ஆதரவாளர்கள்

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

மக்களாட்சியைக் காக்க நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு ஆன்லைன் பெட்டிஷன்

நன்மக்களே
 இந்தியத் திருநாட்டின் இந்திராகாந்தி  ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சிக்கு பிறகு இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்டதிருத்த மனு இந்திய மக்களுக்கு எதிரான  ஆபத்தான அடக்குமுறையை ஊழலை நியாயப்படுத்தும் திருத்தம் ஆபத்தானது. 


தகவல் சட்டத்தில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்களிக்க வகை செய்யும் திருத்தம் அனைத்து கட்சியும் வரவேற்கும் என்றே நம்புகிறோம் ஆனால் மக்களுக்கு ஆபத்தானது மக்களாட்சிக்கு விரோதமானது ஆகும்.

திருத்தத்தைக் கைவிட ஆன்லைன் மூலம் மனுக்களை பாரத பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பிட வேண்டுகின்றோம் ஒரு கிழிக்கின் மூலம் உங்களது மனுக்கள் சென்றடைய இன்றைய தொழில் நுட்ப உதவியுடன் தயாரித்து சமர்ப்பிக்கின்றோம்

ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இந்த மனுவை அனுப்பிடுவது காலத்தின் கட்டாயம் ஆகவே உங்களது கடமையைச் செய்வீர் மக்களாட்சியைக் காப்பீர் 
ஆன் லைன் பெட்டிசன் இணைப்பு  
  http://www.voiceofindian.org/sign-petition-pm/ 

மக்களாட்சியைக் காக்க நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு

இந்தியன் குரல் 

குறிப்பு; மத்திய அரசின் திருத்தத்தைக் கண்டித்து ஒரு லட்சம் துண்டுபிரசுரங்கள் இந்தியன் குரல் அமைப்பின் சார்பில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது பல்வேறு அமைப்பு நண்பர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி துண்டுபிரசுரம்  அச்சிட்டு விநியோகம் செய்து வருவது நம்பிக்கை அளிக்கின்றது . இந்தியன் குரல் சென்னை காஞ்சிபுரம் வேலூர் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. அதேபோன்று சில அமைப்புகள் போராட்டம் நடத்திட ஏற்பாடு செய்துவருவது கண்டு நம்பிக்கை துளிர்கின்றது

கருத்துகள் இல்லை: