ஆதரவாளர்கள்

வியாழன், 19 செப்டம்பர், 2013

தனியார் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை? - அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இது பொருந்தும்

"தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இட ஒதுக்கீட்டு பட்டியலில் பொது பிரிவில் சேர்க்கப்படுவார்கள் அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கும் இது பொருந்தும்"- புதிய இட ஒதுக்கீடு அமல்?


தாழ்த்தப்பட்ட ஏழை மக்கள் வாழ்வில் முன்னேற்றமும் சமூகத்தில் சமநிலையை அனைத்து சாதியினரும் பெறவேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் கொண்டுவரப்பட்ட சட்டம் தான் இடஒதுக்கீடு.

தாழ்த்தப்பட்ட மக்கள் பழங்குடியினர் பிற்படுத்தப் பட்டோர் மிகவும் பிர்ப்படுத்தப்பட்டோர் என பல பிரிவுகள் அதன் பலனை மக்கள் பெறும் வகையில் உருவாக்கம் செய்யப்பட்டது அதன் பிறகு வி பி சிங் அரசு கொண்டுவந்த மண்டன் கமிசன் அறிக்கையின் படி பல திருத்தம் அவ்வப்போது ஒதுக்கீடுகள் இவையெல்லாம் உண்மையில் சமூக முன்னேற்றத்திற்கு பயன்பட்டதா?

உண்மையில் பயன்பட்டது என்றால் ஏழைகள் சதவீதம் குறைந்தும்  முன்னேறிய மக்கள் சதவீதம் உயர்ந்தும் இருக்க வேண்டுமே 20 சதவீத வறுமை இன்று 60 சதவீதமாக உயர்ந்துள்ளதேன்?

அப்படி என்றால் இச்சட்டம் யாருக்கு பயன்படுகின்றது?

அதே பிரிவுகளை சார்ந்த நகர்ப்புற மக்கள் பெரும் தொழில் அதிபர்கள் உள்பட அரசு அலுவலர்களின் பிள்ளைகளும் பயன் பெறுகின்றார்கள். உண்மையான ஏழை மக்கள் பயனடைய திட்டம்?

ஒதுக்கீடு பெறுவதில் பெரும் பணக்காரர்களுக்கும் ஏழை மக்களுக்கும் போட்டியை  உருவாக்குகின்றது அப்போட்டியில் ஏழைகளின் குழந்தைகள் தோற்று வெளியேறும் நிலை தான் இப்பொழுது இருக்கும் இட ஒதுக்கீட்டு நடைமுறை.

பெரும்பான்மை  ஏழைக் குழந்தைகள் அரசு பள்ளியில் பயின்றவர்கள் அனால் அதே சமூகத்தை சார்ந்த நகர்ப்புற குழந்தைகளும் வசதிபடைத்த பெற்றோர்களின் பிள்ளைகளும் தரமான கல்வியைப் பெறுவதால் இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை பெறுகின்றார்கள் என்பது சரியா தவறா?

அப்படி வசதி பெற்றவர்கள் தொடர்ந்து தன பிள்ளைகளுக்கும் அந்த வாய்ப்பை பயன்படுத்துவதால் உண்மையில் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருக்கும் இடஒதுக்கீட்டு முறையில் மாற்றம் அவசியம் கொண்டு வர வேண்டுமென்று கேட்பது நியாயமா இல்லையா?

இட ஒதுக்கீடு பற்றிய விபரம் தெரியாத அறியாத ஏழை கிராம மக்கள் நம் தேசத்தில்  இருப்பது உண்மையா இல்லையா?

இதற்கு தீர்வான தீர்வாக - இந்நிலையில் மாற்றம் கொண்டுவர

1) பணக்காரர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்று ஒரு அளவு கொள் வைப்பது

ஆபத்து 
ஏழை மக்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு என்றால் அனைத்து பணக்காரர்களும் செல்வந்தர்கள் கூட லஞ்சம் கொடுத்து  ஏழை என்று சர்டிபிகேட் வாங்கிவிடுவர்

2) நகர்ப்புற மக்களுக்கு 50 சதம் கிராமப் புற மக்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு 

ஆபத்து 
பெரும்பான்மை பணக்காரர்களுக்கு நகரத்திலும் அவர்களது சொந்த ஊரின் கிராமத்திலும் வீடு உள்ளிட்ட நிலம் வசதி உள்ளது அதன்மூலம் நகரத்தில் உள்ள செல்வந்தர்கள் பயனடைய வாய்ப்பு 

3 நகர்ப்புற பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கும் கிராமப் புற பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கும் தலா 50 சதவீதம் இட ஒதுக்கீடு 

ஆபத்து 
நகர் பகுதியில் வாழும் ஏழை மக்கள் பணக்காரப் பிள்ளைகளுடன் போட்டி போட்டு படிக்கும் நிலை முடியுமா 

4) அனைத்து தனியார் பள்ளிகளிலும் 50 சதவீத இடங்களை அரசிடம் ஒப்படைப்பது 

ஆபத்து 
ஏற்க்கனவே 25 சதவீத் இடம் இலவசமாக தரவேண்டும் என்ற கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை தனியாற்பள்ளிகள் மேலும் லாபம் வரும் வகையில் ஒரு மாணவனுக்கு அரசிடமும் பணம் பெற்றுக்கொண்டு மாணவர்களிடமும் பெற்றுக் கொள்ளும் முறையை அமலாக்கம் செய்துவருகின்றது பெற்றோர்களும் தன குழந்தையின் கல்விக்காக இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பது தனியார் பள்ளிகளுக்கு மேலும் ஊக்கம் அளிக்கின்றது இந்நிலையில் 50 சதவீதம் என்றாலும் இதே நிலை தொடராது என்பதற்கு உத்திரவாதம் அரசு மட்டுமல்ல யாராலும் தரமுடியாது

 5) ஏற்க்கனவே கிராமப்புறத்தில் 10 ஆம் வகுப்பு வரை கல்வி பெற்ற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளதே அதையே இன்னும் அதிகப்படுத்தலாம் 

ஆபத்து 
 இது குறிப்பிட்ட அளவே அரசு பள்ளி தனியார் பள்ளிகள் எண்ணிக்கையை ஒப்பிடும்போது இது மிகக் குறைவானவர்களே பயனடைய முடியும்.

6)  6 ஆம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை கிராமப் புற அரசுப் பள்ளிகள் 50 சதவீதம் நகர்ப்புற அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 50 சதவீதம் மட்டுமே இட ஒதுக்கீடு  அனைத்து தனியார் பள்ளி மாணவர்கள் பொதுப்பிரிவில் தான் உயர்கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை பெற முடியும் என்று சட்டம் கொண்டுவந்தால்


போதுமான பள்ளிகள் இல்லை என்பதாலும் தனியார் பள்ளிகளை விட தரம் குறைவாக இருப்பதாலும் தான் வசதியானவர்கள் அரசு பள்ளியை விரும்புவது இல்லை இதே காரணத்தால் தான் ஏழைகள் இதையெல்லாம் சகித்துக்கொண்டு அங்கே தன பிள்ளைகளை சேர்க்கின்றனர்.

இப்படி ஒதுக்கீடு வழங்கினால் நிச்சயம் பணக்காரர்கள் தன பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்கப் போவது இல்லை ஏனென்றால் அவர்கள் தங்களது பொருளாதார நிலையை தங்கள் சொந்தங்களுக்கு கீழ் கண்ட வகையில் தான் தெரியப் படுத்துகின்றார்கள் 
வழிகளில் 
1) தங்களது பிள்ளைகள் படிக்கும் பள்ளிகள் 
2) தங்களது குடும்பப் பெண்களுக்கு நகைகள் 
3) வீடு அலங்காரம் வீட்டிலுள்ள பொருட்கள் பயன்படுத்தும் வாகனம்


உண்மையான இட ஒதுக்கீடு ஏழைகளுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்ப்படும் சமூக முன்னேற்றத்திற்கு பயனளிக்கும்

ஆபத்து 
  தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தூண்டப்பட்டு போராடுவார்கள் சட்டம் ஒழுங்கு கெடும் 
தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கை குறையும் 
அரசு பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்க்க வேண்டிய நிலை உருவாகும் சிபாரிசு லஞ்சம் பெருகும்

