ஆதரவாளர்கள்

Sunday, May 12, 2013

உதவித் தொகையுடன் அரசு ஐ.டி.ஐ.யில் இலவச தொழிற்பயிற்சி

உதவித் தொகையுடன் இலவச தொழிற்பயிற்சி அளிக்க உள்ளதாக கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையம் அறிவித்துள்ளது.
இது குறித்து கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், உலகத்தர பயிற்சி அளிக்கப்படும்


 தொழிற்சாலை மின்னணுவியல் (கம்மியர்), பிளாஸ்டிக் வழிமுறை பணியாளர் மற்றும் குழைம வழிமுறை செயலர், லித்தோ ஆப்செட் மிஷின் மைண்டர் (எல்.ஓ.எம்.எம்.), டெஸ்க்டாப் பப்ளிஷிங் ஆப்பரேட்டர் (டி.டி.பி.ஓ), எண்ணியல் நிழற்பட கலைஞர் மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை (ஹெச்.எம்) உள்ளிட்ட படிப்புகளுக்கு இந்தக் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
பயிற்சியில் சேர 14 முதல் 40 வயது வரை என ஆண்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. மேலும், பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
பயிற்சியாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் மற்றும் ரயில் பயணச் சலுகையும் அளிக்கப்படுகிறது. மேலும், மாதம் தோறும் உதவித்தொகையும், விலையில்லாத மடிக்கணினி, சைக்கிள், காலணிகள் மற்றும் சீருடைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. பயிற்சி முடிந்தவுடன் வளாகத் தேர்வு மூலம் அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படுகிறது.

விவரங்களுக்கு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை, 2250 1982 என்ற தொலைபேசி எண்ணிலோ, 94449 19012 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தகவல்களுக்கு நன்றி...

Vinoth Kumar said...

ஒரு சிறிய உதவி..

மின்சாரம் பற்றிய ஒரு இடுகை இட்டிருரிக்கிறேன்.

படித்து பார்த்து ஆவன செய்யுங்கள்

http://kannimaralibrary.co.in/power9/
http://kannimaralibrary.co.in/power8/
http://kannimaralibrary.co.in/power7/
http://kannimaralibrary.co.in/power6/
http://kannimaralibrary.co.in/power5/
http://kannimaralibrary.co.in/power4/
http://kannimaralibrary.co.in/power3/
http://kannimaralibrary.co.in/power2/
http://kannimaralibrary.co.in/power1/

நன்றி,
வினோத்.