ஆதரவாளர்கள்

வியாழன், 7 செப்டம்பர், 2017

"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்"


உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தங்களால் இந்திய பொருளாதாரம் முழுமையாக பன்னாட்டு வர்த்தகர்களின் கோரப்பிடியில் சிக்கி அடிமையாகிக்கொண்டு இருக்கின்றது.

ஆம்

பன்னாட்டு ஒப்பந்தங்களின் மூலம் கனரக தொழில்துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் கொத்தடிமைகளாக தொழிலாளர்களை நடத்தியும் கேள்வி கேட்கும் திறனற்ற தொழிலாளர் நலன்.

பன்னாட்டு தொழில் வர்த்தக நிறுவனங்களினால் நமது உள்நாட்டு நிறுவனங்கள் ஒவ்வொன்றாக கையகப்படுத்தப்பட்டு கனரக உற்பத்தி தொழில்கள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மடைமாற்றம் செய்ய வசதியான ஒப்பந்தங்களால் நிறைவேற்றப்பட்டது.

உற்பத்தியை முழுமையாக ஆக்கிரமனம் செய்த பன்னாட்டு நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்திலும் தனது ஆக்டோபஸ் கரங்களை நீட்டிவிட்டது இன்னும் சில ஆண்டுகளில் முழுமையாக சிறு குரு வணிக நிறுவனங்கள் முர்ரிளும்ம் அளித்தொளிக்கபட்டு மால்களின் எண்ணிக்கை பெருகி சாமானியர்கள் சிறிய நடுத்தர வர்க்க வியாபார நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும்(அந்தக்கலங்களில் செட்டியார் வீடுகளில் நடந்த வணிகம் தனி இடம் பிடிக்க துவங்கியதால் விலை உயர்வை கண்டது. அது மேலும் நகர்ந்து பன்னாட்டு நிறுவனங்களாக பரிணாமம் பெறுகிறது)

விவசாயிகளை கிராமங்களை விட்டு விரட்டியடிக்கும் விவசாய ஒப்பந்தம்;

அனைத்திற்கும் மேலாக விவசாயத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது ஆக்டோபஸ் கரங்களை நீட்டிட அனுமதிக்கும் உலக விவசாய ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் தான் பொதுமக்களுக்கு இலவசம் மானியம் ரத்து மற்றும் ரேசன் கடைகள் மூலம் மானிய விலையில் உணவுப்பொருட்கள் விற்பனை செய்ய தடையாக சில சரத்துகள் உள்ளன


இந்திய மருத்துவ வியாபார துறையில் பன்னாட்டு நிறுவனங்கள்

ஆம் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய மருத்துவ சந்தையை கைப்பற்றிட ஒப்பந்தம் கையெழுத்தாகியது. அதன் விளைவாகவே மருத்துவம் இனி இலவசமாக கொடுக்க இயலாது. அனைத்தும் கட்டணம் பெற்றே சேவை செய்யவேண்டும். தனியார் மருத்துவ மனைகள் மட்டுமே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்

கல்வி வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள்

பன்னாட்டு நிறுவனங்கள் நிர்ணயம் செய்யும் கட்டணத்திற்கு குறையாமல் கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்திட வேண்டும் என்ற விதிமுறைகளை உள்ளடக்கிய பல விதிமுறைகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இனி உயர்கல்வியில் இலவசம் இல்லை.அரசாங்கக் கல்லூரிகளே ஆயினும் பன்னாட்டு நிறுவனங்கள் நிர்ணயிக்கும் கட்டணம் வசூலித்தே கல்வி அளிக்க வேண்டும்.

கலைத்துறையில் பன்னாட்டு நிறுவனங்கள்
தொலைகாட்சி திரைப்படங்கள் என அனைத்திலும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் தெரிந்ததே

இன்றைய எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கும் கலாசார சீரழிவுக்கு ஆதாரமாக ஆபாசம், கள்ளக் காதல், வன்முறைக் காட்சிகளை திரும்ப திரும்ப காண்பித்து நமது மனங்களில் அவையெல்லாம் குற்றமல்ல என்பது போன்ற நிலையை உருவாக்கிட்ட காட்சி ஊடகங்களின் வாயிலாக பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது காஸ்மெடிக்ஸ் எனும் ரசாயனங்களை தந்திரமான முறையில் விற்று கொள்ளை இலாபம் கண்டு வருகின்றன.

கொலை செய்யும் கார்ட்டூன் வியாபாரம்
கார்ட்டூன்கள் எனும் வடிவில் நமது பிள்ளைகள் எப்படி வளர வேண்டும் ஒரு தேர்ந்த வேலைக்காரர்களாக உருவாக்குவதுடன் சைக்காவக்கி தன்னைத்தனே தற்கொலை செய்துகொள்ளவும் உபயோகமில்லா வயது பெரியவர்களை கொலை செய்திடவும் கற்றுத்தரும் ஊடகமாக நமது கண்முன்னே வடைபெருகின்றது. ஆம் அடுத்த சில ஆண்டுகள் கழித்து தாய் தந்தையரை உடன் வைத்து பராமரிக்கும் பிள்ளைகள் சுமைஎனக் கருதி கருணைக் கொலை செய்யும் நிலை வரும் ஆபத்தான பாடங்கள் போதனை செய்யப் படுகின்றன. இந்த கார்டூன்கள் என்ன சொல்லிக் கொடுக்கின்றன என்பதை நாம் பார்ப்பதே இல்லை.

இப்படி அனைத்து வழிகளிலும் நாம் அடிமைப்பட்டுக் கிடக்கும் சூழல் நம்மை விரட்டுகின்றது என்ன செய்யப் போகின்றோம் நாம்.

ஒவ்வொரு மதமும் இரண்டாவது சனிக்கிழமை உலக வர்த்தக அமைப்பும் ஒப்பந்தங்களும் தலைப்பில் விவாத அரங்கம் நடைபெறுகின்றது

நமது நோக்கம் பிரச்சனைகளை பேசுவது மட்டுமல்ல அதற்கு தீர்வை தருவதும் தான்.

நாள்; 09-09-7 சனிக்கிழமை மாலை 2.30 மணிக்கு , வருகை பதிவு 2.20 க்கு துவங்கும்.

இடம்; கும்பட் காம்ப்ளக்ஸ் முதல் மாடி ராட்டன் பஜார் சென்னை 3. பூக்கடை காவல் நிலையம் எதிரில்
தொடர்புக்கு 9042905783

போராட்டங்களால் மேற்சொன்ன எதையும் தடுக்க இயலாது தந்திரமான விழிப்புணர்வு நடவடிக்கையால் மட்டுமே நாம் வெல்ல முடியும் நம்பிக்கையுள்ளோர் ஒவ்வொரு மதமும் இரண்டாவது சனிக்கிழமை நடைபெறும் கூட்டங்களில் தவறாமல் பங்கேற்க வாருங்கள் பேசுவோம்

"அமைப்புகள் வெவேறாயினும் இலக்கு ஒன்றே"

"மனிதம் படிப்போம் மனிதர்களை படைப்போம்"
- பாலசுப்ரமணியன்

1 கருத்து:

VOICE OF INDIAN சொன்னது…

பாராட்டுவது நல்லது அனைவரும் அறிய பகிறமுடியுமா பாருங்கள்.