ஆதரவாளர்கள்

Wednesday, May 15, 2013

கோச்சடையான் புதிய செய்தியும் ரஜினிகாந்தின் உண்மையான மறுபக்கம்

கோச்சடையான் புதிய செய்தியும் ரஜினிகாந்தின் உண்மையான மறுபக்கம் 


 


கோச்சடையான் படத்தில் தீபிகா படுகோனே உச்சமான கவர்ச்சி காட்டி நடித்துள்ளதாக செய்தி;
ரஜினிகாந்த் அவர்கள் தன்னை நல்ல நடிகனாக நல்ல ஆன்மீக வாதியாக நல்ல பண்பாளராக தன்னுடைய ரசிகர்கள் வேலை இல்லாமல் இருக்கக் கூடாது முதலில் வீடு அப்புறம் தான் எல்லாம் என்று நல்ல ஆலோசனைகள் வழங்கும் ஆலோசகராக ரஜினி ரசிகர் என்ற முறையில் அறிவேன்

ஆனால் மேற்கண்ட தகவல் எனக்கு மிகுந்த மன உளைச்சல் தருகின்றது
காரணம்

1) தலைவர் படம் முன்பெல்லாம் சந்தோசம் வரும் நல்ல கருத்துக்களுடன் நல்ல பொழுது போக்கும் இருக்கும் கவர்ச்சி என்று பிரித்து பார்க்க முடியாத அளவில் கதையுடன் ஒன்றி இருக்கும். ஒரு தாயின் சபதம் படம்  பார்த்து அன்றுமுதல் இன்று வரை என்னுடைய அம்மா எது கேட்டாலும் செய்து கொடுக்கின்றேன்.
கவர்ச்சிக்கு முக்கியத் துவம் கொடுத்தால் தான் ரஜினி படம் ஓடுமா அப்படி நடிகையை கவர்ச்சியாக காட்டித் தான் தலைவர் படத்தை ஓட்ட வேண்டுமா  சமீபத்திய படங்கள் சொல்லும் செய்தி என்ன ரசிகரான எனக்கு என்ன சொல்கின்றார்

2) தலைவர் நடிக்கும் கோச்சடையான் படத்தை இயக்கும்  இயக்குனர் தலைவரின் மகள் தன்னுடைய மகள் இயக்கும் படத்தில் தன்னுடைய மகளுக்கு முன்னாள் நின்று அதீத கவர்ச்சி உடையில் உள்ள நடிகையுடன் நெருக்கமாக நடிக்க முடிந்தது என்றால் தனது ரசிகர்களுக்கு  என்ன சொல்ல வருகின்றார்

தான் பெற்ற பெண்ணே அப்பா இப்படி கட்டிப்பிடி இப்ப பேசு ரோமான்ஸ்  இப்படி செய்யணும் என்று சொல்லித்தரும் அதை செயலாற்றும் .................

5வயது பெண்ணை 7வயது 8 வயது 10 வயது கொண்ட மூன்று சிறுவர்கள் வன்புணர்வு செய்துள்ளதாக சமீபத்திய செய்தி பாருங்கள் நாடு எங்கே சென்றுகொண்டு இருக்கின்றது இளைஞர்கள் எதிர்காலம் என்ன

 தயாரிப்பாளர்களே சற்று சிந்தியுங்கள் தலைவர் படத்திலாவது கவர்ச்சி காட்டாமல் தயாரிக்கலாமே. பாலியல் கொலை பாலியல் துன்புறுத்தல் என்று தினமும் செய்தி வரும் இன்றைய நிலையில் ரஜினி படம் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுப்பது சரியா? தயாரிப்பாளர்களுக்கு போட்ட பணம் பல மடங்காக திரும்ப எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கலாம் தலைவர் ஒரு வார்த்தையில் அதை மாற்றலாமே செய்வாரா?

