என் உள்ளத்து எண்ணங்களை என் மன ஆசைகளை என் மன குமுறல்களை நான் நேசிக்கும் இந்தத் தமிழால் எழுத்துக்களாய் நல முத்துக்களாய் ஒரு கடிதமாக வரைந்து எனக்கு பிடித்த நான் நேசிக்கும் எனக்கே சொந்தமான எனக்கு உரிமையான என்னைப் பாதுகாக்கும்
நான் வணங்கும் நான் வாழும் இந்தியத் திருநாட்டின் கோடான் கோடி மக்களுக்கும் ஆசையில் வரையும் ஓர் கடிதம் அன்பு மடல்.
இனிய தமிழ் மக்களே! வணக்கம்
நான் வணங்கும் நான் வாழும் இந்தியத் திருநாட்டின் கோடான் கோடி மக்களுக்கும் ஆசையில் வரையும் ஓர் கடிதம் அன்பு மடல்.
இனிய தமிழ் மக்களே! வணக்கம்
மக்களாட்சி முறைக்கு மாறான கட்சியாட்சி தான் இன்று நடக்கின்றது. மக்களின் பிர்ச்சனைகள் மக்கள் நலன் என்ற கோட்பாடுக்கு மாறாக மக்களுக்கு விரோதமான அந்த மக்களையே கசக்கிப் பிழியும் கட்சிகளின் ஆட்சியில் குனியக் குனிய குட்டுவது போல் என்று சொல்வார்கள் அது போன்று மக்களை துன்பத்தில் ஆழ்த்தும் செய்திகளாக மீண்டும் மீண்டும் விலைவாசியை உயர்த்தும் செய்திகளாக இருக்கின்றது.
இதைப் படிக்கும் மக்கள் இனி இதுதான் வாழ்க்கை என்று ஏற்றுக் கொள்ளும் அளவில் தினசரி செய்திகளாகிப் போனது ஊழலும் வன்முறையும் மட்டுமா? விலைவாசியும் தானே!
இதைப் படிக்கும் மக்கள் இனி இதுதான் வாழ்க்கை என்று ஏற்றுக் கொள்ளும் அளவில் தினசரி செய்திகளாகிப் போனது ஊழலும் வன்முறையும் மட்டுமா? விலைவாசியும் தானே!
நில அபகரிப்பு, வழிப்பறி, கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் பெருகிவருவது நம் ஊடகங்கள் வாயிலாக அறிகின்றோம். இது பற்றிய செய்தியைப் படித்து விட்டு அத்துடன் மறந்து விடுகின்றோம். அதற்கு மேல் அதைப்பற்றி சிந்திக்கவோ காரணங்களை ஆராயவோ அதை நடவாமல் தடுக்கவோ எந்த முயற்சியையும் செய்வதில்லை. அந்தக் குற்றங்களைச் செய்வோர் 19 வயது முதல் 25 வயதுக்குள் இருப்பது ஏன்? இதையெல்லாம் யோசிக்க நமக்கு நேரமில்லை.
அமைதியாக இருக்கும் ஒரு சில நல்லவர்களால் தான் நாட்டில் குற்றங்கள் பெருகுகின்றன என்று உங்களுக்கு தெரியுமா. உங்க்கள் நேரமின்மை அமைதியே குற்றவாளிகளுக்கு ஊக்கம் அளிபதாக உள்ளது தெரியுமா.
உங்களில் சிலர் பொதுமக்களுக்கு சேவை செய்யும் நோக்குடன் நண்பர்களுடன் சேர்ந்து சங்கங்கள், பொது நல அமைப்புகள், அரசு சாரா பொது நல அமைப்புகள் நிறுவி பல நல்ல பணிகளை மேற்கொள்வது பாராட்டுக் குரியது.
அமைப்பாக செயல்படும் நண்பர்கள் மக்கள் நலன் வேண்டி கட்டாயம் செயல்பட சில தீர்மானங்களின் படி முடிவினை எடுக்கவேண்டியதும் அவர்களுக்கு பொது மக்கள் ஆதரவு அளிக்க வேண்டியதும் நிகழ காலத்தின் கட்டாயமாகின்றது. காரணம் முன் பத்தியை நன்றாக படித்தவர்கள் அதற்கான தீர்வை நோக்கி செல்லவேண்டிய தேவையாகின்றது. எங்கோ நடக்கும் கொலை கொள்ளை என்று இருந்துவிட முடியாது நமக்கு அவ்வாறு நடந்துவிட காலம் வரும் இப்பொழுதே விழித்துக் கொண்டால் நம்மால் நம் சந்ததியைக் காக்க முடியும்
பக்கத்து வீட்டில் நெருப்பு எறிந்தால் அடுத்து அது நம் வீட்டை நோக்கித் தான் வரும் ஆகவே அந்த நெருப்பை அணைக்க யோசித்தால் எனக்கு நேரம் இல்லை என்று சொன்னால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று ஒதுங்கிப் போனால் என்னவாகும்.
