ஆதரவாளர்கள்

திங்கள், 27 மே, 2013

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 - பகுதி 2

இந்தியன் குரல் நண்பர்களே!
 உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி .
 சென்ற பதிவு வெளியிட்ட து முதல் சந்தேகம் மற்றும்  உதவிகேட்டு வந்த நண்பர்களின் அழைப்புகள்  இக்கட்டுரையின் அவசியத்தை எடுத்துக் காட்டுகின்றது.

மக்களுக்கு விழிப்புணர்வு தேவை என்பதும் அதை தெளிவுடன் தெரியப்படுத்துவதில் இந்தியன் குரல் முன்னணியில் இருப்பதும் இச்சட்டம்  அறிந்த சரியாக பயன்படுத்தி வெற்றி கண்டு வரும் அனைவரும் அறிவர். தகவல் உரிமைச் சட்டம் பற்றிய பயிற்சியோடு நில்லாமல் அவர்களுக்கு மேலும் உதவி மையம் நடத்தி அதன் வாயிலாக உதவி செய்யும் ஒரு அமைப்பு  உள்ளது என்றால் அது இந்தியன் குரல் மட்டுமே. நியாயமான காரணங்களுக்காக சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு வழிகாட்டுகின்றோம்.

இந்தியன் குரல் உதவியுடன் லஞ்சம் கொடுக்காமல் பட்டா பெயர் மாற்றம் , மின் இணைப்பு குடும்ப அட்டை முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட எண்ணற்ற பலன்களை பலர் பெற்று இருந்தாலும் மாணவர்கள் கல்விக்கடன் பெற உதவி செய்ததில் இந்தியன் குரல் சாதனை செய்தது என்றே சொல்லலாம் ஆம் 8700 மாணவர்களுக்கு 2012-2013 ஆம் கல்வியாண்டில் கல்விக் கடன் பெற உதவி செய்தது இந்தியன் குரல்.


1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் வெள்ளையர்கள் தங்களது அலுவலக கோப்புகளை பொது மக்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்று ரகசியம் காத்தனர். ஆகவே அலுவலகங்களில் அதிகாரிகள் கோப்புக்களை அதில் உள்ள சரத்துக்கள் அனைத்தும் யாருக்கும் காட்டவோ நகல் எடுக்கவோ அனுமதிக்கவில்லை. 

ஆங்கிலேயர் ஆட்சியில் அலுவலகங்கள் ரகசியம் காக்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற பிறகும் அதே நிலை. கோரிக்கை மற்றும் புகார் மனுக்கள் நடவடிக்கை விபரம் பொதுமக்களுக்கு தெரியாமல் இருக்கும் அந்த மனுக்கள் என்ன ஆயிற்று என்றே தெரிந்துகொள்ள இயலாது.
 
இந்நிலை மாற்றிட தகவல் உரிமை வேண்டும் என்று பல்வேருகட்டப் போராட்டங்கள் நடைபெற்றது 27 சமூக ஆர்வலர்கள் தங்களது உயிரை இழந்து போராடியதன் விளைவாகவும் உலக நாடுகள் 30 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களின் மக்களுக்கு கொடுத்துவிட்ட சட்டம் இந்தியாவில் அமல் படுத்த வேண்டிய கட்டாயம் இல்லையெனில் உலக நாடுகளின் கேலிக்கு ஆளாக நேரிடும் என்ற சூழ்நிலையிலும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இச்சட்டத்தைக் கொண்டுவந்தது. 

அன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் பலருக்கு இது என்ன என்றே தெரியாமல் இச் சட்டத்தை ஆதரித்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டு சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது.
இந்திய அரசு இந்திய அரசியல் அமைப்பிற்கு உட்பட்டு 2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த சட்டம் தகவல் உரிமைச் சட்டம். சட்டம் என்ன நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டுக்ள்ளது என்ற விபரம் தெளிவான முன்னுரையோடு விளக்கப்பட்டுள்ளது. அது முதன்மையான நான்கு காரணங்களையும் நோக்கங்களையும் தெளிவாகக் காட்டுகின்றது

அவற்றில் முதலாவதாக மத்திய மாநில அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான் ஒளிவு மறைவு அற்ற நிர்வாக கொண்டு வருதல்.

அரசு அலுவலகங்கள் மட்டுமன்றி அதைச் சார்ந்த அலுவலகங்களின் செயல்பாதுகள் குறித்த தகவல்கள் குடிமக்கள் கேட்டுப் பெறவும் அதன் மூலம் ஊழலை ஒழித்தல் .

அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடையே  பொறுப்புடைமை மேம்படுத்துதல்

அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் போருப்புடமையாக்குவதொடு உள்ளார்ந்த தகவல்களின் ரகசியம் காத்தல்


இந்த நோக்கங்களில் இருந்தே இச் சட்டத்தின் சிறப்பு என்ன என்பதை அறியமுடிகின்றது.

இச் சட்டத்தின் படி தகவல் கேட்டால் 30 தினங்களில் தந்துவிட வேண்டும் அப்படி தராத பொது தகவல் அலுவலருக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் வீதம் அதிகபட்சம் 25000 ரூபாய் அபராதமும் துறை நடவடிக்கையும் என்று தண்டனை உள்ளதால் இச் சட்டம் மேலும் சிறப்பு பெறுகின்றது.

அரசு அலுவலகங்கள் நேரடியாகவும் தனியார் நிறுவனங்களும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் அதன் கட்டுப்பாட்டு அரசு அலுவலகங்கள் மூலம் தகவல் தர தகவல் உரிமைச் சட்டம் வகை செய்கின்றது 

இந்தியாவில் உள்ள எந்த சட்டம் சட்ட மீறல்களையும் இச் சட்டாம் மூலம் தகவல் கேட்டால் தகவல் தரவேண்டும் என்ப்வதால் இது மக்கள் கண்காணிப்பு சட்டம் மக்களின் ஆயுதம் தகவல் உரிமைச் சட்டம் ஆகும்.

எந்த சட்டமும் சரியாக செயல்பட, அலுவலகங்கள் அலுவலர்கள் தன கடமை. என்ன வேலை செய்தார் இந்த அலுவலர் என்ற தகவல் இந்த தனியார் பள்ளியில் உள்ள உள்கட்டமைப்பு கட்டணம் எவ்வளவு இந்த தனியார் ஆளை மாசுக்கட்டுப்பாடு வாரிய உரிமை பெற்றுள்ளதா கரண்ட் பில் எவ்வளவு கட்டுகின்றார்கள் என்ற தகவல் உள்பட அனைத்தும் கேட்க இச் சட்டம் உதவுகின்றது. 

எங்கள் ஓரில் தெருவில் போட்ட சாலையின் விபரம் தன்மை ஒப்பந்ததாரர் உள்ளிட்ட விபரம் எங்க MLA MP பாராளுமன்றத்தில் என்ன செய்தால் மக்களுக்கு என்ன செய்தார் தொகுதி நிதியை செலவு செய்தாரா எப்படி செலவு செய்தார் என்ற விபரமும் ஜனாதிபதி எத்தனை முறை பயணம் மேற்கொண்டார் அதற்க்கு என்ன செலவு ஆயிற்று என்ற விபரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கேட்கலாம் 

இந்தியக் குடியுரிமை பெற்ற அனைத்து குடிமகன்களும் தகவல் உரிமைச் சட்டம் மூலம் கேட்டுப் பெறலாம். இதற்கென்று தனியாக விண்ணப்ப படிவங்கள் இல்லை சாதாரண வெள்ளைத் தாளில் அனுப்புனர் பெறுனர் குறிப்பிட்டு எழுதிக் கேட்கலாம்

விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பங்கள் எழுதுவது எப்படி அடுத்த பதிவில்

வலைப் பதிவு நண்பர்களே இணைய நண்பர்களே தொடர்ந்து படியுங்கள் உங்களது கருத்துக்கள் பின்னூட்டமாக இடுங்கள் உங்களது கருத்துக்கள் கேள்விகள் எங்களுக்கு ஊக்கமளிக்கும். மேலும் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு அலைபேசியிலோ அல்லது இந்தியன் குரல் இலவச உதவி மையம் மூலமாகவோ தொடர்பு கொள்ளுங்கள்.
 நட்புடன்  இந்தியன் குரல் இ. பாலசுப்ரமணியன் 9444305581 
 இப்படி ஒரு சட்டம் கொண்டுவந்ததன் நோக்கம் யாருக்கு எப்படி எழுதுவது  என்பது பற்றிய பயிற்சி அடுத்த பதிவில்

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

"தகவல் பெரும்" அல்ல, "தகவல் பெறும்"

VOICE OF INDIAN சொன்னது…

பாட்டெழுதிப் பெயர் வாங்குபவர்கள் உண்டு. ஆனால் பாட்டில் உள்ள குறைகண்டு பெயர் வாங்குபவர்களும் உண்டு பெயரில்லாதவரே உங்களது கருத்துரைக்கு நன்றி
--
www.vitrustu.blogspot.com
VOICE OF INDIAN
256 TVK Qts TVK Nagar,
Sembiyam,
Perambur,
Chennai 600019