ஆதரவாளர்கள்

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

நீங்கள் வாழும் மனிதன் தானா? இல்லை உயிருடன் நடமாடும் பிணமா? இந்தியக் குடிமகனுக்கு மட்டும் !


 ஒரு இயந்திரமா அல்லது இயந்திர மனிதனா கேள்வி பிறந்தது அன்று நல்ல பதிலும் கிடத்ததா? இன்று இப்படி பாட்டும் பாடலாம் என்னவெல்லாம் சொல்லிக் கொண்டாலும் கேள்வி கேட்பது சுலபம் நல்ல கேள்விகள் கேட்பது எவ்வளவு கடினம் தெரியுமா? நல்ல கேள்வி ஒரு மனிதனின் சிந்தனையை தூண்டவேண்டும் உங்கள் சிந்தனை தூண்டப்பட்டால் நீங்கள் பிணம் இல்லை என்று அர்த்தம் 


நீங்கள் இந்திய  நாட்டின் குடிமகன் என்றால் கீழே படியுங்கள்

ஒரு மனிதன் 8 மணி நேரம் மட்டுமே உழைக்க வேண்டும் என்று போராடி பெற்ற உரிமை எங்கே ? அதைத் தாண்டி உழைக்க வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஏன் ?

ஓவர் டைம் பார்க்க முடியாது என்ற காலம் போய் இந்த நிறுவனத்தில் சேர்ந்தால் ஒ டி கிடைக்கும் என்று தேடி அலையும் நிலை ஏன்?

ஒரு மனிதன் மட்டுமே ஒரு குடும்பத்தில் உழைத்தால் போதும் என்ற நிலை மாறி கணவன் மனைவி பிள்ளைகள் என அனைவரும் உழைத்தும் ஒரு வீடு கூட சொந்தமாக வாங்க முடியவில்லையே ஏன் ?

நான் குழந்தையாக இருந்த பொது எங்களது தாத்தா மட்டும் வேலைக்கு சென்றார் பட்டி குடும்பத்தை பார்த்துகிட்டங்க சொந்தமா வீடு வாங்கி சந்தோசமா வாழ்ந்தார்கள்.

எங்கள் அப்பாவும் அம்மாவும் வேலைக்கு சென்றார்கள் சந்தோசமாக மூன்று வேலை சாப்பிட்டு தேவையான எல்லாம் வாங்கிக் கொடுத்தார்கள் எங்களை படிக்க செலவு செய்தார்கள் மீதி பணத்தில் கொஞ்சம் சேர்த்து வைத்தார்கள்

நான் வேலை செய்கின்றேன் என் மனைவியும் வேலைக்கு செல்கின்றாள் எனது இரண்டு மகன்களும் வேலைக்கு செல்கின்றார்கள் ஆனால் கடன் வாங்கித்தான் குடும்பத்தை சமாளிக்கின்றோம்

இப்படியே விலைவாசி உயர்வு இருந்தால் எனது அடுத்த சந்ததி எப்படி வாழும்?
இது ஒரு சாமானியனின் கேள்வி?

 இப்படித்தான் 80 கோடி மக்கள் வாழ்க்கைத் தரம் இருக்கு தினசரி உணவே கஷ்டமானதாக தான் அவர்களுக்கு இருக்கின்றது என்று மத்திய அமைச்சரே கடந்த மாதம் ஒப்புதல் அளித்து வெளியிட்ட செய்தி

இப்ப பிரச்சனை என்னனா அடுத்த தலைமுறை சாப்பிட உணவுக்கு என்ன செய்ய வேண்டும். 14 ம்னநிநேரம் உழைத்தும் இன்றைய நிலையில் குடும்பம் நடத்திட முடியவில்லை எனும்போது நாளை விலைவாசி உயர்வு வாங்கும் சக்தி என்னவாகும்

நம் அடுத்த தலைமுறை சந்ததிகளில் பெரும்பான்மை பிச்சை எடுப்பது அல்லது கத்தி எடுபதுமே வழியா?
எல்லோரும் பிச்சைக் காரர்கள் என்றால் பிச்சை எப்படி கிடைக்கும் அப்போ கத்தி எடுப்பது மட்டுமே தீர்வு நம் சந்ததிகளை அப்படி வாழ வைக்கத்தான் இன்று நாம் உழைக்கின்றோமா ?

