ஆதரவாளர்கள்

வெள்ளி, 31 மே, 2013

SSLC அரசுப் பள்ளிகள் மாநில அளவில் சாதனை


http://www.samacheerkalvi.in/images/hero.jpg


 மதிப்பிற்குரிய பெற்றோர்களே தனியார் பள்ளியில் படித்தால் தான் நம் பிள்ளை நல்ல மதிப்பெண் பெறுவான் என்ற தவறான உங்களது என்னத்தை இனிமேலாகிலும் கைவிடுங்கள் நம் பிள்ளைகள் நன்றாக படித்ததால் தான் மதிப்பெண் பெற முடியுமே அல்லாமல் பள்ளிகளால் மட்டும் அல்ல என்று மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.






மாநில அளவில் இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் அரசுப்பள்ளி மாணவர்கள் பெற்றுவிட்டார்கள் இனிமேலாவது நம்புங்கள்




இப்படி கேட்க அமைப்புகள் இருக்கு படிக்க முடியுமா மதிப்பெண் வருமா என்ற கவலை கொண்ட காலம் மலையேறிப் போச்சு
அரசுப் பள்ளி கூரையுடன்
 
இதோ அந்த சாதனை படைத்த பள்ளியின் ஆசிரியர்களுக்கு முதலில் நம் பாராட்டுக்களைத் தலை வணங்கி தெரிவிப்போம். அரசுப்பள்ளிகள் அடையாளம் மாறிப்போச்சு
இப்படி தரையில் அமர்ந்து படிக்கும் அவலம் இன்று இல்லை

இப்படி உடைந்த பெஞ்சில் அமர்ந்து படிக்க தேவையில்லை புதுசா பெஞ்சுகள் வந்தாச்சு

அரசுப் பள்ளி மனைவிகளும் மாநில அளவில் ரேன்க் பெற முடிந்தது என்ற சந்தோசத்தில் கொண்டாட முடியும்


இதோ அந்த சாதனைப் பள்ளிகள்
497 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்த பள்ளி மாணவியின் பெயர் தேவி ஸ்ரீ பள்ளியின் பெயர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆத்தூர், சேலம்

496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவி பெயர் தீபிகா பள்ளியின் பெயர் அரசு பள்ளி, வேடசந்தூர், திண்டுக்கல் 

அரசுப் பள்ளிகளில் படித்து நல்ல மதிப்பெண் பெற முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டிய இந்த மாணவிகளுக்கும் இந்தப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

நண்பர்களுக்காக
நாம் நம் பிள்ளைகளை தனியார் பள்ளியில் பல ஆயிரங்களைக் கொடுத்து செலவு செய்து சேர்த்து படிக்க வைக்க விரும்புகின்றோம் ஆனால் நாம்  சில ஆயிரங்கள் செலவு செய்து அரசுப் பள்ளி அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்ய உதவி அந்தப் பள்ளியிலேயே நம் பிள்ளைகளை சேர்க்க முயற்ச்சித்தால் அரசுப் பள்ளிகளின் தரம் மேலும் உயருமே செய்வோமா?

இப்படி ஒரு சாதனை நிகழ்த்த ஒரு இளைஞர் கூட்டம் தயாராகிவிட்டது.


நான் இந்தப் பதிவை எழுத திட்டமிட்டபோதே என்னை அலைபேசியில் நீண்ட நாட்களுக்கு பிறகு தொடர்புகொண்ட சுரேஷ் என்ற நண்பர் தானும் தன்னுடைய நண்பர்களும் சேர்ந்து அவர்களது பிள்ளைகளை அரசுப் பள்ளியில் தான் சேர்த்து படிக்க வைப்பது என்று முடிவு செய்துள்ளதாக தெரியப்படுத்தினார். தனியார் பள்ளிகளில் சேர்க்கைக்கு ஆகும் கட்டணம் முழுவதையும் அரசுப் பள்ளிகளின் தேவைக்கு பள்ளிகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற செலவு செய்யப்போவதாகவும் தெரிவித்தார். ஒரு நிமிடம் நான் அசந்து போனேன் ஏனென்றால் அவர்கள் நினைத்தால் லட்சங்களைக் கொடுத்து அவர்கள் நினைக்கும் எந்த பள்ளியிலும் சேர்க்க முடியும் அனைவரும் ஐ டி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்.அவர்களால் இப்படி ஒரு முடிவு எடுக்க முடிந்தது என்றால் எல்லோராலும் இப்படி செயலாற்ற முடியும். அவர்களை மனதார வாழ்த்தி என்னுடைய ஆலோசனைகளை வழங்கியுள்ளேன். இது போன்ற எண்ணம் பலருக்கும் வர வாய்ப்பு ஏற்ப்படும் வண்ணம் அரசுப் பள்ளிகள் நிலை உயர நாம் நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்.

குறிப்பு; இன்று உயர்ந்த நிலையில் உள்ள பெரும்பான்மை அரசு மற்றும் தனியார் அலுவலர்கள் அரசுப் பள்ளியில் பயின்றவர்கள் என்பதை மனதில் கொள்ளவும்.

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நானும் அடிக்கடி சொல்வதுண்டு... "எங்கு படித்தாலும் என்ன...? முதலில் ஆர்வத்துடன் படிக்க வேண்டும்... பெற்றோர்கள் படிக்க வைக்கவும் வேண்டும்..."

தங்களின் விழிப்புணர்வு சேவைகளுக்கு வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

நல்ல கருத்தை பகிர்ந்த நண்பருக்கு என் முதல் நன்றி.
நானும் எங்க பசங்களுக்கு சொல்வதுண்டு தேர்வு என்பது விளையாட்டு போல, இங்கே ஆசிரியர் என்பவர் பயற்சியாளர், மாணவர்கள் விளையாட்டு வீரர்கள், இங்கே மைதானம் என்பது பள்ளிக்கூடம்.
வீரர்கள் திறமையானவர்களாக இருந்தால் எந்த
மைதானத்திலும் வெற்றி பெறுவார்கள் அது போல
எந்த பள்ளியில் படிக்கிறோம், என்பது முக்கியம் அல்ல எப்படி படிக்கிறோம் என்பது தான்....படிக்கிறவர்கள் எங்கேயும் வெல்வார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்...

எங்க பள்ளி மாணவர்களுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்....



Unknown சொன்னது…

நல்ல கருத்தை பகிர்ந்த நண்பருக்கு என் முதல் நன்றி.
நானும் எங்க பசங்களுக்கு சொல்வதுண்டு தேர்வு என்பது விளையாட்டு போல, இங்கே ஆசிரியர் என்பவர் பயற்சியாளர், மாணவர்கள் விளையாட்டு வீரர்கள், இங்கே மைதானம் என்பது பள்ளிக்கூடம்.
வீரர்கள் திறமையானவர்களாக இருந்தால் எந்த
மைதானத்திலும் வெற்றி பெறுவார்கள் அது போல
எந்த பள்ளியில் படிக்கிறோம், என்பது முக்கியம் அல்ல எப்படி படிக்கிறோம் என்பது தான்....படிக்கிறவர்கள் எங்கேயும் வெல்வார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்...

எங்க பள்ளி மாணவர்களுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்....



கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஓர் ஆசிரியர் என்ற முறையில் மனம் மகிழ்ந்தேன்