ஆதரவாளர்கள்

புதன், 4 செப்டம்பர், 2013

உச்சநீதி மன்றம் உத்தரவை வாபஸ் பெற்றது இந்தியன் குரலுக்கு கிடைத்த வெற்றி நாட்டுமக்களின் வெற்றி

இந்தியன் குரல் அமைப்பு தகவல் சட்ட ஆர்வலர்களுடன் இணைந்து நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி



இந்தியன் குரல் அமைப்பு 2013 ஆம் ஆண்டு இதே செப்டம்பர் மாதம் 13 ஆம் நாள் தகவல் ஆணையர்கள் நியமனம் குறித்த உத்தரவில் ஓய்வுபெற்ற அல்லது இந்நாள் முன்னாள் நீதிபதிகளை நியமனம் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு சட்டத் திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. விவாத மேடையில் பங்கேற்று உதவிய நன்மக்கள் மற்றும் நீதிக்காக போராடிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

தமிழ்நாடு தகவல் ஆணையம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்யக் கேட்டு ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம் நடத்தியபிறகு சட்டமன்றத்தில் குறைபாடுடைய ஆண்டறிக்கை தாக்கல்

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலி இடங்களை நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியதால் உடனடியாக ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டது

தகவல் சட்டத்தில் அரசியல் கட்சிகள் தகவல் கேட்கும் பொதுமக்களுக்கு தகவல் அளிக்கவேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை வரவேற்று துண்டுபிரசுரம் மூலம் மக்கள் அறியச் செய்தது

தகவல் சட்டத்தில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்களிக்க மத்திய அரசு திருத்தம் கொண்டுவருவதை கண்டித்து தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்ப்பட்ட துண்டுபிரசுரங்கள் விநியோகம்

தகவல் சட்ட ஆர்வலர்களை ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் தெருமுனைக் கூட்டம் ஊர்வலம் என்று போராட்டங்கள் தீவிரப்படுத்தி இந்தியன் குரல் போராடிவருகின்றது.

இந்தியன் குரல் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!! நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி !!

3 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் ஐயா

PC சொன்னது…

Excellent. Continue your good work.

PC சொன்னது…

You may also take up the issue of e Governance, Out dated Govt. Web sites, missing Citizen Charter etc.