அவ்வளவு தாங்க இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க இல்லைனா தகவல் உரிமைச் சட்டத்தில கேட்பேன் ஜாக்கிரதை !  

என்னாது நீங்கள் தகவல் சட்டத்துல வரமாட்டீங்களா பேப்பர் நியூஸ்  படிக்கலையா தகவல் சட்டத்துல அரசின் மானியம் வாங்குகிற மக்களும் பொது அதிகார அமைப்புதான் என்று மத்திய அமைச்சர் சொல்லிவிட்டதைப் படிக்கலையா ? என்ன ஒன்னு அவங்க மட்டும் தகவல் தர மாட்டாங்களாம் சட்டத்தை திருத்தி விடுவார்களாம்

----------------------------------------------------------------------------------------------------
நேரமில்லை நேரமில்லை என்று சொல்பவரா நீங்கள் 

எனக்கு உழைக்க மட்டுமே நேரம் இருக்கின்றது நான் எப்படி பொது சேவை செய்யமுடியும் 

ஒரு நாளில் அதிகாரப்பூர்வமாக 8 மணி நேரமும் கணக்கில்லாமல் 8 மணி நேரமும் உழைக்க வேண்டியது இருக்கின்றதே 

14 மணி நேரம் உழைக்கும் மனிதன் எப்படி பொது சேவை செய்ய முடியும் 

நீங்க நல்ல செய்றீங்க சார் வாழ்த்துக்கள் என்று மட்டுமே சொல்ல முடியும் 

உங்களுடன் சேர்ந்து சேவை செய்ய ஆசைதான் நேரமில்லையே 

இப்படி இந்தியன் குரலுக்கு உதவிகேட்டு வந்த சாமானியர்களின் உண்மையான வார்த்தைகள். உடனே நம்ப ஆராய்ச்சி மூளை சும்மா இருக்குமா இதோ ஆரம்பித்துவிட்டோம் 

மேலே உள்ள கேள்விகளுக்கு நல்ல கருத்துக்களை பதிவு செய்யுங்கள் பிணம் இல்லை வாழும் மனிதன் தான் என்று நிரூபியுங்கள்

தீர்வு உங்களது கருத்துக்களுடன் இந்தியன் குரல் தீர்வை தரும். பிரச்சனைகளை பேசுவது மட்டுமல்ல அதற்க்கு தீர்வும் தரும் ஒரே அமைப்பு இந்தியன் குரல்

இந்தியன் குரலின் உதவி பெற்ற யாரும் லஞ்சம் கொடுப்பதில்லை கல்விக்கடன் பெற அலையவில்லை சுய மரியாதையை இழக்காமல் அவர்களின் தேவையை நிறைவேற்றி கொண்டவர்கள் ஆவர்கள்.

இந்தியன் குரல் அமைப்பு நன்கொடை பெறுவதில்லை உறுப்பினர் சந்தா வசூலிப்பதில்லை எந்த உதவிக்கும் கட்டணம் பெறுவதில்லை

உதவி மையங்கள் வைத்து இலவசமாக உதவிகள் செய்யும் இந்தியாவிலேய ஒரே அமைப்பு இந்தியன் குரல் நீங்களும் உறுப்பினராக விரும்பினால்

1) மாதம் இரண்டு நாட்கள் முழுமையாக மற்றும் தினமும் அரை மணி நேரமும் உங்களால் நேரம் ஒதுக்க முடியுமா

2) உதவி மையத்திற்கு வரும் நாள் மற்றும் பயிற்சிக்கு வரும் நாட்களில் மதிய உணவு உள்ளிட்ட உங்களது தேவைகளை நீங்களே செலவு செய்து பார்த்துக்கொள்ள வசதி இருக்கின்றதா?