அதாவது தொழில் என்று மட்டும் யாரும் சொல்லிவிடாதீர்கள் தொழில் என்பதற்காக முன்னாள் இருப்பது தன்னுடைய மகள் என்பது மறைந்துவிடுமா  கூச்சமாக இருக்காதா?  பிழைப்புக்காக தமிழகம் வந்தவர் தானே தமிழர்கள் கலாச்சாரம் எப்படிக் கெட்டால் என்ன தமிழ் பிள்ளைகள் எப்படிப் போனால் என்ன பணம் மட்டுமே பிரதானம் என்று இருக்கின்றாரா இவரை நம்பியது தமிழ் ரசிகர்கள் குற்றமா  இவருக்கா ரசிகராக இவ்வளவு காலம் இருந்துள்ளேன் வெட்கப்படுகின்றேன்.

என்ன இருந்தாலும் தலைவர் தான் ஆனாலும் தலைவர் படத்திற்கு கவர்ச்சி தேவையா கவர்ச்சி இருந்தால் தான் தலைவர் படம் ஓடும் என்றால் தலைவர் நடிப்பு எதற்கு?

 தலைவரின் படம் பற்றிய சமீபத்திய செய்தியைப் படித்து வருத்தப் பட்ட நான் இனி ரஜினி படமே பார்க்கக் கூடாது  என்ற முடிவை இப்போது எடுத்துளேன்

தீர்வு;
1 கவர்ச்சியான காட்சிகளுடன் திரு ரஜினிகாந்த் அவர்கள் படத்தினை வெளியிட அனுமதிக்கக் கூடாது.
2 கவர்ச்சியுடன் வெளியிடும் பட்ச்சத்தில் ரஜினி ரசிகர்கள் படத்தினை தடை செய்யக் கேட்டு அரசிடம் முறையிட வேண்டும் அரசு தடை செய்ய வேண்டும்
3 கவர்ச்சியுடன் பிஞ்சுக்களின் மனதில் நஞ்சை விதைக்கும் கவர்ச்சி திரைப்படங்களை அனைத்து மக்களாலும்  புறக்கணிக்கப் பட வேண்டும்
4 தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தரமான திரைப்படம் கலாசாரத்திற்கு ஊரு விளைவிக்காத வகையில் திரைப்படங்களை உருவாக்க வேண்டும் 
உண்மையான தமிழர்கள் நாடு நிலையாளர்கள் நான் எடுத்த முடிவு பற்றிய கருத்துக்களை பின்னூட்டத்தில் இடலாம்.

4 comments:

Anonymous said...

Dear sir,
Im also Rajini Fan. I think it is False news.
Reasons: 1. Rajini fans is more in Ladies.
2. Family audians is more to Rajini.
3. Its animation film. So, Its Target are childrens. Then, how they are mix glamour ?

Fineally,
From 1990 (After Ragavendra Film) ( Last 23 years), Rajini films are not Mix with over glamour.

Anonymous said...

சினிமா படங்களில் கவர்ச்சி காதல் வன்முறை தவிர வேறு ஒன்றுமே இல்லை என்பது எனது அபிப்ராயம். இதில் ரஜனியோ அல்லது வேறு எந்த நடிகருமோ விலக்கல்ல. ரஜனியின் படங்களிலும் இவையனைத்தும் உள்ளன. பொதுவாகவே சினிமா டிவி சீரியல்கள் மற்றும் நடனப்போட்டிகள் என்ற பெயரில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் எல்லாமே அருவருக்கத்தக்கவை. இவைகள் கட்டுப்படுத்தப்படாவிட்டால் சமுகம் சீரழிவது தடுக்கமுடியாது.

Arul Selva Per arasan said...

ஒரு பெண் அரைகுறை ஆடையுடன் வந்தால், அல்லது நிர்வாணமாக வந்தால் அது ஆபாசம் என்று நம்புபவர்கள் கவனத்திற்கு!

நிர்வாணமே ஆபாசம் கிடையாது என்கிறார்கள் சிலர் என்றால், அரைகுறை ஆடை என்பது ஆபாசத்தில் அடங்காது.

நான் கவர்ச்சிக்கு வக்காலத்து வாங்க இங்கு வரவில்லை. எனது எண்ணம் என்னவென்றால், படுகவர்ச்சியாக இருந்தாலும், நிர்வாணக் காட்சிகள் அத்திரைப்படங்களில் இருந்தாலும் அதற்கு A சான்றிதழ் கொடுத்து. அதைக் கண்டிப்பாக சிறுவர்கள் பார்க்காமல் தடுத்துவிட்டாலே போதும்.(கதைக்கு மிகவும் அவசியத் தேவை இருந்தால் மட்டுமே). இந்த உறுதியை அரசாங்கம் ஏற்கவேண்டும். ஒரு படத்திற்கு A சான்றிதழ் கொடுத்தால், கட்டாயம் அரசாங்கம் திரையரங்களில் சிறுவர்கள் அனுமதிக்கப்படுகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

ஆனால் மனதுக்குள் புணர்வு எண்ணங்களைத் தூண்டிவிடும் காட்சிகள் இருக்கும் படங்களை அனுமதிக்கவே கூடாது என்பதே என் கருத்து.

ஒன்றும் இல்லை. ஒரு உதாரணத்திற்குத்தான் சொல்கிறேன். சமீபத்தில் விஸ்வரூபம் என்று ஒரு படம் வந்தது. அந்தப் படத்தில் ஒரு காட்சி, நாயகனுக்கு கையில் அடி பட்டிருப்பதால், நாயகனின் பெண் நண்பர் அவருக்கு ஜிப் அவிழ்த்துவிடுவார். அப்போது நாயகனின் மனைவியார் வந்துவிடுவார். அப்போது அந்த பெண் நண்பர் "Do you want a" என்று இரு பொருள் படக் கூறுவார். இந்தக் காட்சியில் துளியும் நிர்வாணமோ அரைநிர்வாணமோ இல்லாமலிருந்தாலும், காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் சரியா? அந்தக் காட்சி படத்திற்கு அவசியம் தேவைதானா? இன்னனொரு விஷயம் அந்தப் படத்தில் நாயகனின் மனைவிக்கு ஒரு கள்ளக் காதலன் வேறு! கலாச்சாரம் கலாச்சாரம் என்பவர்கள் அந்தப் படத்திற்கு எதிராக ஒரு குரல் கூட கொடுக்க வில்லை.

ஆகையால், நாம் கண்டிக்க வேண்டியது இதுபோன்ற அருவெறுக்கத்தக்க காட்சிகளையே. நிர்வாணம் ஒரு அழகியலே! மனதைக் கெடுக்காதவரை.

மேற்கண்ட கருத்துகள் போன்ற கருத்துகளைக் கொண்டு, விஸ்ரூபம் திரைப்படம் குறித்து நான் ஒரு விமர்சனம் எழுதியிருந்தேன். அதை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும். உங்கள் வாசகர்களுக்கும் பகிருங்கள்.

ரஜினியின் படங்களில் கவர்ச்சி இருந்தாலும், ஆபாசம் துளியும் இருக்காது. அனைவரும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் வண்ணமே படம் இருக்கும். ஆகையால் நம்பிக்கையுடன் கோச்சடையானுக்காகக் காத்திருங்கள். (எதிர்க்க அல்ல. படம் என்ன சொல்கிறது என்பதைக் கவனிக்க.)

Bala subramanian said...

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழர்

உங்களது வதம் சரியென்றே நானும் ஏற்றுக்கொள்கின்றேன் திரைப்படங்களில் ஏ சர்டிபிகேட் படங்களை சிறுவர்கள் பார்க்காமல் கண்காணிக்க வேண்டும் என்கின்றீர்கள் அப்படி என்றால் U/A சர்டிபிகேட் படங்களை யார் யார் பார்க்கலாம் என்று விளக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் மேலும் கலாச்சார சீரழிவுகளைக் கலை என்ற தொனியில் ஏற்றுக்கொள்ளல் நியாயமா என்று தெரியவில்லை இன்றைய கலாச்சார சீரழிவு குறித்த ஊடகங்களின் பங்கு பற்றிய பதிவை வெளியிட்டுள்ளோம் படித்து உங்கள் கருத்தை இடவும்.