அமைதி வழி ஆர்ப்பாட்டம்: "வாய்ஸ் ஆப் இண்டியன்' அமைப்பும், வடசென்னை மக்கள் உரிமைக் கூட்டமைப்பும் இணைந்து, நேற்று மாலை, சென்னை மெரீனா காந்தி சிலை முன், தேசியக்கொடி ஏந்தியும், மெழுகுவர்த்தி ஏற்றியபடி, அமைதி வழி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராயபுரம் ராபின்சன் பார்க், திருவொற்றியூர் அஞ்சல் நிலையம் முன்பும், பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி வழி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுபோன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடந்தன.
அமைதி வழி ஆர்ப்பாட்டம்: "வாய்ஸ் ஆப் இண்டியன்' அமைப்பும், வடசென்னை மக்கள் உரிமைக் கூட்டமைப்பும் இணைந்து, நேற்று மாலை, சென்னை மெரீனா காந்தி சிலை முன், தேசியக்கொடி ஏந்தியும், மெழுகுவர்த்தி ஏற்றியபடி, அமைதி வழி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராயபுரம் ராபின்சன் பார்க், திருவொற்றியூர் அஞ்சல் நிலையம் முன்பும், பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி வழி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை : அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக, சென்னை நகரின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டங்களும் நடந்தன. ஊழலுக்கு எதிராக, பலமான லோக்பால் மசோதா வேண்டுமென வலியுறுத்தி உண்ணாவிரதத்திற்கு முயன்றதாக, டில்லி போலீசார் அன்னா ஹசேராவைக் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பலமான லோக்பால் மசோதாவை வலியுறுத்தியும், சென்னையில் பல்வேறு அமைப்புக்கள், போராட்டத்தில் ஈடுபட்டன.
திருவான்மியூர்: இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த 187 பேர், திருவான்மியூரிலுள்ள தனியார் அடுக்குமாடி கட்டடத்தில், உண்ணாவிரதத்தை தொடங்கினர். மகாத்மா காந்தியின் செயலர் கல்யாணம், சுதந்திர போராட்டத் தியாகி லட்சுமிகாந்த பாரதியும் பங்கேற்றனர். 50க்கும் மேற்பட்டோர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளனர். பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், எக்ஸ்னோரா அமைப்பினரும் பங்கேற்றனர். தர்ணா செய்த 30 பேர் கைது: அன்னா ஹசாரே கைதைக் கண்டித்து, இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் 30க்கும் மேற்பட்டோர் அடையாறு, எல்.பி., சாலையில், திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். தர்ணாவால், சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. ஊழல் எதிர்ப்பு இயக்கம், ஐந்தாவது தூணும் இணைந்து, சென்னை மெமோரியல் ஹால் முன், ஆர்ப்பாட்டம் நடத்தியது. அமைப்பின் பொதுச் செயலர் அரசு தலைமை வகித்தார். பலமான மசோதா நிறைவேற்ற மறுக்கும், மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஐந்தாவது தூண் நிர்வாகி பாலகுமார், மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு: எழும்பூர் தெற்கு ரயில்வே அலுவலகத்தில் உள்ள நக்கீரர் அரங்கத்தில், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. சென்னை தலைவர் பால்பர்ணபாஸ் தலைமை வகித்தார். அகில இந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழக, மாநில தலைவர் முத்தையா கார்த்திகேயன், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் செயலர் தீபக் உள்ளிட்டோர் கறுப்புக்கொடி அணிந்து, கோஷங்கள் எழுப்பினர். கூட்டத்தில் அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடந்தது.
இதுபோன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக