ஆதரவாளர்கள்

வியாழன், 25 ஜூலை, 2013

காந்தி தேசம் காக்க பாரதத் தாயின் புதல்வர்களே எழுக.!

மதிப்பிற்குரிய தேச பக்த நன்மக்களே!
வணக்கம்,

 மத்திய தகவல் ஆணையம் அரசியல் கட்சிகள் தகவல் தரவேண்டும் என்று உத்தரவிட்டபிறகும் தகவல் தரமாட்டோம் சட்ட திருத்தம் கொண்டுவருவோம் என்று அரசியல் கட்சிகள் கருத்து தெரிவிக்கின்றன என்பதை அறிவீர்கள்



இத்தீர்ப்பின் உயிர்ப்பான நோக்கங்களை அறிய www.vitrustu.blogspot.in
மேற்படி ஆணையினை ஆரோக்கியமான தேச நலன் கருதி அமலாக்கம் செய்வதற்கு பதிலாக எதிர்த்தும் மறுத்தும் சட்டங்களை திருத்துவோம் என் அரசியல் வாதிகள் அடம்பிடிக்கிறார்கள். அரசியல் கட்சிகள் தகவல் தரவேண்டும் என்ற நிலையை உருவாக்கும் முயற்சியில் உங்களது பங்களிப்பும் வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றோம்.

காரணம் நம் சந்ததிகளின் நிம்மதியான வாழ்க்கைக்கு இப்பொழுது நாம் பொருள் சேர்த்து வைப்பதை விடவும் சேர்த்த பொருளைக் காக்கவும் தன்னைக் காத்துக் கொள்ளவும் நம் பிள்ளைகள் போராடாத நிலையை உருவாக்கித் தருவதே நம் கடமையாகின்றது

இன்றைய அரசியல் கட்சிகளிடம் நியாயம் இல்லை நேர்மை இல்லை சட்டங்களை மதிப்பது இல்லை நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதே இல்லை உச்சநீதிமன்ற உத்தரவையும் மதிப்பதில்லை மக்களாட்சி நடைபெறுவதற்கு பதிலாக கட்சிகளின் சர்வாதிகார ஆட்சியே நடைபெறுகின்றது, இந்நிலையில் இவர்களை இப்படியே விட்டு விடலாமா அதன் பாதிப்புகள் நம் சந்ததியைப் பாதிக்காதா?.

மறைமுகமாக இருந்த லஞ்சம் நேருக்கு நேர் என்றாகிவிட்டது
மறைமுகமான திருட்டு நேருக்கு நேர்  கொள்ளை என்றாகிவிட்டது. மறைமுகமாக் எப்போதோ எங்காவது நடந்த கொலை நேருக்கு நேர் பட்டப் பகலில் வீதிக்கு வீதி என்றாகிவிட்டது.
குற்றவாளிகளுடன் தீவிர வாதிகளுடன் அரசியல் கட்சிகளின்  தொடர்பு காரணமாக கேவிகேட்கவே மக்களுக்கு அச்சம்.
இவ்வகைக் குற்றங்களுக்கு சாட்சியம் இருந்தும் சட்டங்கள் இருந்தும் நீதிமன்றங்கள் இருந்தும் தண்டனை இல்லையே!. சாமானியர்களைக் கேள்வி கேட்கும் சட்டம், கொலை, கொள்ளை, திருட்டு , லஞ்சம் , உள்ளிட்ட செயலில் ஈடுபட்ட அரசியல் வாதிகளிடம் குலைந்து வளைந்து நெளிந்து தேய்ந்து போவதும் தொடராமல் இருக்க நீதிமன்றமும் மக்கள் மன்றமும் தகவல் ஆணையமும், அரசியல் கட்சிகளைக் குட்டிக்கொண்டுதான் இருக்கின்றன அதன் தொடர்ச்சியே இந்த மத்திய தகவல் ஆணையத்தின் சாட்டையடி தீர்ப்பு