 3) இந்தியன் குரல் அளிக்கும்  பயிற்ச்சியில் மாதம் ஒருநாள் வீதம் மூன்று மாதம் தொடர்ச்சியாக வர முடியுமா?



5) நன்றி, பாராட்டு, வாழ்த்து , பணம், புகழ் என்று எதையும் எதிர் பார்க்காமல் செயல்பட உங்களால் முடியுமா ?

5) யார் சொல்வதையும் பொறுமையாக கேட்டு அவரது கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு பதில் சொல்பவரா ?

 நீங்கள்
உங்களது பெயர் முகவரி எஸ் எம் எஸ் செய்து பதிவு செய்து கொள்ளவும் 9444305581

இந்தக் காலத்தில் இப்படி யார் இருப்பார்கள்? என்றோ என்னால் முடியாது என்றோ சொல்பவராக இருந்தால் நீங்கள் வெட்கப்பட தேவையில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளில் எங்கள் உதவிமையம் மூலம் 1,45,000 க்கும் மேற்பட்ட பிரச்சடைகள் குறைகள் தீர உதவியுள்ளோம். கடந்த மூன்று ஆண்டுகளில் 10,000 மேற்ப்பட்ட மாணவர்கள் கல்விக்கடன் பெற்றுள்ளார்கள் சுமார் 65000 பேருக்கும் மேல் நேரடியாக ஒருநாள் பயிற்சி ஆயிரக்கணக்கான பேர்களுக்கு மூன்று மாத பயிற்சிக்கு வர விருப்பம் தெரிவித்தார்கள் ஆயினும் இன்றைய தேதி வரை 87 நபர்கள் மட்டுமே பயிற்ச்சியை முடித்துள்ளார்கள் அவர்களில் 30 நபர்கள் உதவி மையம் நடத்தும் பயிற்சி பெற்று நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள். இது தான் சாதாரண ஒரு இந்தியக் குடிமகனால் முடியும். இதையும் தாண்டி வந்தால் தான்  மனிதனின் மறுபக்கம் .
 எத்தனை பேருக்கு உதவி செய்தோமென்பதை விட எத்தனை பேருக்கு சரியான உதவியை செய்தோம் என்பது எவ்வளவு முக்கியம.

எத்தனை சமூக ஆர்வலர்கள் நம்முடன் இருக்கின்றார்கள் என்பதை விட எத்தனை பேர் உண்மையாக இருக்கின்றார்கள் என்பது மிக முக்கியம்

தகவல் உரிமைச் சட்டம் மூலம் எந்த ஒரு நியாயமான கோரிக்கையையும் புகாரையும் தீர்க்க முடியும் என்பது எங்களது அனுபவ உண்மை இதை அனைவரும் தெரிந்துகொள்வது அதைவிட மிக மிக முக்கியம்.

மீண்டும் அனைத்து பயிற்சி மற்றும் உதவிக்கு கட்டணம் இல்லை

4 கருத்துகள்:

VOICE OF INDIAN சொன்னது…

எத்துனை கிட்ஸ் கிடைக்கும் எத்தனை பேர் பின்னூட்டம் இடுவார்கள் என்று பார்க்க தேவையில்லை எத்தனை பேர் மனிதர்கள் என்று அறிந்துகொள்வதே நோக்கம். ஐந்தறிவு ஜீவன்களில் இருந்து மனிதன் சிந்தனைத் திறனில் மட்டுமே வேருபடுகின்றான் ஆதலால் தான் மனிதனுக்கு மட்டு ஆறு அறிவு இருக்கின்றதாம்

ராஜி சொன்னது…

நேரமில்லை எனபதை விட மனமில்லை என்பதே பொருந்தும். நோகாம நோன்பு கும்பிடனும் நம்ம ஆளுங்களுக்கு. யாராவது போராடி இதெல்லாம் வாங்கி குடுத்தா போதும், நமக்கு எந்த இழப்பும் ஏற்பட்டுட கூடாது.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல ஆராய்ச்சி...!

