ஆதரவாளர்கள்

Tuesday, August 6, 2013

உங்களுக்கும் இருக்கின்றதா? மண்ணாசை பொன்னாசை பொருளாசை

என்னாது ஆசையே ..................
மனிதனுக்கும் மிருகங்களுக்கும் நல்ல சிந்தனை திறன் (பகுத்தறிவு) என்ற ஒரு அறிவு தான் வித்தியாசம் என்கிறார்கள் விலங்குகளும் தினமும் உழைக்கின்றது, பசிக்கு ருசியான உணவு உண்கின்றது. ஆசை தீர உடல் உறவு கொண்டு இனப்பெருக்கம் செய்கின்றது நேரத்தில் தூங்குகின்றது . இன்றைய நாகரீக மனிதன் என்று சொல்லிக்கொள்பவர்களும் நேரமில்லை என்று சொல்பவர்களும் இதைத் தான் செய்கிறார்கள்.


சிந்திக்கும் ஆற்றல் படைத்த மனிதர்கள் மனிதர்களுக்காகவே இந்த பதிவு


இந்த ஆசைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் மனிதர்கள் ஒரு பக்கம் இதை எல்லாம் புறம் தள்ளி சந்தோசமாக மகிழ்ச்சியாக வாழ்வது மட்டுமே வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கை வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைப்பதும் இயற்கையே 

ஏனென்றால் நாம் நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவில்லை என்று நம்புகின்றோம் அப்படி என்றால் நாம் நம் சந்ததிகளை எந்த நம்பிக்கையில் விட்டு விட்டு போக இருக்கின்றோம்? கொலை கொள்ளை கற்பழிப்பு லஞ்சம் ஊழல் நிறைந்து தேசத்திலா நம் பிள்ளைகள் எப்படி எதிர் காலத்தில் வாழ்வார்கள் என்று சிந்தனை செய்தீர்களா?
 

ஏன் அரசியல் கட்சிகள் தகவல் உரிமைச் சட்டத்தில் தகவல் தரவேண்டும் 

. மத்திய தகவல் ஆணையம் அரசியல் கட்சிகள் எல்லாம் தகவல் சட்டத்தில் தகவல் கேட்கும் இந்தியக் குடிமகனுக்கு தகவல் அளிக்க வேண்டும். ஒவ்வொரு கட்சியும் பொது தகவல் அலுவலர் மற்றும் மெல் முரையீட்டு அலுவலரை உடனே நியமிக்க வேண்டும் என்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை 03- 06-13 அன்று அளித்தது.அன்று முதல் தினசரி செய்தியாகிவிட்டது ஆதரவும் எதிர்ப்பும் 

அரசியல் கட்சிகள் சட்டத்தி திருத்துவோம் என்கிறார்கள். மக்களும் திருத்தி விடுவார்கள் இவர்களை ஒண்டும் செய்ய முடியாது என்று நம்பி விரக்தியாக பேசுகின்றார்கள். 

1. இந்த சட்டத்தில் அரசியல் கட்சிகள் சட்டத்தில் விலக்கு அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்தால் அது செல்லாது . ஏனென்றால் இந்த சட்டத்திலேயே எப்படி திருத்தலாம் யாருக்கு விலக்களிக்கலாம் என்று தெளிவான வரையறை செய்யப்பட்டுள்ளது.திருத்தம் அரசியல் சாசனத்தை மீறும் செயல் 

2. மத்திய தகவல் ஆணையம் தன்போக்கில் தன இஷ்டத்திற்கு கட்சிகள் தகவல் தரவேண்டும் என்று உத்தரவிடவில்லை . உச்சநீதிமன்றம் உயர் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகளில் அரசியல் கட்சிகள் பொது அதிகார அமைப்பு என்ற தெளிவான வழிகாட்டுதலில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே தான் மேல் முறையீடு சென்றால் தோற்றுவிடுவோம் என்று அறிந்த கட்சிகள் மேல் முறையீடு செய்ய வாய்ப்பிருந்தும்  அதைச் செய்யவில்லை 

அப்புறம் ஏன்தான் இந்த சட்டத்திருத்தம் கொண்டுவருகின்றார்கள் அவர்கள் பைத்தியக் காரர்களா ?

