ஆதரவாளர்கள்

Saturday, August 17, 2013

வலை பூ நண்பர்களே உங்கள் சேவையை பாராட்டுகின்றேன் அதே சமயம் ஒரு கேள்வியும் கேட்டு விடுகின்றேன்வலை பூ நண்பர்களே   உங்கள் சேவையை பாராட்டுகின்றேன் அதே சமயம் ஒரு கேள்வியும் கேட்டு விடுகின்றேன்

நான் ஒரு அழகான வீடு கட்டி அந்த வீட்டை சுற்றி நல்ல தோட்டம்  அமைத்து அதற்கு ஒரு வேலைக்காரரையும் நியமித்து விட்டேன் வேலைக்கு வந்தவர் வேலை செய்யாமல் இருப்பது கண்டு வெகுண்டு எழுந்தேன் அருகில் இருந்த உபகரணங்களை எடுத்தேன் அந்த வேலையை நானே செய்துவிட்டேன் அதை  என் நண்பர்களிடம் பெருமையுடன் சொல்லி நீங்களும் என்னைப் போன்றே செய்யுங்கள் அல்லது என்னுடன் வாருங்கள் சேர்ந்து செய்வோம் என்றேன்.
 இது சரியா தவறா
சரி என்பவர்கள்  மட்டும் மேலும் படிக்கவும்
தெருவைக் கூட்டி சுத்தம் செய்து விளம்பரம் செய்து கொள்ளும் சமூக ஆர்வலர்கள் என்றாவது அதற்கு காரணமான அலுவலர்களை ஏன் உன் கடமையை செய்யவில்லை என்று கேட்டதுண்டா?

உரிமை கேட்டு போராடும் போராளிகள் ஏன் உரிமை மறுக்கப்பட்டது என்று அறிவார்களா ? சம்பந்தப் பட்டவர்களை கண்டு காரணம் கேட்டார்களா ?
இதெல்லாம் கேட்க முடியாது என்று இருந்த காலம் கடந்துவிட்டது
நகர சுத்தித் தொழிலாளி முதல் பிரதமர் ஜனாதிபதி வரை அரசு அலுவலர்கள் முதல் ஆட்சியர் வரை யாரையும் கேட்கும் அதிகாரம் குடிமக்களுக்கு 2005 ஆம் ஆண்டே வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிவீர்களா?
தகவல்  உரிமைச் சட்டம் 2005 மூலம் கேட்கலாம் யாருக்கு எப்படி எழுதுவது தெரியவில்லையா உதவிக்கு இந்தியன் குரல் இருக்கு பயிற்சிக்கு  மற்றும் உதவிக்கு 9444305581

 நன்கொடை இல்லை உறுப்பினர் சந்தா இல்லை சேவைக்கு கட்டணம் இல்லவே இல்லை இது இந்தியன் குரல் அமைப்பின் கொள்கை வாருங்கள் வழிகாட்டுகின்றோம்
வழியறியா மக்களுக்கு விழியாய் இருப்போம்
--
www.vitrustu.blogspot.com
VOICE OF INDIAN
256 TVK Qts TVK Nagar, 
Sembiyam,
Perambur,
Chennai 600011
9443489976
9444305581

6 comments:

Anonymous said...

மிக அற்புதமான சேவை. தகவல் உரிமைச் சட்டத்தை அனைவரும் பயன்படுத்த வேண்டும். அதற்கு உதவி நல்கும் உங்கள் அமைப்பை மனமார பாராட்டுகின்றேன்.

தோழர் வலிப்போக்கன் said...

தகவல் உரிமைச்சட்டபடி இரண்டாம் முறையீடு செய்தும். தகவலை வழங்க தகவல ஆணையமும் உத்தரவிட்டும் .தகவல் வழங்காமல் இருப்பதை அடுத்து எங்கு முறையிடுவது???????? தகவல் தெரிவிக்கவும் valipokke,@gmail.com

தோழர் வலிப்போக்கன் said...

valipokken@gmail.com

Bala subramanian said...

தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 18(1) இன் கீழ் முதன்மைத் தகவல் ஆணையருக்கு புகார் மனு அனுப்பி மீள் விசாரணைக்கு உத்தரவிடவும் தகவல் அலுவலர்கள மீது தக்க நடவடிக்கையும் சட்டப்பிரிவு 19(8) இன் கீழ் இழப்பீடும் கேட்கலாம்.
உங்களது மனு தயாரிப்பு சரியாக இருந்தால் தகவல் கொடுப்பார்கள்

தகவல் உரிமைச் சட்டப்படி தகவல் மட்டுமே கேட்டு மனு செய்யவேண்டும் புகார், ஆலோசனை , கோரிக்கை , கேள்வியாக இருக்கக் கூடாது உங்களது மனு இந்த நாள் வகையும் சாராமல் தகவல் மட்டும் கேட்பதாக இருந்தால் மேல்முறையீடு செய்தால் தகவல் கிடைக்கும் இல்லையேல் பொது தகவல் அலுவலர் தகவல் கொடுக்கலாம் அல்லது கொடுக்காமலும் இருக்கலாம் ஆகவே உங்களது முதல் மனு சரியாக வடிவமைத்து உள்ளீர்களா என்று சரிபார்க்கவும்

முதல் மேல்முறையீடு முதல் மனு தேதியில் இருந்து 45 நாட்களுக்குள்ளும் இரண்டாவது மெல்முரியீடு முதல் மனு தேதியில் இருந்து 85 நாட்களுக்குள்ளும் அஞ்சல் செய்யப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்

தகவல் ஆணையம் உங்களை நேரில் அழைத்து விசாரணை செய்து உத்தரவு வழங்கியதா ? நேரில் விசாரணைக்கு செல்லும்போது எழுத்துமூல வாக்குமூலம் அளித்திருந்தால் தான் உங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு அலுவலருக்கு நடவடிக்கை எடுக்க அறிவிப்பு ஆணையம் செய்யும்

மனு தயாரிப்பதில் சந்தேகம் எழுத்து மூல வாக்குமூலம், புகார்மனு எப்படி எழுதுவது ? மேலும் தகவலுக்கு ஆவணங்களுடன் உதவி மையம் வரலாம் சென்னையில் பிரதி மாதம் ஒன்று மற்றும் பதினைந்து ஆகிய இருநாட்கள் கும்பத் காம்ப்ளெக்ஸ் முதல் தளம் 29, ரத்தன் பஜார் சென்னை 6000003 எனும் காவரியில் செயல்படும் கட்டணம் இல்லை தொடர்புக்கு 9444305581 என்னில் அழைக்கலாம் உங்களது வசிப்பிடம் சென்னை தவிர வேறு ஊராக இருந்தால் அருகில் உள்ள உதவி மையம்(TRICHY, KOVAI, MADURAI, DINDIGUL, THENI, KARUR,SELAM) பற்றிய தகவலுக்கு இதே எண்ணில் அழைக்கலாம்.

Bala subramanian said...

SIGN PETITION TO PM SAVE RTI Act STOP AMENMENT

http://www.voiceofindian.org/sign-petition-pm/

Bala subramanian said...

SIGN PETITION TO PM SAVE RTI Act STOP AMENMENT

http://www.voiceofindian.org/sign-petition-pm/