ஆதரவாளர்கள்

Friday, May 24, 2013

கிரிக்கெட் சூதாட்டம் நடப்பது என்ன ?


கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய பரபரப்பு நாடெங்கிலும் செய்தியாகி விட்டது  இந்தியன் குரல் 15.4.2013 அன்றே சென்னை சூப்பர் கிங்சும் புனே வாரியர்சும் ஆட்டமும் நடிப்பும் சூப்பர்  என்ற தலைப்பில் மேட்ச் பிக்சிங் செய்தி வெளியிட்டது. விழித்துக் கொண்டு அரசு நடவடிக்கை எடுத்து வருவது
பாராட்டுக்குரியது. இன்று நடப்பது என்ன சூதாடிகள் கைது என்று தினமும் செய்தி வருகின்றதே அவர்கள் சூதாட்டம் காரணமாக  ஒரு ஆட்டத்தின் முடிவு இப்படி இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்தவர்கள் அப்படி நிர்ணயம் செய்தவர்கள் சாதாரண ஆட்களாக நிச்சயம் இருக்க முடியாது. அவர்களை அடையாளம் காட்டப்படுமா நடவடிக்கை இருக்குமா? பாரபட்சமற்ற விசாரணை இருக்குமா? புலனாய்வில் என்ன நடக்கும். உண்மையைக் கண்டறிந்து உண்மையான குற்றவாளிகள் தண்டனை பெறுவார்களா? சட்டம் என்ன சொல்கின்றது சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு  என்னமாதிரியான தண்டனை வழங்க இயலும்?. சூதாட்டம் என்பதும் மேட்ச் பிக்சிங் ரெண்டும் ஒன்றா? மேட்ச் பிக்சிங் செய்தவர்களைத் தப்புவிக்க சூதாட்டம் பற்றியும் அதில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதும் நடைபெறுகின்றதா? ஏனெனில் மேச் பிக்சிங் என்ற செய்தி வெளியில் வரவே இல்லையே  என்ற எண்ணற்ற கேள்விகள் எழுகின்றன விசாரணை முடிவில் பார்ப்போம். சூதாட்டத்தை அரசே அங்கீகரிக்க வேண்டும் என்ற குரலும் ஒலிக்கத் தொடங்கி விட்டது. மக்கள் கண்காணிப்பு என்பது இங்கு அவசியமாகின்றது சில பல ஆயிரங்களைக் கொடுத்து கிரிக்கெட் என்றால் உயிராய் இருக்கும் ரசிகர்கள் அந்தக் கண்காணிப்பு வேலையை சரியாக செய்யவேண்டும் ஏனென்றால் அவர்கள் ஏமாற்றப் பட்டுள்ளார்கள். அப்படிப்பட்ட கண்காணிப்பு இருந்தால் தான் விசாரணையும் நேர்மையாக நடக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்காலத்தில் ஏமாற்றம் அடையாமல் இருக்க இந்த விழிப்புணர்வு அவசியமாகிறது. அத்தகைய கண்காணிப்பு செய்ய தகவல் உரிமைச் சட்டம் இருக்கின்றது அச் சட்டத்தின் படி இன்று இல்லையாகினும் எதிர்காலத்தில் உண்மை வெளிவந்துவிடும். தவறு செய்தவர்கள் தண்டனை பெறுவது உறுதியாகும். அதிகாரிகளே உங்களது விசாரணை உண்மையாக இருக்கட்டும் யாருடைய தலையீடும் இல்லாமல் நேர்மையாக நடந்து உங்களது சாப்பாட்டில்  உப்பும் இட்டு சாப்பிட வாய்ப்புக் கொடுத்த மக்களுக்கு(கிரிக்கெட் ரசிகர்களுக்கு) உண்மையாக பணியாற்ற இந்தியன் குரல் வாழ்த்துகின்றது. நேர்மையான அரசு அலுவலர்கள் பணியில் குறுக்கீடு இல்லாமல் பணியாற்ற இந்தியன் குரல் வழிகாட்டி உதவி செய்கின்றது.

1 comment:

xyz said...

குதிரைப் பந்தயம் இதில் சேராதா?