இல்லை, இங்கு தான் அவர்களின் கட்சி அரசியல், ராஜதந்திரம், எல்லாம் உள்ளது . இவர்கள் சட்டத்தை திருத்திவிடுவோம் என்று சொன்ன காரணத்தால் தான் அதை நம்பிய யாரும் தகவல் கேட்டு கட்சிகாரர்கள் யாருமே விண்ணப்பம் செய்யவில்லை. அவர்கள் அவ்வாறு அறிவிப்பு செய்யாமல் இருந்திருந்தால் அவர்களது கட்சி உற்றுப்பினர்களே தகவல் கேட்டு இருப்பார்கள்.

 லட்சக்கணக்கான மனுக்கள் ஒவ்வொரு அரசியல் கட்சி அலுவலகத்திலும் குவிந்திருக்கும் கட்சி தொண்டனே அவ்வளவு கேள்விகளை மனதில் வைத்து பூட்டி வைத்திருக்கின்றான். இவர்களின் இந்த அறிவிப்பால் இவர்கள் அமைதியானார்கள் . யாரும் தகவல் கேட்டு விண்ணப்பம் செய்யவில்லை இதைதான் அரசியல் கட்சிகள் எதிர்பார்த்தன.

வேட்பாளர் தேர்வு எப்படி செய்யப்பட்டது , கட்சியில் பதவி , உண்மையான தொண்டனுக்கு கட்சியில் என்ன மரியாதை என்று கட்சியில் உள்ள கடை நிலைத் தொண்டனே கேட்டிருப்பான் அந்த நிலையை தவிர்க்கவும் சமூக ஆர்வலர்களின் செயல்பாட்டை அடக்கவுமே இந்த அறிவிப்பு . இது ஒரு மறைமுக மிரட்டல் அடக்குமுறை

திருத்தம் கொண்டுவந்தால் அதை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதை செல்லாது என்று கூற முடியும் அதற்கான வேலைகளிலும் இந்தியன் குரல் தயாராக இருக்கின்றது. 

அப்படியும் ஏன் திருத்தம் கொண்டுவருவதில் ஆர்வமாக இருக்கின்றார்கள் 
இந்த அரசியல் கட்சியினர்?
நமது மக்களை பற்றிய நல்ல புரிதல் அவர்களுக்கு உள்ளது , அதாவது இவர்கள் திருத்தம் கொண்டு வருவது. அனைத்து மக்களுக்கும் தெரியும் அந்த திருத்தம் செல்லாது என்று தீர்ப்பு வந்தால் அது அனைத்து மக்களுக்கும் தெரியுமா?  அவ்வளவு விளிப்பானவர்களா நம் மக்கள் ? அப்படி வரும் செய்தியை மற்றவர்களுக்கும் சொல்ல மாட்டார்கள் நம் மக்கள் அவர்களுக்கு நேரமும் இல்லை என்ற சாக்கு போக்கு உள்ளது . இந்த இடத்துல தாங்க நம்ம மக்களை அரசியல் கட்சிகள் நன்கு புரிந்து வைத்திருக்கின்றார்கள் 

அந்த தீர்ப்பை  ஊடகங்கள் ஒருமுறை கூறிவிட்டு நிறுத்திவிடும் இந்த திருத்தம் பற்றி தினமும் வெளியிடும் ஊடகங்களின் நோக்கமும் செய்தி வெளியிடும் கட்சிகளின் நோக்கமும் ஒன்று தான் மக்களை விழிப்படையாமல் பார்த்துக் கொள்வதில். மொத்தத்தில் தகவல் கெட்டுவிடக் கூடாது என்பதில் கட்சிகள் உசாராக இருக்கின்றன மக்கள் உசாராக இல்லையே? அவர்களை நாம் உசார் பண்ணலாமே!

ஆகவே தான் இந்தியன் குரல் அமைப்பு தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் நோக்கில் ஒரு கோடி துண்டு பிரசுரங்கள் விநியோகம் என்ற குறிக்கோளுடன் முதல் கட்டமாக ஒரு லட்சம் பிரசுரங்களை ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் விநியோகம் செய்து வருகின்றது நீங்களும் உங்கள் பகுதி மக்களை விழிப்படையச் செய்யலாமே அலைபேசியில் அழையுங்கள் 9444305581
தயவு செய்து இந்த பிரசுரத்தை படித்து பாருங்கள் மாற்றம் வரும் மற்றவருக்கும் பகிருங்கள்உங்களது அமைப்பின் பெயரை அச்சிட்டு கொடுக்கலாம்
 

 

No comments: