ஆதரவாளர்கள்

திங்கள், 2 ஏப்ரல், 2012

மதிற்பிற்குரிய மன்மோஹன்சிங் அவர்களே


            ராஜீவ் காந்தியின் ஆட்சி நடந்த பொது , நீங்கள் நிதி அமைச்சராக பணியாற்றியபோது எத்தனை செம்மையாக நிறுவகித்தீர்கள் ..ஆனால் இன்று என்ன நடக்கிறது...சோனியா ஆட்டுவிக்கின்ற பொம்மையை போல...தவறுக்கு மேல் , தவறாக... செய்துகொண்டே இருக்கிறீர்கள்..நீங்கள் இப்படி வாக்குமூலம் கொடுப்பதிலேயே தெரிகிறது யாரை காப்பாற்ற நீங்கள் இப்படி சொல்லுகிறீர்கள் என்று
, தேர்தல் நேரத்தில் அவர்கள் மாட்டிக்கொண்டால் அப்புறம் உங்கள் கட்சி அதோ கதி என்பதால் தானே ... இந்த நாடகம் , ஆனால் உங்களுக்கு ஏன் ஒன்று புரியவில்லை இந்த நாட்டை காப்பதற்கு இந்த நாட்டில் இருந்த உத்தமர்களால் ஆரம்பிக்கப்பட்டது இந்த காங்கிரஸ், ஆனால் இப்போது அந்த கட்சியை காப்பாற்ற இந்த நாட்டை நாசப்படுத்த உங்களுக்கு எப்படி துணிச்சல் வந்தது ... ஒண்ட வந்த ........... சோனியா தான் சொல்லுகிறார் என்றால் இந்த நாட்டின் பாரம்பரியமும் இந்த நாட்டின் இறையாண்மையையும் நன்றாக உணர்ந்த நீங்கள் இப்படி செய்யலாமா... நினைத்து பாருங்கள் நாட்டு விடுதலையில் பங்கு கொண்டு தூக்கு கயிற்றை முத்தமிட்டபடி என்னை போல இன்னும் ஆயிரம் இளைஞர்கள் இந்த நாட்டை காக்க போராடுவார்கள் என்ற நம்பிக்கையோடு உயிர்விட்ட பகத்சிங் பிறந்த சீக்கிய சமுதாயத்தில் தானே நீரும் பிறந்தீர், ஜாலியன் வாலா பாகில் தேச விடுதலை வேண்டி நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அத்தனை மக்களை சுட்டு கொன்ற ஜெனரல் டயரை அவன் நாட்டிற்கே போய் அத்தனை வருடம் காத்திருந்து அன்னியன் அரசசபையில் அந்த சண்டாளனை சுட்டு கொன்று இந்த நாட்டு மக்களின் வஞ்சம் தீர்த்தானே மாவீரன் உத்தம்சிங் அவன் பிறந்த மண்ணில் தானே நீங்களும் பிறந்தீர்கள் , அரசியல் எல்லோரையுமே கெட்டவர்களாக்கிவிடும் என்பது உண்மை தான் ஆனால் நீங்கள் எல்லாம் தேச பக்தியோடு இந்த நாட்டை வழி நடத்தி சென்ற மிகபெரிய மனிதர்களோடு பழகி அவர்களோடு சேர்ந்து பணியாற்றக்கூடிய வாய்ப்பை பெற்றிருந்தவர் ,,, நீங்கள் இந்த தவறுக்கு உடந்தையாக இருப்பது கேட்கவே கஷ்டமாக இருக்கிறது ... காங்கிரஸ் என்பது நிறுவனம் அல்ல வந்தவனும் போனவனும் இருந்து ஆட்சி செய்ய , காந்தியும் நேருவும் , வல்லபாய் படேலும் அமர்ந்து இந்த நாட்டின் நன்மை தீமைகளை ஆராய்ந்து எல்லா நிலையிலும் பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு சொன்னார்கள் ... ஆனால் நீங்கள் கொஞ்சமும் கூசாமல் எந்த விதத்திலும் ஆராயாமல் ஒரு கேடு கெட்டவனை இந்த பதவிக்கு அமர்த்தியதொடு மட்டுமல்லாமல் இதற்க்கு நான் தான் காரணம் என்று வாக்குமூலம் வேறு ... அப்படி சொல்லிவிட்டால் தவறு இல்லையென்று ஆகிவிடுமா .... கொலை செய்தவன் நான் தான் கொலை செய்தேன் என்றால் அது சரியாகி விடாது பிரதமரே ...பொறுப்போடு பேசுங்கள் இவனை உங்கள் கட்சி கண்டுபிடித்து நீதி மன்றம் ஏற்றவில்லை அடுத்தவர்கள் பார்த்து இவனை கூண்டில் ஏற்றியதால் இன்று நீங்கள் ஒப்புக்கொள்ளுகிறீர்கள் இதற்க்கு நான் தான் காரணம் என்று ..இல்லையென்றால் அந்த பேய் கோடி கோடியாய் பணத்தை கொள்ளையடித்து தன் குடலில் போட்டு கொண்டுவிட்டு நாடகம் ஆடியிருக்கும் வழக்கம் போல நாங்களும் வெட்கங்கேட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போம் ...எல்லா இடத்திலும் பொது மக்கள் சென்று ஆராய முடியாது அதுவும் பெரிய பதவியில் இருப்பவர்கள் என்ன சொன்னாலும் சரி என்று தலையாட்டியே பழக்கப்பட்ட என்னருமை பாரத நாட்டு மக்கள் ,நடிகனை கடவுள் என்றும் தான் கொண்ட ஏற்று கொண்ட தலைவன் தரங்கெட்டவனாக இருப்பதை நேரில் பார்த்தாலும் அதற்கும் ஒரு காரணத்தை தானே சொல்லிக்கொண்டு அவனையே விடாமல் பிடித்து கொண்டிருக்கும் இந்த பாழாய் போற இந்திய மக்களுக்கு நீங்கள் எல்லோருமே கடவுள் தான் .அந்த நம்பிக்கையில் மன்ன இல்லை மலையே விழுந்துவிட்டது ...தேசத்தின் எல்லையில் நின்று காவல் காக்கும் வீரர்களும் , தன்னையே அழித்து இந்த நாட்டை காத்த மறவனின் குடும்பங்கள் எல்லாம் என்ன நினைக்கும் ?... இப்படி நாம் போராடி இந்த நாட்டை அன்னியினிடம் இருந்து காத்தும் ஒரு பயனும் இல்லை ஏனென்றால் ,இந்த நாட்டை அழிப்பதற்கு வெளியில் இருந்து யாரும் வர வேண்டாம் ...இந்த நாட்டை ஆளுகின்ற என்னருமை இந்திய நாட்டு அரசியல்வாதிகளே போதும் ...என்ற எண்ணம் வந்துவிட்டால் ...தாங்குமா இதை இந்த இந்திய திருநாடு ...கட்சியை காப்பாற்ற அதன் கொள்கைககளை காற்றில் விட்டீர்கள் சரி , அதன் பெருமையை சுயநலத்திற்காக புதைத்தீர்கள் சரி , ஆனால் இப்போது நீர் ஏற்று கொண்ட பதவியின் தாத்பரியம் புரியாமல் எதோ உம்மை அரியணையில் அமர்த்தினார்கள் என்பதால் அவர்கள் செய்கின்ற எல்லா தவறுக்கும் நீரே பொறுப்பேற்று இப்படி கூனி குறுகி நிற்கிறீரே ....உலகறிய சொல்லும் உம்முடைய மனசாட்சியை தொட்டு சொல்லும் வீரத்தின் விளை நிலமாக திகழ்ந்து இன்றும் எத்தனையோ வீர மறவர்களை இந்த நாட்டுக்கு அற்பணிக்கும் சீக்கிய சமுதாயத்தின் மீது ஆணையிட்டு சொல்லும் இது தான் நீர் இந்த நாட்டுக்கு ஆற்றும் கடமையா ...இதை நீர் செய்தீரா இல்லை சோனியாவும் அவர்கள் மக்களும் செய்தத்தர்க்கு நீர் பொறுப்பேற்று உமது இந்திய விசுவாசத்தை கண்பிகிண்றீரா? என்று....அனால் ஒன்று நிச்சயம் எத்தனையோ விஷயங்களில் பெருமையுற்ற உன்னை சுமந்த பஞ்சாப் தேசம் உம்மால் பெருமையடையாது ...அதென்ன சுஷ்மா சுவராஜ் அவர்கள் திருப்தி அடைந்துவிட்டால் இந்த பிரச்சனையை விட்டு விட வேண்டுமா? ... தெரிந்தே இந்த பெருச்சாளிக்கு பதவி வழங்க உறுதுணையாய் இருந்த அத்தனை கேடு கேட்ட அலுவலர்களையும் பதவி நீக்கம் செய் , இன்னியொரு முறை அந்த தப்பு நடக்காமல் இருக்கவேண்டுமானால் இதற்கு நீர் வழங்கும் தண்டனை ஒரு பாடமாக இருக்க வேண்டும்

கருத்துகள் இல்லை: