
இதற்கு பதில் அளித்த ஆணையர் ராஜேந்திரன், கடமையை செய்ய லஞ்சம் கேட்பது மிகப் பெரிய குற்றம். காவல்துறையினர் பொது மக்களிடம் லஞ்சம் கேட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். லஞ்சம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் என் செல்போனில் (9840983832) புகார் செய்யலாம் என்றார்.
லஞ்சம் கேட்டா என்கிட்ட சொல்லுங்க! – சென்னை கமிஷனர் அதிரடி
வாகன சோதனை என்ற பெயரில், அல்லது புகார் கொடுக்கச்
செஸ்ஸும் இடங்களில் போலீசார் யாரேனும் லஞ்சம் கேட்டால் என்னிடம் விவரம் சொல்லுங்கள், புகார் சொல்லுங்கள். அதற்காக எனது மொபைல் நம்பரும் தருகிறேன்” என்கிறார் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ராஜேந்திரன்.

அவர் இன்று நிருபர்களிடம் கூறியது:
சென்னையில் லஞ்ச ஒழிப்புப் போலீசாரின் வேட்டையில், போக்குவரத்து போலீசார் சிக்கியுள்ளது குறித்த அறிக்கை, இன்னும் எனக்கு வரவில்லை. லஞ்சம் என்பது சமுதாயக் குற்றம். பொதுமக்கள் கொடுப்பதால்தான், போலீஸ்காரர்கள் லஞ்சம் வாங்குகின்றனர். பிச்சைக்காரனிடம் பத்து முறை பணம் இல்லை எனத் தெரிவித்தால், அவன் மீண்டும் வரமாட்டான்.
அதேபோல, லஞ்சம் கேட்கும் போலீசாரிடமும் பணம் இல்லை என திரும்பத் திரும்ப கூறுங்கள். லஞ்சம் கொடுக்காவிட்டால், வாகனங்களை நிறுத்தி விட்டுச் செல்லுமாறு போக்குவரத்து போலீசார் கூறினால், எனது மொபைல் எண்ணில் புகார் செய்யுங்கள்.
எனது மொபைல் நம்பரை இதற்காகவே பொதுமக்களுக்குத் தருகிறேன்:98409 83832
லஞ்சம் வாங்குவதைத் தடுக்கும் வகையில், போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டுனர்களிடம் ஸ்பாட் பைன் வசூலிக்காமல், விதி மீறல் குற்றப்பதிவு ரசீது மட்டும் வழங்கி, அபராதத் தொகையை போக்குவரத்து போலீஸ் அலுவலகத்தில் செலுத்துவது குறித்து, கூடுதல் கமிஷனரிடம் ஆலோசனை செய்த பிறகு அறிவிக்க உள்ளேன்.
போலீஸ் நிலையங்களில் போலீசார் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, அரசிடம் கேட்டுள்ளோம். தற்போது உள்ள போலீசார் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினால், நன்றாக இருக்கும்”, என்றார்.
டு போலீசார் பாதுகாப்பது என்றால் அவர்களே சில நேரங்களில் பழிகாரனாக மாறுவதும் உண்டு. வேலியே பயிரை மேய்ந்த கதையாக காவல்காரனாக இருக்க வேண்டியவன் திருடனாக மாறிய கதை மதுரையில் நடந்திருக்கிறது. போலீசில் பல பிரிவுகள் உண்டு போலீசுக்கே போலீஸ் இருப்பதுபோல நமது நாட்டில் பல பிரிவு கண்காணிப்பில் உண்டு . ஆனால் இந்த போலீசே குற்றவாளியாக நிறுத்தப்படுவது தலைக்குனிவான விஷயம் தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக