ஆதரவாளர்கள்

Sunday, February 17, 2013

லஞ்சம் இல்லை என்றேன்லஞ்சமின்றி எதுவும் இல்லை

லஞ்சம் இல்லை என்றேன்  

 லஞ்சம் இல்லை என்றேன்பிறப்பு சான்று இல்லை
லஞ்சம் இல்லை என்றேன் சாதி சான்று இல்லை
லஞ்சம் இல்லை என்றேன் வருமானச் சான்று இல்லை
லஞ்சம் இல்லை என்றேன் கல்விக் கடன் இல்லை
லஞ்சம் இல்லை என்றேன் உயர் கல்வி  இல்லை 
லஞ்சம் இல்லை என்றேன் ஓட்டுனர் உரிமம் இல்லை
லஞ்சம் இல்லை என்றேன் தொழில் அனுமதி இல்லை
லஞ்சம் இல்லை என்றேன் தொழிற் கல்வி இல்லை
 லஞ்சம் இல்லை என்றேன் கடவு சீட்டு இல்லை
 லஞ்சம் இல்லை என்றேன் எனக்கு நீதி இல்லை
லஞ்சம் இல்லை என்றேன் பட்டா மாற்ற வில்லை
லஞ்சம் இல்லை என்றேன் பத்திரம் பதிய வில்லை
லஞ்சம் இல்லை என்றேன் சிட்டா கிடைக்க வில்லை
லஞ்சம் இல்லை என்றேன்  வீடு என்பெயரில் இல்லை
 லஞ்சம் இல்லை என்றேன் மின் இணைப்பு இல்லை
லஞ்சம் இல்லை என்றேன் 
லஞ்சமின்றி எதுவும் இல்லை என்றார் 
 ஐயா நான் முன்னாள் ராணுவ வீரன் என்றேன்
இந்த நாட்டின் பிரதமரா இருந்தாலும் முடியாதென்றார்
ஐயா நான் மூத்த குடிமகன் என்றேன் அதுதான் குறைவாய் கேட்டேன் என்றார்
தகவல் பெரும் உரிமைச் சட்டம் கீழ் தகவல் கேட்டேன் நான் 
அனைத்தும் கிடைத்தது எனக்கே! ஒரு பைசா லஞ்சம் தரவில்லை நான்.

4 comments:

Sureshkumar M said...

Really fantastic sir.

Regards,
Sureshkumar M,
Channelisingyouth.blogspot.in

திண்டுக்கல் தனபாலன் said...

அறிந்து கொள்ள வேண்டிய "தகவல் பெறும் உரிமைச் சட்டம்"...

Bala subramanian said...தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு சுரேஷ் குமார் அவர்களே.தங்களின் அனுபவம் நல் வழிகாட்டுதலாக இருக்கும். இனி வரும் நாட்களில் நம் சந்ததிகள் நல்லவர்களாகவும் மனித நேயம் மிக்கவர்களாகவும் தயாள குணம் படைத்தவர்களாகவும் இருக்க வேண்டுமே அன்றி பணம் பண்ணும் இயந்திரங்களாக இருக்கக் கூடாது என்று கருதும் எண்ணம் கொண்டவர்களில் நானும் ஒருவன். உங்களது சிந்தனைகள் செயலாக்கம் பெற துணையாக இருக்க என்னால் முடியும்.

Bala subramanian said...

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே.தங்களின் அனுபவம் நல் வழிகாட்டுதலாக இருக்கும். இனி வரும் நாட்களில் நம் சந்ததிகள் நல்லவர்களாகவும் மனித நேயம் மிக்கவர்களாகவும் தயாள குணம் படைத்தவர்களாகவும் இருக்க வேண்டுமே அன்றி பணம் பண்ணும் இயந்திரங்களாக இருக்கக் கூடாது என்று கருதும் எண்ணம் கொண்டவர்களில் நானும் ஒருவன். உங்களது சிந்தனைகள் செயலாக்கம் பெற துணையாக இருக்க என்னால் முடியும்.