//நீங்கள் இந்திய நாட்டின் குடிமகன் என்றால்...//

'குடி'மகன்களுக்கு உங்களின் கேள்விகள் என்ன...?

VOICE OF INDIAN சொன்னது…

நன்றி திரு தனபாலன் அவர்களே!
உண்மையில் பலரும் சாதாரணமாக கேட்பதுண்டு அதன் ஆழம் தெரியாதவர்கள் கிண்டலாகக் கூட இப்படி அழைப்பதுண்டு அப்படி அழைக்கப்படும் அவர்களுக்கு சமுகத்தில் என்னமாதிரி மரியாதை கிடைக்கின்றது தாம் என்ன தவறு செய்கின்றோம் என்று தெரிந்தே தவறு செய்பவர்கள் தான் செய்யும் தவறும் தெரியும் அதன் விளைவுகளும் நன்கு தெரிந்தே வைத்துள்ள நோயாளிகள் அவர்கள்.

பிரியாணிக்கும் ஜாலிக்கும் சாதாரனமாக ஆரம்பித்து பின்னாளில் இவர்களே அதற்கு அடிமையாகிவிட்டவர்கள் அவர்களைப் பார்த்து வருத்தம் படலாம் திருந்த வேண்டும் என்று உண்மையாகவே விரும்புவர்கள் இருந்தால் அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க இந்தியன் குரல் உதவுகின்றது.

திருந்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும் ஒரு உதாரணம் சென்னை திருவொற்றியூரில் சம்பத் என்று ஒரு நண்பர் சில காலம் முன்பு அறிமுகமானார் அருகில் வந்தாலே பயங்கரமான கேட்ட நாற்றம் அடிக்கும் அவர் குடி நோயாளி என்பதை பார்த்ததும் அறியலாம் அவர் செய்யாத கெட்ட பழக்கம் இல்லை அரசியல் வாதிகளுக்கு கூலியாக ரௌடி வாழ்க்கை வாழ்ந்துவருபவர்

திருந்த வேண்டும் என்ற எண்ணமிருந்ததால் அவர் கடந்த ஒரு ஆண்டாக குடிப்பழக்கத்தை விட்டுவிட்டு சாதாரண மனிதனாக நான் சேர்த்துவிட்ட இடத்தில் வேலைக்கு செல்கின்றார்
சம்பத் தொடர்பு எண் 9940370490, 8608049669 குருபிரசாத் டேச்டைல்ஸ் என்று எங்கள் கடைப் பெயர் சொன்னால் அல்லது இந்தியன் குரல் பாலசுப்ரமணியம் சொன்னார் என்று சொல்லிப் பேசுங்கள் உண்மையை சொல்வார் இப்பொழுது மிகவும் நல்ல மனிதனாக வாழ்கின்றார் என்றும் அறிந்துகொள்ளுங்கள்

ஏன் சொல்கின்றேன் என்றால் கேள்வி கேட்டு இந்த சமுதாயத்தில் மாற்றம் கொண்டுவர முடியாது தீர்வு காண்பதே நம்மைப் போன்றவர்களின் கடமையாக இருக்கவேண்டும் பிரச்சனைகளை சொல்வது மட்டுமல்ல அதற்கு தீர்வுக்கான சிந்திப்பதும் நன் போன்ற சமூக ஆர்வலர்க்களுக்கு அவசியம் அல்லவா உங்கள் பகுதியில் திருந்த வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் எந்த ஒரு போதை அடிமையையும் மீட்டுவிடலாம் வாருங்கள் கரம் கொடுங்கள் உதவிட நாங்கள் தயார் உதவி கேட்க நீங்கள் தயாரா தொடர்புக்கு 9444305581 பாலசுப்ரமணியன் --