இலஞ்சம் ஊழல் எனும் தீயால் தவறான வழியில் பெருள் ஈட்டவேண்டிய கட்டாயம் ஏற்ப்படுகின்றது. அதன் காரணமாகவே குற்றங்கள் பெருகுகின்றன அல்லது குற்றங்களுக்கு ஊக்கம் அளிக்கப் படுகின்றது. இந்த லஞ்சத் தீ அணைக்க வேண்டிய தீ அதைச் செய்யும் பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு இந்தியனுக்கும் உள்ளது.
ஆகவே நண்பர்களே நம் அமைப்புகள் வேறு வேறாக இருந்தாலும் நம் இலக்கு ஒன்றாக இருக்கட்டும் RTI சட்டத்தைக் காப்போம் ஊழலை ஒழிப்போம்.
RTI சட்டத்தை காக்க போராட வேண்டிய நிலை நம் அரசியல் வாதிகளால் நமக்கு ஏறத்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக (58 ஆண்டுகள் ) போராடி பெற்ற தகவல் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் அரசியல் கட்சிகளுக்கு கீழ் கண்டவாறு கேள்விகள் கேட்டதால் அச் சட்டத்தையே முடக்கிட துடிக்கின்றார்கள்
அரசியல் கட்சிகளை ஏன் தகவல் கேட்கவேண்டும்
அரசியல் கட்சிகள் அரசியல் எதிரிகளை பழிவாங்க தீவிர வாதிகளுடன் தொடர்பு என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர் இந்த செய்தியின் அடிப்படையில் அரசியல் கட்சிகளுக்கு தீவிரவாதிகளின் தீவிரவாத செயல்களுக்கு துணைபோக வேண்டி கட்சிகளுக்கு தீவிரவாத இயக்கங்கள் நன்கொடை வழங்கியுள்ளதா?, அதன் தொடர்பு உடையவர்களால் நன்கொடை வழங்கப் பட்டுள்ளதா?
வெளிநாட்டு நிறுவனங்கள் வர்த்தகம் செய்ய தொழில் துவங்க இறக்குமதி வரியைக் குறைக்க என்ற பல சலுகைகளைப் பெறவும் இன்னும் பிற காரணுங்களுக்காக அரசியல் கட்சிகளுக்கு லஞ்சப் பணம் நன்கொடை வழங்குகிறதா ?
கொள்ளை சம்பவங்களின் மூலம் கொள்ளையடிக்கும் கும்பல் தங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க இன்ன பிற பலன் வேண்டி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குகின்றனவா போன்ற விவரங்களை அறிந்திட வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டுள்ளது.
நியாயமாக சம்பாதிக்கும் யாரும் நன்கொடை குறிப்பிட்ட அளவே கொடுக்க முடியும் எனும்போது பல கோடிகளில் நன்கொடை கருப்பாகவும் வெளுப்பாகவும் கொடுபவர்கள் யார்?
அவர்கள் கொடுத்த பணம் தானே வாக்காளர்களை விலைக்கு வாங்கவும் வேட்பாளர்களை விலைக்கு வாங்கவும், MLA , MP , போன்றவர்களையும் விலைக்கு வாங்கி ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்றிட பயன்படுகின்றது .
இவைகளை வெளிச்சப் படுத்தவும் அரசியல் கட்சிகளுக்கு வரும் வெளிநாட்டு உள்நாட்டு நன்கொடைகளை வெளிச்சப் படுத்த வேண்டியும் நன்கொடை அளிபவர்களது நோக்கத்தையும் மக்க்ளட்சியின் எஜமானர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய்து அவசியம் அல்லவா?
மேற்காணும் காரங்களுக்காக முதலாவதாக உங்களுக்கு பணம் எங்கிருந்து வருகின்றது யார் கொடுக்கின்றார்கள் நன்கொடை வழங்கியவர்கள் பட்டியலைத் தாருங்கள் என்றுதான் கேட்டார்கள்.
ஜனநாயக முறைப் படி இயங்கும் ஒரே கட்சி என்று விளம்பரம் செய்கின்றார்களே! காலால் இட்ட வேலையை தலையால் செய்வோம் என்று தேர்தலின் போது சொன்னார்களே! ரத்தத்தின் ரத்தமே உடன்பிறப்பே சொந்தங்களே இன மானமுள்ள மக்களே தியாகிகளின் பிறப்பே இந்துக்களே முஸ்லிம்களே என்று இன்னும் பல பல பெயர்கள் கவர்ச்சியாக வைத்து தன கட்சி தொண்டர்களை உற்சாகப் படுத்துகின்றார்களே!
கட்சிக்காக உயிரைக் கொடுத்த தொண்டன் கட்சிக்காக மண்டை உடைபட்டவன் அங்கும் இங்கும் தவமல் ஆண்டு ஆண்டுகாலமாக ஒரே கட்சியில் இருக்கும் உண்மையான தொண்டர்களுக்கு ஜனநாயக முறையில் கட்சிப் பதவி கிடைக்கின்றதா? தேர்தலில் நிற்கும் வாய்ப்பு கிடைக்கின்றதா? யாரை கேட்டாலும் இல்லை இல்லை என்பதே!
கட்சியின் உள்கட்சி ஜனநாயகம் உண்மையில் இருக்கின்றதா என்று ஒவ்வொரு வாக்காலனும் தெரிந்து கொள்வது கடமையாகிறது. இவர்கள் இவர்களுக்காக உயிரிழந்த உழைத்த உண்மையான விசிவாசிகளுக்கே ஒன்றும் செய்யாத இவர்கள் மக்களுக்கு நன்மை செய்வார்களா? .
அப்படியே இவர்கள் தேர்தலில் உண்மையாக உழைத்த தொண்டனை விட்டுவிட்டு கட்சி மாறி வந்தவர்களுக்கும் காசு கொடுப்பவர்களுக்கு மட்டுமே சீட்டு தருகின்றார்கலாமே அந்தக் கட்சி காரனே சொல்வது புலம்புவதும் நடக்கின்றதே.
ஆகவே இந்தக் கேள்வி அவசியமாகின்றது. உங்களது கட்சி அறிவித்த போராட்டங்களில் கலந்து உயிர் இழந்த உங்கள் கட்சித் தொண்டர்கள் எத்தனை பேர் அவர்களின் குடும்பத்தினர் இபொழுது எங்கு உள்ளனர் அவர்களின் முகவரி. அவர்களுக்கு கட்சியில் இருந்து என்ன உதவி செய்யலாம் என்ற தீர்மான பக்கங்களின் நகல். என்ன என்ன உதவிகள் கட்சிமூலம் செய்யப்பட்டது என்பதன் விபரம், அவர்களின் வாரிசுகள் பெயர் முகவரி, வாரிசுகள் என்ன பனி செய்துகொண்டு இருக்கின்றார்கள். அவர்களுக்கு கட்சியில் ஏதேனும் பொறுப்பு அளிக்கப் பட்டு இருந்தால் அதன் விபரம்.
உங்கள் கட்சியில் தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் எப்படி தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்தின் நகல், தேர்வு செயப்பட்ட உங்கள் கட்சி வேட்பாளர்கள் தேர்வு செய்த விபரம் அந்த வேட்பாளர் கட்சியில் சேர்ந்த நாள், விண்ணப்ப நகல், அவர் செலுத்திய சந்தா ரசீது நகல், கட்சிக்காக என்ன பனி செய்தார் என்ற விபரம்
உங்கள் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் கொடுக்கப்பட வேண்டிய உங்கள் கட்சியின் ஆண்டு அறிக்கையின் நகல் கொடுங்கள்.
நேர்மையான நியாயமான கட்சி நடத்துபவர்கள் இதைக் கொடுக்க மாட்டார்களாம் சொத்துக் கணக்கை கேட்டால் கபம் கொள்ளவதில் அர்த்தம் இருக்கலாம் என்ன செலவு செய்தீர்கள் என்று கேட்டால் கோபம் வரலாம் சாதாரன் இந்தத் தகவலை கேட்டார்கள் இது என்ன கொடுக்க முடியாத தகவலா கேட்டால் நாங்கள் தகவல் உரிமைச் சட்ட வரம்பில் வரமாட்டோம் ஆகவே தரமாட்டோம் என்கிறார்கள்.

அப்படி என்றால் இவர்களது கட்சிக்கு தவறான வழியில் பணம் வருகிறதோ என்ற ஐயம் உணமையகின்றதோ மடியில் கனமிருந்தால் தானே வலையில் பயம். உங்கள் மடியில் கனமில்லை என்று தைரியமாக சொல்ல வேண்டியது தானே .
எந்த அரசியல் கட்சியும் தகவல் தராத நிலையில் மூன்று ஆண்டுகளாக நண்பர்கள் போராடியதன் விளைவாக மத்திய தகவல் ஆணையம் கடந்த மதம் மூன்றாம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு உத்தரவை இட்டது.
அந்த உத்தரவு அரசியல் கட்சிகள் தகவல் கேட்டால் கட்டாயம் தந்தே ஆகவேண்டும்.
இந்த உத்தரவும் ஆணையம் எதோ விளையாட்டாய் சும்மா தரவில்லை ஆதாரங்களுடன் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் அளிக்கப்பட்டது. அதைத் தான் அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றார்கள் குய்யோ முறையோ என்று குதிக்கின்றார்கள் நாட்டில் உள்ள குடிமக்களுக்கு பொருந்தும் இச் சட்டம் எங்களைக் கட்டுப்படுத்துவதா நாங்கள் கொண்டு வந்த எங்களால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட சட்டம் எங்களையே கேள்வி கேட்கவா என்று புலம்புவதும் இச்சட்டத்தை இன்னொரு சட்டம் போட்டு தடுக்கிறோம் என்று சொல்வதுமாக கூச்சலிடுவது ஏன் .
அரசியல்
கட்சிகள் உச்சநீதிமன்ற ஆணைக்கு கட்டுப்பட மாட்டார்கள், மத்திய தகவல்
ஆணையத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட மாட்டார்கள், அரசியல் சாசன
உரிமைக்குட்ட்பட்ட சட்டத்தையும் மதிக்க மாட்டார்கள் என்றால் பொது மக்களாகிய
அமைப்பின் நிர்வாகிகளாகிய நாம் என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள்,
மக்கள் சக்தியே சுதந்திரம் பெற்றுத் தந்தது , மக்கள் சக்தியே தகவல் உரிமைச்
சட்டம் போட வைத்தது.
மக்கள் நலனுக்காக பொது நல அமைப்பை நடத்துபவர்களே சமூக ஆர்வலர்களே சிந்தியுங்கள் முன் பத்தியில் உள்ள வாசகங்களைப் படியுங்கள் அதன் படிதான் அரசியல் கட்சிகளுக்கு பணம் வருகின்றது என்றால் நம் தேசத்தின் எதிகாலம் என்ன?
தீவிரவாதிகளும் கொள்ளையர்களாலும் இந்த நாடு சின்னாபின்னமாகிப் போகுமே நம் சந்ததிகள் நிலை? இப்பொழுதே சில மாநிலங்கள் தீவிரவாதிகள் கட்டுக்குள் இருபதாக செய்திகள் வருகின்றதே. அந்த நிலை நம் மண்ணுக்கு வர காலமாகுமோ? நம் பிள்ளைகள் கொல்லையனாகவோ தீவிரவாதியாகவோ காலமாகுமோ?
நாம் போராடிப் பெற்ற சுதந்திரம் உண்மையான சுதந்திரம் எந்த சட்டம் வேலை செய்யவில்லை என்றாலும் கேள்வி கேட்கலாம் இந்த சட்டத்தின் மூலம். எந்த ஒரு அரசு அலுவலரும் வேலை செய்யாவிட்டால் கேள்வி கேட்கலாம், எந்த ஒரு நபரின் வருமானக் கணக்கையும் கேட்கலாம் , அலுவலக உதவியாளர் முதல் பாராளும் பிரதமர் ம், ஜனாதிபதி வரை யாரையும் எந்த ஒரு குடிமகனும் கேள்வி கேட்கலாம் அதுமட்டும் அல்லாமல் தகவல் கேட்டவரை பழிவாங்கும் நோக்கில் எந்த வழக்கும் தொடுக்க முடியாது என்ற இந்த உரிமையை விட்டுத் தரலாமா
இந்த உரிமையைத் தான் நம்மிடம் இருந்து மத்திய அரசும் தகவல் தர மறுக்கும் கட்சிகளும் பறித்துவிட துடிக்கின்றன. பாமரனுக்கும் பயன்படும் இந்த உன்னதமான சட்டத்தை தெரியாமல் கொண்டு வந்த அரசியல் கட்சிகளே இன்று எதிர்ப்பது இச் சட்டத்தின் வலிமையைக் காட்டுகின்றது. அகவே தோழர்களே நாம் இன்று முதல் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அறிந்துகொள்ள தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலும் தேவைப்படின் இன்னும் மற்ற மொழிகளில் எல்லா மக்களுக்கும் இந்த தகவலைக் கொண்டு சேர்ப்போம்
பெற்ற சுதந்திரத்தை காக்க இந்த அழைப்பை ஏற்று 13-7-13 அன்று காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்திடுவோம் அணிதிரண்டு வாரீர் வாரீர்
3 கருத்துகள்:
சிறப்பான கடிதம்... வாழ்த்துக்கள்...
ஆர்ப்பாட்டம் வெற்றி பெறா வாழ்த்துக்கள்
//ஆர்ப்பாட்டம் வெற்றி பெறா வாழ்த்துக்கள்//
?????????????????????????????????
கருத்துரையிடுக