நடந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. வினாத்தாள்களை பணத்திற்கு விற்பது, பெரும் தொகையை பெற்றுக்கொண்டு நேர்முகத்தேர்வில் மதிப்பெண் வழங்குவது, பணம் கொடுப்பவர்களுக்கு தனி தேர்வு மையம் அமைத்து,"காப்பி' அடிக்க உதவுவது என அனைத்து முறைகேடுகளும் அரங்கேறி வருவதாக கூறப்படுகிறது.
தமிழக அரசுத்துறைகளுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்யும் மிகப்பெரிய அமைப்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) செயல்பட்டு வருகிறது.
நூறு காலியிடங்களுக்கான போட்டித்தேர்வு என்றாலும், அதற்கு ஒரு லட்சம் பேர் போட்டிபோட வேண்டிய நிலை தற்போது உள்ளது. கடைநிலை வேலையாக இருந்தாலும், அரசுப் பணியாக இருக்க வேண்டும் என்பது, ஒவ்வொரு இளைஞனின் கனவாக இருக்கிறது. இதற்காக, ஒவ்வொருவரும் இரவு பகலாக உழைத்து, கஷ்டப்பட்டு படித்து, தேர்வெழுதுகின்றனர். தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை வைத்து தேர்வெழுதுபவர்களின் விடைத்தாள்கள் சரியான முறையில் மதிப்பீடு செய்யப்பட்டு, யாருடைய தலையீடும் இன்றி, நியாயமான முறையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறதா என்பது தான் தற்போதுள்ள மிகப்பெரிய கேள்வி.
படித்த, நேர்மையான, சமூக சேவை மனப்பான்மையுள்ளவர்களை, இந்த அமைப்பின் முக்கிய பதவிகளில் நியமனம் செய்துவந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது. சில கோடிகளை கொட்டிக்கொடுத்தால், எந்த பதவியை வேண்டுமானாலும் பெறலாம் என்ற நிலை, முந்தைய ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டது. ஓய்வு பெறும் நிலையில் இருந்தவர்களுக்கெல்லாம், டி.என்.பி.எஸ்.சி., - மாநில தகவல் ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம் என பல்வேறு அமைப்புகளில் பதவிகள் வாரி வழங்கப்பட்டன.
கோடிகளைக் கொடுத்து பதவிகளை வாங்கினால், பதவி வாங்கியவர்கள் சேவையா செய்வார்கள்? தேர்வாணையத்தில் பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்களை, ஏஜன்டுகளாக பயன்படுத்தி, மிக ரகசியமாக முன்கூட்டியே கேள்வித்தாள்களை விற்பது, நேர்முகத்தேர்வில் பணம் பெற்றுக்கொண்டு கூடுதல் மதிப்பெண்களை வழங்குவது, அதேபோல் பணம் கொடுப்பவர்களுக்கென தனி மையம் அமைத்து, "காப்பி' அடிக்க உதவுவது என மூன்று வகைகளில் முறைகேடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து, தேர்வாணையத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் அறிந்து வைத்துள்ளவர்கள் கூறியதாவது: வழக்கமாக, போட்டித்தேர்வுகள், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் 300 மையங்களில் நடக்கும். நகரப் பகுதிகளில், போக்குவரத்து வசதி நிறைந்த பகுதிகளில் தான் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும். ஆனால், பணம் கொடுக்கும் தேர்வர்களுக்கு மட்டும், நகரங்களுக்கு அப்பாற்பட்டு, உள் பகுதியில் இருக்கும் ஏதாவது ஒரு பொறியியல் கல்லூரியில், தேர்வு மையம் அமைப்பார்கள். அங்கு, அதிகாரிகள் யாரும் சென்று உடனடியாக பார்வையிட முடியாது.
தலைமையிடத்தில் இருந்து கிளம்பிச் செல்வதற்குள் தேர்வு முடிந்துவிடும். இந்த வகையில், குறிப்பிட்ட மையத்தில் தேர்வெழுதுபவர்கள், "காப்பி' அடிக்க,தேர்வாணையத்தின் மேல்மட்டத்தில் உள்ள சிலர் உதவுகின்றனர். ஒரு முறை, நீலகிரி மாவட்டத்தில் மூன்று தேர்வு மையங்களை அமைத்தனர். சென்னை, காஞ்சிபுரம், நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எல்லாம், நீலகிரி மாவட்ட தேர்வு மையங்களில் தேர்வை எழுதினர். இதன் பின்னணியில், பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக அப்போதே கூறப்பட்டது.
இதற்கு அடுத்ததாக, மிக ரகசியமாக கேள்வித்தாளை விற்கும் செயல்களும் நடக்கின்றன. இதையெல்லாம் அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது. "காதும் காது வைத்தாற்போல்' காரியத்தை முடிப்பார்கள். அடுத்ததாக, நேர்முகத்தேர்வில் முழுமையான மதிப்பெண்கள் வழங்குவதிலும் முறைகேடுகள் நடக்கின்றன. சென்னை உள்ளிட்ட சில இடங்களில் உள்ள போட்டித்தேர்வு பயிற்சி மையத்தின் அதிபர்கள், தேர்வாணையத்தில் உள்ளவர்கள் துணையுடன், பல லகரங்களை கொடுத்து வேலை வாங்குகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கேள்வித்தாள், "லீக்' ஆவது எங்கே? போட்டித்தேர்வுகளுக்கான கேள்வித்தாள்கள், ஒவ்வொரு மாவட்ட கருவூலகங்களுக்கும், "சீல்' இடப்பட்டு அனுப்பப்படுகின்றன. அந்த கேள்வித்தாள்களை, மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் முன்னிலையில் பிரித்து, கடைசி நேரத்தில் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இந்த இடங்களில் பெரும்பாலும் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்று, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தேவையை விட கூடுதலாக அச்சிடப்படும் கேள்வித்தாள்களின் சில பிரதிகள், தேர்வாணைய அலுவலகத்தில் இருக்கும். இவை தான் ஏஜன்டுகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன என்று கூறப்படுகிறது.