ஓரளவு தீர்வு
1) அரசு பள்ளிகள் போதிய உள் கட்டமைப்பு வசதிகள் செய்வது  அனைவருக்கும் இடம் போதிய அடிப்படை வசதி போதிய ஆசிரியர்கள் நியமனம் உடனடி நிறைவேற்றம்

2)  சட்டம் அமுலானது முதல் 6ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கே இச்சட்டம் கட்டுப்படுத்தும். என்று கூறுவதால் 6அம வகுப்பில் மட்டுமே முதல் ஆண்டில் சேர்க்கை இருக்கும் ஆகவே உள்கட்டமைப்புகளை செய்யவும் ஆசிரியர்கள் நியமனம் செய்வதும் போதிய அவகாசம் கிடைக்கும்

3) ஏற்கனவே ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு பழைய இட ஒதுக்கீட்டு முறையே இருக்கும் என்று உத்திரவாதம்

4) தனியார் பள்ளிகள் விரும்பினால் அந்த பள்ளிகளை அரசே ஏற்று நடத்துவது அதன் கட்டமைப்பு வசததிக்கு ஏற்றவாறு வாடகையை அரசிடம் இருந்து பள்ளிகள் பெற்றுக்கொள்ளலாம்

 5) ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மட்டுமே பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக இருக்க முடியும் பிள்ளைகளின் காப்பாளர்கள் தலைவராகவோ உறுப்பினராகவோ இருக்க முடியாது மேலும் ஒரு நபர் மூன்று ஆண்டுகள் பதவி வகித்துவிட்டால் அதன் பின் எந்த அரசுப் பள்ளியிலும் தலைவராக போட்டியிட தகுதி இல்லை என்று மாற்றம் கொண்டுவருதல்.

6) எந்த சூழ் நிலையிலும் அரசு பள்ளிகளில் மேனேஜ்மெண்ட் அனுமதி இருக்கக் கூடாது அனைத்து பள்ளிகளும் தலைமை ஆசிரியரின் கீழ் தான் இயங்க வேண்டும்.

தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டிடமோ கல்வியோ கொடுக்க இயலாதுதான் அதனால தான் முழு இட ஒதுக்கீடும் கொடுக்கின்றோமே எல்லா வசதியும் சரியாக இருந்து தனியார் பள்ளிகளுக்கு இணையாக என்றால் இப்படி ஒரு தேவையே இருக்காதே சம வாயிப்பு கிடைத்தும் பயன்படுத்தத் தவறும் மாணவனுக்கு இடஒதுக்கீடு என்பதே தேவையில்லையே வாய்ப்புகள் இல்லாத பின்தங்கிய வகுப்பினரும் ஏழை மக்களும் முன்னேற்றம் பெறத் தானே இட ஒதுக்கீடு 

அரசு பள்ளியில் படித்த அனைவருக்கும் அதாவது FC OC BC MBC SC ST சாதி குறிப்பிட விரும்பாதவர்கள், கலப்பு திருமணம் செய்தவர்கள் என அனைத்து சாதியினருக்கும் அனைத்து மதத்தினருக்கும் இட ஒதுக்கீடு கிடைக்குமே எனவே அனைத்து சாதி ஏழை மக்களும் பயன் பெற அருமையான வாய்ப்பு ஏற்படும் நம்ம நோக்கமும் சமூகத்தில் பின்தங்கியுள்ள ஏழைகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதுதானே 

இப்படி வாய்ப்பு பெற்று நல்ல நிலைக்கு வந்தவர்கள் அந்தஸ்த்தில் உயர்வடைந்தபின் அவர்களும் தனியார் பள்ளிகளை தான் தங்களது பிள்ளைகளை சேர்ப்பார்கள் என்பது உறுதி

நீங்கள் எல்லாம் என்னைவிட நன்கு படித்தவர்கள் நீங்களும் வழி சொல்லுங்களேன் பாவம் அந்த ஏழை மக்கள் ஏற்றம் பெறவே!

- இந்தியன் குரல்
E பாலசுப்ரமணியன் 
9444305581
தலைவர்
மாணவர் திறன் மேம்பாட்டுக் கழகம் 

கருத்துகள் இல்லை: