ஆதரவாளர்கள்

வியாழன், 9 மே, 2013

கல்விக் கடன் வாங்குவது ஈஸி;கல்விக்கடன் உதவிக்கு இந்தியன் குரல் அமைப்பு

இந்தியன் குரல்  அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் கல்விக் கடன் கிடைக்காத மாணவர்களுக்கு கல்விக்கடன் கிடைக்கச் செய்ய தகவல் பெரும் உரிமைச் சட்டம் 2005 ஐ பயன்படுத்தி பெற்றுத் தருகிறது. சென்ற ஜூலை 2012 கல்விக் கடன் வாங்குவது ஈஸி என்று குங்குமம் வார இதழ்  கட்டுரை வெளிட்டது
அட்டைப் புகைப்படம்
How to apply Education loan? watch and follow  this BOOK contact 9444305581 
அக்கட்டுரையில் இந்தியன் குரல் உதவிக்கு என்று எங்களது அலைபேசி எண்களையும்  வெளியிட்டிருந்தது அதன் மூலம் தமிழகம் முழுவதும் இருந்து 2013 ஜனவரி 31ஆம் தேதி வரை உதவி கேட்டு நேரிலும் தொலைபேசி வழியாகவும் வந்த கோரிக்கைகள் 8712 அவர்களில் பெரும்பான்மையோர் வங்கிகள் கல்விக் கடனுக்கான விண்ணப்பங்களைத்  தர மறுக்கின்றார்கள் என்பதாகும். இவர்கள் அனைவருக்கும் இந்தியன் குரல் உதவியுடன் விண்ணப்பம் பெற்றுவிட்டார்கள். இப்பொழுதும் தினமும் 20வதிலிருந்து 25 மாணவர்கள் வரை உதவி  கேட்டு அலைபேசியிலும் நேரிலும் வருகிறார்கள். அலைபேசியில் தினமும் கல்லை 10 மணிமுதல் 12 மணி வரை 9444305581 எண்ணிலும் காலை 11 மணி முதல் மாலை 600 மணி வரி 9994658672 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். இதற்கு கட்டணம் ஏதும் பெறாமல் இந்தியன் குரல் உதவி செய்து வருகின்றது. 
  எங்களது சேவை ஆண்டுதோறும் தகவல் தெரிந்து கேட்கும் 100 முதல் 150 மாணவர்களுக்கு தான் செய்து வந்தோம் குங்குமம் வார இதழால் இந்த ஆண்டு சுமார் பத்தாயிரம் மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு எங்கள் மூலம் கிடைத்துள்ளது. இந்தியத் திருநாட்டின் மனித வளம் மேம்பட அதிக எண்ணிக்கையில் உதவிட முடிந்தது. பயனடைந்த மாணவர்கள் சார்பாக குங்குமம் வார இதழுக்கும் அதன் ஆசிரியருக்கும் கட்டுரை எழுதிய திரு வே நீலகண்டன் அவர்களுக்கும் இந்தியன் குரல் அமைப்பின் மனமார்ந்த நன்றி.
கல்விக் கடன் பெற்றுவிட்டோம் என்று 500க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் நேரிலும் அலைபேசி வாயிலாகவும் நன்றி தெரிவித்துள்ளார்கள் 
  
எங்கள் அனுபவம் ஒரு சிலர் நம்பிக்கையற்றோ அல்லது கடன் கிடைக்காமல் போய்விடும் என்றோ அல்லது வங்கிகள் மீதுள்ள தங்களுடைய அனுமானங்களினாலோ  அல்லது மிரட்டப்பட்டோ எங்களின்  வழிகாட்டுதலை முறையாக பின்பற்றாமல் இருந்துவிட்டார்கள். அவர்களில் சிலர் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று காலம் கடந்து கேட்கிறார்கள் அவர்களிடம் பேசும் பொழுது அவர்கள் செய்த தவறுக்கு முன்பு தெரிவித்த காரணங்களைக் கூறுகின்றனர். மீண்டும் முயற்சித்து கல்விக் கடன் பெற உதவி வருகிறோம் எனினும் காலம் வீணானதுதானே. கண் போனபின் சூரிய நமஸ்க்காரம் என்பதுபோல் வாய்ப்பை தவரவிட்டுக் மிகுந்த சிரமங்களை அனுபவித்து காலம் கடந்து வெற்றிபெறுகிறார்கள்.

கல்விக் கடன் நம் உரிமை நமக்கு யாரும் யாசகம் போடவில்லை நம் பணத்தில் தான் கல்விக்கடன் தரும் வங்கியும் செயல்படுகிறது என்பதை மறவாதீர். 
பயம்  கொள்ளல் ஆகாது பாப்பா 
என்று அந்த மகாக் கவிஞன்   பாப்பாவுக்கு மட்டும் சொல்லவில்லை நமக்கும் தான்.


 கல்விக் கடன் நம் உரிமை 

நண்பர்களே கல்விக்கடன் பெற சட்டப்பூர்வ ஆலோசனைகளை
http://vitrustu.blogspot.in/ வலைப்பூவில்  வழங்கியுள்ளோம்  இதை டவுன்லோட் சேய்து பிரிண்ட் எடுத்து முழுவதையும் நன்றாக திரும்பத் திரும்ப  படித்து உங்களுக்கு என்ன தேவை என்பதை முடிவெடுத்து பிறகு அதற்கான விண்ணப்ப எண்ணை தேர்ந்தெடுத்து SMS அனுப்புங்கள் sms அனுப்பவேண்டிய தொடர்பு எண் 9994658672 or 9444305581 வாய்ப்புள்ளவர்கள் முகாம்கள் நடக்கும் நாட்களில் நேரில் வரலாம். இந்த உதவிக்கு கட்டணம் இல்லை. இந்த இணைப்பை படித்த பயன்பெற்ற நீங்கள் sms  மூலம் இந்த இணைப்பை நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம் .  மேலும் புரிந்து சரியாக செயல்படவும் தங்கள் பகுதியில் உள்ள மற்ற மாணவர்களுக்கு தாங்களே உதவிடவும் கல்விக்கடன் பெறுவது எப்படி? என்று புத்தகம் வெளியிட்டுள்ளோம் மடமையைக் கொளுத்துவோம் வாரீர்  

கல்விக்கடன் பெறுவது எப்படி புத்தகம் பெற தொடர்புகொள்ள 
9043248410, 9443489976 , 9597731018
 
வாழ்த்துகிறது  - இந்தியன் குரல் 




இது தான் தகவல் பெரும் உரிமைச் சட்டம்  புத்தகத்தில் அரசின் பயன்கள்  அனைத்து மக்களும் பெற, இலஞ்சம் கொடுக்காமல் நம் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வழிகளைக் காட்டும் மாதிரி விண்ணப்பங்களும் உள்ளது
 புத்தகம் தேவைக்கு தொடர்புகொள்ள;
 9444305581 E. பாலசுப்ரமணியன் 256 T .H  ரோடு , கௌரி கல்யாண மண்டபம் , திருவொற்றியூர் சென்னை 600019
9443489976 M . சிவராஜ் 12 ஆறுமுகம் தெரு வசந்தபுரம் வேலூர் 1


கருத்துகள் இல்லை: