ஆதரவாளர்கள்

Thursday, May 23, 2013

கிரிக்கெட் மேச் பிக்சிங் நடந்தது என்ன?

கிரிக்கெட் மேச் பிக்சிங் பற்றிய பரபரப்பு நாடெங்கிலும் செய்தியாகி விட்டது  இந்தியன் குரல் 15.4.2013 அன்றே

சென்னை சூப்பர் கிங்சும் புனே வாரியர்சும் ஆட்டமும் நடிப்பும் சூப்பர்

 என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது.
விழித்துக் கொண்டு அரசு நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டுக்குரியது ஆனாலும் பாரபட்சமற்ற விசாரணை இருக்குமா? புலனாய்வில் என்ன நடக்கும். உண்மையைக் கண்டறிந்து உண்மையான குற்றவாளிகள் தண்டனை பெறுவார்களா? மக்கள் கண்காணிப்பு இருந்தால் நேர்மையாக நடக்கும் அத்தகைய கண்காணிப்பு செய்ய தகவல் உரிமைச் சட்டம் இருக்கின்றது அச் சட்டத்தின் படி தகவல் கேட்டால் உண்மை வெளிவந்துவிடும். தவறு செய்தவர்கள் தண்டனை பெறுவது உறுதியாகும். அதிகாரிகளே உங்களது விசாரணை உண்மையாக இருக்கட்டும் யாருடைய தலையீடும் இல்லாமல் நேர்மையாக நடந்து உங்களது சோற்றில் உப்பும் இட்டு சாப்பிட வாய்ப்புக் கொடுத்த மக்களுக்கு(கிரிக்கெட் ரசிகர்களுக்கும்) உண்மையாக பணியாற்ற இந்தியன் குரல் வாழ்த்துகின்றது. நேர்மையான அரசு அலுவலர்கள் பணியில் குறுக்கீடு இல்லாமல் பணியாற்ற இந்தியன் குரல் வழிகாட்டி உதவி செய்கின்றது.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

பாரபட்சமற்ற விசாரணை நடக்க வேண்டும்...