இந்த பதிவிமூலம் மீண்டும் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம் இந்த பகுதியானது மிகவும் முக்கியமானதாகும் ஒரு MP MLA அவர்களுக்கு அவர்களது தொகுதி பற்றி என்ன தெரிந்து இருக்குமோ அதே அளவு அதற்கும் மேலாக நீங்கள் தெறிந்து செயலாற்றவும், ஒரு MP MLA மக்கள் நலனுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை சாதாரண மக்களாகிய நமால் முடியும் என்ற தெளிவைப் பெறும் பகுதி மிக முக்கியமான பகுதி.
ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் யாருடைய துணையுமின்றி சுயமரியாதையுடன் தன தேவை உள்ளபட அனைவரின் தேவைகளையும் எளிதில் பெற தன்னம்பிக்கையுடன் செயலாற்ற தவறாமல் அனைவரும் படித்து தெரிந்து கொள்ளவேண்டிய பகுதி இது கவனமாக படியுங்கள்.
தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர்களே நாம் தகவல் உரிமைச் சட்டம் பற்றி முழுமையாக அறிந்து இருந்தாலும் நாம் தகவல் கேட்கும் அலுவலகம் பற்றிய அறிவு சிறிதேனும் நமக்கு இருப்பது அவசியம் அந்த வகையில் நம் தமிழக அரசின் துறைகளும் அதன் செயல்பாடுகளையும் பின்வரும் இணைப்பில் சென்று மக்கள் சாசனம் என்ற பகுதியில் கிளிக் செய்தால் அத்துறை செயல்பாடுகளை ஓரளவு அறிய முடியும் அதற்கு மேலும் சந்தேகம் இருந்தால் இந்தியன் குரல் உதவி மையங்களை தொடர்புகொள்ளவும்
உங்கள் புரிதலுக்காக கீழுள்ள இணைப்புகளில் முதலாவதாக இருக்கும் இணைப்பில் நீங்கள் உங்களது நிலம் சம்பந்தமான தகவல் எளிதில் பெற பதிவேடுகளைப் பார்வையிட வழிசெய்கின்றது அதற்கு விண்ணப்பம் எழுதவோ காலவிரையம் செய்யவோ தேவையில்லையே இத் தகவல் எல்லாம் தகவல் உரிமைச் சட்டம் 2005 இன் பிரிவு 4 இன் கூற்று படி அனைத்து துறைகளும் தன அன்றாட நடவடிக்கைகளை இணையத்தில் வெளியிட வேண்டும் என்ற சரத்தின் படி செல்யலாக்கம் பெறுகின்றது இருப்பினும் சில அலுவலகங்கள் இச் சட்டப் பிரிவை முழுமையாக அமல்படுத்தாமல் இருக்கின்றது ஆகவே நாம் முதலில் நம் தேவைக்கான தகவல் இருக்கின்றதா என்று ஒருமுறை பார்த்துவிட்டு பிறகு தகவல் சட்டம் பயன்படுத்துவதே புத்திசாலித் தனம் ஆகும்.
ஆகவே நண்பர்களே நான் விண்ணப்பங்கள் எழுதுவது எப்படி என்று சொல்லித்தரும் முன் துறை பற்றிய அறிவு பெறுவது அவசியம் ஆகவே உங்களுக்கு பிடித்த அல்லது உங்களது கோரிக்கை அல்லது புகார் ஏற்க்கப்படாத துறையை தேர்வு செய்து அதைப் பற்றிய விபரம் தெரிந்து கொள்ளுங்கள் அப்பொழுது தான் இனி நான் சொல்லித்தரும் பகுதிகள் உங்களுக்கு எளிமையாக புரிவதுடன் நீங்களும் மற்றவர்களுக்கு சொல்லித்தர முடியும்
1 கருத்து:
மிகவும் பயனுள்ள தகவல்
கருத்துரையிடுக