அரசியல் இயக்கங்கள் இந்தத் தீர்ப்பை மதிக்காமல் திருத்தம் கொண்டுவருவோம் என்று இறுமாப்புடன் கூறிவருவது இவர்களின் ஆணவத்தின் உச்சம். சட்டத் திருத்தம் கொண்டு வராமல் கூட இந்த தீர்ப்பை தள்ளிவிட்டு பதில் வழங்காமல் அரசியல் கட்சிகள் விடலாம் அல்லது தகவல் தராமல் இழுத்தடிக்கலாம். மக்கள் மன்றம் கேட்கும் வரை ஒட்டு போடும் மக்கள் வெகுண்டு எழுந்து கேட்காதவரை இதை அரசியல் கட்சிகள் தொடரலாம்

மக்களே இவர்கள் திருத்தம் கொண்டுவந்துவிடுவார்கள் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலைக்கு வரச் செய்யும் முயற்சியே திருத்திவிடுவோம் என்ற கட்சிகளின் அறிவிப்பு

மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள் அவர்களது தன்னம்பிக்கையை மீட்டு எழ செய்யவேண்டும் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டவேண்டும் என்றால் உங்களைப் போன்ற சமூக ஆர்வலர்கள் மற்றும் தேசபக்தி மிக்க இளைஞர்களால் தான் முடியும். ஆகவே இந்த வேள்வியில் தாங்களும் கலந்து மக்களுக்கு உதவிட கேட்டுக் கொள்கின்றேன

மத்திய தகவல் ஆணையத்தின் தீர்ப்பினை அனைத்து மக்களும் அறியச் செய்வோம். தகவல் தர மறுக்கும் கட்சிக்கு ஒட்டு இல்லை என்று மக்களை சொல்ல வைக்க துண்டு பிரசுரங்கள் மூலமாகவும், தெருமுனைக் கூட்டங்கள் வாயிலாகவும், விழிப்புணர்வு ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும், மக்களுக்கு தெரியப்படுத்தி உதவிட கேட்டுக்கொள்கின்றோம் 

இந்தியத் தேர்தல் களம் பண களம், 
இதனை முறியடிக்க அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை, நிதி வரவு ரகசியங்களை வெளிப்படையானதாக்க வேண்டும் என்ற நோக்குடன் பிறப்பிக்கப் பட்ட " அச்ரசியல் கட்சிகளும் மக்களுக்கு பொறுப்புடைமை உள்ளவை " என்ற மத்திய தகவல் ஆணையத்தின் தீர்ப்பின் புனிதத்தை பட்டிதொட்டிகளில் எல்லாம் பரப்புரை செய்ய, அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்கும் இருக்கும் நீண்ட இடைவெளியினை குறைக்க மூடு மந்திரத்தை விலக்கிட போலி நட்பினை அகற்றிட  பரஸ்பரம் நட்பு கொள்ள அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை வரவு செலவுகளை பாமரனும் அறிய வகை செய்யும் மத்திய தகவல் ஆணையத்தின் தீர்ப்பினை நாடு முழுவதும் கொண்டுசெல்ல,

இதீர்ப்பிலிருந்து தப்பிக்கும் சட்ட திருத்தத்திற்கு எதிராக மக்களை திரட்ட ஒரு கோடி பிரசுரங்களை அச்சிட்டு விநியோகிப்பது என்பது இந்தியன் குரல் லச்சியம். 30 தினங்களுக்குள் ஒரு லட்சம் பிரசுரம் விநியோகம் என்பது நிச்சயம் எழுவீர் இணைவீர் தேசம் காப்பீர்
ஒத்த கருத்துள்ள தேசபக்த நன்மக்களே தகவல் சட்ட திருத்தத்தை முறியடிக்க நாடு காக்க எழுவீர் இணைவீர் செயலாற்றுவீர்!.

காந்தி தேசம் காக்க பாரதத் தாயின் புதல்வர்களே எழுக.!

கருத்துகள் இல்லை: