ஆதரவாளர்கள்

திங்கள், 13 மே, 2013

நீங்களும் MLA, அல்லது MP ஆகவேண்டுமா? இனி நீங்கள் தான் உங்கள் தொகுதிக்கு நிரந்தர MLA ,அல்லது MP

MLA ,அல்லது MP பதவி பெற்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவரா நீங்கள். சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் இனி நீங்கள் தான் உங்கள் தொகுதிக்கு நிரந்தர MLA ,அல்லது MP  இந்தியன் குரல் உதவுகின்றது.

அரசின் திட்டங்கள் அரசு அலுவலகங்களின் செயல் முறைகள் அலுவலர்களின் கடமைகள் ஒரு அலுவலகத்தில் கோரிக்கை மனு மற்றும் புகார் மனுக்களை பெரும் அலுவலர் யார் என்ற விபரமும், அவ்வாறு பெறப் படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அலுவலர் யார் அவரது பதவி பெயர் உள்ளிட்ட விபரங்களை அறிந்திருக்க வேண்டும்.
 அதுபோன்றே மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும் அலுவலர் பதவி பெயர் விபரமும் தெரிந்து இருத்தல் வேண்டும். அதற்கும் மேலாக அந்த மனுக்களை எந்த விதியின் கீழ் ஏற்றுக் கொள்ளவேண்டும் அல்லது நிராகரிக்கப் பட வேண்டும் எனும் விபரமும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அலுவலருக்கு வழங்கப் பட்டுள்ள அதிகாரம் உள்ளிட்ட விவரங்கள் விதிமுறைகள் அனைத்தும் அறிந்தவரா? உங்கள் தொகுதியில் ஒரு MLA ,MP மக்களுக்கு என்ன என்ன நன்மைகள் செய்ய முடியுமோ அவை அனைத்தும் நீங்களாகவே அந்த மக்களுக்கு பெற்றுத் தர முடியும். இவை எதுவும் தெரியவில்லையா கவலை வேண்டாம்.அனைத்து துறைகள் பயன்கள் நடைமுறைகள் சட்டங்கள் பற்றிய அனைத்தும் கற்றுத்தர இந்தியன் குரல் இருக்கின்றது.

இந்தியன் குரல் வழிகாட்டுகின்றது பயிற்சி அளிக்கின்றது. பயிற்சி பெற்ற நீங்கள் உங்கள் மக்கள் வளர்ச்சிக்காக அலைந்து திரியாமல் சுய மரியாதையை இழக்காமல் மக்களுக்கு செவையாற்றிட முடியும். தொடர்புக்கு இதியன் குரல் உதவி மையம். இந்த சேவைக்கு மட்டுமில்லை எந்த சேவைக்கும் இந்தியன் குரல் கட்டணம் பெறுவதில்லை நன்கொடை ஏற்பதில்லை.

பிரதி மாதம் 1,15 ஆகிய தேதிகளில் மட்டும் இந்தியன் குரல் உதவி மையம் கும்பத் காம்ப்ளெக்ஸ் 29 ரத்தன் பஜார் பூக்கடை காவல் நிலையம் எதிரில் சென்னை 

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்கள் பயிற்சி பலபேருக்கு சென்றடைய வேண்டுகிறேன்... வாழ்த்துக்கள்...

பெயரில்லா சொன்னது…

பாராட்டப் படவேண்டிய முயற்சி நண்பரே ..