வெளிப்படையான தேர்வு முறை தேவை: கேரள அரசு தேர்வாணையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்கின்றன. அங்கு, போட்டித்தேர்வு முடிந்ததும், அனைவரது மதிப்பெண்களும் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. சரியான விடைகளுக்கு மதிப்பெண்கள் வழங்காதது உள்ளிட்ட பிரச்னைகளை தேர்வாணையத்தின் கவனத்திற்கு கொண்டுவர, தேர்வர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவர்களது குறைகளை கேட்டபின், அது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன்பின், இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடப்படுகிறது. மேலும், தேர்வர்களின் விடைத்தாள் நகல்களும் அங்கு வழங்கப்படுகின்றன. இதுபோன்ற வெளிப்படையான நடைமுறைகள் தமிழகத்தில் கிடையாது. இதுதான், முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறது என்று, விஷயம் அறிந்தவர்கள் கோடிட்டு காட்டுகின்றனர். எனவே, தேர்வு முறைகளில் ஒட்டுமொத்தமாக மாற்றம் கொண்டுவர, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி ஒரு நிலையை உருவாக்கினால், முறைகேடு செய்வதற்கான வழிகளே இருக்காது.

குரூப் -2 கேள்வித்தாள் விடை 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை? : நாளை (30ம் தேதி), குரூப்-2 போட்டித்தேர்வு நடக்கிறது. நகராட்சி கமிஷனர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், உதவிப்பிரிவு அலுவலர் உட்பட 37 பதவிகளில் 6,000த்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப தேர்வு நடக்கிறது. 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான கேள்வித்தாள் விடைகள், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள பத்தரக்கோட்டை மற்றும் கிருஷ்ணங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், ஐந்து லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்தப் பகுதிகளில், வி.ஏ.ஓ., தேர்வுக்கான விடைகள், விற்பனை செய்யப்பட்டதாகவும், அதே முறையில் தற்போது குரூப் -2 தேர்வுக்கான விடைகள் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

வி.ஏ.ஓ., தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்களை வெளியிடாதது ஏன்? : சமீபத்தில் வி.ஏ.ஓ., தேர்வு முடிவு வெளியானது. பத்து லட்சம் பேர் பெரும் எதிர்பார்ப்புடன் தேர்வெழுதினர். இதில், தேர்வு பெற்றவர்களின் பதிவெண்களை மட்டும் டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. ஆனால், அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் விவரத்தையோ, ஒட்டுமொத்தமாக தேர்வெழுதியவர்களின் மதிப்பெண்களின் விவரங்களையோ இதுவரை இணையதளத்தில் வெளியிடவில்லை. தேர்வெழுதியவர்கள், தாங்கள் பெற்ற மதிப்பெண்களின் விவரங்களை அறிய உரிமை உண்டு. அதனடிப்படையில், வெளிப்படையாக மதிப்பெண் விவரங்களை வெளியிடுவதுடன், விடைத்தாள் நகலையும் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தேர்வெழுதியவர்கள் எதிர்பார்க்கின்றனர். இதில் எதையுமே செய்வதற்கு தேர்வாணையம் முன்வராத பட்சத்தில், தேர்வாணையத்தின் மீதான நம்பகத்தன்மை முற்றிலும் சீர்குலைந்துவிடும்.

கருத்துகள் இல்லை: